Showing posts with label ஃபாசிசம். Show all posts
Showing posts with label ஃபாசிசம். Show all posts

Sunday, February 23, 2014

முஸ்லிம் பாசிஸ்ட்டுகள்???




பொய்யான பரப்புரைகள், தவறுகளை மறைக்க மதத்தை சம்பந்தப்புடுத்துதல், தங்கள் அரசியல் நாடகங்களை தான் சார்ந்திருக்கும் மதத்தின் புனித போர்களுக்கு ஒப்பிடுதல் என சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கும்போது பாசிசத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்ய வந்தவர்களே பாசிஸ்ட்டுகளாக மாறிவிட்டார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. பாசிசம் என்றால் என்ன என்று தெறியாத அப்பாவி சிறுவர்கள், இளைஞர்கள், முதியோர் , பெண்கள், குழந்தைகளை தங்களது பாசிச சிந்தனைக்கு பலியாக்கிவிட்டார்களோ என்ற என்னமும் எழுகின்றது.

மக்களாட்சியில் மக்களின் மத நம்பிக்கை முக்கியமற்றது. அவர்கள் எந்த மதத்தை பின்பற்றுபவர்களாகவும் இருக்கலாம். மத நம்பிக்கை இல்லாதவர்களாகவும் இருக்கலாம். இருப்பினும் அவர்கள் தங்களை மதச் சார்பற்ற முறையில் நிர்வகித்துக் கொள்ளலாம் என்பது சமூக ஜனநாயகம் பற்றி பேசும் இவர்களுக்கு மக்களாட்சி என்றால் சமத்துவம் என்பது தெறியாது. அதனால் சமத்துவம் இவர்களுக்கு ஒவ்வாது. இவர்களுக்கு தங்கள் அமைப்பில் இல்லாதோர் தங்கள் அமைப்பினருக்கு சமமானவர்கள் அல்ல. முஸ்லிம்கள் கூட தங்களுக்குள் அனைவரும் சமமானவர்கள் இல்லை என்ற பாசிச சித்தாந்தத்தின் உறு உள்ளது.

பாசிசம் (fascism) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும்.தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்.

மேலே உள்ளதை அப்படியே சற்று மாற்றி "பாசிசம் (fascism) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும்.தனிமனித உரிமைகளை அமைப்பின் நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அமைப்புக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்" என வாசித்து பாருங்களேன்.

The New Dictionary of Cultural Literacy, (Third Edition. 2002) என்ற புத்தகத்தில் பாசிஸ்ட்டுகளை பற்றி கூறும்போது “பொதுவாக, பாசிச அரசுகள் ஒரு சர்வாதிகாரியின் அதிகாரத்தில் இருக்கும். இவர் பொதுவாக கவர்ச்சியான தோற்றத்தையும், பகட்டான சீருடைகளையும் கொண்டிருப்பார். இவர் தனது தொண்டர்களை பிரமாண்டமான பேரணிகள் மூலமும், தேசியத்தைப் பற்றிய கூச்சலான கோஷங்களுடனும் ஒன்று திரட்டுவார். அன்னியர்களைப் பற்றியும் தங்களுக்குள் உள்ள ‘அசுத்த’ மான மக்களைப் (ஜெர்மனியின் யூதர்கள்) பற்றியும் சந்தேகத்தையும் வெறுப்பையும் வளர்ப்பார்.”

மேலே உள்ள இந்த கருத்தாக்கத்தை அப்படியே சமீபத்தில் ஒரு அமைப்பு நடத்திய பகட்டான் சீருடை அணிவகுப்புடன் ஒப்பிட்டு பாருங்கள் யார் பாசிஸ்ட்டுகள் என்பதும் எனது சந்தேகம் சரியானதுதான் என்பதும் உங்களுக்கு புறியும்.

இறுதியாக பாசிசம் என்பது இந்துக்களுக்கும் மட்டுமோ அல்லது யூத கிருத்துவ மக்களுக்கு மட்டுமானதல்ல காவல்துறையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் , இஸ்ரேலிய யூத பயங்கரவாதிகளும் மட்டும் பாசிசம் இருப்பதில்லை இசுலாமியர்களிளும் பாசிச கருத்தியலுடன் கூடிய அமைப்புகள் இருக்கலாம் என்பதுடன் பாசிசத்திற்கு எதிராள களமாடி பாசிசத்தை அழிக்க புறப்பட்டவர்கள் தங்களையும் அந்த சித்தாந்தத்திற்குள் ஆட்படுத்தி தாங்களும் நவீன பாசிஸ்ட்டுகளாக மாறியது மட்டும் நிதர்சனமான உண்மை.

