Monday, July 17, 2006

மீண்டும் முஸ்லிம்களுக்கெதிராக ஜெயலலிதா!!

பி.ஜே ஆசியுடன் மீண்டும் முஸ்லிம்களுக்கெதிராக ஜெ.ஜெஅத்வானி, மோடி சங்பரிவாரங்களுடன் ஜெயலலிதா

நீண்ட காலமாக சிறையில் விசாரனைக்கைதியாக வாடி வரும் கேரள மாநிலத்தின் மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கிய கட்சித்தவைர்களிள் ஒருவரான அப்துல் நாசர் மதானி அவர்களுக்கு கடந்த ஆட்சியில் சிகிச்சை மறுக்கப்பட்டு மனிதாபிமான மருத்துவ உதவிகள் கூட அளிக்கப்படாதிருந்த நிலையில் கேரள முதல்வர் அவர்களின் கோரிக்கையின் பேரிலும் தமுமுக, முஸ்லிம் லீக் போன்ற சமுதாய இயக்கங்களின் வேண்டுகோளினாலும் மற்றும் இயக்கம் சாரா குழுக்கள் அரசுக்கு விடுத்த கோரி;க்கையாலும் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தனது வாக்குறுதியின்படியும் மனிதாபிமான அடிப்படையிலும் கருணையுள்ளம் கொண்டு ஜனாப். அப்துல் நாசர் மதானி உள்பட சிறையில் நோய்வாய்ப்பட்டு நீண்ட காலமாக சிகிச்சை மறுக்கப்பட்டிருக்கும் கைதிகள் அனைவருக்கும் அறுவை சிகிச்சை உள்பட அனைத்து வகை சிகிச்சைகளும் அளிக்க உத்தரவிட்டார் அது போல் சிகிச்சையின்போது மதானி அவர்களின் மனைவியும் துணையாக இருக்கவும் அனுமதி வழங்கினார்.ஃபாசிச கொள்கைகளின் ரிமோட் கன்ட்ரோல் ஆன தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இந்த விசாரனை சிறைவாசிகள் மீது காட்டிய கருணையை கடும் வார்த்தைகளிள் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அதுமட்டுமல்லாது இந்த அப்பாவி முஸ்லிம் விசாரனைக்கைதிகளுக்கு எந்த மருத்துவ உதவியும் செய்யக்கூடாதெனவும் மீண்டும் பொடா சட்டத்தை கொண்டுவர வேண்டும் என சங்பரிவார கும்பலின் வெறிக்கூச்சலை அப்படியே வார்த்தை பிசகாமல் அறிக்கையாக வெளியிட்டு தான் இன்னும் மாறவில்லை சங்பரிவார கும்பலின் ஊதுகுழல் தான் நான் என்று மீண்டும் நிருபித்துள்ளார். சமுதாயத்தினர் இவரை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.நடந்து முடிந்த தேர்தலில் ஜெயலலிதாவுடன் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் உட்பட சில முஸ்லிம் அமைப்புக்கள் கூட்டணி அமைத்திருந்தன இந்த அமைப்புக்கள் ஜெயலலிதாவை ஆதரித்து முஸ்லிம்களிடையே பிரச்சாரம் செய்த போது, சிறைவாசிகள் விடுதலைக்கு ஜெயலலிதா உத்திரவாதம் அளித்துள்ளதாகவும் மற்றும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி விடுவார் என்ற இரட்டை வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே ஓட்டு வேட்டையாடின சிறைவாசிகள் விடுதலை, இடஒதுக்கீடு என்ற காரணத்திற்காக நமது முஸ்லிம் சமுதாயத்தின் ஒரு பகுதியினரும் தங்கள் ஓட்டுக்களை ஜெயலலிதாவிற்கு அளித்து வெற்றி பெற இயலாவிட்டாலும் 70 சீட்டுக்கள் அளவில் கிடைக்கப்பெற்று பிரதான எதிர்க்கட்சியாக அமரச்செய்தனர்.ஆனால் தற்போது நடப்பதோ வேறு, விசாரனைக்கைதியாக நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டு சிகிச்சை மறுக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு மனிதாபிமான அடிப்படையில் அளிக்கும் உதவிகளைக்கூட அளிக்கக்கூடாது என்றும் இவர்களை விடுதலை செய்யக்கூடாது என்றும் மீண்டும் பொடா சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு எதிராக குரல் எழுப்பி கண்டன அறிக்கைகளை தொடுத்து வரும் ஜெயலலிதாவின் உண்மை முகத்தை இப்போதும் இவருடன் கூட்டணியில் தொடரும் ததஜ போன்ற முஸ்லிம் இயக்கத்தினர் கண்டு கொள்ளாமல் இருப்பது பெருத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் சிறுபான்மை சமூகத்திற்கு அளித்துள்ளது.
ஃபாசிச சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்து இரட்டை வேடமிட்டு கபட நாடகமாடும் ஜெயலலிதாவின் சிறுபான்மையினருக்கெதிரான நடவடிக்கைகளை கடுமையாக கண்டிப்பதோடு அதற்கு துணைபோவதுபோல் இவருடன் இன்றும் கூட்டணியில் தொடரும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் போன்ற இயக்கங்கள் தேர்தலின் போது தாங்கள் ஜெயலலிதா சார்பாக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் என்ன? இன்று அதற்கு மாற்றமாக செயல்படும் ஜெயலலிதாவின் போக்கை கண்டிக்க தவறியதேன் ? உண்மையில் ஜெயலலிதா சிறைவாசிகள் விடுதலை குறித்து வாக்குறுதிகள் அளித்தாரா ? அல்லது காசிமி அவர்கள் கூறியது போல் தாங்கள் (ததஜ) மக்களிடம் போலியான வாக்குறுதிகளை ஜெயலலிதா சார்பில் அளித்தீர்களா ? சிறைவாசிகள் விடுதலை பற்றியும் இடஒதுக்கீடு பற்றியும் ஜெயலலிதா வாக்குறுதி அளித்துள்ளதாக தாங்கள் (ததஜ) கூறியதை நம்பித்தான் முஸ்லிம் சமூகம் தங்கள் ஓட்டுக்களை பதிவுசெய்து ஜெயலலிதாவை எதிர்க்கட்சியாக வெற்றி பெறச்செய்துள்ளது.


