Wednesday, October 07, 2009

லஷ்கரே தொய்யிபா, பரலேவிகளின் ஏஜென்ட் - பி.ஜே குற்றச்சாட்டுக்களுக்கு பதில்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்
ஒளியில் எஸ். பி. பட்டிணம் பள்ளி என்ற தலைப்பில் ஒரு நோட்டீஸ் வெளியிட்டிருந்தோம். அதில் எஸ்.பி. பட்டிணம் முஸ்லிம் ஜமாத்தினரும் ததஜக்காரர்களும் மோதிக்கொண்டதால் பூட்டப்பட்டிருக்கும் பள்ளிவாசல் பற்றியும் வேறு பல உண்மைகள் பற்றியும் எழுதியிருந்தோம்.

அல்லாஹ்வின் உதவியால் அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அதைப்படித்து மக்கள் உண்மை நிலை அறந்து கொண்டார்கள். குறிப்பாக ததஜ சகோதரர்கள் சிலர் கூட தங்கள் தரப்பில் பல தவறுகள் உள்ளதை தாங்களாகவே மன வேதனையோடு தெறிவத்தனர்.

உண்மையும் நியாயமும் மக்களுக்கு வெளிப்படுவது கண்டு ஆத்திரமுற்ற பீ. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் தனது அதிகாரபூர்வ இணைய தளத்தில் நமது நோடடீஸ்ஸூக்கு பதில் அளிப்பதாக கூறிக்கொண்டு பல தவறான விசயங்களை எழுதியிருக்கிறார்கள். அதில் தனக்கே உரிய கேவலமானா இழிந்த கீழ்த்தரமான பொய்யான வாசகங்களால் நம்மை தாக்கி எழுதியிருக்கிறார்கள்.

அவர் நம்மைப்பற்றி எழுதியுள்ள மட்டரகமான தவரான வார்த்தைகளயில் சில:

மூலை குழம்பியவன்,, மவ்லுதும் கந்தூரியும் நடத்த வக்காலத்து வாங்குபவன், பரேலவிகளின் ஏஜண்ட், அறிவீனன் இன்னும் பல இது மட்டுமின்றி நமது நேட்டீஸை வெளியிட்ட சில இணைய தளங்களையும் வாந்தி எடுத்துள்ளார்கள்,வாந்தி எடுத்ததை சாப்பிடட்டும் பரேலவிகளின் ஏஜெண்டுகள் என்று தனக்கே உரிய கேவலமான நடையில் அநியாயமாக தாக்கியுள்ளார்.

அவர் நம்மைப் பற்றி எழுதியுள்ள வாசகங்கள் தவறானவை அதே நேரத்தில் அவர் இவற்றை விட மோசமான விமர்சனங்களுக்கும் அடைமொழிகளுக்கும் மிகத் தகுதியானவர். இதை அவரது நடவடிக்கைகளை சரியாக கவனித்துவரும் எல்லா 'மனிதர்களும்' அறிவார்கள்.
ஆனாலும் அவற்றை இங்கு எழுதி நீட்ட விரும்பவில்லை நமது நோட்டீஸூக்கு விளக்கம் அளிப்பதாக கூறிக்கொண்டு அவர் எழுதியிருக்கும் தவறான விசயங்களுக்கு மட்டும் பதிலளிக்கிறோம்.

பள்ளிவாசல்களில் அடாவடி : நமது நோட்டீஸ்ஸில் ஜாக்; இயக்கத்திடமிருந்து பலவந்தத்தின் மூலம் பிடித்து வைத்துள்ள மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் மற்றும் சில பள்ளி வாசல்களை துதுஜ காரர்கள் திரும்ப ஒப்படைத்து விடவேண்டும். என்ற நியாயத்தை எடுத்து வைத்திருந்தோம் இதற்கு பதிலளிக்க வந்த பீ.ஜைனுலாப்தீன்இ

நிலம் வாங்குவதற்காகவும் கட்டடம் கட்டுவதற்காகவும் உடலாலும் பொருளாலும்; உழைத்தவர்கள் தவ்ஹீத் சகோதரர்கள் என்று பதில் 'அழித்துள்ளார்கள்;' இது என்ன பதில் ?


