Sunday, June 18, 2006

பிற இயக்கங்களை ஏன் யாரும் விமர்சிப்பதில்லை?

பிற இயக்கங்களை ஏன் யாரும் விமர்சிப்பதில்லை?

சகோ. அருளடியான் நல்ல ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்? ஏன் விடியல், அல்உம்மா, சிமி, ஜிஹாத்கமிட்டி போன்ற இயக்கங்களை விமர்சிப்பதில்லை என....

ஒரு பழமொழி சொல்வார்கள் - உபகாரம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாமல் இரு என்று. இந்த ஒரு வரியே போதுமானதாக இருந்தாலும் கொஞ்சம் கூட விளக்க முயற்சி செய்கிறேன்.
முதல் காரணம் - இந்த அமைப்புகள் (மற்றும் இவைபோன்ற சர்ச்சைக்குட்படாத அமைப்புகள்) யாருமே தாங்கள் தான் இந்த ஒட்டு மொத்த சமுதாயத்தையும் பளுதாங்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, தலையில் தூக்கி வைத்துக்கொண்டிருக்கின்றோம் என குய்யோ முய்யோ என பீற்றிக் கொள்ளவில்லை. இதுதான் முதல் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். ஒவ்வொருவரும் அவர்கள் அவர்கள் பணியை அவர்களால் முடிந்த அளவு செய்கிறார்களே தவிர, இந்த அமைப்புகள் யாராவது பிற அமைப்பினரை வம்பிழுத்து கேலி செய்து தூற்றிக் கொண்டிருக்கிறார்களா? இல்லை.

மனித நீதி பாசறை : சமீபத்தில் சகோ. அன்சாரி அவர்களின் பேட்டியில் குறிப்பிட்டது போல இவர்கள் பிறருக்கு தெரியும்படி செய்வதை விட தெரியாமல் செய்வது தான் அதிகம். அதே போல இவர்களைப்பற்றி பல நேரங்களில் விமர்சனங்கள் வந்தபோது கூட அதற்கு பெரிய அளவில் மறுவிமர்சனமோ அல்லது தனிநபர் விமர்சனத்திலோ ஈடுபடாமல் அமைதிகாத்தது சமுதாயத்தில் பல நல்ல விளைவுகளையே ஏற்படுத்தியது. பாராட்டுற்குரியதும் கூட. அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதை அமைதியாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

அல்உம்மா : சமுதாயத்திற்கு பிற சமூகத்திரனரால் பிரச்சனைகள் ஏற்பட்டபோது அவர்களாகவே ஒரு சில வழிமுறைகளை கையாண்டு அதில் சில நேரங்களில் பிரச்சனைகளுக்கு உள்ளானார்கள். இவர்களை ஏன் யாரும் விமர்சிப்பதில்லை என நாம் கேட்க முடியாத ஒரு சூழ்நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்கள் செய்தது சரியோ இல்லையோ ஒட்டு மொத்த சமுதாயத்தின் அதிலும் குறிப்பாக பெண்களின் அனுதாபம் இப்போது இவர்களின் மேலேயே இருக்கிறது. இவர்களை இப்போது இழிவாக ஒருவன் விமர்சிக்க முன்வருவானேயானால் பிச்சைக்காரனிடம் களவாண்டு உண்பவனைப் போல கேவலப்பட்டவனேயன்றி வேறுயாராகவும் இருக்க முடியாது. கூட இருந்தவர்களாலேயே துரோகிக்கப்பட்டு முதுகில் குத்தப்பட்டபோதும் கூட அமைதி காத்தவர்கள். இந்த நிலையில் இவர்கள் பாராட்டுக்குரியவர்களேயன்றி மாற்று கருத்தில்லை. (காட்டி கொடுத்தவர்கள் வேண்டுமானால் மாற்று கருத்து வைத்திருக்கலாம்).

