Monday, July 03, 2006

மரணத்தை தழுவும் ஒரு முஸ்லிம் கிராமம்மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால்
மரணத்தை தழுவும் ஒரு முஸ்லிம் கிராமம் அரசு நடவடிக்கை எடுக்குமா?


தமிழ்நாடு, இராமநாதபுரம் நகருக்கு தென்கிழக்கே பத்து மைல் தொலைவில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது இந்த கிராமம். இப்னு பதூதா , மார்க்கோபோலோ போன்றவர்கள் வந்திறங்கிய வறலாற்று சிறப்பு மிக்க கிழக்கு கடற்கரை துறைமுக நகரங்களில் ஒன்றாக திகழ்ந்ததும் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றை உள்ளடக்கியதும் பத்தாம் நூற்றான்டில் பராக்கிரம பட்டினம் என்றும் பணிரெண்டாம் நூற்றாண்டில் பவித்திர மாணிக்க பட்டினம் என்றும் பதிநான்காம்; நூற்றான்டில் சீனர்களால் டாய்-இ-ச்சிஹ்-லச் (தா-பத்தன்) என்றும் மற்றும் அமிர்குஸ்ரு பரிஷ்கா போன்ற அறிஞர்களால் புகழப்பட்டதும் பல்லாயிரம் முஸ்லிம்களை உள்ளடக்கியதும் தான் இந்த கிராமம்.

இன்று பெரியபட்டினம் என்று அழைக்கப்படும் இக்கிராமம் பல கல்வியாளர்களையும், அறிஞர்களையும் தந்துள்ளது ஆனால் சமீப காலமாக மரணத்தின் பிடியில் சிக்கி இக்கிராமம் சீரழிந்து வருகின்றது. பல ஆன்டுகலாக அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்காலும் சுகாதாரத்துறையினரின் அலட்சியத்தாலும் பல உயிர்களை இழந்து இன்று பல உயிர்கள் மரண நோயால் பிடிக்கப்பட்டு அச்சத்தின் பீதியில் இவ்வூர் மக்கள் உயிர் வாழ்ந்து வருகின்றனர்.

பலர் மரண அச்சத்தின் காரணமாக இவ்வூரை காலி செய்து பக்கத்து நகரங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றார்கள். இதற்கெல்லாம் காரணம் கேன்சர் என்ற புற்று நோய் அரக்கனாகும். பல்லாயிரம் ஆண்டுகால வறலாற்றை தன்னகத்தே கொன்டுள்ள இம்முஸ்லிம் கிராமத்தில் கடந்த பத்தாண்டுகளாக என்றுமில்லாத வகையில் மக்கள் ரகசிய நோயால் மரணித்து வருகின்றார்கள். இதை சோதனையிட்டபோது பெரும்பாலோர் மரணிப்பது புற்றுநோயால் என்று கண்டறியப்பட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியோர் என்று அனைவரையும் ஆட்கொண்டு மரணத்தின் பால் உட்படுத்தி வருகின்றான் இந்த கேன்சர் என்னும் கொடிய அரக்கன். இரண்டு வயது குழந்தையும் கூட தப்பவில்லை இம்மரண வியாதியிலிருந்து. இக்கிராம மக்கள் பல முறை அரசிற்கும் சுகாதார துறைக்கும் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையுமில்லை. வந்து பார்த்து சென்றதோடு சரி. எந்த நடவடிக்கையுமில்லை. கடந்த ஐந்தாண்டுகளாக தனது தலையை விரித்து தாண்டவமாடி பல உயிர்களை சிறுவர் பெறியோர் என பாகுபாடின்றி பலி கொண்டு வருகின்றது.

இந்த கோர நோயின் பிடியில் சிக்கி இதுவரை பலியானோர் பலர் அதுவல்லாது இந்நோயால் தாக்குண்டு சிகிச்சை பெற கூட வசதியற்று இந்நோயின் வேதனையோடு மரணத்தை எதிர்நோக்கி வாழ்ந்து வருபவர் அதனிலும் மேல். இதில் பரிதாபப்படக்கூடிய விஷயமென்னவென்றால் இந்நோயால் பாதிக்கப்பட்ட பலர் தமக்கு வந்துள்ளது என்ன நோயென்றே அறியாமல் மரணத்தை தழுவுவதும் அறிந்தாலும் அதற்குறிய சிகிச்சை பெற வசதியில்லாமல் சாவதுமாகும். காரணம் இக்கிராமவாசிகளிள் பலர் ஏழை மீன்பிடித் தொழிலாளர்களாகவும் கடல் தொழில் செய்து வரக்கூடியவர்களாகவும் இருப்பதுதான். அதுவல்லாது இந்நோய் பாதிக்கப்பட்டவர்களிள் பலர் ஏழ்மையில் இருப்பதும் தான் காரனம்.

