Monday, July 10, 2006

TNTJ & PJ சிறைவாசிகளுக்கு செய்த உதவிகள்

தற்போதைய ததஜ-வின் தலைவர் பிஜெ அவர்கள் மூலம் சிறைவாசிகளுச் செய்த உதவிகள் பாரீர்!! பாரீர்!!!

Important Note : While you reading Please click the highlighted links to view the evidences and signed documents of P.J.

சமீப காலமாக கொள்கை சிங்கம்!!! பிஜெ அவர்களின் மூலம் ஒரு முக்கிய செய்தி ஒன்று ஊடகங்கள் வழியாக கசிந்து இன்று மக்கள் மத்தியில் பரவிகிடக்கின்றது. அது என்வென்றால் 'கோவை சிறைவாசிகளுக்கு நாங்கள் உதவிகள் மேற்கொள்வதில்லை' என்று முடிவெடுத்துள்ளோம் காரணம் சிறைவாசிகள் விரும்புவதில்லை", கடந்தகால கசப்பான அனுபவங்கள் மற்றும் உதவி பெற்றவர்களே அதை மறுத்து அறிக்கை வெளியிடுதல் போன்ற பற்பல காரணங்களால்தான்" என்று ததஜ-வின் முரசை அடிக்ககூடியவர்கள் மூலமாக மேற்கண்ட உள்ளத்தை உருக்கும் வசனம் எல்லா பகுதிக்கும் எடுத்துச்செல்லப்படுகின்றது. இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்பதனை பார்க்கும் முன் கடந்த வருடங்களில் உணர்வு என்ற ததஜ-வின் அதிகாரபூர்வ ஏட்டில் எழுதியவைகளை பார்ப்போம்....

உரிமை-10 குரல்-03 செப். 23-20, 2005 – கேள்வி பதில் பகுதி.

கேள்வி: கோவை சிறைவாசிகள் விஷயமாக நீங்கள் ஏதும்
செய்யவில்லை என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்களே? -ச.ரஹ்னதீன், சென்னை


பதில்: சிறைவாசிகளுக்கு நாம் பொருளாதார உதவிகள் ஏதும் செய்வதில்லை என்பது உண்மையே, கடந்த காலங்களில் சிறைவாசிகளுக்கு உதவி செய்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், உதவி பெற்றவர்களே அதை மறுத்து அறிக்கை வெளியிட்டதும் தாங்கள் அறிவீர்கள். எனவே சிறைவாசிகள் பெயரால் நாம் எந்த நிதியையும் திரட்டுவதில்லை என்று அனைவரும் இணைந்திருந்த காலத்தில் முடிவு செய்தோம். அந்த முடிவை தொடர்ந்து கடைப்பிடிக்கின்றோம். (CLICK HERE)

ஆனால் முன்பு,
உரிமை-09, குரல் 09, நவம்பர் 05-11, 2004 உணர்வு பக்கம் 14 கேள்வி பதில் பகுதி

கேள்வி: சிறைவாசிகளுக்கு என்று நிதி திரட்டுவதற்க்கு
இங்கே சிலர் வந்துள்ளனர். இவர்களை நம்பி நிதி உதவி அளிக்கலாமா? – எஸ். செய்யது அப்துல்லாஹ், துபை


பதில்: சிறைவாசிகளுக்கு உதவுவதாக ஏற்கனவே பலர் நிதி
திரட்டினார்கள் ஆனால் அந்த நிதிகள் சிறைவாசிகளைச் சென்றடைந்தாக நமக்கு தெரியவில்லை. மேலும் கோவை அல்-உம்மா சிறைவாசிகள் தமக்கு வழக்கறிஞர்களை நியமிக்க இயலவில்லை தெரிவித்ததால் அரசாங்கம் இரண்டு வழக்கறிஞர்களை அவர்களுக்கு நியமித்துள்ளது. சிறைவாசிகள் பெயரால் வசூல் செய்யப்பட்ட நிதி அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதனை இதன் மூலம் அறிகிறோம். அவர்களின் குடும்பத்தின்ரும் கஷ்டப்படுவதாக அறிகிறோம்.


எனவே சிறைவாசிகளுக்குகாக வசூலிக்க வருபவர்களை நம்பி பணம் கொடுக்காமல் இருப்பது தான் நல்லது சிறைவாசிகளுக்கு உதவ விரும்புவோர் அந்த உதவியை உணர்வு அலுவலகத்துக்கு அனுப்பினால் அவர்கள் யாரிடம் ஒப்படைக்க சொல்கிறார்களோ அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர்கள் பெற்றுக்கொண்டதற்கான ஆதாரத்தையும் உதவி செய்தவர்களுக்கு அனுப்பி வைப்போம்.