- அன்புடன்
முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்
அலைபேசி 9047507665


Wednesday, October 29, 2008

கோட்சே முதல் இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட்டத்தின் திரைமறைவுச் சதிகள்-கொலைகள்

சங்பரிவார்க் கும்பல் முன்னின்று நடத்தும் வன்முறைகளை முசுலிம்கள் நடத்தியதாகப் பழிபோடும் சூழ்ச்சிகளை தக்க ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.


அறிக்கை வருமாறு:-அண்மைக்காலமாக இந்தியாவில் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டு இருக்கின்றன. விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பலியாகின்றன.


வேதனை! வேதனை!! வெட்கம்!!


இந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் மதவெறித்தனம் கொம்பு சீவப்பட்டு இருக்கிறது.


பெரும்பாலும் இந்தக் குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் முசுலிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்பது போன்ற ஒரு தோற்றம் கொடுக்கப்பட்டும் வருகிறது!


ஊடகங்கள் கைகளில் இருக்கும் காரணத்தால்...ஊடகங்களில் 71 சதவிகிதம் உயர்ஜாதி பார்ப்பனர்களின் கைகளில் அடைக்கலம் தேடியுள்ளதால், முஸ்லிம் தீவிரவாதம் என்ற தலைப்பில் திட்டமிட்ட வகையில் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர்.


ஆனால், அண்மையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள் -


கண்டுபிடிப்புகள் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பல் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அந்தப் பழியை முசுலிம்கள்மீது சுமத்தும் ஒரு தந்திரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நிரூபித்து வருகின்றன!


இதன்மூலம் பெரும்பான்மை மக்களான இந்துக்களை சிறுபான்மைமக்களான முசுலிம்கள் மீது வன்முறையை ஏவிவிடுவதுதான் இதன் திரைமறைவு நோக்கமாகும்.


பார்ப்பனர்கள் - ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தவர்கள் எப்போதும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடக் கூடியவர்கள் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.


காந்தியாரைக் கொன்ற கோட்சே!


1. உதாரணமாக தேசப்பிதா என்று மக்களால் மதிக்கப்பட்ட காந்தியாரைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பார்ப்பனன் என்ன செய்தான்?


தனது கையிலே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக்கொண்டான்; முசுலிம்களின் மார்க்கப்படியான சுன்னத்தும் செய்துகொண்டிருந்தான் என்றும் கூறுகிறார்கள்!


காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் ஒரு முசுலிம் என்று பழி சுமத்தி, பிரச்சாரம் செய்து, இந்துக்களை முசுலிம்கள்மீது மோதவிடும் சூழ்ச்சிதானே இது?


காந்தியாரைக் கொன்றது முசுலிம் அல்ல - ஒரு இந்துப் பார்ப்பனன் என்று தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தனர்.


அந்த உண்மை வெளிவருவதற்கு முன்பாக சில ஊர்களில் இந்துக்களால் முசுலிம்கள் தாக்கவும் பட்டனர்.


சதுமுகையில்...


2. தமிழ்நாட்டில் சத்தியமங்கலத்தையடுத்த சதுமுகை என்ற ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டு இருந்தது. இன்னொரு சாமி சிலை பீடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு இருந்தது


.3.ஊரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் புத்திசாலித்தன மான விசாரணையில் சிக்கியவர்கள் யார் என்றால், அவ்வூர் இந்து முன்னணியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 17) மற்றும் செல்வக்குமார் (வயது 23) ஆகியோர்.தாங்கள்தான் அவ்வாறு செய்ததாக இந்து முன்னணியைச் சேர்ந்த இருவரும் ஒப்புக்கொண்டனர்.


திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள்மீது பழியைப் போடுவதுதான் அவர் களின் நோக்கம் என்ற குட்டும் உடைபட்டது. (தி இந்து, 18.2.2002).


தென்காசியில்...

3. அதேபோல, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். 2006 ஜனவரி 24 இல் இது நடந்தது.


இந்து - முசுலிம் மதக் கலவரத்தைத் தூண்டவேண்டும் என்ற பின்னணியில் இந்து முன்னணியினர் இருந்தனர்.


தென்காசி நகர இந்து முன்னணியின் தலைவர் குமார்பாண்டியன் என்பவர், முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப் பட்டார். இதில் மூன்று முசுலிம்கள் கைது செய்யப்பட்டனர்.


மதக் கலவரம் ஏற்பட்டு, முசுலிம்களின் கடைகளும், வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன.நோக்கம் மதக் கலவரத்தைத் தூண்டுவதே!


இதன் பின்னணியில் தென்காசியில் இந்து முன்னணி அலுவல கத்தில் குண்டுவெடித்தது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப் பட்டனர். அத்தனைப் பேரும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள்.


