Showing posts with label உளவுத்துறை விசாரனை. Show all posts
Showing posts with label உளவுத்துறை விசாரனை. Show all posts

Monday, November 03, 2008

இதே குற்றத்திற்காக ஒரு முஸ்லிம் பிடிபட்டிருந்தால்....

இதே குற்றத்திற்காக ஒரு முஸ்லிம் பிடிபட்டிருந்தால்.... கொஞ்சமும் வெட்கமின்றி நடுநிலை(!) நாளிதழ்களும் அவற்றைப் பிரசுரிக்கும்.

அவ'னை' முகத்தை மூடி,பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டி,ஆணி, சுத்தியல், டார்ச் பேட்டரி போன்ற 'பயங்கர ஆயுதங்கள்' நிரப்பப்பட்ட ஒரு டேபிளின் முன் அவ'னை' நிறுத்தி வைத்து ஃபோட்டோ எடுத்து,

அல்-காயிதா முதல் லஷ்கரே தய்யிபா வரை தொடர்புடையவ'ன்' என்றும், இந்தியத் தலைவர்களைக் கொல்வதற்குக் காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் பயிற்சி எடுத்து வந்தவ'ன்' என்றும் தக்க நேரத்தில் எடுக்கப் பட்ட காவல் துறையின் நடவடிக்கையால் நாட்டின் தலைவர்கள் காப்பாற்றப் பட்டனர் என்றும் பத்திரிகையாளர்களுக்கு அறிக்கை கொடுப்பார்கள்

நல்ல குடும்பத்து நல்ல பிள்ளைகள்!

காதலிச்ச பொண்ணு திரும்பிப் பார்க்கவில்லை. பாவம், மனசு நொந்து போயி இந்த மாதிரி ஒரு காரியம் செய்து விட்டார். மற்றபடி இவர் ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த நல்ல பிள்ளை"

இது ஒரு திரைப் படத்தின் வசனக் காட்சியல்ல. இங்குத் தரப் பட்டுள்ள 'கைது-விடுதலை:3'இன் க்ளைமாக்ஸ் வசனம்தான் அது.

கைது-விடுதலை : 1
சில மாதங்களுக்கு முன்னர், ஜனாதிபதியைக் கொல்லத் தபால் குண்டு அனுப்பியதாக, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த முஹ்ஸின் என்ற முஸ்லிம் இளைஞரைப் பிடித்துக் கொண்டுபோய் 20 நாட்களுக்கும் மேலாகக் கஸ்டடியிலும் சிறையிலும் வைத்துக் கேரளக் காவல்துறையினர் கொடுமைப் படுத்தினர். நிரபராதியான அவரின் தாயையும் தந்தையையும் உறவினர்களையும் காவல்துறை கொடூரமாக வேட்டையாடியது.

ஆனால், தீவிர விசாரணையின் பின்னர் உண்மையான குற்றவாளியான ராகேஷ் சர்மா என்பவரைக் காவல்துறை கைது செய்தது. அப்போது பத்திரிக்கையாளர் கூட்டத்தைக் கேரளக் காவல்துறை கூட்டி, "பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற ராகேஷ் சர்மா, மனநிலை பாதிக்கப் பட்டதாலேயே அவ்வாறு அனுப்பினார்" என காவல்துறை 'விளக்கம்' கூறி நற்சான்று வழங்கியது.

கைது-விடுதலை : 2
அதேபோன்று, சில மாதங்களுக்கு முன்பு, இதேபோல ஒரு மிரட்டல் விடுத்த பாஜகவின் மாணவர் அணி (ஏ.பி.வி.பி) உறுப்பினரான கோழிக்கோட்டைச் சேர்ந்த தேஜஸ் என்பவரது வழக்கையும் காவல்துறை மிகச் 'சாமர்த்தியமாக'க் கையாண்டு தேஜஸை நிரபராதி என விடுவித்தது.

கைது-விடுதலை : 3
கரூரில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரியும் ஊழியரின் மகனான அருண் சூர்யா என்பவரை, ஜனாதிபதி, இந்திய உளவுத்துறை 'ரா'வின் தலைவர், ஐ.பி அதிகாரிகள் ஆகியோருக்கு மிரட்டல் மின்மடல் அனுப்பியதற்காக காவல்துறை சென்ற வாரம் கைது செய்திருந்தது.

தகவலறிந்து மாநகரக் காவல்துறை ஆணையரது அலுவலகத்துக்கு அருண் சூர்யாவின் பெற்றோர் வந்தனர். அவர்கள் காவல்துறை உயரதிகாரிகளுடன் பல மணி நேரம் 'ஆலோசனை' நடத்தினர். அதனைத் தொடர்ந்தே, பத்திரிகையாளர் கூட்டத்துக்குக் காவல்துறை ஏற்பாடு செய்து, கண்ணன் என்ற அருண் சூர்யாவின் கள்ளம் கபடமில்லாத குணத்தைப் பற்றி இந்தச் செய்தியின் முதற் சொற்றொடரில் நீங்கள் படித்தவாறு விவரித்தது.