சிறைவாசிகள் பெயரைச் சொல்லி ஏமாற்றுவோரிடம் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். (CLICK HERE)

(குறிப்பு: இந்த பதில் சிடிஎம் பொருளாளர் கோட்டை தங்கப்பா அவர்கள் துபை வசூல் செய்யவதற்காக சென்ற சமயத்தில் வெளியானவை என்பதனை நினைவில் கொள்ளவும்)
  • 2004 நவம்பரில்...சிறைவாசிகளுக்கு உதவ விரும்புவோர் அந்த உதவியை உணர்வு அலுவலகத்துக்கு அனுப்பினால்....
  • 2005 செப்டம்பரில்....சிறைவாசிகள் பெயரால் நாம் எந்த நிதியையும் திரட்டுவதில்லை என்று அனைவரும் இணைந்திருந்த காலத்தில் முடிவு செய்தோம்....
மேற்கண்ட இரண்டில் எது உண்மை, நிதியை திரட்டுவதில்லை என்று அனைவரும் இணைத்திருந்த காலத்தில் எடுத்த முடிவு என்றால் 2004யில் உதவிகளை உணர்வுக்கு அனுப்பி வைக்கும் வேண்டுகோள் ஏன் விளக்குவாரா பிஜெ?.

இல்லை பிழைத்திருத்தம் 2005-ஐ 2004 என்றும் 2004-ஐ 2005 என்று திருத்தி படிக்கவும் என்று கட்டம் கட்டி பிழை திருத்தம் வெளிட்டு ததஜ-வினரை சமாதானபடுத்தபோகின்றாரா?! ஏன் இந்த இரட்டைவேடம் அண்ணா!

உண்மை நிலை என்னவென்றால்!

பொதுவாக தஃவா பணிக்கும், ஏழைகளுக்கு உதவி, பேரணி மற்றும் மாநாடு போன்றவற்றிற்கு வசூல் என்று சென்றால் சமுதாயத்தின் அனைத்து தட்டு மக்களும் பொருள் உதவி செய்யவதற்கும் உடல் உழைப்பு செய்வதற்க்கும் மிகுந்த ஆர்வமாக இருப்பார்கள் செய்வார்கள் இது கடந்த கால வரலாறு என்பதனை யாரும் மறுக்க இயலாது. இதற்க்கு சமீபத்திய குடந்தைக்காக வசூல் ராஜாக்களின் வசூலே சான்று.

ஆனால் வழக்கு நிதி,கோர்ட் மற்றும் சட்ட சம்மந்தமானவை என்றால் சமுதாயத்தில் எல்லோரும் உதவி செய்வதில்லை காரணம் நாளை நமக்கு எதாவது பிரச்சனை வரக்கூடாது என்ற நோக்கமே. ஆனால் எதற்க்கும் கவலைப்படாத, அல்லாஹ்விற்கு மட்டும் அச்சக்கூடிய இறையச்சமுடையவர்கள் எந்த நிலையிலும் வாரி வழங்குவார்கள். இப்படியான மக்களிடம் கடந்த காலங்களில் வசூல் மாவீரர் அதிகமான அளவு வசூல் செய்துள்ளார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என அனைவரும் அறிந்தே!!!

