Wednesday, June 21, 2006

மனித நீதிப் பாசறை (விடியல்)

மனித நீதிப் பாசறையை ஏன் விமர்சிப்பதில்லை என்று அருளடியான் எழுதியிருந்தார். நமது பஞ்சாயத்து பக்கம் பலர் வராததால் இதுபோன்ற கேள்விகள் எழுகின்றன. ஆகவே முகவைத்தமிழனின் தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடை வலைப்பதிவில் இதன் முழுத் தொகுப்பையும் வைக்கிறேன்.

விடியலுக்கு விடிவு கிடைக்குமா? (பாகம்-1)

குர்ஆன் சுன்னா ஆகிய இரண்டு மட்டுமே எமது கொள்கை என்று ஏற்றுக்கொண்ட பலர் விடியல் குழுவில் தம்மையும அறியாமல் தஞ்சம் புகுந்துள்ளார்கள். கூட்டு ஃபாத்திஹா ஓதக்கூடாது என்று முழங்கியவர்களை தங்கள் அமர்வின் ஆரம்பத்திலேயே தனித்தனி அல்-ஃபாத்திஹா ஓத வைத்தவர்கள்தான் இந்த விடியல் குழுவினர்.. (உங்கள் பகுதியில் அல்-ஃபாத்திஹா தற்போதைக்கு இல்லையென்றால் நான் பொறுப்பல்ல)

உறுப்பினர்களை எந்த கட்சியிலும், இயக்கத்திலும் இருக்கலாம், ஆனால் அவ்வியக்கங்களின் நிர்வாகத்தில் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்படும். தமது இயக்கத்திற்கென்று தனி யுனிஃபார்ம். அதில் ஒன்றுதான் அல்-பாத்திஹாவுடன் ஆரம்பமாம். .

கலவரங்களின் பின்னணியில்தான் விடியலின் பந்தாட்டம். ஆமாம், கலவரங்களின் கோர நினைவுகளை கிளரி உறுப்பினர் சேர்க்கைகள் நடைபெறும். கோரநினைவுகளை கிளரி தூண்டில்போடுவது எந்தமாதிரியான இயக்கத்தின் பண்பாடு என்பதை மக்கள் பஞ்சாயத்திற்கே விட்டுவிடுகிறேன்.

இயக்கங்களிடையே நடக்கும் கருத்து மோதல்களினால் தங்களை இந்த இயக்கத்தில் இணைத்துக்கொண்டவர்களும் உண்டு. தமது இயக்கத்தின் உள்விவகாரங்களில் அதிகமாக கேள்வி கேட்பவர்களுக்கு பொறுப்புகள் கொடுக்கப்படும். அதன் பின்னணி என்னவென்றால், தமது குழுவை எதிர்ப்பவருக்கு விளக்கம் கொடுத்து விடியல் குழுவில் ஸ்திர தன்மை அடைந்துவிடுவார் அல்லவா?.

விடியல் காரர்கள் பெருமையுடன் கூறும் சில விஷயங்களில் ஒன்று, தமது குழுவில் அதிகமாக தத்தெடுக்கப்பட்டவர்கள் குர்ஆன் சுன்னாவை ஏற்றுக்கொண்ட சகோதரர்கள் என்பதுதான் அது. அதாவது யாராவது தனது கொள்கையில் தேற்றி வைக்கப்பட்டவர்களை தமது கொள்கைக்கு மாற்றிவிடுவார்கள். அதற்கு எப்படி மூலைச் சலவை செய்யப்படும் என்பது தனி விஷயம்.

அதற்கு முன் "குலாம் எங்கே போகிறார்.." என்ற தலைப்பில் வெளியான பழைய வெளியீட்டை மக்கள் பஞ்சாயத்தின் முன் வைக்கிறேன்.

http://nattaamai.googlepages.com/mnp_1.htm

விருப்பம் உள்ளவர்கள் சாட்சியோ எதிர்சாட்சியோ கூறலாம். (அதற்காக ஆட்டோ அனுப்புவதுதெல்லாம் வேண்டாம்).


