தமுமுகவைப் பற்றி தரக்குறைவாக எழுதாமல் தமுமுகவின் சொந்தச் சொத்தான 'உணர்வு' பத்திரிக்கை இனி வெளிவராது என்று முன்னரே எழுதியிருந்தோம். தமுமுகவுக்கென்றே துவங்கப்பட்ட உணர்வு (10:45) பத்திரிக்கையில் தமுமுகவைப் பற்றியே தரக்குறைவாக எழுதி புலகாங்கிதம் அடைந்து கொள்கிறார் அந்த பத்திரிக்கைத் திருடர்.
'பொதக்குடியில் நடந்தது என்ன? – ஒரு நடுநிலை ரிப்போர்ட்' என்ற பெயரில் ஒரு செய்தியை எழுதி ததஜவிலிருந்து கழன்று கொண்டிருப்பவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார் அவர்.
தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் என்ற பெயரை வைத்துக் கொண்டு, பிற கட்சிகளிலுள்ள சராசரி அரசியல்வாதிகளை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு சூப்பர் அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் பிஜேயின் செயலைக் கண்டு கொதித்து எழுகிறார்கள், அவரின் தவ்ஹீது போர்வையை நம்பிச் சென்ற உண்மைத் தவ்ஹீதுவாதிகள்.
இப்போது திருந்துவார், இப்போது திருந்துவார் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் தண்ணீர் காட்டிக் கொண்டிருக்கிறார் ததஜவின் ஆயுட்கால தலைவர் பிஜே.
தனது ஆணித்தரமான வாதத்தை நிலைநாட்டுவதற்காக எப்படியெல்லாம் ஆதாரங்களை பொறுக்கிப் போட்டு சொல்லி மக்களை பிரமிக்கச் செய்வாரோ அதுபோன்று சல்லிக்காசு பெறாத அபத்த விஷயங்களுக்காக ஆதாரம் சொல்கிறேன் என்ற பெயரில் பாரதூரமான விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு களங்கம் கற்பிக்க நினைப்பவர் தான் இந்தப் பேரறிஞர்?.
ஏற்கனவே ஒருமுறை கீழச்சிறுபோது சாராயக்கடை வியாபாரியும் பிஜேபியின் நிர்வாகியுமான ஒருவருக்காக பரிந்து பேசிக் கொண்டு, தமுமுகவைச் சாடுகிறோம் என்ற நினைப்பில் உணர்வின் நடுநிலை ரிப்போர்ட்டின் இலட்சணத்தை பார்த்து உலகமே சிரித்தது. அந்த வரிசையில் இப்போது பொதக்குடி விஷயமும் இருக்கிறது.
தமுமுக தரப்பினர் என்ன சொல்கிறார்கள் என்பது அந்த மூன்று பக்க செய்தியில் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தாலும் தமுமுகவின் மீது புழுதிவாரித் தூற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எதிர் தரப்பினரின் செய்தியையும் வெளியிட்டு எதிர் தரப்பினருக்கு ஆதரவாக தீர்ப்பும் வழங்கியிருப்பது தான் உணர்வின் மடத்தனமாகும்.
அந்த செய்தியை வெளியிடுவதின் மூலமாக தமுமுகவினர் மோசமானவர்கள் என்பதை மூடலாக சொல்ல வருகிறார் என்பதை அதைப் படிப்பவர்கள் அறிந்து கொள்வார்கள்.
'சமுதாய இயக்கம் - முஸ்லிம்களை முன்னேற்றுகிறோம்' என்று சொல்லிக் கொண்டு அடாவடி அராஜகம் செய்து வருகிறது ஒரு கும்பல் என்று அந்தச் செய்தியில் அர்ச்சனை ஆரம்பிக்கிறது. இந்த ஒரு விஷயத்தை மட்டும் எழுதிவிட்டால் அந்த செய்தியின் இலட்சணத்தை நம்மால் இனம் கண்டு கொள்ள முடியும்.