குமார்பாண்டியன் கொலை செய்யப்பட்டபோது பெரிய அளவில் மதக்கலவரம் ஏற்படாததால், இந்தக் காரியத்தைச் செய்து அதன் மூலம் பெரிய அளவு கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்று கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.


கடையநல்லூரைச் சேர்ந்த சிவா என்ற சிவானந்தம் தமிழக இந்து முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆவார். இவர் கேரளாவில் கல்குவாரியில் வேலை செய்தவர். பாறைகளை உடைக்கப் பயன்படும் அமோனியம் நைட்ரேட்டை வெடிகுண்டு தயாரிப்பதற்காக இவர் கொடுத்திருக்கிறார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.


கான்பூரில் நடந்தது என்ன?


4. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 2008 பிப்ரவரி 24 இல் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் சங் பரிவார்க் கும்பல் வெடிகுண்டு தயார் செய்யும் தொழிற்சாலையையே நடத்திவரும் சங்கதி வெளியில் வந்தது.


5.பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஸ்ரா மற்றும் பூபீந்தர் சிங் ஆகியோர் வெடிகுண்டுகளைத் தயாரிக்கும்பொழுது எதிர்பாராதவிதமாக அவை வெடித்து உடல் சிதறிப் போனார்கள்.


மிகப்பெரிய தொடர் குண்டுவெடிப்பு வன்முறைக்கு அவர்கள் திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது. கான்பூர் காவல்துறை அய்.ஜி. எஸ்.என். சிங் செய்தியாளர்களிடம் இதுபற்றி விளக்கினார்.


வெடிகுண்டு தயாரிப்புக்குத் தேவையான ஏராளமான பொருள் களும் கைப்பற்றப்பட்டன.இராணுவத்தில் பயன்படுத்தப்படக் கூடிய குண்டுகளுக்கு ஒப்பானவை அவை!


வரைபடங்களும், நாள்குறிப்பு, தாக்கப்படவேண்டிய முசுலிம் களுக்குச் சொந்தமான முக்கிய இடங்கள்பற்றிய விவரங்கள் எல்லாம் கிடைத்தன.


மகாராட்டிரத்தில்...


6. மகாராட்டிரத்தில் நந்தித் எனும் இடத்தில் இதேபோல, குண்டு களைத் தயார் செய்து கொண்டிருந்தபோது, வெடித்துச் சிதறியதால் பஜ்ரங்தள் தீவிரவாதிகளான நரேஷ்ராஜ் மற்றும் ஹிமான் ஷீ பான்சே ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர் (4.5.2006).


7. பெண் சாமியார் சிக்கினார்


மகாராட்டிர மாநிலம் மலேகானில் சிமி அலுவலகம் சக்தி வாய்ந்த குண்டுகளால் தகர்க்கப்பட்டது (29.9.2008).


ஆறு இசுலாமியத் தோழர்கள் பலியானார்கள்; 90 பேர் படுகாயமடைந்தனர்.மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை எடுத்துவந்து வெடிக்கச் செய்திருப்பது புலன் விசாரணையில் தெரிய வந்தது.


டைமர் கருவி பொருத்தப்பட்டு இருந்த அந்த வெடிகுண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டு இருந்தது.புலன் விசாரணையில் பெண் சாமியார் பிரக்யாசிங் பாரதி தாக்கூர் (வயது 38) என்பவர் இதன் பின்னணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டுவிட்டார்.


வந்தே மாதரம் என்ற அமைப்பைத் தொடங்கிய இந்தப் பெண் சாமியாருக்கு உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று வருணிக்கப்பட்ட முதலமைச்சராகிய நரேந்திரமோடி, குஜராத் மாநில அரசின் உதவித் தொகையெல்லாம் கூட கிடைத்து வருகிறதாம்!


படிக்கும் காலத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர்ப் பிரிவான ஏபிவிபியில் (ஹக்ஷஏஞ) தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். துர்காவாகினி, ஜாக்ரான் மஞ்ச் இவைகளில் தீவிர உறுப்பினராக இருந்திருக்கிறார் இந்தப் பெண் சாமியார்!


பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோரிடம் நெருக்கமானவர் இந்தப் பெண் சாமியார். மேடைகளில் இந்து வெறித்தன நெருப்பைக் கக்கும் பேச்சாளர் இவர்.


இவரோடு மேலும் மூவர் இந்த வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். மூவரும் இராணுவத்தில் பணி யாற்றிய அதிகாரிகள். இருவர் கைது செய்யப்பட்டு விட்டனர்;


இராணுவப் பணியில் இருக்கும் இன்னொருவரைக் கைது செய்ய இராணுவத் துறையிடமிருந்து அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர்.குல்கர்னி, உபாத்யா ஆகிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஆவார்கள். நாசிக் அருகே இராணுவப் பயிற்சி மய்யம் ஒன்றினை நடத்தி வருகின்றனர்.