விடியலுக்கு விடிவு கிடைக்குமா? (பாகம்-2)

மனித நீதி பாசறை என்ற பெயரில் செயல்பட்டுவரும் விடியல் சகோதரர்கள் எப்படி ஆள் பிடிக்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொண்டால் அவர்களின் வலையிலிருந்து தப்பிக்க பிற சகோதரர்களுக்கு உதவியாக இருக்குமென்பதால் இதனை எழுதுகிறேன்.

மார்க்கம் மற்றும் சமுதாய அக்கறை உள்ளவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் ஆகிய மூவரும்தான் இவர்களின் பொறியில் அதிகம் மாட்டப்படுகிறவர்கள்.

1) மார்க்க சமுதாய விஷயங்களில் அக்கறையுள்ளவர்களுக்கு வைக்கப்படும் பொறி:

நீங்கள் ஏதேனுமொரு இஸ்லாமிய அழைப்பு மையத்திலோ அல்லது மார்க்க விஷயத்தில் கவனம் செலுத்துகிற இயக்கத்திலோ உறுப்பினரா? உங்களை விடியல் வெள்ளி காரர் பின்தொடர்வார். உங்களிடம் பேசி பழகும்போது உங்களின் மனநிலையை ஆழம்பார்ப்பார். நீங்கள் மார்க்க விஷயத்தில் நல்ல ஆழமான சட்டத்திட்டங்களை தெரிந்தவரென்றால் நீங்கள் அவர்களுக்கு வேஸ்ட். காரணம் அவர்களின் காரணங்களை நீங்கள் அடித்து வீழ்த்திவிடுவீர்கள் அல்லவா.

உங்களைப்பின்தொடரும் அவர் அன்றுதான் புதிதாக வந்ததாக கருதவேண்டாம். இதுபோன்ற இடங்களில் அவர்களின் தொடர்புகள் தொடர்ந்து இல்லாவிட்டாலும் அவ்வப்போது இருக்கும். அப்படி மாட்டப்படும் உங்களின் கவனத்திற்கு சில சமீபத்திய கலவரச் சம்பவங்கள் கொண்டுவரப்படும்.

அவைகள் ஒரு சின்ன தூண்டல் மட்டுமே. பிறகு ஒரு நாளில், உங்களின் இடத்திற்கு வந்து சந்திப்பார்கள் அல்லது உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் இடத்திற்கு அழைப்பார்கள்.

அங்கு சமீபத்திய கலவர பின்னணிகளும் அதற்கு அரசாங்கம் தந்த முழு ஒத்துழைப்புகளும் புள்ளிவிபரங்களுடன் பேசப்படும். இதற்கெல்லாம் காரணத்தை யோசியுங்கள் என்பார்கள். உங்களுக்கு யோசிப்பதற்கு அவகாசம் கொடுக்கப்படும். யோசித்து சொல்லப்படும் முடிவுகள் ஜனநாயக ரீதியாக இருந்தால் அதற்கான சமீபத்திய எதிரான ஆதாரங்கள் காட்டப்படும். ஜனநாயகம் இஸ்லாத்திற்கு எதிரானதாக வாதாடப்படும்.

பிறகென்ன? எதிராளியின் எதிர்பார்ப்பு புரியாததால் சற்று குழப்பமடைந்தே காணப்படுவீர்கள்.

அவர்களின் கொள்கைகளைப்பற்றி நீங்கள் தெரிந்தவரென்றால், வாருங்கள் நாம் புதியதாக ஒரு அமைப்பு ஏற்படுத்துவோம் என்றும் நீங்களே எங்களை வழிநடத்துங்கள் என்றும் சொல்வார்கள். பிறகென்ன? நீங்கள் ஓட்டம் பிடிக்க மாட்டீர்களா?

ஒரு நாள் அழைக்கப்பட்டு உங்கள் கைகள் பையத் செய்வதற்காக அவர்களின் குறிப்பிட்ட துணைப்பிரிவு தலைவர்களின் கையில் திணிக்கப்படும். இங்குதான் நீங்கள் நாக்-அவுட் ஆகும் நேரமே வருகிறது.