நாம் என்ன இந்த பள்ளி வாசல்களுக்கு தொடர்பில்லாத சிர்க்; சகோதரர்களிடமா ஒப்படைக்கச் சொல்கிறோம்? ஜாக்; சகோதரர்கள் தவ்ஹீத் இல்லை . என் கும்பலில் இருப்பவர்கள் மட்டும் தான் தவ்ஹீத் வாதிகள் என்று கூறுகிற பித்தலாட்டத்தை கவனியுங்கள் .

ஜாக்; இயக்கத்தால் வாங்கப்பட்டு அந்த இயக்கத்தால் கட்டப்பட்ட பள்ளிவாசலுக்கு உதவி ஒத்தாசை செய்தால் எங்களுக்கும் உரிமை உண்டு என்று சொன்னால் கொஞ்சம் நியாயம் இருக்கும்.

ஆனால் இவர்கள் செய்தது என்ன ? மேலப்பாலயம் பள்ளிவாசலுக்கா சர்ச்சை ஏற்பட்ட போது ஜாக்; அந்த பள்ளிக்கு உரிமை கொண்டாடியதை விமர்சித்து ஜாக்;கிர்க்கு எந்த உரிமையும் இல்லை என்று தங்களின் உணர்வு வார இதழில் (ஜீலை28ஃ 2006 பக்கம்5) பகிரங்கமாக எழுதினார்கள். அதற்கு அல் ஜன்னத் மாத இதழில்இ 'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' என்று தலைப்பிட்டு (செப்டம்பர் 2006 பக்கம் 47) மறுப்பு எழுதியிருந்தார்கள் .

தனக்கு தானே முரண்படுதல் :
சரி தாங்கள் பல கட்சிகள் மாறிக் கொண்டிருந்தாலும் பள்ளிவாசல் பதிவு செய்யப்பட்டுள்ள ஜாக்; இயக்கத்தை விட எங்களுக்குத் தான் அதிக உரிமை இருக்கிறது. என்று இவர்கள் இப்போது கூறுவது இவர்களுக்கே உடண்பாடானது தானா என்றால் இல்லை! என்பதே பதிலாகும். இவர் இப்போது நம்மை எதிர்ப்பதற்காக இப்படி எழுதியிருக்கிறாரே தவிர இவர் கருத்துப் படியே இவருடைய இந்த வாதம் தவறாகும்.

எதை வைத்து சொல்கிறோம் என்றால் ததஜ யிலிருந்து இந்திய தவ்ஹீத் ஜமாத் உருவானபோதுஇ ததஜ பொதுச் செயலாளர் ஒரு அறிவிப்பு செய்திருந்தார். அதில் இனிஇ ததஜ க்காரர்கள் பள்ளிவாசலுக்கு இடம் வாங்கினால் அதை ததஜ பெயரிலேயே பதிவு செய்ய வேண்டும் என்று தன் இயக்கத்தினருக்கு கூறியிருந்தார்.

இப்படி இவர்கள் அறிவிப்புச் செய்யக் காரணம் ததஜ யிலிருந்து ஐஎன்டிஜே என்றோ வேறு பெயரிலோ நூறு இயக்கங்களாக உடைந்து பிரிந்து கொண்டிருந்தாலும் முறைப்படி பதிவு செய்த ததஜ நிர்வாகத்திலேயே அந்த பள்ளிகள் இருந்து கொண்டிருக்கும் என்பது தான் இவர்கள் நிலைபாடு இப்படியிருக்க இப்போது ஜாக்; பள்ளிகள் விசயத்தில் மாற்றிப் பேசுவதற்குக் காரணம்இ நமக்கு எதையாவது பதிலாக சொல்லி விட்டு தங்களின் இயக்கத்தினரிடம் தமது இமேஜை தக்க வைத்துக் கொள்வதுதான்.

நம்மைப் பார்த்து மூளைக் குழம்பியவன் என்று வேறு வர்ணித்துள்ளார். இதற்கு பதிலாக அவரை மூளை குழம்பியவர் என்று நாம் கூற மாட்டோம். அவர் இப்படியெல்லாம் எழுதுவதைப் படித்துவிட்டு அண்ணன் சாட்டையடி பதில் கொடுத்து விட்டார் என்று குதூகலிக்கும் சகோதரர்களை மூளையற்றவர்களென நம்புவதாலேயே இவ்வாறு எழுதிக் கொண்டிருக்கிறார். அந்த சகோதரர் எச்சரிக்கையாக இருக்கட்டும்.


