Thursday, July 20, 2006

தடை செய்யப்பட்ட வலைப்பதிவுகளை காண்பது எப்படி?

தடை செய்யப்பட்ட வலைப்பதிவுகளை காண்பது எப்படி?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சகோதரர்களே,

இந்தியாவில் அரசு ஆனைப்படி *.blogspot.com என்ற டொமைனில் பதிவாகியுள்ள அனைத்து பிளாக்குகளும் தடை செய்யப்பட்டுள்ளன அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய அரசின் Ministry of Telecommunications கடந்த இரன்டு நாட்களாக இந்த *.blogspot.com பதியப்பட்டுள்ள எந்த டொமைனும் வேலை செய்யவில்லை.

மத்திய அரசு மக்களிடையே விரோதத்தை உண்டாக்கும் சில வலைப்பதிவுகளை தடைசெய்ய உத்தரவிட்டது ஆனால் *.blogspot.com ல் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வலைப்பதிவுகளும் காண இயலாமல் தடைசெய்யப்பட்டுள்ளன.

ஆக இது போன்று நமது வலைப்பதிவையும் காண இயலவில்லை என்று பலர் நம்மை தொடர்பு கொண்டதால் சில ஆய்வுகளுக்கு பின் நாம் நமது வலைப்பதிவை எப்படி இந்தியாவில் காண்பது என்று சில விளக்கங்களை இங்கு பதிகின்றோம்.

இந்தியாவில் நமது வலைப்பதிவை காண்பதற்கான வழிமுறைகள் :
முதலில் தங்கள் ஐஎஸ்பி (Internet Service Provider) *.blogspot.comஐ தடை செய்துள்ளதா என்பதை கண்டறிய கீழக்கண்ட சிறிய சோதனையை செய்யவும் :

முதலழில் MS-DOS WINDOW வை தொடங்கி அதில் கீழ்க்கண்ட கட்டளையை இடவும் :

ping.blogspot.com
or
ping.blogger.com


உங்கள் ஐஎஸ்பி *.blogspot.com பலைப்பதிவுகளை தடைசெய்யாமல் இருந்தால் கீழ்கண்டவாறு உஙகள் வில் காட்டும்

Pinging blogspot.blogger.com [66.102.15.101] with 32 bytes of data:
Reply from 66.102.15.101: bytes=32 time=333ms TTL=240
Reply from 66.102.15.101: bytes=32 time=329ms TTL=239
Reply from 66.102.15.101: bytes=32 time=337ms TTL=239
Reply from 66.102.15.101: bytes=32 time=294ms TTL=239
Ping statistics for 66.102.15.101: Packets: Sent = 4, Received = 4, Lost = 0 (0% loss),
Approximate round trip times in milli-seconds:
Minimum = 294ms, Maximum = 337ms, Average = 323ms

அப்படியில்லையேல் தங்கள் ஐஎஸ்பி *.blogspot.com டொமைன்களை தடை செய்துள்ளதை அறிந்து கொள்ளலாம் .

அப்படி தடைசெய்யப்பட்டிருந்தால் கீழ்க்கண்ட வழிமுறைகள் மூலம் நீங்கள் தடை செய்யப்பட்ட எந்த ஒரு வலைப்பதிவையும் காணலாம் :

  • Via RSS2Email Services Head over to Feedblitz, Bloglet or FeedBurner, type the blog address and you will automatically receive the entire blog posts in your inbox as soon as the blogger posts a story. You will however miss reading the comments.

இது மிக அருமையாக வேலை செய்யும் tmpolitics என்பதற்கு பதிலாக தாங்கள் விரும்பிய முகவரயியை இட்டு காணலாம்

தங்களுக்கு இது பயனுல்லதாக இருக்கும் என்று நம்புகின்றேன் .

எமது மக்களின் கருத்து சுதந்திரம் மதிக்கப்படும் என்று நம்புகின்றோம் அதற்கு மத்திய அரசை நமது தமிழக முதல்வர் வலியுறுத்துவார் என்று நம்புகின்றோம் அதுபோல் தடையற்ற எண்ணங்களை மத மற்றும் தனிமனித உணர்வுகளை புண்படுத்தாமலும் சமூக ஒற்றுமையை குழைக்காமலும் தடையின்றி எழுத என் திராவிட சகோதரி தமிழன்-வழி கவிஞர் கருத்து கனிமொழி அவர்களும் மற்றும் கருத்து கார்த்தி ப.சிதம்பரம் அவர்களும் மத்திய அரசில் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி ஆவன செய்வார்கள் என்று நம்புவோமாக.

விரைவில் நமது அரசு இந்த தடைகளை நீக்கி உலகிலேயே நமது நாடும் நமது அரசும்தான் ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டு என்பதை மீன்டும் நிருபிக்கும். நம் நாட்டின் ஜனநாயகம் என்று சாகாது.



நன்றி
முகவைத்தமிழன்

2 comments:

ஆத்தூர்வாசி said...

It's a very useful information for those who live in india, Jazakallahu khair.


By the way,

தடை செய்யப்பட்ட வலைப்பதிவுகளை காண்பது சரி! தங்களால் மறைக்கப்பட்ட (க. க. தமுமுகவின் இடஒதுக்கீடு பற்றிய) வலைப்பதிவுகளை காண்பது (i hope you know what i'm talking about) எப்படி???.

Will you post this or gonna delete this as you did before, lemme see your honesty here. Ithaqillah!.

முகவைத்தமிழன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தங்களின் விமர்சனத்திற்கு நன்றி. நம்மால் என்றும் எந்த பதிவும் மறைக்கப்பட்டதில்லை. நீங்கள் எதைப்பற்றி கூறுகின்றீர்கள் என்பதை நனகறிவேன்.

தமுமுக வை சேர்ந்த ஒரு சகோதரரால் (கடல் கடந்த தமுமுக) இடப்பட்ட பதிவும் அதற்கு பதிலாக எம்மாலும் எமது திரவிடச்சகோதரர் போலி டோண்டுவாலும் இடப்பட்ட கட்டுறைகள் அனைத்தும் மறைக்கப்படவில்லை மாறாக சமுதாய நல் கருதி நீக்கப்பட்டுள்ளன.

அது தமுமுக வின் கருத்தாக நழனைத்து நாமும் அதற்கு பதில் அளித்தோம் இறுதியில் அ;த சகோதரர் இது தனது தனிப்பட்ட கருத்து என்றும் அது சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றால் அதை நீக்கி விடுகின்றேன் என்று எம்மிடம் தொலை பேசியில் தெறிவித்து விட்டு அதை நீக்கிவிட்டார் ஆக சம்மந்தப்பட்ட கட்டுறையே அங்கு நீக்கப்பட்டபின் நாமும் அதற்கு பதில் அளித்து விளக்கும் வகையில் பதிந்த மற்ற இரு பதிவுகளையும் நீக்கி விட்டோம்.

இது நல்லென்ன புறிதலின் அடிப்படையில் சமுதாய நலன் கருத்தில் கொண்டு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டவுடன் அதை உணர்ந்து உடணடியாக அதற்கு மறுப்ப்பும் வருத்தமும் தெறிவிக்கும் போது சமுதாய நலன் கருதி எதிர்காலத்தில் அப்பதிவுகள் ஆதாரமாக இருக்கக்கூடாது என்ற நல்லென்ன புறிந்துனர்வின் அடிப்படையில் அதை நாம் நீக்கி விட்டோம்.

நாம் இறைவனுக்கு மிக்க அஞ்சியவர்களாகவே உள்ளோம் .

நன்றி.
முகவைத்தமிழன்