சிமி : இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் வழிதவறிவிடாமல் இஸ்லாத்தில் நிலைத்திருக்கவும், எதிரிகளின் சூழ்ச்சி வலையில் விழுந்திடாமல் தடுக்கவும் உள்ள இயக்கம். இவர்கள் சில நேரங்களில் எஸ்.ஐ.ஓ உடன் மாறுபட்டாலும் பொதுவான விமர்சனங்களுக்கு வருவதில்லை. இன்றைக்கு பல இயக்கங்களின் தலைவர்கள் அல்லது முக்கிய பொறுப்பில் இருப்பவர்களில் பலர் முன்னாள் சிமியினரே என்பதில் இவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

ஜிஹாத் கமிட்டி : ஒரு நேரத்தில் ஒட்டு மொத்த சமுதாயமும் சோற்றிலடித்த பிண்டங்களாக உணர்ச்சியற்ற நிலையில் இருந்தபோது இளைஞர்களை சோர்வடைய செய்திடாமல் அவர்களின் உணர்ச்சிகளை உறங்கிடாமல் செய்தவர்கள். இவர்கள் சாதித்தது இதுதான். ஆனால், அந்த காலத்தை பொறுத்தவரை இன்று சாதித்தோம் சாதித்தோம் என ஊளையிடுபவர்களை விட அதிகமான சாதனையாகும். ஆனாலும், தெளிவான திட்டமிடல், சமுதாயத்தின் ஆதரவின்மை ஆகியவற்றால் இவர்கள் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இல்லை இல்லை சாதிக்க விடவில்லை. இருந்தாலும் இன்றைக்கும் பல முன்னாள் இளைஞர்களின் அபிமானத்திற்குரியவர்கள்.

அருளடியான் குறிப்பிடவிட்டாலும் கூட முஸ்லிம் லீக் : சகோ. அன்சாரி அவர்களின் பேட்டி வெளியான பிறகு தான் பெரும்பாலோருக்கு இவர்கள் கோவை சிறைவாசிகளின் குடும்பத்தினருக்கு செய்த உதவிகள் வெளிவந்தன. அதிலும் அவர்கள் செய்த உதவிகளை வெளிக்காட்ட முன்வராத மனநிலை கண்டிப்பாக பாராட்டிற்குரியதே. மறுமையை நாடி மட்டுமே உதவி செய்தோம் என அவர்கள் குறிப்பிட்டது '2006 தௌஹீதுவாதிகளுக்கு' சரியான சம்மட்டி அடி. அதுபோல மௌலவி ஹாமித் பக்ரி கூடவே இருந்த எட்டப்பர்களாலேயே காட்டி கொடுக்கப்பட்டு கொடுஞ்சிறைக்கு போனபோது அவரது சகாக்கள் தீவிரவாதி என்றும் அந்நிய கைக்கூலி என்றும் கூக்குரல் இட்டபோது யாருக்கும் தெரியாமலேயே அவரை வெளிக்கொண்டு வந்தது இவர்கள்தான். இதுகூட மௌலவி ஹாமித் பக்ரி சொன்ன பிறகுதான் சமுதாயத்திற்கு தெரிந்ததே அல்லாமல் அடுத்தவன் பணத்தில் ஓசியில் டிவியில் காண்பித்து விளம்பரம் தேடிடவில்லை. சில நேரங்களில் 'லீக்' ஆகி உடைந்தபோது கூட பூசணிக்காய், ----பொடி என்றெல்லாம் ஒருபோதும் சொன்னதில்லை. இதற்காகவே இவர்களை பாராட்டலாம்.
சகோ. அருளடியான் உணர்ந்திருப்பார் என நினைக்கிறேன். அவர் கேட்காவிட்டாலும் ஏன் தமுமுக மற்றும் ததஜ வினர் விமர்சிக்கப்படுகின்றனர் என்பதையும் அறிய வேண்டுமல்லவா...
பொது காரணம் : இவர்களால் சமுதாயத்திற்கு ஏற்பட்ட உபகாரங்கள் குறைவாக இருந்தாலும் உபத்திரங்கள் அதிகம். அன்றாடங்காய்ச்சி முதல் பணக்காரர்கள் வரை இவர்களால் சமுதாயத்திற்கு ஏதாவது நன்மை ஏற்படாதா என கருதி எந்த பிற இயக்கத்திற்கும் வாரி வழங்கிடாத அளவிற்கு வாரிவாரி வழங்கினார்கள். ஆனால், இவர்களோ அடுத்தவன் பணம் (பொதுச் சொத்து) என கொஞ்சம் கூட கருதிடாமல் தங்களுடைய ஆடம்பரத்திற்கும் பெருவாரியான விளம்பரத்திற்கும் பயன்படுத்தினார்கள். சொந்த பணத்தை கொண்டு வந்து இப்படி செய்திருந்தால் கண்டிப்பாக இவர்களை யாருமே விமர்சித்திருக்க மாட்டார்கள். ஆனால், மக்கள் பணத்தை கொள்ளையடித்து ஏதோ ஒரு சில உட்டாலக்கடி வேலைகளை செய்து விட்டு எல்லாமே தன்னால்தான் என அகம்பாவமும், அகந்தையும் கொண்டு திரிகிறார்களே, இவர்களை எவனாவது பாராட்டுவானா? (இவர்களது அடிபொடிகளைத் தவிர)