மேற்கண்ட ஜாக்; பள்ளிகளில் சகோரர் பீ, ஜையினுலாப்தீனீன் வழிகாட்டல் படி நடந்த சண்டை சச்சரவுகள் ஆதிக்க வெறியினால் நடந்த அலிச்சாட்டியங்களா? அல்லது நியாயத்தின் அடிப்டையிலா? என்பதற்கு ததஜக்காரர்களின் செயல்பாட்டையே ஆதராமாகத் தருகிறோம். நியாய உணர்வுள்ளவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

தவ்ஹீத் இமாமுக்கு பின்னாலும் தொழுவதில்லை.
கடையநல்லுர் ஜாக்; பள்ளியில் சண்டை ஏற்பட்ட பின் அங்கிருந்த இமாமைப் பின்பற்றி தொழுவதை புறகணித்தார்கள். எந்த அளவிற்கென்றால், இகாமத் சொல்லப்பட்டு தொழுகை ஆரபிக்கப்படும். அப்போது அங்கிருக்கும் ததஜ காரர்கள் வேண்டுமென்றே சும்மா உட்கார்ந்து கொண்டும் நின்று கொண்டும் இருப்பார்கள். அந்த தொழுகை முடிந்ததும் தாங்கள் தனியாக ஜமாஅத் நடத்துவார்கள். இது தவ்ஹீத் மக்களுக்கு மத்தியிலேNயு கொடிய பிரிவினையை உண்டாக்குகிற தவறான போக்கல்லவா?

அங்கு என்ன பிரச்சனை? ஜாக்; நிர்வாகம் செய்து கொண்டிருக்கும் அந்தப்பள்ளியை நிர்வாகம் செய்ய நாங்களே அதிக தகுதியானவர்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அதனால் ஏற்பட்ட சச்சரவு நீதீமன்றம் சென்று நீங்களும் வக்கீல் வைத்து வாதாடுகிறீர்கள். அப்படியிருக்கையில் பழைய நிர்வாகத்தின் இமாமைப் பற்றி தொழுவதில் என்ன தடை ?

ஒரே ஒரு தடைதான் - அது தான் 'நாங்கள் நிர்வகிப்போம் என்று சொன்னபின் எங்களுக்கு தராவிட்டால் தவ்ஹீத் பள்ளியிலும் தொழுகை ஜமாஅத்தைக் கூட உடைப்போம். என்ற ஆணவம்' பாபரி மஸ்ஜிதை இடித்தவர்கள் போல்' அடுத்து 'பல வருடங்களாக அதன் அனைத்துச் செலவுகளையும் செய்தவர்கள் இதே சகோதரர்கள் தான்' என்கிறார்.

அதாவது , மேலாப்பளையம் மற்றும் திருச்சி சிங்காரத்தோப்பு பள்ளிவாசல்களுக் கெல்லாம் ததஜ காரர்கள் தான் செலவு செய்து கொண்டிருப்பதாக கூறுகிறார். இது எப்படியிருக்கிறதென்றால் , பாபரி மஸ்ஜிதை இடித்தக்கயவர்கள் பலகாலம் தொழுகை நடக்காமல் பூட்டியிருந்த பள்ளிவாசாலைத்தான் நாங்கள் இடித்தோம் என்று சொன்னதுபோல் இருக்கிறது.

பலவந்தமாக பள்ளியைப் பிடித்து வைத்துக் கொண்டு நாங்கள் தான் பள்ளிக்கு செலவழிக்கிறோம் என்று சொல்வதை உங்களால் ஆடு மாடுகளாக மதிக்கப்பட்டவர்களும் ஏற்கமாட்டார்கள்.

எடிட் செய்யாதீர்

அடுத்து , வக்ஃப் செய்த ஒரு காரணத்ததினாலேயே அது ஊர் முஸ்லிம் ஜமா அத் நிர்வாகத்திற்கு சொந்த மானது என்று நாம் எழுதியுள்ளதாக கதைத்திருக்கிறார்.

