Tuesday, February 03, 2009
கிருஸ்தவர்களுக்கு பல்லாயிரம்கோடி கடவுள்களா? - PART - 03
அல்லாஹ்வின் சங்கைமிக்க திருத்தூதரான ஏசு என்ற நபி ஈஸா (அலை) அவர்களை கடவுள் என்று பொய்யுரைப்பதற்கு குர்ஆனையும் நபிமொழியையும் கையில் எடுத்ததால் உண்மையடியானுக்கு வந்த வினையைப் பார்த்தீர்களா? ஒரு கடவுளை உருவாக்கக் கனவுகண்ட இவருக்கு, பல பில்லியன், ட்ரில்லியன் கடவுள்கள் கிடைத்துள்ளன. இதை அறிந்து பெருமிதம் அடைந்தாலும் அடைவார் இந்த பொய்யடியான்.நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி வல்ல இறைவன் கூறுவதையும், கிருஸ்தவர்களுக்கு எதிரான நபி ஈஸா (அலை) அவர்களின் வாக்குமூலத்தையும், நபி (ஸல்) அவர்களைப் பற்றி முன்னறிவிப்பு செய்ததையும் விளக்கும் திருக்குர்ஆன் வசனங்களை உண்மையடியான் வகையறாக்கள் படித்து புத்தியுடன் நடந்து கொள்ளட்டும். இனியேனும் குர்ஆன் அப்படி சொல்கிறது, ஹதீஸ் இப்படி சொல்கிறது என்று எதைஎதையோ உளறிக் கொட்டிவிட்டு முஸ்லிம்லிம்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளாமல் இருப்பார்களாக.
Thursday, January 29, 2009
கிருஸ்தவர்களுக்கு பல்லாயிரம்கோடி கடவுள்களா? - பாகம்2
கிருஸ்தவர்களுக்கு பல்லாயிரம்கோடி கடவுள்களா? - பாகம்2
பொய்யடியானுக்கு உறுதியிருந்தால், குர்ஆன் ஏசுவை கடவுள் என்கிறது என்பதை அவரால் நிரூபிக்க முடியுமென்றால் இதையே தலைப்பாக வைத்து நம்முடன் ஒரே மேடையில் விவாதிக்க வரட்டும். இவரோடு நேரடி விவாதத்திற்கு இஸ்லாமிய இணையப்பேரவை என்றும் தயார் என்பதை நாம் என்றோ அறிவித்துவிட்டோம். நம் விவாத அழைப்பைக் கண்டு பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடிஒழிந்த பொய்யடியானின் சரித்திர சாதனையை நீங்களும் அறிவீர்கள். இந்நிலையில் ஏசுதான் கடவுள் என்ற தலைப்பில் விவாதிக்கவாவது உண்மையடியானுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் தைரியம் இருக்கிறதா?
இருந்தால் நம்மோடு பகிரங்க நேரடி விவாதத்திற்கு தயாராகட்டும். அந்த விவாதத்தில் நபிகள் செய்த பாவங்களையும் ஒவ்வொன்றாக நம்முன்னர் பட்டியலிடட்டும். இறைவன் நபிகளாருக்கு கொடுத்ததாகக் கூறும் (License) அனுமதியையும் மறக்காமல் கொண்டுவந்து தரட்டும். அவர் எடுத்துவைக்கும் சொத்தை வாதங்கள் ஒவ்வொன்றுக்கும், அவருடைய குறுக்கை நொருக்கும் அளவிற்கு நாம் பதில் கூறுவோம் இன்ஷா அல்லாஹ்.
Saturday, January 24, 2009
கிருஸ்தவர்களுக்கு பல்லாயிரம்கோடி கடவுள்களா? - பாகம்1
ஏசுமட்டும்தான் பரிசுத்தமானவர், ஷைத்தானின் தூண்டுதலுக்கு அப்பாற்பட்டவர் என்கிறார் உண்மையடியான். அப்படியானால் இவ்வுலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களும், யூதர்களும், கிருஸ்தவர்களும், தீர்க்கதரிசிகள் என்று விசுவாசிக்கும் நோவா, டேவிட், ஆப்ரஹாம், ஐசக், இஸ்மவேல், மோஸே (அவர்கள் அனைவர் மீதுமும் இறைசாந்தி என்றும் நிலவட்டுமாக) போன்ற இறைத்தூதர்களின் நிலை என்ன? இவர்களைப் பற்றி உண்மையடியான் என்ன சொல்ல வருகிறார்? அவர்களெல்லாம் ஷைத்தானால் வழிகெடுக்கப்பட்டவர்கள் என்கிறாரா? (நவ்வூதுபில்லாஹ்).
முஸ்லிம்களாகிய நாங்கள் அன்னை மர்யம் (அலை) முதல் இறைத்தூதர் நபி ஈஸா (அலை) அவர்கள் உட்பட இவ்வுலகில் தோன்றிய அனைத்து தீர்க்கதரிசிகளையும் புனிதமானவர்களாகவே கருதுகிறோம். ஷைத்தானின் கெடுதல்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட பரிசுத்தவான்களாக அவர்கள் அனைவரையும் விசுவாசங்கொள்கிறோம்.
தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்