அப்படி தாங்கள் (ததஜ) தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியபடி ஜெயலலிதா சிறைவாசிகளின் விடுதலை பற்றியும் இடஒதுக்கீடு பற்றியும் உண்மையிலேயே வாக்குறுதி அளித்திருந்தாரேயானால் தற்போது சட்டமன்றத்தில் அவர்களின் விடுதலைக்காக எதிர்க்கட்சி என்ற நிலையில் குரல் கொடுக்கவேண்டும் மாறாக சிறுபான்மையினரின் நலனுக்கெதிராக அப்பாவி சிறைவாசிகளுக்கு மனிதாபிமான சிகிச்சைகள் அளிக்க கூடாதென்றும், அவர்களை விடுதலை செய்யக்கூடாதென்றும், சிறுபான்மையினருக்கெதிராக பயன்படுத்துவதற்காக பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்றும் குரல் கொடுத்து வருவதேன்??

ஓன்று ஜெயலலிதா தான் கூறிய வாக்குறுதியிலிருந்து மாறி மீண்டும் ஃபாசிச சக்திகளுடன் கைகோர்த்திருக்க வேண்டும் அல்லது தாங்கள் (ததஜ) ஜெயலலிதா கூறியதாக பொய்யான தகவலை (வாக்குறுதி) கூறி தமிழக முஸ்லிம்களை நம்ப வைத்து அவர்களின் ஓட்டுக்களினால் ஜெயலலிதாவை ஜெயிக்க வைத்து எதிர்க்கட்சியாக்கியிருக்க வேண்டும்.