தமுமுக : ஒட்டுமொத்த தமிழ் இஸ்லாமிய சமுதாயமும் பழனிபாபா படுகொலைக்குப் பிறகு இவர்கள் மேல் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்றால் அது மிகையாகாது. இவர்களது ஆரம்ப கால நடவடிக்கைகள் கூட அப்படித்தான் இருந்தது. பணமும் பரிவாரங்களும் கூடக்கூட கொஞ்சமாக வழிமாறினார்கள் (அல்லது சுயரூபத்தை வெளிக்காட்டினார்கள்). கோவை குண்டு வெடிப்பிற்கு பிறகு கோடிக்கணக்கில் வசூலித்து விட்டு கைதிகளுக்கோ அல்லது அவர்களது குடும்பங்களுக்கோ ஒன்றும் செய்யாமல் இருந்தது அயோக்கியத்தனம் என்றால் இவர்களது இயகத்தவர்களை வெளியே கொண்டு வர அந்த பணத்தை பயன்படுத்தி வழக்கு நடத்தவது கடைந்தெடுத்த களவாணித்தனம். சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணத்திற்கு வேண்டி மக்களிடத்தில் பணம் வாங்கி விட்டு அதை வைத்து பேரிடர் மையம் கட்டப்போகிறோம் என கூறுவது எந்த வித்தில் நியாயம் எனத் தெரியவில்லை. (ஒரு வேளை அங்கு ஒரு கல்வெட்டு வைத்து அதில் தமுமுக என பெரிய அளவில் ஓசி விளம்பரம் செய்யவோ என நினைக்கிறேன். அப்படியானால் சொல்லுங்கள், என் வீட்டு கொல்லைப்புறத்தில் கொஞ்ச இடம் காலி இருக்கிறது. அங்கு கொண்டு வந்து வைத்துக்கொள்ளுங்கள். காசு வேண்டாம். சுனாமி பணத்தை அதற்கு பயன்படுத்தாதீர்கள்). கோவை குண்டு வெடிப்பு கைதிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் நீலிக் கண்ணீர் வடித்துவிட்டு குற்றப்பத்திரிகையில் சமுதாயத்தையே காட்டிக் கொடுத்தவர்கள்.

(அன்று காட்டிகொடுத்தவர்களில் பிஜே இவர்களுடன்தான் இருந்தார்). அவர் மட்டுமல்லாமல் பேரா. ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, பாக்கர் எல்லாருமே காட்டித்தான் கொடுத்தார்கள். (நான் அதை படித்திருக்கிறேன்). சகோ. ரைசுத்தீன் விரைவில் வெளியிடுவேன் என கூறியிருக்கிறார். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். காரணம் 'புத்தம் புது' ததஜ, தமுமுக கொஞ்சம் பேர் இவையெல்லாம் தெரியாமல் ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்)