இப்படியாக இறைவிசுவாசிகளிடம் கடந்த காலத்தில் (1995 முன்பு) சிறைவாசிகளுக்காக என பல இலட்சங்களை (ஒரு கோடிகள் என்ற ஆதாரங்கள் கிடைத்தாலும் தற்சமயம் இலட்சங்கள் என்றே வைத்துக்கொள்வோம்) வசூல் செய்துள்ளார். இந்த கால கட்டதில் அண்ணன் பிஜெ அவர்கள் எந்த ஒரு இயக்கத்திலும் பொறுப்புக்கள் வகிக்கவில்லை (என்று பிஜெ அவர்கள் குண்டுவெடிப்பு வழக்குகள் விசாரிக்கும் கோவை விரைவு நீதி மன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்) ஆனாலும் தனது லட்டர் பேட்டில் கை பட கடிதம் எழுதி (Click here) வளைகுடா நாடுகள் முதல் வட மாநிலங்கள் வரை அனுப்பி வசூல் வேட்டையாடினார். இப்படி வசூல் செய்யபட்ட பணத்தின் வரவு செலவு கணக்குகளை அண்ணன் பிஜெ யாரிடமும் காட்டவில்லை என்பதனை கவனத்தில் கொள்ளவும். சில வளைகுடா நாடுகளில் ஐவர் குழு மூவர் குழு மேற்பார்வையில் (Click here) நடைபெறும் என்றும் பரிந்துரை கடிதம் வழங்கினார். அந்த குழுவிடமாவது இன்று வரை காண்பித்தாரா கணக்கை? இல்லையே. அதே போல் ஒரு சில மாதங்கள் உதவி செய்து விட்டு தொடர்ந்து வாழ்க்கை முழுவதும் உதவி செய்வது போன்று சிறைவாசிகளிடம் எழுதி வாங்கி காப்பி எடுத்து உலகம் முழுவதும் அனுப்பி வசூல் செய்தீர்களே! கணக்கு காண்பித்தீர்களா?? குறிப்பாக சீனி நைனா முஹம்மத் அவர்கள் குடும்பத்திற்க்கு எவ்வளவு காலம் உதவி செய்தீர்கள்?

பழனி பாபா அவர்கள் சிறுசிறு உதவிகள் செய்துவிட்டு மீதியை அமுக்கி கொண்டார் என சிறைவாசிகளிடம் எழுதிவாங்கி உலகம் முழுவுதும் அனுப்பிவைத்தீர்களே! நீங்கள் அதே காரியத்தை செய்யலாமா???? (Click here)
எந்த அமைப்பிலும் நிர்வாக பொறுப்பில் இல்லாத தனிநபர் பிஜெ அவர்கள், பல்வேறு காலகட்டத்தில் பழனி பாபா அவர்களை மிஞ்சும் அளவிற்க்கு வசூல் வேட்டையாடினார். ஆனால் அதன் கணக்கு வழக்குகளை இதுவரை யாரிடமும் காண்பிக்கவில்லை. ஜாக் அமீர், ஜாக்கின் கணக்கு அவர் மனைவியிடம் இருக்கின்றது என்று கூறுகின்றார் என ஒப்பாரி வைத்த அண்ணன் அவர்களே, சிறைவாசிகளுக்காக வசூல் செய்த கணக்கை உங்கள் மனைவியிடமாவது காண்பித்தீர்களா?

கடந்த காலத்தில் பிஜெ-யிடம் சிறைவாசிகளுக்காக பணம் கொடுத்த தானவான்கள் பிஜெயின் மோசடியை தெரிந்து அதன் பின் அவரிடம் பணம் கொடுக்கவில்லை என்பதனைவிட வேறுயாரும் சிறைவாசிகளுக்காக பிஜெ-யிடம் பணம் கொடுத்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

அதனால் தான் 2004-ல் பணத்தினை உணர்வு அலுவலகத்திற்க்கு அனுப்புங்கள் என்று எழுதினார். 2005 வரை இவரை நம்பி யாரும் சிறைவாசிகளுக்கு பணம் கொடுக்க முன்வரவில்லை என்பதனை அறிந்த கொண்ட அண்ணன் 2005-ல் சிறைவாசிகள் பெயரால் நாம் எந்த நிதியையும் திரட்டுவதில்லை என்று அனைவரும் இணைந்திருந்த காலத்தில் முடிவு செய்தோம்... என்று எழுதி அந்தர் பல்டி ஆகாச பல்டி அடித்தார் அண்ணன் பிஜெ என்பதனை வாசகர்கள் அறியவும்.

தொடர்ந்து 2006-ல் முற்றிலும் சிறைவாசி விஷயத்திலிருந்து விலகி கொள்கின்றோம் என்ற அறிவிப்பும் இதே அடிப்படையில் தான் என்பதனையும் வாசகர்கள் அறியவும்....