"நவம்பர் 14 க்குள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியைக் கொலை செய்வோம்" என்றும் "மேலும் பல தலைவர்களைக் கொலை செய்யும் திட்டம் உண்டு" எனவும் "ஜனாதிபதி உட்பட அனைத்துத் தலைவர்களுக்கும் எச்சரிக்கை!" எனவும் மின் மடல் மூலம் கொலை மிரட்டல் விடுத்திருந்தார் அருண் சூர்யா.

கடந்த அக்டோபர் 24 மாலை 5.15க்கு ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் மின்மடலில், "கொச்சி மற்றும் சென்னையில் 4 வெடிகுண்டுகள் வீதம் வைக்கப் பட்டுள்ளன" எனவும் "விரைவில் அவை வெடிக்கும்" எனவும் அவரது மின்மடலில் மிரட்டல் விடுக்கப் பட்டிருந்தது.

இதற்கு முன்னரும் இதே போன்ற பல மிரட்டல் மின்மடல்கள் வந்திருப்பினும் இம்முறை சற்றுத் தீவிரமான மிரட்டலுடன் சென்னை மற்றும் கொச்சியில் வெடிகுண்டு வைக்கப் பட்டுள்ளதாக வந்ததால், ஜனாதிபதி மாளிகை உடனடியாக மிரட்டல் மடல் விவரத்தை ஐ.பி, கேரள, தமிழக உள்துறைச் செயலர்களுக்கு அனுப்பி இருந்தது.

இம்மிரட்டல் மின்மடலை அனுப்பி, பிடிபட்டிருந்த அருண் சூர்யாவை, "எந்த விதமான தீவிரவாத குழுக்களுடனோ அமைப்புகளுடனோ தொடர்புடையவர் அல்ல எனவும் விளையாட்டிற்காகத்தான் அவ்வாறு ஒரு மின்மடல் அனுப்பியதாகவும்" கேரளக் காவல்துறை ஜனாதிபதி மாளிகைக்குக் கொடுத்த தகவலில் கூறியுள்ளது. மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் அனுப்பப்பட்ட மின்மடலில் தெரிவிக்கப் பட்டிருந்த மிரட்டலைக் கண்டு பயப்பட ஏதும் இல்லை எனவும் கேரள காவல்துறை உறுதி கூறியுள்ளது.

காதல் தோல்வியினால் விரக்தியடைந்த அருண் சூர்யா, காதலியின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக 'ரஹ்மத்துல்லாஹ் பரகத்' என்ற முஸ்லிம் பெயரில் மெயில் அக்கவுண்ட் திறந்ததேன்?

முஸ்லிம்கள் மட்டுமே பயன் படுத்தும் அரபுமொழிச் சொற்கள் சிலவற்றை மிரட்டல் மின்மடலின் இறுதியில் இணைத்ததேன்?

தீவிரவாத மிரட்டல் விடுத்த அருண் சூர்யாவை, "நல்லப் பிள்ளை; நல்லக் குடும்பத்துப் பிள்ளை; மனவேதனையில் அப்படி செய்து விட்டான்; அல்லாமல் இதன் பின்னணியில் வேறு எந்த நோக்கமும் இல்லை" என நற்சான்றிதழ் வழங்கும் காவல்துறையிடம் இதற்கான பதில்கள் இல்லை!

இதே குற்றத்திற்காக ஒரு முஸ்லிம் பிடிபட்டிருந்தால்:
அவ'னை' முகத்தை மூடி,பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டி,
ஆணி, சுத்தியல், டார்ச் பேட்டரி போன்ற 'பயங்கர ஆயுதங்கள்' நிரப்பப்பட்ட ஒரு டேபிளின் முன் அவ'னை' நிறுத்தி வைத்து ஃபோட்டோ எடுத்து,அல்-காயிதா முதல் லஷ்கரே தய்யிபா வரை தொடர்புடையவ'ன்' என்றும், இந்தியத் தலைவர்களைக் கொல்வதற்குக் காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் பயிற்சி எடுத்து வந்தவ'ன்' என்றும் தக்க நேரத்தில் எடுக்கப் பட்ட காவல் துறையின் நடவடிக்கையால் நாட்டின் தலைவர்கள் காப்பாற்றப் பட்டனர் என்றும் பத்திரிகையாளர்களுக்கு அறிக்கை கொடுப்பார்கள்.

கொஞ்சமும் வெட்கமின்றி நடுநிலை(!) நாளிதழ்களும் அவற்றைப் பிரசுரிக்கும்.

நல்லவேளை, பிடிபட்டவர் நல்ல குடும்பத்து நல்ல பிள்ளையாக இருந்ததால் நாடு பிழைத்தது!

நல்ல குடும்பத்து நல்ல பிள்ளைகள்!.