இதில் எது உண்மை ? ஜெயலலிதா வாக்குறுதியிலிருந்து மாறிவிட்டார் என்பதா அல்லது தாங்கள் (ததஜ) தேர்தல் பிரச்சாரத்தின் போது பொய்யான தகவல்களை அளித்து மக்களை ஏமாற்றினீர்கள் என்பதா? அவ்வாறு ஜெயலலிதா தனது வாக்குறுதியிலிருந்து மாறிவிட்டார் எனில் இதுகுறித்து ததஜ வின் நிலைப்பாடு என்ன? ஜெயலலிதாவை தொடர்ந்து ஆதரிக்குமா அல்லது கூட்டணியிலிருந்து விலகி ஜெயலலிதாவின் ஃபாசிச போக்கை விமர்சிக்குமா? அப்படி
ஜெயலலிதா வாக்குறுதியிலிருந்து மாறவில்லையெனில் தாங்கள் (ததஜ) மக்களிடம் சிறைவாசிகள் விடுதலைபற்றி ஜெயலலிதா வாக்குறுதி அளித்ததாக செய்த பிரச்சாரம் பொய்யா? அப்படியெனில் பொய்ப்பரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றியதன் காரணம் என்ன?தங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது மற்ற இயக்கத்தவரை சுயமரியாதை இழந்தவர்கள் கருணாநிதி மூத்திரம் பெய்ய எழுந்தாலும் தானும் எழுந்து நின்று சுயமரியாதை இழந்தவர்களாக சமுதாயத்தையும் கேவலப்படுத்தினார்கள் என்று வாய்கிழிய பேசியும் எழுதியும் வந்தீர்களே, தற்போது தங்களின் நிலை என்ன? தாங்கள் (ததஜ) கூட்டணி வைத்துள்ள தலைவி ஜெயலலிதா, முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்கு வாக்களித்துள்ளார் அதனால் ஓட்டு போடுங்கள் என்று கூறி தமிழக முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று கொடுத்து 70 சீட்டுக்களுடன் பிரதான எதிர்க்கட்சியாகியுள்ளீர்களே அந்த ஜெயலலிதா தான் வாக்களித்தபடி சிறைவாசிகளின் விடுதலை பற்றி சட்டமன்றத்தில் பேசாமல் மாறாக சிறைவாசிகளுக்கு மனிதாபிமான உதவிகள் கூட செய்யக்கூடாது என்றும் பொடா சட்டத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்றும் நீங்கள் (ததஜ) அளித்த வாக்குறுதிக்கு மாறாக ஜெயலலிதாவின் செயல்பாடு அமைந்துள்ளதே, அதை ஆமோதிப்பது போல் நீங்களும் (ததஜ) ஜெயலலிதா மூத்திரம் பெஞ்சாலும் பெய்யாவிட்டாலும் கருணாநிதியின் சதி, சட்டமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, என்று ஜெயலலிதா எது செய்தாலும் சாதனை போலவும் கருணாநிதியின் ஒவ்வொரு செயலும் துரோகம் போலவும் உணர்வில் எழுதி வருகின்றீர்களே, தங்களின் நிலைப்பாடுதான் என்ன ?

தேர்தல் நேரத்தில் முஸ்லிம் மக்களிடம் தாங்கள் அளித்த வாக்குறுதிகள் என்னவாயின ? இன்று அதற்கு எதிராக செயல்படும் ஜெயலலிதாவை நீங்கள் கண்டிக்க தவறியதேன்? அவருடன் ஹீதைபியா உடன்படிக்கை செய்து கொண்டதாலா? (சகோ. பாக்கர் அவர்கள் தம்மாம் வருகையின் போது ஜெயாவுடன் கூட்டணி பற்றி விளக்கியபோது ஓப்பீட்டுக்காக கூறிய வாhத்தை) தங்களுடன் ''அம்மா'' ஜெயா செய்து கொண்ட ஹீதைபியா உடன்படிக்கையினால்தானே ததஜவின் தவ்ஹித் தொன்டர்கள் அயராதுளைத்து அம்மா பலமான எதிர்க்கட்சியாகும் அளவிற்கு வெற்றியை தேடிக்கொடுத்தீர்கள் !! அதே ''அம்மா'' ததஜ வின் ''அய்யா'' தலைமையில் செய்து கொண்ட ஹீதைபியா உடன்படிக்கையை மீறி சங்பரிவாரக்கும்பலுக்கு ஆதரவாகவும் சிறைவாசிகள் விடுதலை விஷயத்தில் வாக்குறுதியை மீறியவராகும் செயல் படுகின்றாரே, அம்மாவுடன் செய்து கொண்ட ஹீதைபியா உடன்படிக்கையின் சரத்துக்களின் படி நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? தற்போதைய தங்களின் நிலைப்பாடு என்ன?

இது குறித்து தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தினர் தங்களின் நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். சிறைவாசிகள் விடுதலை குறித்து அம்மா வாக்குறுதி
அளித்ததாக கூறி ஓட்டுக்கேட்டிர்களே அதற்காக வேண்டி இன்று சட்டசபையில் பலமான எதிர்க்கட்சியாக இருந்தும் ஒரு நாளாவது கேள்வி எழுப்பியுள்ளாரா? இட ஒதுக்கீடு
குறித்து சட்ட சபையில் எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதா வலியுறுத்தி பேசியுள்ளாரா?
இன்று இவற்றிற்கெல்லாம் மாறாக செயல்படுகின்றாரே ஏன்? இது குறித்து தாங்கள் அவரிடம்
கேட்காதது ஏன் ? கூட்டணியில் இருப்பதால் இடஒதுக்கீடு பற்றியும், சிறைவாசிகள் விடுதலை பற்றியும் சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேச சொல்லலாமே? இது போன்ற பல கேள்விகளுக்கு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தினர் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளனர்.