ததஜ : எனக்குத் தெரிந்து எத்தனையோ இயக்கங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டபோதும், அல்லது அவர்கள் பிரிந்து சென்றபோதும் இவர்களைப்போல கீழ்த்தரமாக நடந்திருப்பார்களா எனத் தெரியவில்லை. கேவலம், அரசியல்வாதிகள் கூட இந்த நிலைக்கு கீழாக வந்ததில்லை. ஆனால், தௌஹீது தௌஹீது என கூறிக்கொண்டு இவ்வளவு இழிநிலைக்கு வந்திருக்கிறார்கள். இவர்களைப் பற்றி எழுதுவதற்கே என் கைகள் கூசுகிறது. அந்த அளவிற்கு சமுதாத்தின் கண்ணியத்திற்கு இழுக்கு இவர்களால் வந்திருக்கிறது. இவர்கள் அளவிற்கு வேறுயாராலும் வந்ததில்லை. சமுதாய ஒற்றுமை, சகோதரத்துவம் என வாய்கிழிய பிற சமுதாய மக்களுக்கு மத்தியில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என பேசிவிட்டு காபிர்களை விட கேவலமாக சமுதாய மக்களை திட்டித் தீர்த்த பெருமை இவர்களையல்லாது வேறு யாருக்கு உண்டு. மக்களிடம் தஃவாவுக்கென்று காசு வசூல் பண்ணி தன் பழைய சகாக்களைளே திட்டியதை யாரால் மறக்க முடியும். இந்த அளவுக்கு இவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸையோ அல்லது ராமகோபாலனையோ திட்டியிருப்பார்களா என்றால் கிடையாது. மாற்று மத சகோதரர்கள் எல்லாம் இந்த மனிதரின் 'பயானை'க் கேட்க டிவி முன் உட்கார்ந்தால், நம் சமுதாயத்தைச் சார்ந்தவர்களை ஆபாசமாகவும், இழிவாகவும் பேசினார்கள். சமுதாயத்தின் கண்ணியம் கப்பலேறி போய்விட்டது. (அரசியல், சஹாபாக்கள் விஷயங்கள் வேறு பலர் பேசுவதால் அதில் இப்போது நுழையவில்லை). பழனிபாபாவை கேவலமாக பேசிவிட்டு அவர் கொல்லப்பட்டவுடன் போலிக்கண்ணீர் வடித்ததை என்னவென்று சொல்ல. தௌஹீது பிரச்சாரத்தில் முக்கியமான பேச்சாளராக இருந்த மௌலவி ஹாமித் பக்ரியை வஞ்சகம் செய்து முதுகில் குத்தியவர்கள் இவர்கள் இல்லையா? கோவை குண்டு வெடிப்பு கைதிகள் சம்பந்தமாகவும், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காவும் வீடியோக்களில் கண்ணீர் காட்சிகளில் நடித்துவிட்டு திரைமறைவில் காட்டிக்கொடுக்கும் வேலையை செய்தவர்கள் இவர்கள் இல்லையா?

(இதற்காக உள்ளத்தை எல்லாம் கீறிப் பார்க்கவேண்டாம். பழைய ரிக்கார்டுகளை பாரத்தால் போதும். அது உள்ளத்தை நல்லாவே அள்ளத்தரும் - இது அபு அஸியாவிற்கு).

காவல்துறையினரால் மூடப்பட்ட பல வழக்குகள் மீண்டும் தோண்டப்பட்டு பல முஸ்லிம் இளைஞர்கள் ஆயுள்கைதியாக சிறையில் வாடுவதற்கு இவர்கள் காரணம் இல்லையா? அடைக்கலம் தருகிறேன் வா என அழைத்து காவல்களிடம் ஒப்படைத்தவர்கள் இவர்கள் இல்லையா? இதையெல்லாம் விட இன்னொரு முக்கிய காரணம் - காவல்துறை ஆயிஷா என ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கி நம் சமுதாய சகோதரிகளின் பர்தாவோடு விளையாட யார் காரணம் தெரியுமா? சாட்சாத் இந்த பிஜே-தான். இது பலபேருக்குத் தெரியாமல் இருக்கலாம். சகோ. ரைசுத்தீன் குற்றப்பத்திக்கை நகலை வெளியிடட்டும் தெரிந்து கொள்வீர்கள்.
சுனாமித்திருடர்கள் என இவர்கள் தமுமுகவை கேலிசெய்கிறார்கள். உண்மையிலேயே நம் சமுதாயம் மட்டுமல்லாமல் பிற சமுதாயத்தினராலும் கேலிச்செய்யப் படுபவர்கள் இவர்கள்தான். தினமலர், தினகரன் மற்றுமுள்ள பத்திரிகைகள், சமுதாய அமைப்புகள் பலர் சுனாமிக்காக வசூல் செய்தனர். ஆனால் யாருமே தங்கள் பேப்பரில் விளம்பரத்திற்கு இவ்வளவு, டிவியில் காட்ட இவ்வளவு, மிக்ஸிங் இவ்வளவு, டப்பிங் குரலுக்கு இவ்வளவு, டீக்குடிக்க இவ்வளவு, வடை திங்க இவ்வளவு என கணக்கு காட்டவில்லை. இப்படிச்சொன்னால் உடனே அவர்கள் எல்லாம் அந்த கணக்கை காட்டவில்லை, ஆனால் எடுத்திருப்பார்கள் என சொல்லலாம். உலகத்திலேயே அயோக்கியத்தனம் எல்லாம் செய்துவிட்டு மற்றவர்கள் அவைவருமே அயோக்கியர்கள் எனச் சொல்பவர்கள் இந்த ததஜவினரை விட வேறுயாரும் கிடையாது. காரணம், அந்தந்த பத்திரிகைகள் கூட கணக்குகள் எல்லாம் வெளியிடத்தான் செய்தன. நான் கேட்கிறேன், இவர்கள் அப்படி கூறுவார்களேயானால் எந்த ஒரு பத்திரிகையின் பெயரையாவது குறிப்பிட்டு அவர்கள் வசூல் செய்ததில் முறைகேடு செய்தனர் என வெளியிடுவார்களா? கோர்ட்டுக்கு இழுத்து நாறடித்துவிடுவார்கள். ஆனால், ரொம்பத்தான் நல்லவர்களாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு டிவியில் விளம்பரம் இல்லாவிட்டால் இப்படியெல்லாம் செய்வார்களா? யார் இவர்களை வசூல் பண்ணச் சொன்னது? இப்படியெல்லாம் செய்து விட்டு வாய்கிழிய பிறரை வக்கணை செய்பவர்களை விமர்சிக்காமல் எப்படி இருக்கமுடியும் அருளடியான் அவர்களே!