வெடிகுண்டுகளைத் தயார் செய்வது எப்படி? அவற்றைக் கையாளுவது எப்படி என்கிற பயிற்சிகளையெல்லாம் சங் பரிவார்க் கும்பலுக்கு இவர்கள் கற்றுத் தந்துள்ளனர்.


பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணுவத்திலும் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களை நுழைத்தனர்.


விமானப் படைத் தளபதி விஷ்ணு பகவத் இதனை அப்பொழுதே வெளிப்படுத்தியதுண்டு.பா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், தளபதிகள் கலந்துகொண்டு விளக்கம் அளித்ததையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.


96 ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க்கப்பட்டது ஏன் என்பது இப்பொழுது மகாராட்டிரத்தில் - வெடி குண்டு வழக்கில் இராணுவ அதிகாரிகள் மூவர் சம்பந்தப்பட்டதி லிருந்து தெரிந்துகொள்ளலாமே!


மகாராட்டிர மாநிலம் மலேகானில் குண்டுவெடித்த அதே நாளில் குஜராத் மாநிலம் மாடேகாவிலும் குண்டுவெடித்தது. இரண்டும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதன்மூலம் இதற்குமுன் நடைபெற்ற அனைத்துக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் சங் பரிவார்க் கும்பல் பெரும்பாலும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்று கருதப்படுகிறது.


இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் பயிற்சி நிலையங்களையும், தொழிற்சாலைகளையும் வைத்து திட்டமிட்ட வகையில் இந்தக் கும்பல் செயல்பட்டதைப் பார்க்கும்பொழுது இந்த அபாயகரமானவர்கள் நாடு முழுவதும் வெடிகுண்டு வேலையை அரங்கேற்றுபவர்கள் என்பது எளிதில் விளங்கிவிடும்.


சூரத் நகரில் வெடிகுண்டு சேதத்தைப் பார்வையிட நரேந்திர மோடி வந்தபோது, பாதையில் மரங்களில் வைக்கப்பட்டிருந்த 18 வெடிகுண்டுகளைக் காவல்துறையினர் கண்டுபிடித்து எடுத்தனர். வைத்ததே அவர்களாகவே இருக்கக்கூடும் என்கிற அய்யம் நியாயமானதே!


சங் பரிவார்க் கும்பல் இப்படியெல்லாம் வன்முறைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்ய தொழிற்சாலை களையெல்லாம் வைத்துச் செயல்படும் பயங்கரமான தகவல்கள் அம்பலத்திற்கு வந்து கொண்டேயிருக்கின்றன.


வழக்கம்போல் எங்கள் மீது அபாண்ட பழி என்று கூறி கூக்குரல் போடுகிறார்கள் சங் பரிவார் மற்றும் பா.ஜ.க.வினர்.இந்த யோக்கியதையில் உள்ள ஒரு கூட்டம் சிறுபான்மை யினர்மீது வன்முறை முத்திரை குத்தி அவர்களுக்கு எதிரான வெறுப்பினைத் தூண்டும் ஒரு வேலையில் திட்டமிட்ட முறையில் இறங்கியுள்ளது என்பதுதான் உண்மை.


இதுபோலவே ஒரிசாவிலும் கிறித்தவர்கள்மீது பழி - படுகொலைகள்.
நடவடிக்கைகள் தேவை
மத்திய - மாநில அரசுகள் இந்த அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியிலில் வைத்து சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை உடனடியாகச் செய்யாவிட்டால், நாடு பெரும் விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்.
2008தலைவர், திராவிடர் கழகம்

சென்னை28.10..


குறிப்பு: இவ்வறிக்கை துண்டறிக்கையாகவும் கிடைக்கும்; வாங்கி ஊர்தோறும் பரப்புங்கள்.http://files.periyar.org.in/viduthalai/20081028/news01.html

படிக்கவும் >











Monday, May 05, 2008

உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும்




பழ. நெடுமாறன் ஐயா அவர்கள்


இருள் மண்டிக் கிடக்கும்
இந்திய அரசியல் வரலாற்றில்
மறைக்கப்பட்ட உண்மைகளையும்
உரைக்கப்படாத சதிகளையும்
உலகறிய ஏந்திவரும் புதிய நூல்!


