Showing posts with label சிரிபதா. Show all posts
Showing posts with label சிரிபதா. Show all posts

Saturday, October 27, 2012

மாற்று ஊடக பதிவாளர்களுக்கு எதிரான பயமுறுத்தல்களை எதிர்கொள்வோம்

மாற்று ஊடக பதிவாளர்களுக்கு எதிரான பயமுறுத்தல்களை எதிர்கொள்வோம்….



இன்று அச்சு ஊடகங்களிலும், தொலைகாட்சி ஊடகங்களிலும் தங்களின் சனநாயக பார்வையை, அல்லது மாற்றுகருதோட்டங்களை, தங்களின் எதிப்புணர்வுகளை பதிவு செய்ய முடியாத அல்லது அதற்கு வாய்பற்றவர்கள் தங்களின் உணர்வு நிலையை வெளிப்படுத்த சமுக வளைத்தளங்களை பயண்படுத்திவருகிறார்கள்.


அடிப்படை ஆதாரமற்ற போலி குற்ற சாட்டுகளால் இனைய பதிவாளர்கள் ராசன், சரவணகுமார் ப
ாடகி சின்மயின் குற்றசாட்டுகளால் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இரண்டுவருடங்களுக்கு முன் மீனவர்கள் பிரச்சனை, மற்றும் இடஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்துக்களை பதிந்த தத்துவ ஆசான் சின்மயின் சின்னத்தனமான கருத்துக்களுக்கு எதிர்வினையாக அப்போழுது தெரிவித்த எதிர்கருத்துக்களை திரித்தும் தனது செல்வாக்கை பயன்படுத்தி புகார் கொடுத்துள்ளார்.

இதில் சில அட்டகத்திகள் குறுக்கே சால் ஓட்டிக்கொண்டிருக்கிறது தங்களை சனநாயக காவலர்களாக காட்டிக்கொண்டிருக்கும் இவாள்களும் ஆவாள்கள் ஆக முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆதே இனைய வெளியில் சூத்திர கூ… என பதிவிடுபவன் பற்றி எந்த சூத்திரனுக்கும் கோபம் வரவில்லை….

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்…

இது தனி சின்மயின் புகாரின் மீதான இனைய பதிவர்களின் மீதான காவல் துறையின் தாக்குதல்களாக நாம் பார்க்கமுடியாது.அரசும் அது சார்ந்திருக்கும் தத்துவங்களும் மாற்று ஊடக சனநாயகவாதிகள் மீதும், குறிப்பாக தமிழர்கள், தமிழ் உணர்வாளர்கள், சனநாயக சக்திகளுக்கு மறைமுகமாக எச்சரிக்கை செய்ய விரும்புகிறது..

இதை அனுமதித்தால் நாளை எவரும் தனது சனநாயக உரிமைகளுக்காக குரல் எழுப்ப முடியாது. வேறு ஒருவரின் பொய் புகார் அடிப்படையில் நீங்களும் கைது செய்யப்படுவீர்கள்..இவர்களுக்கும், அவாள்களுக்கும் நாம் நாம் சார்ந்த தத்துவத்தின் பெயரால் பதில் கொடுக்கவேண்டும்…

உனது எச்சரிக்கையும், தாக்குதல்களும், சிறையும், எங்களை என்ன செய்ய முடியும்..? என உணரவைக்கவேண்டிய தருணமிது….

இனையத்திலோ… அல்லது பத்திரிக்கைகளில் எழுதியோ நாங்கள் மக்களை அணிதிரட்டவேண்டும் என்ற கட்டாயமில்லை…

நாங்கள் தெரு தெருவாக, கிராமங்கள், நகர்புரங்கள் என மக்களிடம் சனநாயகத்திற்கான குரலை கொண்டு சென்றவர்கள்.சனநாயக குரலை ஒடுக்க அரசு,காவல் துறை, அரசை தாங்கும் பார்பணியம் என அனைவரும் ஓர் அணியில்….நீங்களும் நானும்…..?
வழக்கறிஞர். உமர்கயான் சே.ஜெ
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்
செல். 9944112879