Saturday, July 08, 2006

உணர்வுக்கும் ததஜவிற்கும் சிறைவாசிகள் கண்டனம்

بسم الله الرحمن الرحيم

தேதி : 07-07-2006

மதிப்பிற்குறிய உணர்வு வார இதழ் ஆசிரியர் மற்றும் வாசகர்கள் அறிய, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த ஜீன் 30-ஜீலை 06 இதழில் ''பதில்கள்'' பகுதியில் சிறைவாசிகள் பற்றிய கோவை அபூபக்கர் கேட்டிருந்த வினாவிற்கு தாங்கள், சிறைவாசிகள் சார்பில் துண்டு பிரசுரம், அறிக்கைகள், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் கேட்டிருந்த வேன்டுகோளின் அடிப்படையில் சிறைவாசிகள் விஷயத்தில் ததஜ தலையிடாமல் ஒதுங்கி கொள்வதாக தெரிவித்துள்ளீர்கள்.

//கோவை சிறைவாசி ஒருவருக்கு மருத்துவம் செய்வதற்காக பரோலில் செல்ல நீதிமன்றம் அனுமதித்த பின்பும் இதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறதே? இதற்காக தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தும் திட்டம் ஏதும் ததஜவுக்கு உண்டா? அபூபக்கர் கோவை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை வைத்து அரசியல் நடத்துகிறது என்று அறிக்கைகள் மூலமும் துண்டுப் பிரசுரங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் கடந்த சில மாதங்களாக சிறைவாசிகள் சார்பில் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது.

அவர்கள் விஷயத்தில் தவ்ஹீத் ஜமாஅத் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டால் போதும் என்றும் வெளிப்படையாகவே பிரகடனம் செய்துள்ளனர்.

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை ஏராளமான பணிகள் உள்ளன. யாரையும் வைத்து அரசியல் நடத்தும் அவசியம் நமக்கு இல்லை. ''எங்கள் பிரச்சனையில் தலையிடாதீர்கள்'' என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தால் அந்த விஷயத்தில் நமது ஜமாஅத் தலையிடுவ தில்லை என்பதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.

பாதிக்கப்பட்ட தனி நபர்கள் விஷயத்தில் கூட சம்பந்தப்பட்டவர்கள் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் எனக் கூறினால் அதன் பின்னர் அந்த விஷயத்தில் ஜமாஅத் தலையிட்டது கிடையாது.

நாம் தலையிடுவதால் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படும் என்ற நிலையில் நாம் வேறு பணிகளில் கவனம் செலுத்துவதே முறையாகும். உணர்வு ஜீன் 30-ஜீலை 06 //



உங்கள் பதில்கள் சிறைவாசிகளான எங்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. கடந்த காலங்களிள் சிறைவாசிகளுக்கு பணி செய்ய வேண்டியிருந்த போது தாங்கள் குறிப்பிடும்படியான எந்த பணியும் சிறைவாசிகளுக்கு செய்யவில்லை. இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் ததஜ தேர்தல் பிரச்சார நோட்டிஸில் சிறைவாசிகள் பற்றிய சில விஷயங்கள் இடம்பெற்றிருந்தன. அதனை கண்டு அதிர்ச்சி உற்ற நாங்கள் எங்கள் சார்பாக அதனை மறுத்து உண்மை நிலையை விளக்கி ததஜ விடம் சில வினாக்கள் தொடுத்து துண்டு பிரசுரம் வெளியிட்டோம். அதனை ''மக்கள் உரிமை'' வார இதழிலும் வெளியிட நாங்கள் கோரியதால் அவர்கள் கடந்த மே 5-11 இதழின் முன்பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். ''உணர்வு'' வார இதழை பொறுத்த வரை பல்வேறு பிரச்சினைகளில் வார்த்தைக்கு வார்த்தை எழுத்திற்கு எழுத்து என விளக்கங்களையும், வியாக்கியானங்களையும் உடனுக்குடன் அளித்து வந்துள்ளன.

ஆனால் சிறைவாசிகள் அவ்வாறு ததஜ வை குற்றம்சாட்டி வினாக்கள் தொடுத்து ''மக்கள் உரிமை'' இதழில் செய்தி வெளியிட்டதற்கு ''உணர்வு'' வார இதழ் எவ்வித பதிலும் அளிக்காமல், தற்போது தாங்கள் நாங்கள் வெளியிட்ட நோட்டிpஸில், அறிக்கையில் ''அரசியல் செய்யாதீர்'' , ''எங்கள் பிரச்சினையில் தலையிடாதீர்'' என்ற இறுதி வாசகத்தை பிடித்துக்கொண்டு , அதனால் எங்கள் பிரச்சினையில் இருந்து ஒதுங்கி கொன்டதாக தவறான பிரச்சாரத்தை மேற்கொன்டுள்ளீர்கள்.

ததஜ தேர்தல் பிரச்சார நோட்டிஸில் குறிப்பிடப்பட்ட தவறான செய்திகளை மறுத்து உண்மை நிலை விளக்கி உங்களிடம் (ததஜ) சில வினாக்கள் தொடுத்து எங்கள் பிரச்சினையை ஆக்காதீர் என்ற ரீதியில் செய்தி வெளியிட்டோம். ஆனால் தாங்கள், எங்கள் நோட்டிஸிலும், அறிக்கையிலும் கூறி இருந்த குற்றச்சாட்டுகளுக்கோ, வினாக்களுக்கோ இதுவரை எவ்வித பதிலோ விளக்கமோ அளிக்காமல் தற்போது ''உணர்வு'' வாசகருக்கு ஒரு தவறான பதிலை வழங்கி எங்கள் செய்தியை திரித்து கூறியுள்ளீர்கள்.

இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் நாங்கள் பணி செய்ய வேண்டாம் எனத்தடுத்தாலும், பாதிப்பை மக்கள் மீது நிகழ்த்திக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கம் உங்களிடம் அவர்களின் அக்கிரமத்தையும், மனித உரிமை மீறலையும் கண்டு கொள்ளாமல் இருக்க வேன்டுகோள் எதுவும் வைக்கவில்லை அல்லவா?? அதனால் வேண்டாத சாக்கு போக்கு காரணங்களை விட்டு விட்டு அக்கிரமத்திற்கு எதிராக ''ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாய்'' நின்று பணி செய்ய வேண்டிய தார்மீக் பொறுப்பும் உண்டு.

தற்போது எங்கள் விஷயத்தில் தமுமுக சிறப்பான களப்பணி ஆற்றி வருகின்றது சிறைவாசிகள் மற்றும் சமூக நலன் கருத்தில் கொண்டு அவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள். அல்லது உங்களின் தேவையற்ற விமர்சனங்களையும் விளக்கங்களையும் தவிர்த்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு
சிறைவாசிகள்

சிறைவாசிகள் எழுதிய மடல் வாசிக்க :

பக்கம் 1

பக்கம் 2


No comments: