Saturday, May 06, 2006

இடஒதுக்கீடு பற்றி வாய் திறக்காத ஜெ.ஜெ

குழும சகோதரர்களே!
பிளாக்கர் வலைப்பதிவுகளில் மிகப்பெரிய தலைப்புகளை உடைய பதிவுகள் 24 மணிநேரத்திற்குள் மறைந்துவிடும். அதுபோல நமது உறுப்பினர் ஒருவரால் பநிந்த கடைசி பதிவும் காணாமல் போகவே, தலைப்புச் சற்று சுருக்கி கீழ்கண்டவாறு மீள்பதிவு செய்கிறேன். இனியாவது நமது உறுப்பினர்கள் தலைப்பை சுருக்கி பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- இப்படிக்கு
முகவைதமிழன்


முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு: பிரச்சாரத்தில் வாய் திறக்காத ஜெயலலிதா!

தமிழகத்தில் ஜெயலலிதா எதிர்ப்பலை மவுனமாக வீசிக் கொண்டிருக்க, முஸ்லிம்கள் வாழுமிடங்களில் அது 'ஜெ' எதிர்ப்பு புயலாக வீசிக் கொண்டிருக்கிறது.

மார்ச் மாத இறுதியில் பிரச்சாரம் தொடங்கிய ஜெயலலிதா, தான் பிரச்சாரம் செய்த இடங்களில் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால் இவ்விதழ் அச்சேறும் வரை ஒரு இடத்தில் கூட முஸ்லிம் சமுதாயத்தின் ஜீவாதார கோரிக்கைகள் பற்றி பேசுவார் என ஆவலோடு இருந்த அவரது புதிய ஆதரவாளர்கள் ஏமாந்து போயுள்ளனர்.

காயல்பட்டினம், பாளையங்கோட்டை, கடையநல்லூர், திருவாரூர் போன்ற முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு பற்றி வாய் திறக்கவே இல்லை.

அதேநேரம் தி.மு.க. தலைவர் கருணாநிதி காயல்பட்டினம், மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செல்லும் போதெல்லாம் 'முஸ்லிம்களுக்கு சட்ட சிக்கலின்றி இடஒதுக்கீடு வழங்குவோம்' என பகிரங்க பிரச்சாரம் செய்கிறார். இதனால் பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகள் விலகிச் சென்று விடுமோ என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் கருணாநிதி துணிந்து தைரியமாக இடஒதுக்கீடு வழங்குவேன் என்று பேசுகிறார். மு.க.ஸ்டாலினும் அதை வழிமொழிகிறார்.

ஆனால் ஜெயலலிதா அதைப் பற்றி பேச மறுக்கிறார். முஸ்லிம்களின் வாக்குகள் தனக்கு விழாது என்பதாலோ அல்லது முஸ்லிம்களின் வாக்குகள் தேவையில்லை என்ற திமிறினாலோ அவர் ஆணவமாக நடந்து கொள்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

நாம் ஆரம்பம் முதலே ஜெயலலிதா நம்பிக்கைக்குரியவர் அல்ல என்று சொல்லி வருகிறோம். ஆனால் ஜெயலலிதாவின் ''கமிஷனுக்கு'' மயங்கிய சிலர், ஜெயலலிதா ஆணையம் அமைத்திருப்பதாகக் கூறினார்கள்.

10 கிலோ அரிசி வழங்குவேன் என்று கூறும் ஜெயலலிதாவால், முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்காக தான் ஆணையம் அமைத்திருப்பதாக ஏன் கூற முடியவில்லை? இதை 'அம்மாவின் போர்ப்படை தளபதிகள்' விளக்க வேண்டும்.

இவர்களிடம் முஸ்லிம் சமுதாயம் வைக்கும் கேள்விகளைப் பட்டியலிடுகிறோம்:

1) இன்றுவரை அப்படி ஒரு ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பு ஏன் செய்தி வெளியிடவில்லை? அரசுத் தரப்பின் இணைய தளத்திலும் ஏன் செய்தி வெளியிடவில்லை? அந்த ஆணை யம் பற்றி ஜெயா டி.வி. ஏன் செய்தி வாசிக்கவில்லை?

2) தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்த 2006 மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு மார்ச் 3ஆம் தேதி ஆணையம் அமைக்கப்பட்டதாகக் கூறினீர்களே... அந்த ஆணையம் செல்லாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்த பிறகு செல்லாத ஆணையத்திற்காக ஏன் 'ஜெ'வை ஆதரிக்கிறீர்கள்?

3) இப்போதாவது அந்த ஆணையத்தினால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

4) இரட்டை இலைக்கு 'வாய்க்கிழிய' வாக்கு கேட்கும் நீங்கள், முஸ்லிம்களின் ஜீவாதாரப் பிரச்சினைகள் பற்றி

ஜெயலலிதா வாய் திறக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் தரப் போகிறீர்கள்?

-கடல் கடந்த த.மு.மு.க.

2 comments:

Anonymous said...

Please read this..

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை பிரிவினர்களுக்கான இட ஒதுக்கீட்டை மேம்படுத்துவது குறித்து இந்த ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் உங்கள் அன்பு சகோதரியின் அரசு உரிய ஆணைகளை பிறப்பிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறுபான்மை இன மக்களை திசை திருப்பும் வகையில் கட்டாய மத மாற்ற தடை சட்டம் இன்னமும் அமலில் உள்ளதாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன. தமிழ்நாடு கட்டாய மதமாற்ற தடை சட்டம் 18-05-2004 அன்று பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தின் வாயிலாக அறவே ரத்து செய்யப்பட்டுவிட்டது. தற்போது இந்த சட்டம் அமலில் இல்லை என்பதுதான் உண்மை நிலை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

சென்னை திருவல்லிக்கேணி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பதர் சயீத் மற்றும் சேப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளருமான தாவூத் மியான்கான் ஆகியோரை ஆதரித்து பேசியபொழுது ஜெயலலிதா மேற்கண்டவாறு சொன்னார்.

நன்றி - தினத்தந்தி
http://www.dailythanthi.com/article.asp?NewsID=255869&disdate=5/4/2006

Anonymous said...

Kadal kadantha TMMK,

How come you can say such a lie so boldly sir, please correct yourself and your higher officials too.

Lost hope in you guys.