நாம் அதை மட்டும் காரணமாக சொல்லவில்லை மேம்புல் மேய்ந்து விட்டு கைக்கு வந்தபடி எழுதாதீர்கள். பள்ளி நிர்வாகத்தை ஜமா அத்திடம் ஒப்படைத்ததையும் சமீபத்தில் சச்சரவு ஏற்பட்ட போது இந்த வருடம் (2009) ஜனவரி மாதத்தில் , தான் பொருளாதாரம் கொடுத்தாலும் நிர்வாகத்திற்கு ஜமாஅத் பொறுப்பு என்று சயீது ஹாஜியார் அவர்களே எழுதிக் கொடுத்ததையும் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். நோட்டீஸைப் படிகாத மக்களிடம் தவறான செய்தியை கொண்டு போகும் விதத்தில், நோட்டீஸ் செய்தியை எடிட் செய்யாதீர்கள் - விவாத சிடிக்களை எடிட் செய்தது போல்!.

பள்ளிவாசல் திறக்க்கப்பட்டதிலிருந்து பல்லாண்டுகாலமாக ஜமா அத்திடம் பொருளாதாரம் கொடுக்கப்பட்டு ஜமாஅத்தின்; மூலமே இமாம், முஅத்ததின் சம்பளம் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்தப் பள்ளிவாசலுக்காக அரசாங்கத்தை தொடர்பு கொள்ள எழுதப்பட்ட கடிதங்கள் ஜமா அத் லட்டர் பேடில் எழுதி அனுப்பபட்டுள்ளது. இமாமையும் முஅத்தினையும் சேர்ப்பதும், நீக்குவதும் ஜமா அத்தின் அதிகாரத்தில் இருந்து வந்தது.

இதுவெல்லாம் சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகத்திடம் ஒப்படைக்கபட்டிருந்தது என்பதற்கு ஆதாரங்கள் , மேலே குறிபிட்ட சயீத் ஹாஜியார் கையொப்பமிட்டு ஜமாஅத்துக்கு கொடுத்த கடிதமும் முக்கிய ஆதாராகும்.

இந்தப் பள்ளிவாசலோடு அந்த ஊர் முஸ்லிம் ஜமாத்தினருக்கு எந்த தொடர்புமே இல்லை என்பதுபோல் எழுதியிருக்கிறார் அது தவறு பதினான்கு வருடங்களுக்கு முன் சயீது ஹாஜியார் அவர்கள் ஊர் பெரிய பள்ளியை இடித்து புதிதாக கட்ட நான் உதவி செய்கிறேன். என்ற போது , நம் ஊரில் மெயின் ரோட்டில் முக்கியமாக பள்ளிவாசல் தேவை என்று எடுத்துச் சொல்லி இந்த பள்ளிவாசலை கட்டச் செய்ததும் , அதற்காக உடல் உழைப்பையும் நேரத்தையும் தங்கள் ஊர் பள்ளி என்பதற்காக செலவிட்டதும் ஜமா அத்தினர் தான்

சிர்க்; ஏஜெண்ட்

அடுத்து, எஸ்.பி. பட்டிணம் முஸ்லிம் ஜமா அத்துக்கும் ததஜ வுக்கும் ஏற்பட்ட மோதல் குறித்து மூன்றாவது நபராகிய நாம் சில உண்மைகளையும் , நியாயங்களையும் ஆலோசனைகளையும் எடுத்து வைத்ததற்காக நம்மீது பரேலவிகளின் ஏஜெண்ட் என்றும் கப்ரு வணங்கிகளின் ஏஜெண்ட் என்றும் பழி சுமத்தியிருக்கிறார் இந்த பீ. ஜைனுலாப்தீன்.

நம்முடைய நோட்டீஸில் சம்பந்தப்பட்ட பள்ளியின் உரிமையாளருக்கு நாம் கூறியுள்ள கருத்துக்களை படித்த , நம்மைப்பற்றி அறியாத மக்கள் கூட நாம் முஸ்லிம்களிடம் இருக்கும் சிர்க்;, பித்அத்களை எதிர்க்ககூடியவர் என்பதை அறிந்து கொண்டணர். அப்படி இருந்தும் இந்த மேதாவி திசைதிருப்புகிறார். என்றால் இவரைப் பற்றி மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.


இங்கே முக்கியமாக ஒன்றை குறிபிட்டாக வேண்டும். மிகக் குறைந்த அளவு மக்கள் மட்டுமே படிக்கும் வெப்சைட்டில் பெரும்பான்மை முஸ்லிம்களை 'கப்ரு வணங்கிகள்' என்றும் 'பரேலவிகள்' என்றும் சாடி எழுதும் இவர் மேடைகளிலும் டீவியிலும் அதே மக்கள் பற்றி 'சுன்னத்வல் ஜமாஅத்' என்கிற நல்ல பெயரை பயன் படுத்துகிறார்! இதற்கு என்ன காரணம்?