தனியாக இருந்தால்தானே நீங்கள் இங்கேயாவது யோசிப்பீர்கள். உங்களுடன் பலபேர் பையத் செய்வார்கள். நீங்கள் மறுத்தால் உங்கள் ஆன்மைக்கு இழுக்கல்லவா.. ஆகவே நீங்களும் பையத் செய்வீர்கள்.

கிளைமாக்ஸ்

நீங்கள் யாரின் கையில் பையத் செய்தீர்களோ அது மனிதரின் கை அல்லவாம். அது அல்லாஹ்வின் கையில் செய்யப்பட்ட பையத் போன்றதாகும் என்று சொல்வார்கள். மார்க்கத்தில் அதிக ஞானமில்லாதவர்கள் இதில் அப்படியே குப்புற விழுந்துவிடுகிறார்கள். காரணம் ரஸூல் ஸல் அவர்களிடம் மக்கள் பையத் செய்தபோது, நீங்கள் அல்லாஹ்வுடைய தூதரின் கையில் பையத் செய்யவில்லை. அல்லாஹ்வின் கையில் செய்துள்ளீர்கள். என ஆதாரங்கள் எழுத்துக்காட்டப்படும். எனவே எமது இயக்கத்தைப்பற்றிய தகவல்களை வெளியில் சொன்னால் அல்லாஹ்வின் தண்டனை வந்தவிடும் என்று பயம்காட்டுவார்கள்.

மேற்கண்ட பையத் விஷயத்தில் இஸ்லாததின் நிலைப்பாடென்ன? அதற்கான உண்மையான அர்த்தம் என்ன? இது எல்லோருக்கும் பொருந்துமா? என்பதெல்லாம் இதில் மாட்டப்படுகிறவர்கள் உணர்வதில்லை.

இந்த பையத் நாடகத்தின்போது உங்களுக்கு அதன் தேசிய தலைவரோ, சர்வதேச தலைவரோ சொல்லப்பட மாட்டார்கள். தமிழ்நாட்டின் தலைவர் பற்றி சத்தமில்லாமல் சில வார்த்தைகள் முணுமுணுக்கப்படும். அவை: அண்ணன் (குலாம்), விடியல், அறிவகம்.. என்பதாகும்.

இந்த இயக்கத்தில் இதற்கு முன்பு நீங்கள் நல்ல அபிப்ராயம் வைத்துள்ள மார்க்க அறிஞர்களின் ஆதரவு இருப்பது போலவோ அல்லது அவருக்கும் இந்த கூட்டத்தினருக்கும் தொடர்பு இருந்தது போலவோ சிறு சிறு வார்த்தைகள் தெளிவில்லாமல் உச்சரிக்கப்படும். நீங்கள் உங்களுக்கான ஏரியாவின் அமீரிடம் ஒப்படைக்கப்படுவீர்கள். சிலர் சேர்ந்த குழுமத்திற்கு ஒரு அமீர். சில அமீர்களுக்கு ஒரு அமீர். இப்படியான கூட்டமைப்பைக் கொண்டதுதான் MNP என்று அழைக்கப்படுகின்ற மனித நீதிப் பாசறை.

உடற்பயிற்சி:

விடியல் சகோதரரிடம் இருக்கும் நல்ல ஒரு முயற்சி. இவ்வுடல் பயிற்சி நாட்டுக்கு நாடு மாறுப்படலாம். அல்லது விளையாட்டின் மூலம் உடற்பயிற்சியை பெற்றுக்கொள்ளலாம்.

மார்க்க போதனைகள்:

மார்க்க போதனைகளில் அதிகம் இடம்பிடிப்பது ஜிகாத் சம்பந்தமான இறைவசனங்கள், நபிமொழிகள். இது தவிர மற்றவைகளும் உண்டு.

