Showing posts with label rizana nafeek. Show all posts
Showing posts with label rizana nafeek. Show all posts

Saturday, January 19, 2013

ரிஸானா நபீக்கிற்கு வழங்கிய மரண தண்டனை 100% பிழையானது

 

ரிஸானாவின் தண்டனை 100% பிழையானது | Rizana Nafeek
ரிஸானாவின் தண்டனை 100% பிழையானது | Rizana Nafeek


ரிஸானா நபீக்கிற்கு வழங்கிய மரண தண்டனை 100% பிழையானது

புனித இஸ்லாமிய மார்க்கம் பரவிய சவுதி அரபிய நாட்டிலே யாராலும் சகிக்க முடியாத சம்பவம் என்றால் இந்த இலங்கையைச் சேர்ந்த ரிஸானாவின் மரண தண்டனைதான். இரக்கமற்ற மனிதர்கள் அந்நாட்டில் இருக்கிறார்கள் என்பதனை இது உறுதிபடுத்துகின்றது. இனிமேலும் இலங்கை, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து பெண்கள் வீட்டு வேலைகளுக்கு போகத்தான் வேண்டுமா? அவர்களை அனுப்பும் கணவன்மார்களும், தந்தைமார்களும் முதுகெலும் அற்றவர்களா?

ஆண் என்றால் உழைத்து தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். அதனைவிட்டுவிட்டு பெண்களை இப்படி அடிமையாக்கி அதில் வரக்ககூடிய பணத்தில் உணவை உண்பது என்பது ஒரு ஆண்மைக்கும் அழகும் அல்ல ஒரு மனிதனுக்கும் அழகும் அல்ல. இனிமேலும் உங்கள் பெண்களை நீங்கள் பார்த்துக் கொள்ளங்கள்.

இலங்கை அரசசிடம் ஒரு அன்பான வேண்டுகாள்!
இரக்கமற்ற அந்த சவுதி நாட்டு மனிதர்களுக்கும் ஏனைய நாட்டு மக்களுக்கும் நாயாய் உழைப்பதைவிட நம்நாட்டில் வாழும் கஷ்டமான குடும்பங்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கி அவர்களுடைய பிரார்த்தனையை பெற்றுக் கொள்ளுங்கள். இதுதான் நீங்கள் செய்யும் மனித நேயமாக இருக்கும்.

நீங்கள் எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் ஒரு நாளைக்கு மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும். உங்கள் மரணம் அனைத்து மக்களின் மனதிலும் நிலையாக வேண்டும். உங்களை நம்பியிருக்கும் மக்களுக்கு பிரயோசனம் தரக்கூடிய அமைப்பில், தொழில் வாய்ப்புக்களை வழங்குங்கள்.

நமது பெண்களை எந்த நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை. நமது பெண்களை காப்பாற்ற வேண்டியது நமது பொறுப்பு.

எனவே இலங்கை அரசே!
இது உங்களுக்கான அடுத்த ஒரு செயல்திட்டம்!
உங்கள் பணி இனிதே தொடரட்டும்!...

அனைத்தும் அறிந்தவன் அள்ளாஹ் ஒருவனே! அவனே நியாயத்தீர்ப்பின் அதிபதியாவான்.

நன்றி: இர்பான், வசந்தம் டீவி

Wednesday, January 09, 2013

எல்லா ஆண்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்

எல்லா ஆண்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்




ரிஸானா நஃபீக்

என் பெயரால்

முக நூல்களில்

அகநூல்களில்

பிரநூல்களில்

தர்க்கம்புரியும்

தர்க்கவாதிகளே

உங்களோடு

சிலநிமிடங்கள்

நான் ஒன்ரும் கோழை அல்ல

அழுதுபுலம்பி ஓடி ஒழிந்துகொள்ள

நான் எப்போதும்

அன்னையர்கள்

ஆயிஷா , பாத்திமா

பாசறையில்

பக்குவப்பட்டவள்

திருமறையின்

நபிவழியில்

ஷரியா நன்னெறியில்

மரணித்துப்போவதில்

மனவேதனை ஒன்றும் இல்லை

உங்களுக்கெல்லாம் ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்ள ஆசை எனக்கு

எனக்காக கண்ணீர்வடிக்க வேண்டாம்

ஏன் பிராத்தனைகூட செய்யவேண்டாம்

குருவிக்கூடு போன்ற என் குடும்பத்தைகொஞ்சம் எட்டிப்பாருங்கள்

அல்லாஹ்வின் மீது ஆணையாக என் அண்ணை அழமாட்டாள்

தயவுசெய்து ஆறுதல் என்ற பெயரால்

அவளைநீங்கள் கோழை ஆக்கி விடாதீர்கள்

உங்களால் முடிந்தால்

உங்கள் ஆண்பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்

சீதனம் என்பது குடும்ப அனுமதியோடு செய்யப்படும் விபச்சாரம் என்று

நாளை என் தங்கைகளும்

உங்கள் பெண்பிள்ளைகளும்

தீன் ஒளியில் ஊரினில் வாழட்டும்

by- காத்தான்குடி பிரகசக்கவி எம் .பீ அன்வர். ( 1/9/2013 )