Sunday, May 21, 2006

த.மு.மு.க வின் வெற்றி உண்மையா ?

ஏகனின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பாளையங்கோட்டையில் தமுமுக வெற்றி என்று தமுமுக வார இதழில் வந்த செய்தியை பார்த்தவுடன் அதிர்ச்சியுற்றேன். தினசரிகளில் பார்த்தவரை திமுகவின் வேட்பாளர்தானே வெற்றி பெற்றதாக படித்தோம். இது என்ன புது கதையாக இருக்கிறது என்று கட்டுரையை படிப்பதை தொடர்ந்தேன். பாளையில் தமுமுகவின் ஆதரவினால்தான் திமுக வென்றதாம் இதைதான் அவர்கள்; அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்கள் என்று தெரிந்து கொண்டேன். நல்லவேளை தமிழக தேர்தலில் தமுமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது என்று தலைப்பிடாமல் போனார்களே அதுவரை சந்தோசப்பட வேண்டியதுதான்.

முஸ்லிம் லீக் கட்சிக்கு திமுக 3 தொகுதிகளை ஒதுக்கியதாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திமுக அறிவித்ததும் அந்த 3 ல் ஒன்றுதான் பாளையங்கோட்டை தொகுதி என்பதும் அனைவரும் அறிந்ததே. அந்த தொகுதியை தமுமுக வேட்பாளர் க.அ.ப.இலாஹிக்கு ஒதுக்க வேண்டும் என்று தமுமுக திமுகவிடம் கெஞ்சியதும் அந்த தொகுதிக்காக தமுமுக, முஸ்லிம் லீக் தலைவர்களுக்கு மத்தியில் சண்டை ஏற்பட்டதும் அதை காரணமாக காட்டி தமுமுகவுக்கு அல்வா கொடுத்து நயவஞ்சகதனமாக, அந்த தொகுதியில் தன்னிச்சையாக திமுக தனது வேட்பாளருக்கு ஒதுக்கியது. தங்களை ஏமாற்றிய திமுகவுக்கு எதிராக மேலப்பாளையத்தில் ஆர்பாட்டத்தில் தமுமுகவினர் ஈடுபட்டதையும் பேப்பரில் படித்தோம். திமுகவின் துரோகத்தால் அந்த தொகுதியில் ஈடுபாடு கொள்ளாமல், பெரிய அளவில் இறங்கி வேலை செய்யாமல் தமுமுகவினர் இருந்தனர். தங்கள் தலைவர் கட்டளைக்காக திருநெல்வேலி திமுக கூட்டத்தில் தமுமுக கொடியை கொண்டு போய் ஆட்டியதோடு தமுமுகவினரின் வேளை முடிந்துவிட்டது. இந்நிலையில் பாளை திமுகவின் வெற்றி தங்களால்தான் கிடைத்தது என்று தமுமுக சொல்வது அரைவேக்காடுதனமாகது.

மேலப்பாளையம் போன்ற ததஜவின் கோட்டையில் முழுக்க முழுக்க முஸ்லிம்கள் தேசிய வீக்கிற்கே வாக்களித்தனர். ஆனால் மற்ற பகுதியில் உள்ள சமுகத்தினரின் ஓட்டுக்கள் மற்றும் திமுக, இந்திய கம்யுனிஸ்டு, ப.ம.க, காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் போன்றவற்றிக்கு உள்ள ஓட்டு சதவீ;தத்தாலும், அரசு துரையினரின் ஓட்டுகளாலும், திமுக வேட்பாளர் உள்ளுர்வாசி, தொகுதியில் நல்ல பெயர் உள்ளதாலும், பல முறை வெற்றி பெற்றவர் என்பதாலம், கலர் டிவி, 2 ஏக்கர்; நிலம் பித்து அடிதட்டு மக்களை பிடித்தாலும் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். காக்கா உட்கார பனம்பழம் விழுந்தது என்பதை போல் தமுமுக எதேட்சையாக திமுகவில் ஒட்டி கொள்ள அந்த அணி வெற்றி பெற்று விட்டது. இதைபோய் தமுமுகவின் தனது வெற்றி என்று கதையடிக்கும் பொழுது அடக்க முடியாமல் சிரிப்புதான் வருகிறது.

அடுத்ததாக திமுக வென்ற தொகுதிகளை பட்டியலிட்டு அது தங்களால் கிடைத்த வெற்றி என்று கதையடித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட தொகுதிகளில் பல முஸ்லிம்கள் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களாக இல்லை. அதுவும் மிக குறைந்த எண்ணிக்கையில் வசிக்கின்ற பல தொகுதிகளை வெளியிட்டு தமுமுகவின் பிரச்சாரத்தால் அந்த தொகுதியில் திமுக வென்றது என்று சொல்வது மோசடி வேலையாகும். நல்ல வேளை திமுக வென்ற அனைத்து தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டு அனைத்து வெற்றிக்கும் தமுமுகதான் காரணம் என்று சொல்லாமல் விட்டார்களே அதுக்காக தமுமுகவினர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

