பத்திரிக்கைகள் படுத்தும் பாடு!
நமது நாடுகளில் இருக்கக்கூடிய பத்திரிக்கைகள் எந்த அளவிற்கு உண்மைகளை எழுதுகிறார்கள் என்பது நம்மில் பலருக்கு சந்தேகமே. மிகச் சில நேரங்களை தவிர பெரும்பாலான நேரங்களில் ஏதேனும் ஒரு கட்சியை சார்ந்தவர்களாகத்தான் தங்களுடைய செய்தியை பத்திரிக்கைகளில் உலவ விடுகிறார்கள். அது உண்மையா, பொய்யா என்றெல்லாம் அவர்கள் பார்ப்பதில்லை. ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை எவ்வளவு தந்திரமாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முடியுமோ அதை நேர்த்தியாக செய்வதில் பெரும்பாலான பத்திரிக்கைகள் வெற்றி பெற்றிருக்கிறது.
மக்களுக்கு சரியான செய்திகளை எடுத்துச் சொல்லி மக்களை விழிப்புணர்ச்சி அடையச் செய்யும் நோக்கம் இந்த பத்திரிக்கைகளுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஏதேனும் ஒரு ஆதரவு நிலையோடு செய்தி தரும் பத்திரிக்கைகள் வெவ்வேறு /எதிர்மறையான செய்திகளை ஒரே நேரத்தில்/விசயத்தில் பரப்புகிறார்கள். அதனால் மக்கள் மத்தியில் நிலவும் அமைதி கூட சில நேரங்களில் கேள்விக்குறியாகி விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.
உதாரணத்திற்கு..
கடந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் யாருக்கு ஓட்டுப்போட்டார்கள் என்ற ஆய்வில்(!) இறங்கிய ஜூனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப்போர்ட்டரின் செய்திகளை படிப்பவர்கள் சற்று குலம்பித்தான் போவார்கள். இந்த இரண்டு பத்திரிக்கையின் செய்திகளும் ஒரே விசயத்தில் வெவ்வேறு/எதிர்மறையான கருத்துக்களை பரப்புவதை படிப்பவர்கள் உணர்ந்து இந்த பத்திரிக்கைகளின் தரத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
'கருணாநிதி சுமார் 8 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்திருக்கிறார். உடனே சேப்பாக்கம் பகுதிச் செயலாளர் சுரேஷ்குமாரை அழைத்து 'என்னப்பா வித்தியாசம் குறைந்து விட்டதே?' என்றாராம். அதற்கு சுரேஷ்குமார் 'தலைவரே முஸ்லிம்கள் இன உணர்வு காரணமாக நமக்கு ஓட்டுப்போடவில்லை. தாவூத் மியாகானுக்குப் போட்டுவிட்டார்கள். அதுதான் நமக்கு ஓட்டுக் குறையக் காரணம்' என்றாராம். அதைக் கேட்ட கருணாநிதி கொஞ்சம் அப்செட்தான்! சேப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க-வினரோ 'தாவூத் மியாகான் வாழைப்பழ சின்னத்தில் போட்டியிட முடிவு செய்த போதே எதிர்த்தோம். அவர் மட்டும் இரட்டை இலை சின்னத்தில் நின்றிருந்தால் நிச்சயமாக கருணாநிதிக்குக் கடும் போட்டியாக இருந்திருப்பார். அவரது பிடிவாதம்தான் தோல்விக்கு காரணம்' என்கிறார்கள்.'
'அட!
'கருணாநிதியின் வாக்கிங் தோழர் நாகநாதன் திருவல்லிக்கேணியில் சுமார் 2800 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஜெயலலிதாவின் பள்ளித் தோழி பதர் சயீத்திடம் தோற்றுப் போய்விட்டார். பார்த்தசாரதி கோயிலைச் சுற்றியுள்ள ஏரியாவில் சுமார் இரண்டாயிரம் ஓட்டுக்கள் இரட்டை இலைக்குக் கூடுதலாகக் கிடைத்ததுதான் அவரது வெற்றியை உறுதி செய்திருக்கிறது. மறைந்த தாதா வீரமணி ஏரியாவான அயோத்திக்குப்பம் உள்ளிட்ட மீனவர் பகுதிகளில் தி.மு.க-வுக்கு ஓட்டுக்கள் குறைவாகக் கிடைத்திருக்கின்றன. தேர்தல் முடிவு வெளியானதும், திருவல்லிக்கேணி பகுதி தி.மு.க. பிரமுகர்களை அழைத்து விசாரித்திருக்கிறார் கருணாநிதி. 'முஸ்லிம்கள் அந்த அம்மாவுக்குதான் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். பிராமணர், மீனவர்களின் ஓட்டுக்களும் அவர்களுக்கு விழுந்ததால் தோற்றுவிட்டோம் என்றார்களாம்.
முஸ்லிம் சமுதாய அமைப்புக்கள் சிலவற்றை அ.தி.மு.க இழுத்திருந்தாலும் அம்மத மக்கள் பெரும்பாலும் தி.மு.க.வுக்கே ஓட்டுப்போட்டிருக்கிறார்கள். இதில் உளவுத்துறையினர் வேறு இடையில் புகுந்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஜமாத்திலும் செய்த வேலை எதிர்ப்பாக மாறியது. 'அனைத்து முஸ்லிம் ஜமாத் உரிமை பாதுகாப்புக் குழு' தேர்தல் ஆணையம் வரை இதை எடுத்துச் சென்றது.
No comments:
Post a Comment