பலரிடம் முறையிட்டும் ஒரு பயனும் இல்லாது மரண பீதியிலேயே இவ்வூர் மக்கள் இன்னும் வாழ்ந்து வருகின்றார்கள். இதற்கான காரணம் என்னவென்று அறியாத நிலையிலேயே இந்த அப்பாவி மக்கள் மரணத்தை தழுவுகின்றார்கள். இதற்கான காரனம்தான் என்ன? பூகோள ரீதியிளான பிரச்சினை என்றாலோ அல்லது சுற்றுச்சூழல் பிரச்சினை என்றாலோ சுற்றியுள்ள கிராமங்களும் அல்லவா இதனால் பாதிக்கப்பட்டிருக்க வேன்டும்? இந்த ஒரு கிராமத்தவர்கள் மட்டும் மரணத்தை தழுவும் மர்மம் என்ன?

இவர்கள் முஸ்லிம்கள் என்ற காரணத்தினாலா? முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமம் ஆதலால் இவர்களை அழிப்பதற்காக வேன்டி ஃபாசிச கும்பல்கள் இவர்களின் நீர் நிலைகளிள் கேன்சரை உண்டாக்க கூடிய ஆர்சானிக் என்னும் கொடிய விஷத்தை கலந்ததால் இம்மக்கள் மரணத்தை தழுவுகின்றார்களா? அரசு தலையிட்டு உடனடி தீர்வு காணவேன்டும்.

இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்களின் நலன் குறித்தும் பேசும் எந்த ஒரு சமூக அரசியல் பேரியக்கங்களும் கண்டு கொள்ளாத நிலையில் இவர்களின் அவலம் குறித்தும் சிறிது சிறிதாக மரணத்தை தழுவும் இம்மக்களை பீடித்திருக்கும் அபாய நோய் குறித்தும் அன்றை மாவட்ட நிர்வாகத்திற்கு எடுத்துக்கூறி தனது பத்திரிகையான மக்கள் உரிமையிலும் எழுதியது தமுமுக என்ற இயக்கம். ஆனால் அப்போதிருந்த மாவட்ட நிர்வாகமும் அரசும் இதை கண்டு கொண்டதாக தெறியவில்லை.தற்போது ஆட்சிக் கட்டிலில் இம்மக்களாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் அமைச்சராக உள்ளார் மற்றும் இம்மாவட்டத்தின் முஸ்லிம்களின் துயர் துடைக்க வந்தவராக கருதப்படும் ஜனாப். ஹசன் அலி அவர்கள் சட்ட மன்ற உறுப்பினராகம் உள்ளார்.

தற்போதைய ஆட்சியாளர்களின் நன்பணாக உள்ள தமுமுக போன்ற அமைப்புக்கள் இக்கிராமத்தின் பிரச்சினையை உணர்ந்தவர்களாக உள்ளதால் இந்த நோயின் மூல காரணத்தை கண்டுபிடிக்கவும் மற்றும் இம்மக்கள் மேலும் இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை தழுவாமல் இருக்கவும் மற்றும் பாதிக்கப்பட்டோருக்காக சிகிச்சை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க இந்த அரசை வழியுறுத்த வேண்டும்.

பேரா. ஜவாஹிருல்லாஹ் போன்றோர்கள் ஃபாசிச சக்திகளின் விவரங்களை தங்கள் விரல் நுனியில் வைத்துள்ளதால் இதன் அபாயத்தை உணர்ந்தவர்களாக இதன் மூல காரணத்தை கண்டறிய வேண்டி அரசை வற்புறுத்துவார்கள் என்று நம்புகின்றோம்.மரியாதைக்குறிய தமிழக முதல்வருக்கும் அரசிற்கும் இச்செய்தி சரியான முறையில் அறிவிக்கப்படும். தற்போதைய அரசில் அமைச்சராக இருக்கும் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மறியாதைக்குறிய சுப.தங்கவேலன் அவர்கள் தங்கள் தொகுதி மக்களின் குறை தீர்க்க வேண்டி சுகாதாரத்துறை அமைச்சருடனும் மற்றும் இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்றத்தின் முஸ்லிம் பிரதிநிதிகளில் ஒருவருமான ஜனாப். ஹசன் அலி இவர்களுடனும் இனைந்து மாவட்ட நிர்வாத்தின் உதவியுடன் உடனடி நடவடிக்கை எடுத்து இக்கிரமத்தில் இந்நோயால் நடக்கும் மரணங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அத்துடன் இம்மக்கள் இறந்ததற்கான காரணமும் இக்கொடிய நோயால் பீடிக்கப்பட்டு சிறிது சிறிதாக செத்துக்கொன்டிருப்பதற்கான காரணமும் தெளிவு படுத்தப்படவேண்டும்.

தமிழரின் கலாச்சாரமும் பண்பாடும் மற்றும் வரலாறும் கூறும் இவ்வூர் அழியாதிருக்க தமிழக முதல்வர் தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்..

நன்றி.,
முகவைத்தமிழன்

No comments: