Showing posts with label தாருல்ஸஃபா. Show all posts
Showing posts with label தாருல்ஸஃபா. Show all posts

Thursday, May 14, 2009

தமிழகத்தில் எங்கிருந்தும் காவல் துறைக்கு புகார் தெரிவிக்க!

தமிழகத்தில் எங்கிருந்தும் புகார் தெரிவிக்க!
தானியங்கி கம்ப்யூட்டர்-தொலைபேசி சேவை
போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்தில் அறிமுகம்


சென்னை மைலாப்பூரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் நாள் முழுவதும் இயங்கும் தானியங்கி கணிணி வழி-தொலைபேசி மூலம் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை பதிவு செய்யும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தமிழ்நாட்டின் எந்தப்பகுதிகளில் இருந்தும், எந்த நேரத்திலும் தங்களது புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். தமிழ்நாடு தவிர இதர மாநிலத்தில் உள்ள பொதுமக்களும் கூட இச்சேவையை பயன்படுத்தி உதவி கோரலாம்.

பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் குறைகளை பதிவு செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். அத்தகைய புகார்கள் அல்லது குறைகள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுவதுடன் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிக்கும் தக்க அறிவுரை வழங்கப்படும்.

பி.எஸ்.என்.எல். தொலைபேசி- 044 28447200
டாடா இண்டிகாம் தொலைபேசி- 044 64555100, 64556100

(நேரடி அவசர உதவி தேவைப்படுவோர் எப்போதும் போல் 100 என்ற தொலைபேசியையும் பயன்படுத்தலாம்)
மேற்கண்ட தகவலை டி.ஜி.பி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அன்புடன்,
தாருல்ஸஃபாவிலிருந்து சாதிக்.

Thursday, May 07, 2009

சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவம்

மனித உடலின் மின்காந்தத் திறனை
சீர்ப்படுத்தும் சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவம்


அஸ்ஸலாமு அலைக்கும்.

தகவல் தொழில் நுட்பத் துறையில் பல மணி நேரம் உட்கார்ந்தபடியே கணினியில் பணி செய்யும் இளைஞர் களுக்கு உடலில் உள்ள மூட்டுகளில் வரும் வலியால் அதிகம் பாதிக்கப்படுகின் றனர். இந்த வலியை போக்குவதற்கு சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவப்படி உடலில் மின் காந்த திறனை சீர்ப்படுத்துவது குறித்து சைனீஸ் அக்கு பஞ்சர் மருத்துவ நிபுணர் டாக்டர் மு.சாதிக் தெளிவாக எடுத்துக் கூறுகிறார்.

இன்றைய நவீன உலகத் தில் எந்த ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு தகவல் தொடர்பு தொழில் நுட்ப வளர்ச்சியால், தொடர்பு கொண்டு கல்வி, மருத்துவம், வர்த்தகம், தொழில் நுட்பப் பரிமாற்றங் கள் உடனுக்குடன் பெற்று பல்வேறு துறைகளில் அதிகளவில் வளர்ச்சி பெற்று வருகிறோம்.

குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் தகவல் தொழில் நுட்ப துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. படித்த இளைஞர்கள் உட னுக்குடன் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

தகவல் தொழில் நுட்பத் துறையில் மிக முக்கிய பங்கு வகிப்பது கணினி, இணைய தளத்தின்மூலம் தகவல் பரி மாற்றங்கள் உலகம் முழுவதும் தொடர்பு கொண்டு பெறுவதுதான். இப்பணியில் இரவு - பகலாக பல மணி நேரங்கள் ஆண் - பெண் இருபாலரும் அமர்ந்த இடத்திலே பணி செய்யும் நிலையில் உள்ளனர்.

இதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்தாலும், சில ஆண்டுகளுக்கு பிறகு ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வதால் இளம் வயதிலேயே உடலில் எங்கெல்லாம் மூட்டுகள் உள்ளதோ அங்கெல்லாம் வலி ஏற்பட்டு தொடர்ந்து பணி செய்ய முடியாத நிலை உருவாகிறது.

இம்மூட்டு வலி நோய்க்கு ஆங்கிலம் மருத்துவம் இருந்தாலும், எளிமையான இயற்கை மருத்துவமான சைனீஸ் அக்குபஞ்சர் சிகிற்சை முறையில் விரைவில் மூட்டு வலியைப் போக்குவதுடன், மேற்கொண்டு வராமல் தடுப்பதற்கான உடலில் மெலிந்த ஊசிகளை செலுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் உடலில் மின்காந்த சக்தியினை சீர்படுத்தி நோய் அகற்றப் படுவதால் நிரந்தரத் தீர்வு ஏற்படுகிறது.

இம்மருத்துவத்தில் முழு மையான நாடி பரிசோதனை, சைனீஸ் மருந்துகள், ஆஸ் டியோ அக்குபஞ்சர், எளிய முறையில் உடற்பயிற்சி போன்றவைகள் மேற்கொள்ளப்படு வதன் மூலம் கணினித் துறையில் பணி செய்பவர் களுக்கு வரும் மூட்டு வலிகள் நிரந்தரமாகப் போக்கப்படு கிறது.

மற்றும் உடலின் நோய் எதிர்ப்புசக்தி குறையும்போது பலவித நோய்களும் நமது உடலை எளிதில் தாக்கி பாதிப்ப்பிற்குள்ளாக்க்குகிறது. இந்த நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் சமநிலையில் வைத்திருக்கும்போது எந்த அலர்ஜியோ, எளிதில் வரும் சளி, இருமல் போன்ற நோயோ வர வாய்ப்பேயில்லை. ஆரோக்கியமாக வாழலாம்.


ஸோரியாஸிஸ், எயிட்ஸ், ஆஸ்துமா, கேன்ஸர், பெண்களுக்கான கற்பப்பை பிரச்சினைகள் உட்பட, சிறுநீரகம் பாதித்தவர்கள் போன்ற அனைத்து நோய்களையும் மிக அற்புதமாகக் குணப்படுத்தலாம் இன்ஷா அல்லாஹ். கற்பப்பையை அகற்ற அனுமதிக்காதீர்கள், அதனால் உங்களது உடலுக்கு மேலும் பற்பல தொந்தரவுகளைத் (தூக்கமின்மை, கை கால் வலி, இடுப்பு வலி etc.) தந்து கொண்டே இருக்கும் பிற்காலத்தில். ஆங்கில மருத்துவத்தில் அதற்கு தீர்வு இல்லாததால், கற்பப்பையை அகற்றக் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறு. அதை முழுமையாகக் குணப்படுத்தலாம் அக்குபஞ்சர் மருத்துவம் மூலம் இன்ஷா அல்லாஹ்.


மேற்கொண்டு விபரத்திற்கு:

மருத்துவர் சாதிக் - 09443389935 - நாகர்கோவில்.

Tuesday, May 05, 2009

நோயில்லா உலகம் படைப்போம்

நோயில்லா உலகம் படைப்போம்
வழி காட்டும் சீன மருத்துவம்

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்று நம்மில் பல்வேறு நபர்கள் நோயினால் அவதிப்பட்டு, ஆங்கில மருந்துகளின் பின்விளைவுகளாலும் மற்றும் அதற்கு சிகிற்சை அளிக்க போதிய வருமானமில்லாது இறந்து போகும் நிலமையையும் நாள்தோறும் கண்டுவருகிறோம்.

இதற்கெல்லாம் விடைகொடுக்கும் விதமாக, எளிமையான எந்த பக்க விளைவுகளுமின்றி நாடி முறைப்படி நோயறிந்து அதற்கு தகுந்த முறையில் அக்குபஞ்சர் சிகிற்சை அளித்து பூரண குணப்படுத்தி வருகிறோம். நோயாளிக் கூறாமலேயே அவர்களது உடலில் உள்ள நோய்களை பட்டியலிட்டு கூற இயலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிறப்புக் கருவியின்மூலம். பின் கண்டறியப்பட்ட நோய்களுக்குத் தகுந்த முறையில் சிகிற்சையும் அளிக்கிறோம்.