திருவிழாத் திருடன் பாணியில் இந்த வாசகம் அமைந்திருக்கிறது என்பது நமது எண்ணம். 'தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்' என்ற பெயர் தவ்ஹீதுவாதிகளை ஏமாற்றி தன் பக்கம் வைத்துக் கொள்வதற்கு மட்டுமே. தேர்தலில் சங்பரிவார ஜெயலலிதாவை ஆதரித்து அதன் மூலம் முஸ்லிம்களின் பெருவாரியான வாக்குகளை(?) வாங்கிக் கொடுத்து, ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவை சக்திவாய்ந்த எதிர்கட்சியாக மாற்றி அமைத்த பெருமை பிஜேயின் சாதனை.
இந்த சாதனைக்காக பிஜேக்கு செல்வி (?) ஜெயலலிதா திருநெல்வேலி அல்வாவை பரிசாக தந்துள்ளார்.
பாபர் மசூதியை இந்தியாவில் கட்டாமல் எங்கே கட்டுவது என்று கேட்டு அல்வா தந்த ஜெயலலிதாவை ஆதரித்தவர்களுக்கும் ஓட்டுப் போட்டவர்களுக்கும் மீண்டும் அல்வா தந்துள்ளார்.
ஆந்திரா அரசு முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தந்தது தொடர்பாக ஜெயலலிதா கடுமையான விமர்சனம் செய்தார், இப்படிப்பட்ட அவரை ஆதரித்தால் அல்வா கிடைக்கும் என்று இவர்களுக்கு முன்பே தெரிந்திருக்க வேண்டும்.
வாழ்வுரிமை மாநாட்டில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக வாக்குத்தந்தார், நாம் வாக்களித்தோம், ஜெயலலிதா வாக்கு மீறினார். அவரது ஐந்தாண்டு கால ஆட்சியில் இடஒதுக்கீடு தொடர்பாக துரும்பைக்கூட நகர்த்த வில்லை.
அந்த வரிசையில் இப்போது கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சை கூட செய்யக்கூடாது என்று ஜெயலலிதா திருவாய் மலர்ந்துள்ளார். இவர்தான் சிறைவாசிகளை விடுவிக்கப் போகிறாரா? இவர்தான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப் போகிறாரா? இவருக்காகத்தான் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் என்ற 'சமூக அரசியல் பேரியக்கம்?' ஓட்டுக் கேட்டு தெருத்தெருவாக சென்றதோ?
'களப்பணியாற்றச் செல்வோர் அத்தனை பேருமே ஏகத்துவத்தை இழந்து விடுவார்கள்' என்ற ஏகத்துவம் ஏப்ரல் 2004 ல் எழுதியது எதற்காக? தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தை சேர்ந்த எவரிடத்திலும் தவ்ஹீது எனும் ஏகத்துவம் இப்பொழுது இல்லையோ? சங்பரிவார் கும்பலைச் சேர்ந்த ஜெயலலிதாவுக்காக ஓட்டுக் கேட்டுப் போனதால் அதைவிடவும் தரம் தாழ்ந்து சென்று விட்டனரோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
இந்த லட்சணத்தில் எதிர் அணியினரைப் பார்த்து, அடாவடி அராஜகம் செய்பவர்கள் என்ற பட்டம் வேறு, ஜே.எஸ்.ரிஃபாயி என்ற மௌலவியின் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டை வீசி அவரைக் கொல்ல சதி, அடாவடி, அராஜகம் போன்ற தீவிரவாத செயல்களில் ததஜ கும்பல் தானே ஈடுபட்டது. இதற்கு தூண்டு கோலாக இருந்தது பிஜே என்பதை யாரும் மறுக்க முடியுமா?
மற்றபடி அந்த நேரடி ரிப்போர்ட்டில் தனக்கு ஏற்பட்ட அரிப்பை சொறிந்து தள்ளியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.
இப்னு ஃபாத்திமா 19.07.2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பொதக்குடியில் நடந்த சம்பவம் தொடர்பாக தமுமுக தனது இணையத்தளத்தில் கீழ்காணும் செய்தியை வெளியிட்டுள்ளது. வாசகர்களின் வசதிக்காக அதன் லிங்க்கை இங்கே பதிக்கிறோம்.
http://www.tmmkonline.org/tml/others/109757.htm
Post a Comment