பழ. நெடுமாறன் ஐயா எழுதிய

உருவாகாத
இந்திய தேசியமும்
உருவான
இந்து பாசிசமும்


இந்நூல் சிறைக்கோட்டத்தில் செதுக்கப்பட்டது

ஏறத்தாழ 800 பக்கங்கள்
விலை ரூபாய் 350/-

--------------------------------------------------------------------------------
வெளிநாடு
ஒரு நூல் : $ 17/-
10 நூல்கள் : $ 150/-
(அஞ்சல் செலவு உள்பட)
--------------------------------------------------------------------------------
காசோலைகள் வரைவோலைகள் "தமிழ்க்குலம்"
என்ற பெயரில் இருக்க வேண்டும்
--------------------------------------------------------------------------------
Payment documents to be drafted in the name of "Tamil Kulam"
--------------------------------------------------------------------------------
வெளியீடு
தமிழ்க்குலம்
33, நரசிம்மபுரம்
மயிலை, சென்னை - 600 004.
தொ. பே - 91-44-24640575

Saturday, March 29, 2008

இந்து பாசிசத்தின் உளவியல் - டாக்டர்.ருத்ரன்

தெகல்கா வாக்குமூலங்கள் :இந்து பாசிசத்தின் உளவியல்!

""உள்ளே ஒரு மிருகம் காத்திருக்கிறது; தூண்டி விட்டால் அது வெறியோடு கிளம்பும்'', என்பது ஒரு சௌகரியமான பொய். மிருகத்தன்மை மாறி பரிணாம வளர்ச்சியடைவதுதான் மனிதத்தன்மை. பரிணாமம் பின்னோக்கிப் போகாது. குஜராத்தில் நடந்த வெறியாட்டம், தற்செயலாக தட்டி எழுப்பப்பட்ட மிருககுணம் அல்ல. அது இயல்பாக மனிதனிடம் உள்ள குணநலன்களை மழுங்கடித்து, பல காலமாக அவனது மூளையில் பதிய வைக்கப்பட்ட பேதவெறி; தன்னை விடத் தாழ்ந்தவனின் தலை சற்றே கூட நிமிரக்கூடாது எனும் ஆதிக்க வெறி; யதேச்சையாய் வெடித்த கலவரமல்ல, அது ஒரு திட்டமிட்ட வேட்டை.

"எதைச் செய்வது சரி, எப்படிச் செய்வது சரி' என்பதெல்லாம், மனித மனம் நாளும் கற்றுத் தேர்பவை. மனவியல் கருத்தின்படி, ஊக்குவிக்கப்படுவன (மிட்டாயோ? கைதட்டலோ?) சரியானவை என்றும், தண்டிக்கப்படுவன (அடிக்கப்படுவதோ? ஒதுக்கப்படுவதோ?) தவறானவை என்றும், மனம் கற்றுக் கொள்கிறது. "தண்டிக்கப்பட மாட்டோம், தப்பிப்போம்' என்று மனதுக்குத் தெரிந்தால் — தவறானதாகத் தெரிந்து வைத்தவற்றைக் கூட முயன்று பார்க்கத் துணியும். தண்டனை கிடைக்காது எனும் தைரியமும், ஓர் ஊக்குவிப்புதான். இப்படி மிருகத்தனமான செயல்கள், நேரடியாகவோ? மறைமுகமாகவோ? ஊக்குவிக்கப்பட்டால், மனம் "இதுவே நியாயம்' என்றும் நம்பியிருக்கும்.

சரியான காரியங்களைச் செய்தபின் இயல்பாகவே மனதுக்குள் மகிழ்ச்சியும், பெருமையும் நிலவும். "வெட்டினேன், கொளுத்தினேன், கொன்றேன், கொள்ளையடித்தேன், கற்பழித்தேன்' என்று பெருமையோடு பேசும் குஜராத் இந்து மதவெறியர்களின் மனங்கள், "அந்தக் காரியங்கள் நியாயமானவை, அவசியமானவை, சரியானவை' என்று தீர்மானித்து விட்டதால்தான், இத்தனை ஆண்டுகள் கழித்தும் தங்களது வெறிச் செயல்களை "வீர சாகசங்களாகவும், வெற்றிச் சரித்திரங்களாகவும்' அவர்கள் கொக்கரிக்கிறார்கள். அவர்களின் மனங்களுக்கென்றே ஒரு "கோணலான கல்வி' தொடர்ந்து பாடமாகப் பதியவைக்கப்பட்டுள்ளது.

"திருடுவது, கொல்வது, கற்பழிப்பது போன்றவை சரி'யென்று, பொதுவாக எந்த மதத்திலும் கூறப்படுவதில்லை. ஆனாலும், அந்தக் கலவரமும், வெறியாட்டமும் மதத்தின் சார்பாகவே நடந்தது. "மிதமானவை, மூர்க்கக் கட்டமைப்பு இல்லாதவை' என்று சொல்லிக் கொள்ளும் எல்லா மத மார்க்கங்களிலும் தாம் உயர்ந்தவர், கடவுளுக்கு அருகிலுள்ளவர் — தமது வழி வராதவரெல்லாம் தீயவர், தாழ்ந்தவர் என்ற மறைமுக போதனைகளும் உண்டு.