வீழ்த்த முடியாத காங்கிரஸ் கோட்டை பாபநாசத்தில் அதிமுக வென்றதுக்கு முஸ்லிம்கள் காரணமில்லையாம் காங்கிரஸ் வேட்பாளரின் சமுகத்தினர் அவருக்கு வாக்களிக்கவில்லை என்று புதிதாக தமுமுகவினர் கண்டுபிடித்துள்ளனர். அந்த தொகுதியில் வென்றவரே தனது வெற்றிக்கு முக்கிய காரணம் முஸ்லிம்கள்தான் என்று குறிப்பிடும் பொழுது தமுமுகவினர் பொய்யை தனது பத்திரிக்கையில் பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அடுத்து சென்னையில் அதிமுக பல தொகுதிகளில் பெற்ற வெற்றிக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று திமுக ஆதரவு பத்திக்கையாக தற்போது மாறியுள்ள ஜுனியர் விகடன் கூட குறிப்பிட்டு இருக்கும் பொழுது சென்னை வெற்றிக்கு அதிமுகவின் பணபலம்தான் காரணம் என்று தமுமுக சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திமுக வென்றால் அது தமுமுகவின் பலத்தால் என்பதும் அதுவே அதிமுக வென்றால் பணபலம் என்பதும் அரசியல்வாதிகளுக்கே உரிய பண்பாகும். தற்போது அது தமுமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் வெள்ள நிவாரணத்தின் போது ஏற்பட்ட உயிர்சேதம், ஜெயலலிதா சென்றால் போக்குவரத்து நெறுக்கடி, கண்ணகி சிலையை அகற்றியது, தலைமை செயலகம் கட்ட ராணிpமேரி கல்லூரியை இடிக்க பார்த்தது என்று அனைத்துமே அதிமுகவுக்கு எதிராக திமுகவுக்கே சாதகமாக இருந்த நிலையில் ததஜவின் சூராவளி பிரச்சாரத்தால் அதிமுக பல தொகுதிகளை வென்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

சென்னை துறைமுகம் தொகுதியில் சென்ற முறை பஜகவுடன் மட்டுமே கூட்டனி வைத்து திமுக போட்டியிட்டு ஆயிரக்கணக்கான ஓட்டில் வென்றது. ஆனால் தற்போது மிகப்பெரிய கூட்டணி பலத்துடன் துறைமுகத்தில் குதித்து அல்ப ஓட்டில் வென்றுள்ளது. ததஜ, தமுமுக தலைமையகம் அமைந்துள்ள துறைமுகம் தொகுதியிலேயே திமுக பொதுச்செயலாளர் 400சில்லரை ஓட்டில்தான் வெற்றி பெற்று இருப்பதே ததஜவின் மக்கள் பலத்திற்க்கு சான்றாகும். பல தொகுதிகளை பட்டியளிட்ட தமுமுக முஸ்லிம்கள் அதிகமாக வசிக்க கூடிய பல தொகுதிகள் திருவல்லிகேணி, ராயபுரம், பாபநாசம், கோவை மேற்க்கு, மருங்காபுரி, புவனகிரி, கம்பம், திருச்செந்தூர், பெரியகுளம் போன்ற தொகுதிகளில் ததஜவின் முயற்சியால் அதிமுக வெற்றி பெற்றதை பற்றி என்ன கதை சொல்லப் போகிறார்கள்.

இதில் முக்கியமாக விசயமாக கோவை அதிமுக வெற்றியை எடுத்து கொள்ளலாம். கடந்த 2 வருடமாக கோவை மக்களை வைத்து அரசியல் நடத்தி வந்த தமுமுகவுக்கு அங்கு பெருத்த அடியை அந்த மக்களே வழங்கி அதிமுகவை வெற்றி பெற வைத்துள்ளனர். இதை வைத்து எப்படி பார்த்தாலும் தற்போது தமுமுகவுக்கு பெருத்த சரிவே, அதே வேளை அதிமுகவுக்கு என்று எப்பொழுதும் இல்லாத முஸ்லிம்கள் ஓட்டை ததஜ இந்த முறை பெற்றுக்கொடுத்துள்ளது. இதனால் இந்த தேர்தலில் ததஜவின் செல்வாக்கு முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில் பெருமளவு உயரந்துள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

சைதை அஹமது அலி.
சென்னை.

1 comment:

கடல் கடந்த தமுமுக said...