இந்த இரண்டு அமைப்பு (தமுமுக ததஜ) மட்டுமே ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தையும் பாரம் தாங்கமுடியாவிட்hலும் ரொம்ப கஷ்டப்பட்டு தலைக்கு மேல் தூக்கி வைத்திருப்பது போல பிலிம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையைச் சொன்னால் இவர்களது இயக்கத்தின் அடிப்பொடிகளைத் தவிர இன்றைக்கு மதிக்க ஒரு நாய் கூட கிடையாது. (நாய் என யாரையும் குறிப்பிடவில்லை. உள்ளக் குமுறலின் வெளிப்பாடு மட்டுமே). இந்த இரண்டு அமைப்புக்களுக்கும் ஒரு சின்ன அறிவுரை!!!!!. தயவு செய்து இயக்கத்தை இழுத்து மூடிவிட்டு செல்லுங்கள். உங்கள் உதவி இல்லாமல் இருந்தால் சமுதாயம் இன்னும் நல்லா இருக்கும்.....

இப்போது தெரிகிறதா சகோ அருளடியான் அவர்களே! ஏன் இவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள் என்று.... புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இறுதியாக உங்களுக்கு ஒருவார்த்தை... உங்களது ஆதரவாளர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் என்ன, சரி செய்ய என்ன செய்யலாம் என நினைக்கணும். அதை விட்டுவிட்டு ஏன் பிறரை விமர்சிக்கவில்லை என சிண்டு முடியும் வேலை வேண்டாம். மாறி மாறி இரண்டு பேர் அடிக்கும் போதே சமுதாயம் இந்த அளவிற்கு நாறும் போது இன்னும் வேண்டுமா என்ன? நேரம் போகவில்லையென்றால் இழுத்து மூடிவிட்டு உறங்குங்கள். மூட்டிவிட்டு குளிர்காய்வது நல்ல மனிதர்களுக்கு அழகல்ல... (நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா?)

குறிப்பு : எந்த ஒரு இயக்கத்திற்கும் ஆதரவு நிலைஇல்லாமல் நடுநிலையாகவே இதை எழுதியிருப்பதாக நினைக்கின்றேன். மாற்று கருத்துள்ளவர்கள் நடுநிலையாக நின்று கேள்விகேட்கும் பட்சத்தில் பதில் தர காத்திருக்கிறேன். சகோ. ரைசுத்தீன் சொன்னது போல முக்காபுலா எல்லாம் நமக்கு தெரியாது. அதற்காக என்னை அழைக்கவும் வேண்டாம். முக்காலஃபா.... யப்பா ஆள விடு

இப்படிக்குஅபு பாத்திமா

1 comment:

அபூ முஹம்மத் said...

//எந்த ஒரு இயக்கத்திற்கும் ஆதரவு நிலைஇல்லாமல் நடுநிலையாகவே இதை எழுதியிருப்பதாக நினைக்கின்றேன். மாற்று கருத்துள்ளவர்கள் நடுநிலையாக நின்று கேள்விகேட்கும் பட்சத்தில் பதில் தர காத்திருக்கிறேன்//

மேற்கண்ட குறிப்புக்கு நன்றி.

