Wednesday, May 05, 2010

த.மு.மு.க வினர் 6 பேர் பலி (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஊன்)


கரூர் : கரூர் அருகே, கார் மீது லாரி மோதியதில், காரில் பயணம் செய்த மனிதநேய மக்கள் கட்சி பிரமுகர் உட்பட, ஆறு பேர் உடல் நசுங்கி பலியாகினர். நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (38). மனிதநேய மக்கள் கட்சி நீலகிரி மாவட்ட செயலர். இவருடன், ஊட்டி நகர செயலர் சையது சாதிக் (37), நிர்வாகிகள் அப்துல் கனி (42), யாசான் (22), மஸ்தீன் (32), சபியுல்லா (32) ஆகியோர், நேற்று முன்தினம், ஹூண்டாய் சான்ட்ரோ காரில், ஊட்டியிலிருந்து திருச்சி சென்றனர். பின், மீண்டும் ஊர் திரும்பும்போது, நேற்று காலை 10.30 மணியளவில், மயிலம்பட்டியிலிருந்து பாளையம் செல்லும் சாலையில், சரசம்பட்டி என்ற இடத்தில் வந்த போது, பாளையத்திலிருந்து அரியலூருக்கு ஜல்லிச் ஏற்றி சென்ற, டாரஸ் லாரி நேருக்கு நேராக மோதியது. இதில், பல அடிதூரம் இழுத்து செல்லப்பட்ட கார், அப்பளம் போல் நொறுங்கியதுடன், சாலையோர பள்ளத்தில் தள்ளப்பட்டது. நிலைதடுமாறிய லாரியும் கவிழ்ந்தது. லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். போலீசார் மற்றும் முசிறி தீயணைப்பு படையினர், காருக்குள் இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்களை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
நன்றி : தினமலர்

1 comment:

vengai ibrahim said...

இன்னாயிலாஹா வயின்னாயிலைஹி ராஜுவூன்... கடமை வீரர்களே நாங்கள் கலங்கமாட்டோம்... சமுதாயவீதிகளில் சக்ரமாய் சுழன்ற நீங்கள் எதிர்பாரா தருணத்தில் இறையழைப்பை ஏற்றீரொ... கொடுங்சிறையில் வாடிவரும் கொள்கை சகோதரனைமீட்க தலைநகரை கையகபடுத்தி தொண்டைகுழியின் அடிதொட்டு தொடர்முழக்கம் செய்திட்ட வேளையில் எம்மை "ஷஹாதத்" கூறவைத்தது கொடுமைதான்... இருந்தாளும் கடமை வீரர்களே நாங்கள் கலங்கமாட்டோம்... மறுமையின் வெற்றிவாழ்விற்க்கு இம்மைவாழ்க்கையை இலப்பமாய் நினைப்பவர்கள் நாம்... இன்று நீங்கள் இன்ஷாஅல்லாஹ் அடுத்தது நாங்கள்... போய் வாருங்கள் எங்கள் போராளிகளே... நீங்கள் வாழும்போது கண்ட சமுதாய கனவுகள் வெற்றியின் விடியல்கள் நனவாக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்... இறைவன் நாடினால் வெற்றியோடு உங்களை மறுமையில் சந்திப்போம்... கடமைவீரர்களை நிச்சயமாக நாங்கள் கலங்கவேமாட்டோம் காரணம் நீங்கள் விட்டு சென்ற கடமைகள் எங்களுக்கு காத்திருப்பதால்... உங்கள் மறுமையின் வெற்றிகாக பிராத்திக்கும் சமுதாய சகோதரன் வேங்கைஇப்றாகிம்