
த.மு.மு.க. மாநிலச் செயலாளர் மவ்லவி அப்துர் ரஹீம் மரணம்
மரணித்த இந்த முஸ்லிம் சகோதரர்களின் மறுமை வாழ்விற்க்காகவும் அவர்களின் குடும்பத்திற்காகவும் அல்லாஹ்விடம் பிறார்த்திப்போமாக. ஆமின்.
முகவைத்தமிழன்
மாநிலச் செயலாளர் மவ்லவி பி. அப்துர் ரஹீம் இன்று அதிகாலை சாலை விபத்தில் உயிரிழந்தார். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்...
வாணியம்பாடியில் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு நேற்று பிரச்சாரம் செய்து விட்டு தஞ்சை நோக்கி காரில் புறப்பட்டார். சேலம் வழியாக தஞ்சையை நோக்கி சென்றபோது சேலம் தீவட்டிப்பட்டி என்ற ஊருக்கு அருகில் இன்று அதிகாலை சுப்ஹு நேரத்தில் அவர் சென்ற குவாலிஸ் கார் மீது எதிரே வந்த தனியார் பேருந்து மோதியதால் சம்பவ இடத்திலேயே அவரும், ஓட்டுனர் (தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பஸ்லுர் ரஹ்மான்), மற்றும் மைசூரைச் சேர்ந்த பள்ளி இமாம் சபியுல்லாஹ் ஆகியோரும் உயிரிழந்தனர்.
காலை 5.40 மணிக்கு விபத்து நடந்தது. ஆனால், வண்டியிலிருந்து ஜனாஸாவை எடுக்க காலை 8 மணி ஆகியது. ஜனாஸா சேலம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது. செய்தி அறிந்த கோவை உமர் மற்றும் தமுமுக தொண்டர்கள் ஜனாஸாவைப் பெறுவதற்கு சேலம் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
சன் நியூஸ் சேனலில் இச்செய்தியை பார்த்த ஏராளமான தமுமுக தொண்டர்கள் மற்றும் சமுதாய பிரமுகர்கள் ஜனாஸாவைக் காண சென்னை நோக்கி மிகுந்த சோகத்துடன் வந்து கொண்டிருக்கின்றனர்.
தமுமுகவுடைய அனைத்து நிர்வாகிகளும் தங்களுடைய தேர்தல் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
ஜனாஸா சென்னைக்கு வந்த பிறகு எத்தனை மணிக்கு அடக்கம் செய்வது என்பது பற்றி தமுமுக நிர்வாகிகள் அவர்களுடைய குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார்கள்.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தமுமுக தொண்டர்கள் தமுமுக தலைமையகத்தில் சோகமே உருவாக காட்சியளிக்கின்றனர்.
அப்துர் ரஹீம் அவர்களுக்கு இரண்டு மனைவிமார்களும், 3 மகள்களும்
உள்ளனர்.
இறந்து போனவர்களின் மறுமை வாழ்வுக்காக அனைவரும் பிரார்த்திப்போம்!
செய்தி ஆதாரம் த.மு.மு.க அதிகாரப்பூர்வ இனையம்
2 comments:
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
Inna Lillaahi wa-innna ilaihi raajivoon.
Post a Comment