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை ஏராளமான பணிகள் உள்ளன. யாரையும் வைத்து அரசியல் நடத்தும் அவசியம் நமக்கு இல்லை. ''எங்கள் பிரச்சனையில் தலையிடாதீர்கள்'' என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தால் அந்த விஷயத்தில் நமது ஜமாஅத் தலையிடுவ தில்லை என்பதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது (P.J On Unarvu 2005)கடைசியாக பிஜெ-யிடம் நாம் கேட்பது, பிஜெ அவர்களே நீங்கள் மதுரையில் அல்-ஜன்னத் நடத்தி கொண்டிருந்த காலத்தில் உங்களுக்கெதிராக அன்றைய சுன்னத் வல் ஜமாத்தினார் வைத்த வாதங்களில் ஒன்று பிஜெ-க்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகின்றது, இஸ்ரேல்-யிடமிருந்து பணம் வருகின்றது, பிஜெ கையில் கட்டியுள்ள வாட்சு பல ஆயிரம் மதிப்புடையது, பிஜெ-யின் செருப்பு ஆயிரம் ரூபாய்க்கு மேல் என்று பிரச்சாரம் செய்தனர் அதனை கேட்ட அப்பாவி ஒருவர் உங்களை நேரிடையகாக சந்திப்பதற்கு மதுரை வந்து உங்கள் பிரஸில் வந்து பிஜெ யார் கேட்டு நான் தான் பிஜெ என்று சொன்னபோது (நீங்கள் அணிந்திருந்த வெள்ளை கை பனியன், சாதாரண செருப்பு மற்றும் பழைய வாட்சு என்ற தோற்றத்தில் உங்களைக் கண்ட) வந்தவர் நம்பாமல் மேற்கண்ட சுன்னத் ஜமாத் பிரச்சாரத்தையும் சொல்லி நம்ப முடியாமல் ஆச்சரியத்தில் முழ்கி பின்னார் 'தவ்ஹீத்' கொள்கையை எற்றார் என்று மேடைக்கு மேடை அந்தகாலத்தில் பெருமையாக பேசிய உங்களுடைய தற்போதைய சொத்தின் நிலவரம் என்ன?


உங்கள் மகனை பாலிடெக்னில் சேர்த்து படிப்பை தொடர முடியவில்லை என கூறியவர் தான் நீங்கள் தற்போதைய உங்கள் சொத்தின் மதிப்பு என்ன?

எங்கிருந்து வந்தது உங்களுக்கு இவ்வளவு பணம். 1995 முதல் 2005 வரை 10 வருட காலத்தில் இவ்வளவு பெரிய தொகை திரட்ட முடியுமானால் அந்த வழிமுறையை தான் என்ன?

நீங்கள் மேடையில் பேசுவதற்கு காசு வாங்குவதில்லை என்று கூறுகின்றீர்கள் ஆடியோ மற்றும் வீடியோவிற்க்கு ராயல்டி வாங்குவதில்லை!!! என்று கூறவும் செய்தீர்கள் அப்படியானால் எவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது உங்களுக்கு??

என்ன தொழில் செய்கின்றீர்கள்?

புத்தகம் எழுதியதில் கிடைத்த பணமா?

உங்கள் புத்தகம் அத்தனை பரபரப்பாக விற்பனையானதா?

ஸாஜிதா புக்சென்டர், முஸ்லிம் டிரட்ஸ் இன்னும் பல இடங்களில் உங்களில் பழைய புத்தங்கள் குவிந்து கிடக்கின்றவே!!!

நீங்கள் யாரைவேண்டுமானலும் ஏமாற்றலாம் ஆனால் படைத்த ரப்பை?????

தமுமுக ஆரம்பிப்பதற்க்கு முன் வரை நீங்கள் செய்த இரகசிய பண வசூலை வெளிப்படுத்துங்கள் அதன் கணக்கு வழக்குகளை மக்கள் மன்றத்தில் (ததஜ பொதுகுழுவில் அல்ல) வையுங்கள். உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்யுங்கள் தவ்பா செய்து மீண்டு வாருங்கள்.