//ஜிஹாத் கமிட்டி : ஒரு நேரத்தில் ஒட்டு மொத்த சமுதாயமும் சோற்றிலடித்த பிண்டங்களாக உணர்ச்சியற்ற நிலையில் இருந்தபோது இளைஞர்களை சோர்வடைய செய்திடாமல் அவர்களின் உணர்ச்சிகளை உறங்கிடாமல் செய்தவர்கள்.//

ஒட்டு மொத்த சமுதாயத்தையும் சோற்றில் பிண்டங்கள் என்று இதற்கு முன்பு ஒருவர் சொல்லியிருந்தார். இயக்கத்தின் மீது கொண்ட அதிகப்படியான பற்றின் காரணமாக மண்டை கழுகிவிடப்பட்டவர்களிடம் பேசி பயனில்லை என்பதால் அப்பொழுது எந்த கேள்வியையும் நான் வைக்கவில்லை.

ஆனால் உங்களை அப்படி நான் நினைக்கவில்லை. ஆகவே, உங்களிடம் கீழ்கண்ட கேள்விகளை கேட்கிறேன்.

"ஒட்டு மொத்த சமுதாயத்தையும் சோற்றில் அடித்த பிண்டமாக இருந்தபோது" என்று சொல்லிவிட்டு பிறகு, "அவர்கள் சோர்வடைய செய்திடாமல் அவர்களின் உணர்ச்சிகளை உறங்கிடாமல் செய்தவர்கள் ஜிகாத் கமிட்டி" என்று சொல்கிறீர்கள்.

சோற்றில் அடித்த பிண்டங்களுக்கு உணர்ச்சி வருமா?

சமுதாய உணர்ச்சியூட்டப் பட்டதென்றால், மெழுகுவர்த்தியாக இருந்தவர்களுக்கு நெருப்பு மட்டுமே மூட்டப்பட்டது என்று சொல்லலாம். ஆனால் மெழுகுவர்த்திகளை மண்ணாங்கட்டி என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஒரு தலைவரை உயர்த்துவதற்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் கீழ்த்தரமாக விமர்சிக்கும் உங்களை நோக்கி ஒரு கேள்வி:

//சிமி : இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் வழிதவறிவிடாமல் இஸ்லாத்தில் நிலைத்திருக்கவும், எதிரிகளின் சூழ்ச்சி வலையில் விழுந்திடாமல் தடுக்கவும் உள்ள இயக்கம். இவர்கள் சில நேரங்களில் எஸ்.ஐ.ஓ உடன் மாறுபட்டாலும் பொதுவான விமர்சனங்களுக்கு வருவதில்லை. இன்றைக்கு பல இயக்கங்களின் தலைவர்கள் அல்லது முக்கிய பொறுப்பில் இருப்பவர்களில் பலர் முன்னாள் சிமியினரே என்பதில் இவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.//

சிமி என்ற பாராட்டுக்குரியவர்கள் அப்பொழுது இருந்தார்களா? இல்லையா? சிமி ஒட்டுமொத்த சமுதாயத்தில் அங்கமாக இல்லையா?

உங்களைப்போன்று நடுநிலையான எத்தனையோ பேர் இன்று இருப்பது போல் அன்றும் இருந்திருக்கலாம். இயக்கம் சாராததால் வரலாற்றில் எழுதப்படாமல் ஆகிவிடுகிறார்கள். அவர்களும் ஒட்டுமொத்த சமுதாயத்தில் அங்கத்தினர் அல்லவா? அவர்களும் சோற்றில் அடித்த பிண்டங்கள்தானா?

பழனிபாபா அவர்களைப்பற்றி எனக்கும் நல்லெண்ணம் உண்டு. முக்கியமாக தமிழ்நாட்டு தேர்தல் வெற்றியை நிர்ணயிக்க முஸ்லிம்கள் ஒரு பொருட்டே அல்ல என்று தேர்தல் தோல்விக்குப் பிறகு கூறிவரும் ததஜவினரிடமிருந்து நிச்சயமாக பழனிபாபா உயர்ந்து நிற்கிறார்.

பழனிபாபா அவர்களிடம் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. நாம் அந்த சப்ஜெக்டைப்பற்றி பேச அவசியமில்லையாதலால் தவிர்த்து விடுகிறேன்.