மேலோட்டமாகவேனும் நெறி புகட்டுவதாய் கருதப்படும் மதவரம்புகளை மீறி, அதைச் சார்ந்த ஒரு கூட்டம் வெறியாடுகிறது என்றால் — அந்தக் கும்பல் கயவர்களாலானது அல்லது அந்த மதநெறியே கோணலானது என்றே அர்த்தம். மேல் கீழ் எனும் பேதவெறியை தொடர்போதையாக ஊட்டி விட்டால், "தர்மம்' என்பதற்கே ஒரு புதிய அர்த்தம் தோன்ற ஆரம்பிக்கும்.

சமூக சட்ட அங்கீகாரமற்ற கோரச் செயல்களில் இவர்கள் ஈடுபடுவதற்குக் காரணம், உள்ளே வேரூன்றிக் கிடக்கும் "தான் உயர்ந்தவன்' எனும் ஆணவம். இந்தப் போலி சமூகச் செல்வாக்கு "தன்னைவிடத் தாழ்ந்தவனை மிதிக்கலாம்' என்பதற்கு ஒரு அனுமதி போன்றே அவர்களது மனத்திற்குள் தோன்றும். இப்படியொரு கோணலான கண்ணோட்டத்தில் செய்த வன்முறை, வெறி, வரம்பு மீறல், கேவலம், கொடூரம் — எல்லாமே தக்க நேரத்தில் செய்த, சரியான காரியமாகவே அவர்களுக்குப் படும்.

அதனால்தான் அவர்களிடம் இது குறித்து வருத்தமும் இல்லை, வெட்கமும் இல்லை; குற்றமும் புரிந்து விட்டு, குறுகுறுப்பும் இல்லாதது மட்டுமல்ல, இவர்களிடம் சாதித்து விட்ட மமதையும் வெளிப்படுகிறது. இது வெறி மட்டுமல்ல, தண்டிக்கப் படாததால் வந்த தைரியம். கொலையும், கற்பழிப்பும், மனிதத்தன்மையே அல்ல என்பதை உணரக்கூட முடியாத அளவுக்கு உள்ளே மதவெறியும், ஆதிக்கத் திமிரும் வளர்ந்திருக்கிறது. இது ஆபத்தானது.

பொதுவாக, ஒரு போரின் முடிவில், வென்றவர்கள் தோற்றவர்களின் உடைமைகளை (பொருள்களை, பெண்களை) கொள்ளையடிப்பது, காலங்காலமாய் இருக்கும் ஒரு கோணலான நியதி. வெற்றிபலம், தோல்விபலவீனம் என்று ஏற்றுக் கொள்ளப்படுவதால், "பலவீனமானவர்களைக் கொள்ளையடிப்பதும், கொல்வதும், கற்பழிப்பதும், தவறு' என்பதற்குப் பதிலாக, "யுத்த தர்மம்' என்றே இது போற்றப்பட்டு வந்துள்ளது. குஜராத்தில் நடந்தது யுத்தமா?

"எதிரிகள் மனிதர்களேயல்ல' என்ற மூர்க்க சித்தாந்தம்தான் ஒரு படையைத் தூண்டிவிட முடியும். குஜராத்தில் சேர்ந்தது ஒரு பரிதாபகரமான படை. இதுநாள்வரை, ஒதுக்கித் தாழ்த்தி வைக்கப்பட்ட ஒரு கூட்டம், சண்டைபோட மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. "தாங்கள் தாழ்வாகக் கருதப்பட்டவர்கள்', என்பதை மறந்து, "தம்மிலும் தாழ்ந்தவனாக ஒரு எதிரியை அவர்கள் பார்த்தார்கள். இந்தப் போலி தர்மத்திற்கான யுத்த நேரத்தில் "ஆதிக்கம் செலுத்தியவன் தன் தோளோடு தோள் நிற்கிறானே' என்ற பொய்யான மகிழ்ச்சி, கூட்ட மனப்பான்மையில் "கொலைவெறி'யாகவும் மாறிவிட்டது. போர்ப்படை என்பதும் ஒரு கூட்டம்தான்.