தொழுகை அட்டவணை

உங்கள் கைகளில் ஒரு தொழுகை அட்டவணை திணிக்கப்படும். அதில் தொழுகைளை ஜமாஅத்தோடு தொழுதீர்களா? குர்ஆன் ஓதினீர்களா? தஹஜ்ஜத் தொழுதீர்களா? என்று குறித்துக்கொண்டு உங்களின் அமீரிடம் ஒப்படைக்க வேண்டும்.

மற்றவன் பார்க்கிறான் என்பதற்காக உங்கள் தொழுகையை நேர்த்தியாக தொழுவதே சின்ன ஷிர்க் என்று சொன்ன மார்க்கத்தில் இத்தகைய வழியில் உங்கள் வணக்க வழிபாட்டை எந்த அல்லாஹ்வுக்காக செய்கிறீர்களோ அதில் சலனம் ஏற்படுத்தப்படும்.

விடியல் சகோதரர்களுக்கு எனது கேள்வி:

சிங்கப்பூரை திடீர் சுதந்திர நாடாக அறிவித்து ஒருவர் தலையில் கட்டியதுபோல், உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் "விடியல்ஸ்தான்" என்ற ஒன்றை சுதந்திரம் கொடுத்து உங்கள் தலைவரிடம் கொடுத்தால் எந்த கொள்கையின் அடிப்படையில் ஆட்சி செய்வீர்கள்?

1) குர்ஆன் சுன்னா மட்டுமே எங்கள் கொள்கை என்று கப்ர்-களை தரைமட்டம் ஆக்கினால் மற்றவர்கள் உங்களை சும்மாவிடப்போவதில்லை.

2) கப்ர் வணங்கிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் குர்ஆன் சுன்னா மட்டுமே எங்களுக்கு விடிவு என்று உள்ளவர்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள்.

3) அபூபக்கர், உமர், ஆயிஷா (ரலியல்லாஹ் அன்ஹுமா) போன்றவர்களை தினந்தோறும் திட்டி தீர்த்து பையத் படிக்கும் ஷியா இமாம் மொமைனியின் இஸ்லாமிய அரசு அமைப்பீர்களா?.

ஒரு காலத்தில் ஆஃப்கானிஸ்தானில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்து ரஷியாவை ஓட ஓட விரட்டினார்கள். ஆனால் யாரின் ஆட்சி அமைவது என்று வந்தபோது அவர்களுக்குள் அடித்துக்கொண்டார்கள். எந்த அளவுக்கென்றால், ஒரு மதரஸா ஆசிரியர் தனது மாணவர்களை வைத்து புதிய குழு (தாலிபான்) உருவாக்கி மற்றவர்களை தட்டி வைக்கும் நிலைமை. தற்போது கைக்கு எட்டியதும் வாய்க்கு எட்டாமல் இருக்கிறது.

விடியலில் யார் வேண்டுமானாலும் சேரலாம். கொள்கைப்பற்றி பிரச்னை இல்லையென்று சொல்லும் விடியல் சகோதரர்களே, இதிலிருந்து நீங்கள் எந்தப் படிப்பினையும் பெறவில்லையா?

"குலாம் எங்கே போகிறார்.. பாகம் -2" என்ற தலைப்பில் வெளியான பழைய வெளியீட்டை மக்கள் பஞ்சாயத்தின் முன் வைக்கிறேன்.

http://nattaamai.googlepages.com/mnp_2.htm

சகோதரர்களே,
என்னுடைய பார்வையில் விடியல் பற்றி நான் அறிந்தவற்றை தொகுத்துத் தந்துள்ளேன். இது தவிர "குலாம் எங்கே போகிறார்" என்ற மற்றவரின் இரண்டு வெளியீட்டையும் நான் இங்கு இடுவதற்கு காரணம், இது சம்பந்தமான விடியல் சகோதரர்கள் மறுப்புகளைத் தெரிந்துக்கொள்ளத்தான்.

1 comment:

muslimeen said...

BISMILLAHIRRAHUMANIRRAHEEM

A VERY FOOL COMMENT BY NATTAMAI.THIS FAKE ONE ABOUT MNP.NATTAMAI IS NO KNOWLEDGE OF QURAN AND SUNNAH.HE IS A LIER