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தொன்டர்களே, ததஜ வினர் சிறைவாசிகள் விடுதலை குறித்தும் இட ஒதுக்கீடு குறித்தும் அளித்த வாக்குறுதிகளை நம்பி ஜெயலலிதாவறிகு ஓட்டளித்து ஜெயிக்க வைத்து எதிர்க்கட்சியாக ஆக்கிய முஸ்லிம் வாக்காள பெருங்குடி மக்களே தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தினரிடம் மேற்கூறிய கேள்விகளை கேளுங்கள் அவர்கள் அதற்கு பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளார்கள். ததஜவினர் ஜெயலலிதாவிடம் செய்து கொண்ட ஹீதைபியா உடன்படிக்கை;கு மாறாக இன்று ஜெயலலிதா சங்பரிவாருடன் கைகோர்த்துள்ளது ஏன் என்று கேளுங்கள். சிறைவாசிகள் விடுதலை விஷயத்தில் மாற்றமாக நடந்து கொள்வது ஏன் என்று கேளுங்கள். இட ஒதுக்கீடு பற்றி வலியுறுத்தி சட்ட மன்றத்தில் பேசாதது ஏன் என்று கேளுங்கள். இதையெல்லாம் நீங்கள் ததஜவினரிடம் கேட்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் முடிக்கின்றேன்.

குறிப்பு : தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தினர் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க தவறும் பட்சத்தில் இவர்களின் இஸ்லாமிய சாயம் பூசப்பட்ட வார்த்தைகளால் ஏமாற்றப்பட்ட மக்களாகியே நீங்கள் உணரும் வகையில் ததஜ வினர் உண்மையில் ஜெயாவுடனும் அன்றைய உளவுத்துறை அதிகாரி அலெக்சான்டருடனும் செய்து கொண்ட உண்மையான ஹீதைபியா உடன்படிக்கையின் சரத்துக்கள் இங்கு பதியப்படும். அதன் பின் தமிழக முதல்வர் கலைஞருக்கு எதிராக பிஜே வகையராக்கள் ஏன் இவ்வளவு ஆக்ரோசமாக செயல்படுகின்றார்கள் என்பதும் எதற்காக 70 எம்எல்ஏ க்களின் ஆதறவிற்காக ஜெயாவின் காலை நக்குகின்றார்கள் என்பதும் தெறிய வரும். மறைந்த தேசிய லீக்கின் தலைவர் மர்ஹீம். லத்திப் சாஹிப் அவர்களிடம் கே.கே. நகர் இமாம் கொலை வழக்கு பற்றியும் ஆலிம் ஜார்ஜ் கொலை வழக்கு பற்றியும் உண்மைக்குற்றவாளிகள் யார் என்பதைப்பற்றியும் உளவுத்துறையின் அறிக்கையை தூக்கி போட்டு அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் பேசிய பேச்சுக்களும் மர்ஹீம் லத்திப் சாஹிப் அவர்கள் துபை வந்தபோது இது குறித்து கூறிய கருத்தக்களும் இங்கு விரைவில் பதியப்படும்.நன்றி

முகவைத்தமிழன்


இதுகுறித்து தமிழ் முஸ்லிம் சிறைவாசிகள்சார்பாக சிறுபான்மையினர் நல அறக்கட்டளையிலிருந்து ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் கீழே உள்ளதில் சொடுக்கி அதைக் காணவும் :

1 comment:

ஆத்தூர்வாசி said...

Actually i really wanted to write about it, it just that i'm so bad in tamil typing, anywayz, jazakallahu khair for letting the ummah knows.

I never felt good about the election results, but now i'm quite happy that JAYA lost, though i dont support DMK either.

Alhamdhulillah, Allah knows best, Allah is HAKEEM.

I couldnt imagine what would have happen if she was in power???. Not even three months passed, yet she has to face an Panjayat elections and soon gonna be a Parliment election. What did she thought about us muslims, are all muslims stupid?. InshaAllah, she will face the consequenses in the panjayat elections and in parliment.

I just wanna know what TNTJ's reaction to that, they are the ones who did out of the way for her. Better let them quit, otherwise our ummah will kick them out.

MaaSalaama