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1082&Itemid=51
************************************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

Thursday, May 31, 2007

"கைதியின் கதை" - உளவுத் துறை விசாரனை - தினமலர்

ஜனாப்.அப்துன் நாசர் மதானி


மதானிக்கு ஆதரவாக "கைதியின் கதை' ஆவணப்படம் "சிடி'யாக வெளியீடு

கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் மதானி, முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ஆதரவாக, "கைதியின் கதை' என்ற ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு நெருங்கும் வேளையில், "சிடி' வெளியிடப்பட்ட பின்னணி என்ன என்பது குறித்து உளவுப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், கேரள மக்கள் ஜனநாயக கட்சியினர் நிறுவனர் அப்துல்நாசர் மதானி(41) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் 167 குற்றவாளிகள் மீதான விசாரணை தனி நீதிமன்றத்தில் முடிந்தது; தீர்ப்புக்காக வழக்கு காத்திருக்கிறது. இந்நிலையில், "கைதியின் கதை' (மதானி மற்றும் முஸ்லிம் சிறைவாசிகள் குறித்த ஆவணப்படம்) என்ற தலைப்புடன், 45 நிமிட படம் "சிடி'யாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், ஆங்கில மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை, "மீடியா ஸ்டெப்ஸ்' என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது; "ஆலூர் ஷானவாஸ்' என்பவர் இதை தயாரித்துள்ளார். இப்படத்தில், மதானியின் பள்ளி பருவம், ஆவேசமான அரசியல் மேடைப்பேச்சு, மத ரீதியான போதனைகள் இடம்பெற்றுள்ளன. "சங்க் பரிவார்' அமைப்புக்கு எதிராக 1991ல், "இஸ்லாமிக் சேவா சங்' அமைப்பை துவக்கியது; வெடிகுண்டு தாக்குதலில் மதானியின் கால் ஊனமடைந்தது தொடர்பான, விளக்கங்கள், காட்சிகள் இடம்பெற்றுள்ளன.



பாபர் மசூதி இடிப்புக்கு பின், "இஸ்லாமிக் சேவா சங்' தடை செய்யப்பட்டு, "கேரள மக்கள் ஜனநாயக கட்சி' (பிடிபி)யாக உருவானதும் விளக்கப்பட்டுள்ளது. மதானியின் சொந்த ஊரான, சாஸ்தான் கோட்டையில் வசிக்கும் அவரது தந்தை, பள்ளி தலைமையாசிரியர் அப்துல்சமது பேட்டி, கேரளா மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில செயலர் முகமது ரஜீம் பேட்டியும் இடம்பெற்றுள்ளன. ரஜீம் பேட்டியில்,""கோவை சிறையில் உள்ள மதானியை விடுவிக்க, சென்னை ஐகோர்ட், கேரளா ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் வரை சென்றோம்; முடியவில்லை.

அவர் மீதான வழக்கு செலவுக்காக, எர்ணாகுளத்தில் உள்ள அவரது வீடு விற்கப்பட்டுள்ளது,'' என, தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் அளித்துள்ள பேட்டியில்,""விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவரை, விசாரணை கைதியாகவே ஒன்பது ஆண்டுகள் சிறையில் அடைத்திருப்பது மனித உரிமை மீறல்,'' என, தெரிவித்துள்ளார். சிலரது விமர்சனங்களும், இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

மதானியின் மனைவி சூபியா அளித்துள்ள பேட்டியில், ""ஒன்பது ஆண்டுகளுக்கு முன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கணவர், கோவை சிறையில் உள்ளார். அவரை சந்திக்கும் போதெல்லாம், எனக்கு தைரியமூட்டுவார்; அவரது உடல் நிலை மோசமாக உள்ளது. சிறைக்கு சென்றபோது அவரது எடை 116 கிலோ; தற்போது 46 கிலோவாக குறைந்துவிட்டது. முறையான சிகிச்சை இல்லாததே இதற்கு காரணம்,'' என, குற்றம் சாட்டியுள்ளார். இறுதியில், சட்டம், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், மதானியின் சிறைவாசத்தை நிச்சயம் கண்டிப்பார்கள்' என்ற வர்ணனையுடன் படம் முடிகிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியிடப்பட்டுள்ள இந்த படத்தின் "சிடி', ஒரு பிரிவு மக்களிடையே வினியோகிக்கப்பட்டு வருகிறது; இதன் பின்னணி என்ன, என்பது குறித்து உளவுப்போலீசார் விசாரிக்கின்றனர்.

செய்தி : தினமலர்

1. கைதியின் கதை சிடி வெளியீட்டு விழா செய்திகள்

2. கைதியின் கதை வீடியோ "தமிழ் முஸ்லிம் மீடியா" வில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இணையத்தில் இது உள்ளது பார்க்க அல்லது டவுன்லோட் செய்ய விரும்புபவர்கள் www.tamilmuslimmedia.com என்ற முகவரியில் சென்று பார்க்கலாம்.