ஒருவரது உணவுப்பழக்கமும், உடல்பயிற்சியும், நல்ல தூக்கமும் நல்ல ஆரோக்கியத்திற்கு அடிப்படை. ஐவேளை தொழும்பொழுது மனதை ஒருமுகப்படுத்தி கட்டுபடுத்தவும் முடியும். சரியான வேளையில் தொழுகையை நடத்த கூறுவதுபோல், சரியான வேளையில் உணவையும் உட்கொள்ளவேண்டும். அப்போது நாம் சந்திக்கும் பற்பல நோய்களிலிருந்தும், விடுபடலாம் இன்ஷா அல்லாஹ். இது மிகவும் இன்றியமையாதது.

மேலும் அதிக விபரத்திற்கு அல்லது அக்குபஞ்சர் சிகிற்சைக்கு தொடர்பு கொள்ளவும் >
  • மருத்துவர் சாதிக் > 09443389935
  • "தாருல்ஸஃபா அக்குபஞ்சர் சிகிற்சை நிலையம்" > நாகர்கோவில்.

சிகிற்சையின் போது தகுந்த ஆலோசனைகளும் அளிக்கப்படும். அப்போது மீண்டும் நோய் வருவதிலிருந்து உங்களைப்பேணி பாதுகாத்துக் கொள்ளலாம். BP, Diabetics-ற்கு தொடர்ந்து மருந்து சாப்பிடத் தேவையில்லை. இம்மருத்துவம் செய்வதன்மூலம் முழுமையாக அந்த மாத்திரைகளை நிறுத்தி சிறந்த உடல்நலத்தோடு வாழலாம். BP மற்றும் Diabetics-ற்கு தொடர்ந்து மாத்திரை சாப்பிடுவதன்மூலம் இறுதியில் சிறுநீரகத்தை இழக்க நேரிடும் என்பதையும் மறவாதீர்கள்.

உங்களது இடத்தில் ஒருநாள் இலவச அக்குபஞ்சர் விழிப்புணர்வு முகாம் நடத்தவும் மேற்குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு தேதியைப் பெற்றுக்கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ். எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எங்களது ஆவல்; நோயற்ற உலகம் படைப்போம் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: அனாதைகளுக்கும், ஆதரவற்ற வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஏழைகளுக்கும் இலவசமாக சிகிற்சை அளிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்,
தாருல்ஸஃபாவிலிருந்து மருத்துவர் சாதிக்.
Mobile: 09443389935.

Tuesday, March 17, 2009

நாகர்கோவிலில் நடைபெற்றது - UNDERSTAND QURAN AND SALAH - The Easy Way

நாகர்கோவிலில் UNDERSTAND QURAN AND SALAH - The Easy Way வெள்ளியன்று நடைபெற்றது.


இறையருளால் UNDERSTAND QURAN AND SALAH - The Easy Way - என்ற பயனுள்ள இஸ்லாமியத் தமிழ் நிகழ்ச்சி நாகர்கோவில் IRG ட்ரஸ்ட் அரங்கத்தில் சென்ற வெள்ளியன்று (13,மார்ச்09) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சமூக நல அமைதி அறக்கட்டளையும் IRG அறக்கட்டளையும் இணைந்து இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சென்னையிலிருந்து வந்த சகோதரர் ஜனாப். ஷேக். M.F. அலி அவர்கள் அனைவருக்கும் எளிதாக விளங்கும் விதத்தி மல்டி மீடியா படக்காட்சிகளின் மூலம் பாடங்களை விளக்கினார். பயிற்சியின் போது, பயிலவந்தவர்களை சைகைகள் மூலமும், உரக்க உச்சரிக்கச் செய்வதன் மூலமும் பங்கெடுக்கச் செய்து பாடங்களை நடத்தியது பயனுள்ளதாக இருந்தது.

இந்த பாடத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக, ஒவ்வொரு பாடங்களுக்கு இடையிலும் பயில்பவர்களை உற்சாகமூட்ட மூச்சுப் பயிற்சியளித்தார். இது பங்கெடுத்தவர்களின் கவனத்தில் தொய்வு ஏற்படா வண்ணம், நிகழ்ச்சி முடியும்வரை அவர்களைச் சுறுசுறுப்பாக வைத்திருந்தது.