தஃவா பணிக்கும், ஏழைகளுக்கு உதவி செய்வதற்காகவும் வளைகுடா நாடுகளிள் தொழில் செய்யும் கருணையுள்ளம் படைத்த நமது தமிழ் முஸ்லிம் செல்வந்தர்களும், வியாபாரிகளும், தொழில் அதிபர்களும் மற்றும் இங்கு பணிபுரியும் நமது சகோதரர்களும் வழங்கும் பொருளாதார உதவிகளும் மற்றும் நமது தமிழ் முஸ்லிம்களிடம் இவர்கள் வசூலிக்கும் ஃபித்ரா, ஜக்காத் போன்றவைகளும் அம்மக்கள் வழங்கிய நோக்கத்திற்க்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றது அதாவது தொலைக்காட்சிகளில் தங்களுடைய புகழ் பாடுவதற்கும், நமது சக முஸ்லிம் சகோதரர்களை பற்றி பல இழிவான சொற்களை கொண்டு (இவன் அந்த பொம்பளையிட்ட போனான், இவன் திருடன்) விமர்சனம் செய்வதற்கும் இன்னும் நமது சகோதரிகளை தரம் தாழ்ந்து விமர்ச்சிப்பதற்க்கும் (உதாரணம் போராளியின் சகோதரியை ப......பயலோடு ஓடிப்போனவள்) அதனை சிடிகளாக்கி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுக்குவிடுவதும் மேலும் வெளிநாட்டு தொலைகாட்சி சேனல்களில் ஒளிபரப்பியும் வருகின்றார்கள். இதனால் நமது சமுதாயத்தின் கண்ணியம் குலைக்கப்படுவதுடன், நமது சகோதரர்கள் நிரந்தர பகைவர்களாகவும் மாறுகின்றனர்கள்.

மார்க்க விஷயமாக முஸ்லிம்களுக்குள் உள் அரங்கில் நடந்த விவாதத்தை எடிட் செய்யாமல் ஒளிபரப்புகின்றேன் என்று மோசமான வார்த்தைகளுடன் (ஸைட் அடித்தல், தடிவுதல் என) உலகில் அனைவரும் பார்க்கும் வகையில் அவற்றை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி நமது சமுதாய ஒற்றுமையின்மையை!! பார்த்து கைகொட்டி சிரியாய் சிரிக்கும் நிலையும், மாற்று மதத்தவரும் காரி உமிழும் அளவிற்கும், தூய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்க வரும் சகோதரனை முகம் சுளித்து வெரூண்டோடச் செய்து அழைப்பு பணிக்கு தடங்களை ஏற்படுத்தியும் வருகின்றார்கள் என்பதனை சமுதாயத்தவர்கள் சிந்திக்கடமைபட்டுள்ளனர்.

(குறிப்பு: இதற்க்கு முன் எத்தனையோ விவாதங்கள் நடைபெற்றுள்ளன கிருஸ்துவர்களுடன் விவாதம், காதியாணிகளுடன் விவாதம், உமர் அலியுடன் விவாதம், இலங்கை சுன்னத் ஜமாத்துடன் விவாதம் மற்றும் பிறை விவாதம் அதையெல்லாம் எடிட் செய்யாமல் அப்படியேவா ஒளிபரப்பினீர்கள்? இல்லையே. ஏன் தற்போது இப்படியென்றால் 'தனி இயக்கம்' அதன் பிரபல்யம் அவசியம் கருதிதான் - என்பதனை அறியத்தருகின்றோம்)

நீங்கள் தொடர்ந்து அடுத்த இயக்கத்தவர்களை மற்றும் தனிநபர் மீதும் பொருளாதார (அவதூறுகளை) குற்றாட்டுகளை வைப்பீர்களானால் தொடரும் எமது பதிவுகளில் இன்னும் உங்களின் மோசடிகளை மக்களுக்கு தெரிவிப்போம். இன்ஷா அல்லாஹ்..

அல்லாஹ் கூறுகின்றான் 'ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்' அல்குர்ஆன் 9:119.ததஜ-வின் உறுப்பினர் கார்டுடன் இஸ்லாத்தினை இயன்ற அளவு பின்பற்றி வரும் (அப்படித்தான் உறுப்பினர் படிவத்தில் உள்ளது) சகோதர்களே, நாங்கள் இங்கே ஆதாரத்தின் அடிப்படையில் தான் குற்றம் சுமத்தியுள்ளோம், எனவே இந்த ஆதாரத்தின் நம்பகத் தன்மையை உங்களின் தலைமையுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

சகோதர்களே!!! நீங்கள் செய்ய நினைக்கும் உதவிகள், அதற்குறியவர்களை அடைய வேண்டுமானால், உங்கள் குடும்பத்தினர் மூலம் செய்யுங்கள்.அன்புடன்

தென்காசி பட்டனத்தான்

1 comment:

yasar said...

ASSALAMU ALAIKUM,
EVERY DAY I AM SURFING UR WEBSITE,YEAH ITS OK, BT YOU R CRITICIZE ALL TEAM (MNP,TNTJ,ETC)
SO WATS UR TEAM CONCEPT, HW UR TEAM SEPREATE FROM ANOTHER TEAM, I DONT HAVE ANY LINK WITH ANOTHER TEAM,I AM ASKING GENERALLY.
BY YASAR