Saturday, April 15, 2006

பாக்கர் வருகை - மறுப்பும், விளக்கமும்.

பாக்கர் அவர்களின் சவுதி வருகை - மறுப்பும், விளக்கமும்.
த.த.ஜ.வின் பொதுச்செயலாளர் சகோதரர் பாக்கர் அவர்களின் சவுதி வருகையையொட்டி பலவாறான செய்திகள் மின்னஞ்சல் வழியாக பரப்பப்பட்டு வருகிறது. ஜித்தாவில் நடந்த நிகழ்ச்சி தொடர்பான செய்தியை தீன் முஹம்மது என்ற சகோதரர் அனைவருக்கும் மின்னஞ்சல் செய்திருந்தார். அதை தொடர்ந்து இளையவன் என்ற சகோதரரும் அதே நிகழ்ச்சியை வர்ணனை செய்திருந்தார். இவை இரண்டிலும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளது.

தீன் முஹம்மது அவர்களின் மின்னஞ்சலில்..
//இடையில் ஜித்தாவில் அழைப்புப்பணி மையத்தில் பணிபுரியும் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் உமரி அழைப்பின் பேரில் மேடையில் வந்தமர்ந்தார். அமர்ந்த சில நொடிகளில் கேமரா மின்னியது. அவரும் சொற்பொழிவாற்றுவார் என சகோதரர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சில மணித்துளிகளில் சென்றுவிட்டார்//

இது ஒரு தவறான தகவல். சகோதரர் முஜிபுர் ரஹ்மான் உமரி அவர்கள் அந்நிகழ்ச்சிக்கு வந்தது உண்மை. ஆனால் அவர் மேடையில் அமரவில்லை. அவருக்காக எந்தக் கேமராவும் மின்னவுமில்லை. மாற்றுக் கருத்துடையவர்களாக இருந்தாலும் தனக்கு விடுத்த அழைப்பை ஏற்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த சகோதரரின் பெருந்தன்மையை பாராட்டத்தான் வேண்டும். தவறான தகவல் தந்த சகோதரர் தீன் முஹம்மது அவர்கள் அதற்காக வருந்த வேண்டுகிறோம்.

இளையவன் அவர்களின் மின்னஞ்சலில்..
//பாக்கரை அறிமுகப்படுத்திய கூட்டத்தின் தலைவர் அவரை ததஜவின் சிங்கம் என்று அறிமுகப்படுத்தினார். அவரது பிடரியில் புரளும் முடியை வைத்து தலைவர் அப்படிச் சொல்ல, அவரது கிண்டலைப் புரிந்துக் கொள்ளாமல் பாக்கர் உடனே என்னை சிங்கம், புலி என்று சொல்லாதீங்க என்று கூறி அதைவிட பயங்கரமாக தனது முழு கைச் சட்டையை சண்டைக்கு போவது போல நன்றாக முழங்கை வரை மடக்கி வைத்துக் கொண்டு அவர் பாணி(!)யில் சினிமா நடிகர் நடிகை மற்றும் நவீன அரசியல் வாதிகளை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடுகிறேன் என்று கர்ஜிக்க ஆரம்பித்தார்//

சகோதரர் பாக்கர் அவர்களை த.த.ஜ.வின் சிங்கம் என்று மேடையில் அறிமுகப்படுத்தியது முற்றிலும் உண்மையான தகவல். அறிமுகப்படுத்தியவர் பாக்கர் அவர்களின் பிடறியில் புரளும் முடியை வைத்துத்தான் அப்படிச் சொன்னார் என்பது பொய்யான செய்தி. ஏனெனில் அந்த நிகழ்ச்சியில் சகோதரர் பாக்கர் அவர்கள் கலந்து கொண்ட பொழுது (உம்ரா முடித்து) மொட்டை போட்டிருந்தார். மேலும், தன்னை சிங்கம், புலி என்று மிருகத்தோடு ஒப்பிட்டு பேசாதீர்கள் என்றும் பாக்கர் அவர்கள் கேட்டுக் கொண்டார். பாக்கர் அவர்களை அறிமுகப்படுத்தியவர் மீண்டும் பேசும் போது தாங்கள் சில மேடைகளில் பேசும் போது சிங்கம் போல கர்ஜித்து விடுகிறீர்கள், அதை குறிப்பிடத்தான் நான் அவ்வாறு சொன்னேன் என்றும் சொன்னார்.

1 comment:

முகவைத்தமிழன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புச்சகோதரரே , நீங்கள் கொடுத்துள்ள விளக்கம் அருமை ஆனால் அதே நேரத்தில் வாசகர்களும் விமர்சகர்களும் எதிர் பார்ப்பது தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் அதிகார பூர்வ மறுப்பு அறிக்கையையோ அல்லது சகோ. தீன் முகம்மது அவர்களின் வருத்த மடலையோதான்.

இவற்றில் எதுவும் நடக்கவில்வையெனில் பின்னர் தவ்ஹித் ஜமாத்தின் அங்கீகரத்துடனேயே இப்பொய் பிரச்சாரம் நடப்பதென்பது மெய்யாகிவிடும்.

ஜமாத்தின் நிர்வாகிகளும் தொன்டர்களும் இதை நன்குனர்ந்தவர்களாகவே உள்ளர்கள் . கூடிய விரைவில் இப்பிரச்சினைக்கு ஒரு முற்று புள்ளி வைத்து பிரச்சினையை முடிவுக்கு கொன்டு வந்து மக்களின் நம்பிக்கையை பெருவார்களா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.