எல்லாக் கூட்டங்களிலும், எப்போதுமே ஒரு தலைவன் உண்டு. அவனது ஆணைப்படியே அந்தந்த கூட்டம் இயங்கும். யதேச்சையாகத் திரளும் கூட்டங்களைத் தவிர, ஒரு இயக்கமாக, கட்சியாக, மதமாக அமையும் கூட்டங்கள், தலைவனை நேரில் பார்க்காத போதும் ஆணைகளைப் பின்பற்றும். இவ்வகைக் கூட்டங்களுக்கு "தலைவன் சொல்வதே சரி, அவன் ஆணைப்படி நடப்பதே சரி' எனும் ஒரு மூர்க்கப் பின்பற்றுதல் சிந்தனை அமையும். இவ்வகைத் தலைவன், எதிரியை அடையாளம் காட்டித் தன் கூட்டத்தையே போரிட வைக்க முடியும்.

தான் அடையப் போகும் பெரிய லாபத்திற்காக, இந்தக் கூட்டத்திலுள்ள வேலைக்காரர்கள் அடையும் அற்ப சந்தோஷங்களை அவன் கண்டு கொள்ள மாட்டான். சில எலும்புத் துண்டுகளை, அவனது வெறிநாய்கள் தாங்களாகவே பொறுக்கிக் கொள்வதும், அவனுக்கு வசதியாகவே அமையும். போர் முடிந்து, வெற்றி கிடைத்த பிறகுதான் "கூட்டத்துக்குத் தலைவன்' கொஞ்சம் தெரிவான். ஒன்றாக வெறியாடி, அவனுக்கு வெற்றி தேடித் தந்தவர்களில் சிலரே உயர்வார்கள். தற்காலிகக் கூலியாக மட்டுமே மற்றவர்கள் ஒதுக்கப்படுவார்கள். சாணக்கிய ரீதியில், இது "ராஜநீதி' என்றும் கூட ஏற்கப்படும்.

இவ்வளவு யுத்த தந்திரங்களோடு செயல்பட்டு ஒடுக்குமளவு, குஜராத்தில் யார் எதிரி? அடிபட்டவன், என்ன தவறுகள் செய்தான்? இது பழிவாங்குதல் என்றால், பழிதான் என்ன? தொடர் தவறுகளின் ஆரம்பம் எது? மதவெறியே அடிப்படைக் காரணமென்றால், வெறியூட்டும் மதத்திலுள்ள தவறுகள் எவை? நேற்றுவரை தெருவில் சந்திக்கும்போது சிரித்துப் பழகிய பெண்ணை, இன்று துரத்திக் கற்பழிப்பதும், கொல்வதும் சாத்தியம் என்றால் அவ்வெறியை ஊட்டியது யார்? ஊக்குவிப்பது யார்?

தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும், இது குறித்து மேலோட்டமாகத் தெரிந்து கொண்டு, கொஞ்சமாக முகம் சுளித்து, மிகக் குறைந்த அளவில் வருத்தப்படும் நடுத்தர வர்க்கத்திற்கும், இதிலுள்ள வக்கிரமும் உக்கிரமும் புரியவே செய்கிறது. வழக்கமான கோழைத்தனம் வாயை மூடிவைத்தாலும், தேர்தலில் வரக்கூடிய தைரியம் என்ன ஆனது?

வெறிச் செயல்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதும், அச்செயல்களை ஊக்குவிப்பதேயாகும். நடுத்தர வர்க்கத்தின் இந்த மௌனமான மறைமுகமான ஊக்குவிப்பிற்குக் காரணம், சுயநலம் மிகுந்த அச்சம்; "ஜெயிக்கும் குதிரை மேலேயே பணம் கட்டலாமே' எனும் சூதாட்ட மனப்பான்மை; வெல்பவன் பலசாலி – அவனை எதிர்ப்பதை விட கூட்டு சேர்ந்து கொள்ளலாமே, என்ற கோழைத்தனமான "குயுக்தி'. இந்த நடுத்தர வர்க்கமும் ஒரு கூட்டம்தான்.

மூர்க்க வெறியோடும் மூட பக்தியோடும், ஒரு தவறான தலைவனைப் பின்பற்றும் கூட்டம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறியாட்டம் போடும். வேடிக்கை பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் மௌனமே, இந்தக் கூட்டத்தை இன்னும் உரக்கச் சப்தமிட வைக்கும். "தன்னலக் குறிக்கோள்' மட்டுமே கொண்ட தலைவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தக் கூட்டம், "வெறியாடும் வாய்ப்பி'லேயே விடுதலையின் திருப்தியை அடையும். ஒரு முறை ருசித்த பிறகு, அடுத்த வெறியாட்ட வாய்ப்புக்குக் காத்திருக்கும். இந்தக் கூட்டத்தை, ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம், வெறியலையில் ஒருநாள் சுலபமாக உள்ளிழுக்கப்பட்டுவிடும்.