பீ.ஜே.யின்சப்பைக்கட்டு


தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிலைப்பாடு என்ற தலைப்பில் அவர்களின் வலைதளத்தில் சொல்லியுள்ள அபத்தங்களுக்கு பதில்


தமது வழக்கமான "கோயபல்ஸ்" பிரச்சாரத்தை ஜெய்னுல்ஆபிதீன் ஆரம்பித்து விட்டார்.
அவர் அ.தி.மு.க. காங்கிரஸ் அணியை முன்பு நாடாளுமன்ற தேர்தலில் த.மு.மு.க. ஆதரித்தபோது நாற்பதில் பதிமூன்றை தானே இந்த அணி வென்றது"என்கிறார்.ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்டது தான் ஒரு நாடாளுமன்ற தொகுதி ஒரு சட்டமன்ற தொகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கலாம் ஆறு சட்டமன்ற தொகுதியிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பார்களா? அப்படியும் அந்த நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மயிலாடுதுறை,இராமநாதபுரம்நாடாளுமன்ற தொகுதிகளில் நாம் ஆதரித்தவர்கள் தானே வென்றார்கள்.

மேலப்பாளையத்தை உள்ளடக்கிய பாளையங்கோட்டையில் தி.மு.க.வேட்பாளர் மைதீன்கான் பீ.ஜே.ஆதரவு வேட்பாளர் நிஜாமுத்தீனை நாற்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெனறுள்ளார். கடந்த தேர்தலில் த.மு.மு.க.ஆதரவில் பதினைந்தாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.


வாணியம்பாடியில் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஆம்பூர்பாசித் பீ.ஜே.ஆதரவு தேசிய லீக் வேட்பாளர் முஹம்மது அலியை இருபத்திநான்காயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெனறுள்ளார். இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளரும், அதற்கு முந்தைய தேர்தலில் அ.தி.மு.க.அணி வேட்பாளர் லத்தீப்சாஹிப் வெனறுள்ளார்கள்.


தவ்ஹீத் ஜமாத் தலைமைபீடமான கடையநல்லூரில் காங்கிரஸ் வேட்பாளர் வெளியூர்க்காரரான பீட்டர் அல்போன்ஸிடம் பீ.ஜே.ஆதரவு வேட்பாளர் கமாலுதீன் தோல்வி அடைந்துள்ளார்.

உண்மை இவ்வாறு இருக்க நமது"கோயபல்ஸ்" தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தது தவ்ஹீத் ஜமாத் பிரச்சாரத்தால் தான் என்கிறார்.
இதுவரை அரசியல் கட்சிகள் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டது ஒரே ஒருமுறை தான் . அதுவும் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் தோல்விக்கு முக்கிய காரணம் அவர் மூப்பனார் குடும்பத்தை பகைத்துக்கொண்டது தான். மேலும் மூப்பனாரின் தம்பி மருமகன் சுரேஷ்மூப்பனார் போட்டியிடுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் டெல்லி மேலிடம் சிட்டிங் M.L.A.க்கள் அனைவருக்கும் சீட்டு தர முடிவு செய்ததால் ராம்குமாருக்கு கிடைத்தது.
2001 சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர் களை நாம் ஆதரித்தாலும் இந்த தொகுதியில் மட்டும் ராம்குமார் நீங்கள் என்னை ஆதரித்தால் பெரும்பான்மை முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறி த.மு.மு.க.வை உதறி தள்ளியதால் பேராசிரியரின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.நமது ஆதரவு இல்லாததால் அவர் வெற்றிபெற்றார். பின்னர் தேர்தல் முடிந்தவுடன் எஸ். பி தலைமையில் முன்னூரு போலிசார் பாதுகாப்புடன் த.மு.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பாக்கர் கலந்துக்கொண்டார். ராஜகிரி,பண்டாரவாடையில் தான் த.மு.மு.க. தவ்ஹீத் சகோரதரர்கள் உள்ளனர். அய்யம்பேட்டையில் ஜாக் பள்ளி உண்டு . த.மு.மு.க.விற்கு கூட கிளை கிடையாது. பழைய தஞ்சை மாவட்டத்திலேயே தவ்ஹீத் எதிர்ப்பாளர்கள் அதிகம் உள்ளது இப்பகுதியில் தான் என்பது பீ.ஜே.,பாக்கர்,ஏ.எஸ்.அலாவுதீன் ஆகியோருக்கு நன்கு தெரியும். வழுத்தூரில் தவ்ஹீத் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களே உள்ளே புகுந்து அடித்தார்கள். ஆர்.டி.ஓ. அலுவலகம், தாசில்தார் அலுவலகம், காவல்நிலையங்கள், மருததுவமனை என்று தவ்ஹீத் சகோரதரர்கள் அலைக்கழிக்கப்பட்டதும் இப்பகுதியில் தான்.


பழைய தஞ்சை மாவட்டத்திலேயே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதியும்,பீ.ஜே.யின் தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு அடிக்கோலிட்ட தொகுதியுமான சங்கரன்பந்தலை உள்ளடக்கிய பூம்புகார் தொகுதியில் எந்தஅணி வெனறுள்ளது. பழைய தஞ்சை மாவட்டத்தில் கடந்தகாலங்களில் முஸ்லிம்கள் வென்ற மற்ற தொகுதிகளான தஞ்சாவூர்,கும்பகோணம்,நாகப்பட்டிணம் தொகுதி களி்ல் எந்த அணி வெனறுள்ளது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்

கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்பது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுவும் வேண்டாம்