வழக்கறிஞர் மைதீன் (எ) ராஜா
இன்று மாலை எனது தோழனும் இராமநாதபுரத்தில் பிரபல வழக்கறிஞருமான மைதீன் (எ) ராஜா (வழக்கறிஞர் சம்சுதீன் மைத்துனர்) அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் ஆற்றங்கலர சென்றிருந்தபோது ஹார்ட் அட்டாக்கால் உயிரிழந்துள்ளார்கள். எனது தோழனுக்காகவும் அவனது குடும்பத்தினருக்காகவும் பிறார்த்திக்கவும். யாரிடமும் எதையும் எதிர்பாராத வாழ்க்கை வாழந்தவன்....இறுதியாக தனது மைத்துனருடன் ஏற்ப்பட்ட மனக்கசப்பில் அலுவலகத்தை விட்டு வெளியேறி தனியாக வழக்குகளை பார்த்தபோது கூட அதைப்பற்றி யாரிடமும் வெளியே கூறாதவன்...மனதிற்குள் சோகங்களை புதைத்தவன்...ஏழைகளின் நன்பன்...இல்லாதவர்களுக்காக இலவசமாகவே வழக்காடுபவன்....ண்மையின் பக்கம் துனை நின்றவன்...சத்தியம் சாகாது காத்தவன்......தனது பணிகளை பாதியில் விட்டு சென்றுவிட்டான்...எங்களை மீழாத்துயரில் ஆழ்த்திவிட்டான்....இலங்கைத்தமிழர் நலனுக்காகவும்....அனு உலைக்கெதிரான போராட்டங்களிலும் வழக்கறிஞர்களுடன் முன்னணியில் நின்று போராடியவன்......இறுதியாக 19.03.2013 அன்று இலங்கை அரசை போர்க்குற்றாளியாக அறிவிக்க வலியுருத்தி இராமநாதபுரம் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக மாபெரும் தொடர் உண்ணாவிரத நடந்தபோது எங்களையெல்லாம் அழைத்து அதில் கலந்து கொள்ள செய்தவன். அப்போது எடுத்த புகைப்படத்தில் நான், வழக்கறிஞர்கள் மைதீன், காலித், மைதீன் ஜீனியர் டேவிட் , பிரபாகர் ஆகியோர் உள்ளோம்.
இறுதியாக 24 மணி நேரத்திற்கு முன்னர்தான் நாங்கள் ஒன்றாக அமர்ந்து எஸ்.ஏ லாட்ஜில் கேரம் விளையாடினோம் நாங்கள் இருவரும் ஒரு டீமாக இருந்து 3 முறை தொடர் தோல்விகளை சந்தித்தபோது கூட மைதீன் என்னிடம்...மாப்புள...வெளயாடுடா....வெற்றியும் தோல்வியும் வீரனுக்கழகு....தோல்விதான் வெற்றிக்கு முதல்படி....அடிடா மூதேவி ....என்று உரிமையுடன் சிரித்து கொண்டே சொன்னான்....24 மணி நேரத்திற்குள் எனது தோழனின் இதயம் தனது துடிப்பை நிறுத்தும் என எதிர் பார்த்திரவில்லை....சென்று வா தோழா.....வெற்றியும் தோல்வியும் வீரனுக்கழகுதான்.....நீ வீரன்தான்.....சாதனை பல புறிந்தாய்...வெற்றியாளனாகவே மரணித்துள்ளாய்...உனக்காக உறுதியாய் பிறார்த்திக்கும் உள்ளங்களையே நீ இந்த உலகில் விட்டுச்செல்கிறாய்....சென்று வா தோழா...சென்று வா....!!
https://www.facebook.com/raisudeen/posts/10152212813873154
No comments:
Post a Comment