Monday, May 15, 2006

பீ.ஜே.யின் சப்பைக்கட்டு


தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிலைப்பாடு என்ற தலைப்பில் அவர்களின் வலைதளத்தில் சொல்லியுள்ள அபத்தங்களுக்கு பதில்
தமது வழக்கமான "கோயபல்ஸ்" பிரச்சாரத்தை ஜெய்னுல்ஆபிதீன் ஆரம்பித்து விட்டார்.

அவர் அ.தி.மு.க. காங்கிரஸ் அணியை முன்பு நாடாளுமன்ற தேர்தலில் த.மு.மு.க. ஆதரித்தபோது நாற்பதில் பதிமூன்றை தானே இந்த அணி வென்றது"என்கிறார்.ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்டது தான் ஒரு நாடாளுமன்ற தொகுதி ஒரு சட்டமன்ற தொகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கலாம் ஆறு சட்டமன்ற தொகுதியிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பார்களா? அப்படியும் அந்த நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மயிலாடுதுறை,இராமநாதபுரம்நாடாளுமன்ற தொகுதிகளில் நாம் ஆதரித்தவர்கள் தானே வென்றார்கள்.

மேலப்பாளையத்தை உள்ளடக்கிய பாளையங்கோட்டையில் தி.மு.க.வேட்பாளர் மைதீன்கான் பீ.ஜே.ஆதரவு வேட்பாளர் நிஜாமுத்தீனை நாற்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெனறுள்ளார். கடந்த தேர்தலில் த.மு.மு.க.ஆதரவில் பதினைந்தாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
வாணியம்பாடியில் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஆம்பூர்பாசித் பீ.ஜே.ஆதரவு தேசிய லீக் வேட்பாளர் முஹம்மது அலியை இருபத்திநான்காயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெனறுள்ளார். இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளரும், அதற்கு முந்தைய தேர்தலில் அ.தி.மு.க.அணி வேட்பாளர் லத்தீப்சாஹிப் வெனறுள்ளார்கள்.
தவ்ஹீத் ஜமாத் தலைமைபீடமான கடையநல்லூரில் காங்கிரஸ் வேட்பாளர் வெளியூர்க்காரரான பீட்டர் அல்போன்ஸிடம் பீ.ஜே.ஆதரவு வேட்பாளர் கமாலுதீன் தோல்வி அடைந்துள்ளார்.
உண்மை இவ்வாறு இருக்க நமது"கோயபல்ஸ்" தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தது தவ்ஹீத் ஜமாத் பிரச்சாரத்தால் தான் என்கிறார்.
இதுவரை அரசியல் கட்சிகள் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டது ஒரே ஒருமுறை தான் . அதுவும் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். காங்கிரஸ் வேட்பாளர் தோல்விக்கு முக்கிய காரணம் அவர் மூப்பனார் குடும்பத்தை பகைத்துக்கொண்டது தான். மேலும் மூப்பனாரின் தம்பி மருமகன் சுரேஷ்மூப்பனார் போட்டியிடுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் டெல்லி மேலிடம் சிட்டிங் M.L.A.க்கள் அனைவருக்கும் சீட்டு தர முடிவு செய்ததால் ராம்குமாருக்கு கிடைத்தது. 2001 சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர் களை நாம் ஆதரித்தாலும் இந்த தொகுதியில் மட்டும் ராம்குமார் நீங்கள் என்னை ஆதரித்தால் பெரும்பான்மை முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறி த.மு.மு.க.வை உதறி தள்ளியதால் பேராசிரியரின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.நமது ஆதரவு இல்லாததால் அவர் வெற்றிபெற்றார். பின்னர் தேர்தல் முடிந்தவுடன் எஸ். பி தலைமையில் முன்னூரு போலிசார் பாதுகாப்புடன் த.மு.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பாக்கர் கலந்துக்கொண்டார். ராஜகிரி,பண்டாரவாடையில் தான் த.மு.மு.க. தவ்ஹீத் சகோரதரர்கள் உள்ளனர். அய்யம்பேட்டையில் ஜாக் பள்ளி உண்டு . த.மு.மு.க.விற்கு கூட கிளை கிடையாது. பழைய தஞ்சை மாவட்டத்திலேயே தவ்ஹீத் எதிர்ப்பாளர்கள் அதிகம் உள்ளது இப்பகுதியில் தான் என்பது பீ.ஜே.,பாக்கர்,ஏ.எஸ்.அலாவுதீன் ஆகியோருக்கு நன்கு தெரியும். வழுத்தூரில் தவ்ஹீத் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களே உள்ளே புகுந்து அடித்தார்கள். ஆர்.டி.ஓ. அலுவலகம், தாசில்தார் அலுவலகம், காவல்நிலையங்கள், மருததுவமனை என்று தவ்ஹீத் சகோரதரர்கள் அலைக்கழிக்கப்பட்டதும் இப்பகுதியில் தான்.

பழைய தஞ்சை மாவட்டத்திலேயே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதியும்,பீ.ஜே.யின் தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு அடிக்கோலிட்ட தொகுதியுமான சங்கரன்பந்தலை உள்ளடக்கிய பூம்புகார் தொகுதியில் எந்தஅணி வெனறுள்ளது. பழைய தஞ்சை மாவட்டத்தில் கடந்தகாலங்களில் முஸ்லிம்கள் வென்ற மற்ற தொகுதிகளான தஞ்சாவூர்,கும்பகோணம்,நாகப்பட்டிணம் தொகுதிகளி்ல் எந்த அணி வெனறுள்ளது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்பது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுவும் வேண்டாம்

2 comments:

Anonymous said...

Statistics seems to be ok, but i'm sad with your saddistic nature that you guys were part of a defeat of a muslim against a non-muslim. Are you proud of that?. If so, Is it TMMK or TMPK? -- "P" stands for Pinnetra.

Anonymous said...

Dear Anonymous,

Tell me something. Is there any authentic Ayath or Hadeedh favouring a Lady to be a statesman? On what basis your jainul abdeen supporting her? Your so called leader understood the religion better than the Sahabas and Caliphs. Please shut up your mouth and the other one. You people will should never talk about our religion ISLAM. Because you are following some other way of faith.