குரானிலுள்ள முக்கிய 50 வார்த்தைகளை இப்பயிற்சி மூலம் தெரிந்து கொள்வதால் அதிலுள்ள சுமார் 27000 வார்த்தைகளைப் புரிந்து ஓத இயலும். குரானிலுள்ள சுமார் 78000 மொத்த வார்த்தைகளில் இது 35 சதவீதமாகும்.

மாலை நாலரை மணி முதல் இரவு சுமார் 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது. 3 மணி நேரத்தில் 8 பாடங்கள் வாயிலாக இந்த வகுப்பு நடத்தப்பட்டது. மஃக்ரிப் தொழுகக்காக அரை மணி நேரம் தேனீருடன் இடைவேளை அளிக்கப்பட்டது. ஆண்களும் பெண்களுமாக ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வழக்கறிஞர் அஸீம் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் பேசிய IRG அறக்கட்டளையின் சேர்மன் அல்ஹாஜ். செய்யது முஹம்மது மதனி நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப் பேசியதோடு, மேலும் இது போன்ற நல்ல பலனுள்ள நிகழ்ச்சிகளை நடத்த IRGT வளாகத்தின் கதவுகள் திறந்திருக்குமென உறுதியளித்தார். சமூக நல அமைதி அறக்கட்டளையின் செயலர், பொறியாளர். பிஜிலி ஸாஹிப் நன்றியுரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சி சிறப்புற அமைய தொடக்கம் முதலே முழு முயற்சியுடன் எல்லா ஏற்பாடுகளையும் வெற்றிகரமாகச் செயல்படுத்திய சமூக நல அமைதி அறக்கட்டளையின் தலைவர் ஜனாப். கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களை இங்கு நினைவு கூறுவது இன்றியமையாததாகும்.

மேலும் இந்த நிகழ்சியைப் பல்வேறு இடங்களில் சிறப்புற நடத்த பக்க பலமாக இருந்து வரும் ஜனாப். கஸ்ஸாலி அவர்களும், நிகழ்ச்சிக்கான தொழில் நுட்ப அமைப்புகளைப் பொறுப்பாகச் செய்துவரும் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஷேக் மஸ்தான் அவர்களும் நிகழ்ச்சி சிறப்புற உதவினர்.

பயனுள்ள இந்த நிகழ்ச்சியினை தமிழ் முஸ்லிம்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் நடத்திப் பயன்பெறச் செய்யவேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.

வல்ல நாயன் அதற்கு அருள்புரிவானாக. ஆமீன்.


அன்புடன்,
தாருல்ஸஃபாவிலிருந்து சாதிக்.

Thursday, September 11, 2008

மாபெரும் இஸ்லாமிய அறிவுப் போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும்.

அனைவர்களும் இதில் கலந்து சிறப்பித்து, பரிசுகளை அள்ளிச் செல்லுமாறு
அன்புடன் அழைக்கிறோம். உங்களது குழந்தைகளை அனுப்பி, இஸ்லாமிய அறிவுத் திறனை வளர்க்குமாறு கேட்கிறோம்.

அன்புடன்,
தாருல்ஸஃபா சாதிக்.
www.darulsafa.com

Monday, July 21, 2008

ஃபர்ஸானா ஆலிமா மற்றும் அஹமத் பாகவியின் உரை (AUDIO)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த 20-07-2008 அன்று குளச்சல் மஸ்ஜிதுல் முனீஃபில் நடந்த சொற்பொழிவில் ஆலிமா ஃபர்ஸானா அவர்களும், அஃப்ஸலுல் உலமா அஹமத் பாகவி அவர்களும் ஆற்றிய சொற்பொழிவுகளின் ஆடியோவை கேட்க இங்கு சொடுக்கவும்.

.


மேலதிக கட்டுரைகளும், ஆடியோக்களுக்கும்.


Friday, May 09, 2008

ஒருநாள் இஸ்லாமியக் கொள்கை விளக்க மாநாடு


அஸ்ஸலாமு அலைக்கும்.
அனைத்து சகோதரர்களும், நண்பர்களும் வந்து கலந்து கொள்ளுமாறு
அன்புடன் அழைக்கிறோம்.
அன்புடன்,
தாருல்ஸஃபாவிலிருந்து சாதிக்.