நம்முடைய நெருங்கிய நண்பரும், சவுதி தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான ஜனாப். அப்துல் மாலிக் அவர்கள், இன்று மதியம் 4: 45 மனி அளவில், ஜெத்தாவில், மாரடைப்பினால் மரணமடந்த செய்தியினை, ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம். (إنا لله وإنا إليه راجعون ) .
அவருடைய குடும்பத்தினர் அனைவரும் அவருடன் ஜெத்தாவில் வசித்து வருகின்றனர்.
அன்னாருடைய மறைவினைத் தாங்கும் மன உறுதியினை அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நல்கிட, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
அவருடைய பிழைகளை மன்னித்து அவருக்கு சொர்க்கத்தில் உயர்ந்த பதவிகளை அருளிட எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போமாக!
ஆழ்ந்த வருத்தத்துடன்,
அப்பாஸ் ஷாஜஹான்
செயளர்
ரியாத் தமிழ்ச் சங்கம்
செயளர்
ரியாத் தமிழ்ச் சங்கம்
4 comments:
"தமிழ்" சங்கம் என்று பெயர் வைத்துக்கொண்டு .... ஐயோ! ஏன் அய்யா தமிழை தப்பு தப்பாக எழுதி தமிழை, தமிழ் சங்கத்தை கேவலப் படுத்துகிறீர்? (தமிழ் படித்த யாருமே இல்லையா .... இந்த "செயல(ள)ர்?" பதவிக்கு!)
ஜனாப். அப்துல் மாலிக் அவர்களின் மரண செய்தி மிகவும் வேதனைக்குரியது. 1970 களின் பிற்பகுதியில் அன்னாரும், நானும் திருச்சி - ஜமாலில் பயின்றதை நினைவு (அன்னார்- முதுகலை; நான் - இளங்கலை) கூறுகிறேன். வயது வித்தியாசம் பாராமல் பழகும் தன்மை உடையவர் என்பதோடு, அக்கால கட்டங்களிலேயே சமூக ஆர்வலரும் கூட. வல்ல அல்லாஹ் அவர்தம் பிழை பொறுத்து நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்பிக்க துஆசெய்வோமாக!
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது.
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி! வஸ்ஸலாம்!!
மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத பாகவீ M.A.,
பொதுச் செயலாளர்,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.
www.k-tic.com / (+965) 97 87 24 82 / q8tic@yahoo.com
எனக்கு உங்கள் தொடர்பு முகவரி வேண்டும் 0542040277 இது என்னுடைய கைபேசி எண்
Post a Comment