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியிடம் 'ஐம்பது லட்ச ரூபாய்' வாங்கிக்கொண்டு அதே பெரும்பான்மை முஸ்லிம் மக்களிடம் சென்று நீங்களும் எங்கள் மார்க்க சகோதரர்தான் என்று பிரச்சாரம் செய்து ஒட்டுப் பொறுக்கி அரசியல் நடத்துவதற்காகவா? இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன்.

இரண்டு தரப்பு மோதிக்கொண்டதில் மூன்றாவது நபராகிய நாம் சில நியாயங்களைச் சொல்வதால் பரேலவி ஏஜெண்டாகி விடுவோம் என்றால் எங்களுக்கு எதிர்கருத்துள்ள எந்த முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுக்க நாங்கள் வருவோம் என்று நீங்கள் மேடைகளில் முழங்கியிருக்கிறீர்களே! அப்படியானால் பரேலவிகளுக்காகவும் குரல் கொடுப்போம் என்று சொன்ன நீங்கள் ஒரு பரேலவி என்று சொல்ல வேண்டும்.

சில தினங்களுக்கு முன் நம்மை கடந்து சென்ற ரமளானில் தொண்டி மேலப்பள்ளிவாசலுக்கு நீங்கள் நோன்பு கஞ்சிக்கு பணம் கொடுத்து உங்கள் பெயரும் (11.9.2009 அன்று) போர்டில் எழுதப்பட்டிருந்தது அந்தப் பள்ளிவாசல் சிர்க்; நடைபெறும் பள்ளிவாசல் அதன் நிர்வாகம் சிர்க்;கை ஆதரிக்கக் கூடியது. ஆங்குள்ள இமாம் சிர்க்; செய்பவர் என்று காரணம் சொல்லித்தான் அந்தப் பள்ளிவாசலில் தொழக் கூடாது என்று அதற்கு சமீபத்தில் உங்கள் இயக்கத்தின் சார்பில் பள்ளிவாசல் கட்டும் வேலையை ஆரம்பித்திருக்கிறீர்கள் சிர்க்; நடைபெறும் பள்ளிவாசலுக்கு பண உதவி செய்து அங்கீகாரம் கொடுத்த நீங்கள் , உங்கள் கூற்றுபடி சிர்க்;கின் ஏஜெண்ட்டாக இருக்கிறீர்கள்.


வழிகேடர் வழிமுறை

சம்மந்தா சம்மந்தமில்லாமல் சவூதிக்கு அடிமைச் சேவகம் செய்வதாக நம் மீது பழி போடுகிறார்.. யாருக்கும் நாம் அடிமைச்சேவகம் செய்யவில்லை.அது நமக்கு ;தேவையுமில்லை.


பீ. ஜேய்னுல் ஆபிதீனின் இந்த பழிப் பேச்சுஅவர் வழிகேடர்களின் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் என்பதற்கு பெரிய அடையாளமாக உள்ளது. பொதுவாக சிர்க்; பித்அத்தை எதிர்ப்பவர்கள் மீது வழிகெட்டவர்கள்வு சுமத்தும் பழிதான் சவூ10தியிலிருந்து கிடைக்கும் உலக லாபத்துக்காக இந்தப் பிரச்சாரத்தை செய்கிறார்கள்என்பது இவரும் அதே பழியை நம்மீது சுமத்துகிறார்.


ஒரு பேச்சுக்கு நாம் சவூ10தியிலிருந்து கிடைக்கும் உலக லாபத்தைப் பெற்றுக்கொண்டுசெயல் படுவதாக வைத்துக்கொண்டாலும் அது குறையல்ல. ஏனென்றால் தெளிவான உறுதியான தவ்ஹீத் கொள்கை உள்ளவர்கள்தான் சவூதி உலமாக்கள். துற்போது நீங்கள் அவர்களை வெறுக்கிறீர்கள் என்றால் மாறியது அவர்கள் அல்ல நீங்கள்தான்.

குரூப்பும் கும்பலும் சேர்ப்பவர்;
எப்போதும் தனக்கென்று குரூப் சேர்த்தும் கும்பல் சேர்த்தும் இன்பமடையும் இவர் நம்மைப் பார்த்து முஜீப் குரூப் என்றும் கும்பல் என்றும் பரிகாசம் செய்கிறார். நாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர். அப்படி இருப்பதிலேயே பெருமிதம் கொள்கிறோம்.