தனி மனிதனுக்கு "தன் வீடு, தன் இடம்' எனும் பாதுகாப்பான எல்லைகள் தேவைப்படுகின்றன. வெளியே ஒரு கூட்டத்துக்குள் நுழையும்போது, அவனுக்குத் "தன் இடம்' என்பதில்லாததால், ஒரு பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு பயமாகவும் மாறுகிறது. இந்தப் பாதுகாப்பின்மையின் பயத்தை, அவன் கூட்டத்தின் எண்ணிக்கையில் சரி செய்ய முயலுகிறான். தன்னைப் போலவே, பல தனிமனிதர்கள் இருக்கும் கூட்டத்தாலேயே தைரியம் பெறுகிறான். கூட்டத்தின் அளவு அதிகரிக்கும்போது தனது தனித்தன்மையை மீறி, கூட்டத்தின் ஒட்டுமொத்தத் தன்மையில் கலக்கிறான். பெரும்பான்மை மக்கள் கூட்டத்தில் செம்மறியாடுகள் போலிருந்தாலும், அதில் ஒரு கும்பல் தலைவனின் கூலிப்பட்டாளமாகச் செயல்படும்.

இந்தக் கும்பல்தான் கொள்ளையடித்து, "யுத்தம்' எனக் கூறி மற்றவர்களை இழுத்தும் செல்லும். எதிரியைத் தலைவனும், அவனுடைய கும்பலும் அடையாளம் காட்டும்போதே, கூட்டத்தில் "கொல்லப்படுமுன் கொல்' எனும் ஆதி மனிதத் தற்காப்பு எண்ணம் ஊட்டப்படும். குஜராத்தில் எதிரிகளாகக் கூறப்பட்டவர்கள் கொல்ல வரவில்லை, பயந்தே ஓடினார்கள். கும்பலோடு கூட்டம் அவர்களை வேட்டையாடியது. சாதாரணக் கோழைகளுக்கு, "கூட்டம்' ஊக்க மருந்தாக மட்டுமல்ல, பாதுகாப்புக் கவசமாகவும் மாறுகிறது.

கோழைகள் பயந்தவர்கள். "தண்டனையைத் தவிர்ப்பதே!' அவர்களது அடிப்படை நோக்கம். ஆனால், கோழைகளுக்கு ஆசைகள் அதிகம். தண்டிக்கப்படாத வரை, எப்படியாவது ஆசைகளை அடையத் துடிப்பதே, அவர்களது சிந்தனைக்கோணம். நெறிகளின் பால், சமூகத்தின் மேல் அக்கறை என்பதை விடவும், சமூகத்தின் அனுமதியே அவர்களுக்கு முக்கியம்.

குஜராத்தில் அவர்களுக்கு சமூக அனுமதி, அரசியல் சலுகை, ஆசைகளுக்குத் தீனி, வெறிக்கு வடிகால், குற்றங்களுக்கு நியாயம் எல்லாமே கிடைக்கும் என்று தெரிந்த உடன், கோழைகளின் கூட்டம் "வீரர்களின் சேனை'யாகத் தன்னை நினைத்துக் கொண்டது. வெறியாட்டத்தைப் "போர்' என்றும், அரசு பலத்தை "வீரமெ'ன்றும் கருதியவர்கள், பெருமையோடு இன்றும் திரிவது, அந்தச் சமூகம் தந்த அனுமதியோடுதான்.

அறிவும், பண்பும் இல்லாதது வீரமே அல்ல. மௌன கோழைத்தனம், இந்தப் போலி வீரத்தை மீண்டும் தூண்டும். முட்டாள்களும், கோழைகளும் இருக்கும் வரை, ஆதிக்க வெறியும், ஆணவமும் மிகுந்த அயோக்கியன் தலைவனாகவே தொடர்வான். வெறியூட்டினால், தனக்கே இறுதி வெற்றி, என்ற இறுமாப்பில், அவன் மேலும் பல திசைகளில், தன் பார்வையைத் திருப்புவான்.

போதையால் ஊட்டப்படும் வெறி, வெட்கப்படக்கூடிய அறிவை மழுங்கடிக்கும். சுயநலக் கோழைகள் மிகுந்த சமுதாயமும், அதைச் சுலபமாய் ஆட்டி வைக்கும் மோசடித் தலைமையும் "தொற்று நோய்' போல நாடு முழுவதும் பரவும். அந்த ஆதாரக் கிருமியை அழித்தால்தான் வருங்காலத்திற்குப் பாதுகாப்பு –இது அவசியமானது மட்டுமல்ல, அவசரமாகவும் செய்ய வேண்டிய காரியம்.

· ருத்ரன்,

மனநல மருத்துவர்.

நன்றி : தமிழரங்கம்