தெளிவான ஆதாரம்

சகோதரர் பீ. ஜேய்னுல் ஆபிதீன் அவர்கள் தன் தவறான போக்கை நியாயப்படுத்திக் காட்டுவதற்க்காக பொய்களையும் புரட்டுகளையும் அள்ளி வீசுவார்கள்.பித்தலாட்டம் செய்வார்கள் என்பதற்கு அவர்கள் நமக்கு எழுதிய மறுப்பில் தேவையில்லாமல் நுழைத்த கீழ்கண்ட வாசகங்கள் தெளிவான ஆதாரமாக உள்ளன.

அவை , விவாதத்தில் தோற்று விவாத மேடையிலேயேகண்ணீர் விட்டு அழும் நிலை ஏற்பட்டதற்காக தவ்ஹீதையே எதிர்க்க முஜீப் துணிந்துவிட்டார்'

இரு நூறுக்கும் மேற்ப்டடோர் நேரடியாகப்பார்த்துக் கொண்டிருந்த, தொண்டி மக்கள் நேரடி ஒளிபரப்பில் டிவியல் கண்டுகொண்டிருந்த சிடிக்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு விசயத்திலேயே இவ்வளவு பொய் சொல்வார் என்றால் பொய்யர்களுக்கு முன் மாதிரியாக இன்னும் கோயபல்ஸ் என்பவனையே சொல்லிக்கொண்டிருப்பது தவறு, கோயபல்ஸ் இடத்தில் சகோதரர் பீ.ஜெய்னுல் ஆபிதீனை வைப்பதே சரி.

ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் உண்மை போல் காட்டிவிடலாம். ஏன்பது கோயபல்ஸின் வழி.

பொய்யை துணிச்சலாக ஒரே தடவை சொல்லி உண்மை போல் காட்டுவதுபீ.ஜெய்னுல் ஆபிதீனின் வழி. கோயபல்ஸையும் மிஞ்சிவிட்டார்.

முஜீபுர்ரஹ்மான் என்ன சொல்லும்போது கண் கலங்கினார்?


பீ. ஜெய்னுல் ஆபிதீன் தர்ஜமா மற்றும்விளக்கவுரை தவறுகள்பற்றிய விவாதத்தின் இறுதி உரையின் இறுதிப்பகுதிவரை தன் தரப்பு வாதத்தை, தெளிவாகவும் அழுத்தமாகவும் எடுத்து வைத்தார். கடைசியாக அவர் கூறியது:


அவர்கள் (பீ. ஜெய்னுல் ஆபிதீன்) உயிரோடு இருக்கையிலேயே இந்த தகவலை பதிய வைக்கக் கூடிய வாய்ப்பை அல்லாஹ் சுப்ஹானஹூவதாலா தந்திருக்கிறான். அதில் ஏதேனும் தவறிருந்தால் அவனது வேதத்திற்கு மாற்றமாக அவனது சுன்னாவிற்கு மாற்றமாக ஏதேனும் இந்த வாதத்திலே விவாதம் என்ற அடிப்படையிலே முன் வைத்திருந்தால் அந்த ரப்பு மன்னித்தருள வேண்டும்! இப்படி கடைசியாக அவர் கூறிய போது அவரது கண் கலங்கியது.


இதிலே தோற்று அழுதது எங்கே இருக்கிறது? சுத்தியத்திற்காக வாதாடி வெல்லக்கூடிய நல்ல மார்க்க அறிஞர்கள் சொல்லவேண்டிய வார்த்தையும் இதுதான்.. இதைச் சொல்லும்போது கண் கலங்குவது பழிப்பிற்குறிய செயல் அல்ல. ஏனென்றால்,

நற்செயலை சரியாகச் செய்யக்கூடிய நல்லடியார்கள்.அது அல்லாஹ்விடம் ஏற்கப்படுமோ ஏற்கப்படாதோ என்ற மன அச்சத்துடன் செய்வார்கள் என்று அல்லாஹ்(அல்குர்ஆன் 23;;:60) சொல்லிக்காட்டுகிறான்.

இவ்வளவு தெளிவான விசயத்தில் இப்படி பொய் சொல்பவர் மக்களுக்கு அவ்வளவாக தெரியாத விசயங்களில் எப்படி பொய்களை அவில்த்து விடுவார் என்பதை சிந்தித்து பார்த்துக்கொளளுஙகள்.

லஸ்கரே தொய்பா அச்சுறுத்தல்

அடுத்து, அஹ்லீஸ்ஸூன்னா இஸலாமிய ஆய்வு மையத்தின் சார்பில் நம் நோடடீஸ் வெளியிடப்படவில்லை. எழுதிய நாமே வெளியிட்டுள்ளோம்முகவரிக்காக ஆய்வுமையத்தின் அட்ரசைப் பயன் படுத்தினோம். இன்னெரு காரணமும் உண்டு.

அது என்னவெனில் , தொண்டியில் கடந்த 21.12.2008 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் அஹ்லீஸ்ஸீன்னா ஆய்வு மையம், லஷ்கரே தொய்பா என்ற பயங்கரவாத இயக்கத்தின் வேலைக்காக நடத்தப்படுகிறது என்று பேசி பீ. ஜெய்னுல் ஆபிதீன் நம்மீது அபாண்ட பழிபோட்டார்.

ஆனால் அந்த பொதுக்கூட்ட உரையை டிவியில் ஒளிபரப்பிய போதும் சிடியாக வெளியிட்ட போதும் ஆய்வு மையத்தiயும் முஜிபர்ரஹ்மான் உமரியையும் அவதூறு பேசியதை நீக்கியிருந்தார்.

அதன் பின் 7.3.2009 அன்று நடந்த ஒரு கூட்டததில் அவரது அவதூறு பேச்சுக்கு நாம்' மறுப்பளித்தோம். அவர் பொய்யர் என்று அந்தக் கூட்டத்தில் நிரூபித்தோம். இன்னும் நன்றாக அவரது பொய்யை நிரூபிக்க, அந்த சிடியை எடிட் செய்யாமல் எமக்கு அவரிடமிருந்து வாங்கிவாருங்கள் என்று ததஜ காரர்களுக்கும் பொது மக்களுக்கும் கூறினோம்.. பின்பு அவருக்கு நெருக்கமாவரிடம் பேசி, அந்த சிடியை வாங்கித்தருமாறு கேட்டோம்.இது காலம் வரை தரவேயில்லை. இவர் நம்மீது அபாண்ட பழிபோட்டு ஜெயிலில் தள்ள பயன்படுத்திய ஆய்வு மையத்தின் பெயரையும் முகவரியையும் நாம் எழுதி இவர் முகத்தில் கரி பூசியுள்ளளோம்..


ஆக இப்படி இல்லாத பொல்லாத செய்திகளை சாதாரணமாக எழுதவும் பேசவும் செய்யும் சகோதரர் பீ. ஜெய்னுல் ஆபிதீன் தான் நமது 'இஸ்லாமிய ஒளியில் எஸ்.பி..பட்டிணம் பள்ளி' என்ற நோடடீஸீக்கு விளக்கம் அளிப்பதாக சில எழுத்துக்களை எழுதியுள்ளார்கள், கவனமாக படியுங்கள் என்று சிந்தனா சக்தியுள்ள மக்களை கேட்டுக்கொள்கிறோம். எனக்கும் மற்றவர்களுக்கும் நான் நினைவூட்டும் இறைவசனம்.

ஈமான் கொண்டவர்களே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நாளை (மறுமை)க்காக முற்படுத்தி வைப்பதை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும்......(59:18)
அன்புடன்
ஆ. அப்துர்ரஹ்மான் மன்பஈ
(பீ.ஜெய்னுல் ஆபிதீன் மாணவன்)


குறிப்பு : முஜிபுர்ரஹ்மான் உமரியுடன் விவாதம்செய்வது பற்றி பல மாதங்களுக்குப் பிறகு பீ. ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு ஞாபக சக்தி திரும்பியுள்ளது. அல்ஹம்து லில்லாஹ். அதற்கு தனியாக பதில் சொல்லப்பட்டிருக்கிறது.

1 comment:

tamil said...

DEAR BROTHERS,
Keep your fight inside your house and through phone or email. Don't put anything in the web for publicity. Those who are reading this from other religion, they will think that you two were fools, fighting for creedy and pride.
Don't try to spoil the name of ALLAHA in the name of your vulgar fight. You both fools not going carry the mosque to heaven but leading the people to go hell.

From,
Mumin Khan,
Nagercoil