Monday, August 24, 2009

ஜகாத் - ஃபித்ரா - வசூலிக்கும் தமிழக முஸ்லிம் அமைப்புகள் பற்றிய ஒரு எச்சரிக்கை

அன்பு சகோதரர்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்

அன்பு சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

புனித ரமளான் வாழ்த்துக்கள்.

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஐ வேலைத் தொழுகைகளை நாம் தான் நிறைவேற்றுகிறோம். ரமலான் மாத நோன்புகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். அதுபோல மற்ற எல்லா பர்ளான கடமைகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். ஆனால், ஜகாத் ம்ற்றும் ஃபித்ராக்களை மட்டும் சில சகோதர அமைப்புகளிடம் தந்துவிட்டு நமது கடமைகள் முடிந்து விட்டதாக எண்ணி வாழா இருந்து விடுகிறோம்.

அந்த அமைப்புகள் நம்மிடம் வாங்கிய ஷகாத் ம்ற்றும் பித்ராக்களை அதற்குத் தகுதியானவர் களுக்கு முறைப்படி கொடுக்கிறார்களா என்பதை நாம் கவனிக்க மறந்து விடுகிறோம்.


சமீபகாலமாக சகோதர அமைப்புகளுக் கிடையே இந்த ஜகாத்/பித்ரா மூலமாக வசூலித்த தொகையை எவ்வாறெல்லாம் தன் இயக்க வளர்ச்சிக் காகவும், தன் சொந்த வளர்ச்சிக்காகவும் தவறாக பயன் படுத்துகிறார்கள் என்பதை அந்த அமைப்புக்கள் ஒருவர் மீது ஒருவர் வரம்பு மீறி அசிங்கமான வார்தைகளால் குற்றம் சாற்றிக் கொண்டு நம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலை குனிய வைத்து விடுகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.


இஸ்லாமிய சகோதரர்கள் கஷ்ட்டப்பட்டு உழைத்து, அந்த இயக்கங்கள் மீது நம்பிக்கை கொண்டு கொடுத்த அந்த அமானிதத்தை, தேவைக்கு போக; பேருக்காக கொடுப்பதற்க்கு ஒருசிலரை தேர்வு செய்து புகைபடம், வீடியோ, இயக்க சீறுடை, மற்றும் அளவுக்கு அதிகமாக விளம்பரப் படுத்தி இஸ்லாம் சொன்ன அளவுகோலை மறந்து ஒரு பெரிய ஆற்பாட்டம் செய்து விடுகிறாகள். அதன் பிறகு இதை தங்கள் வலை தளத்தில் பதிவு செய்து சாதனை பட்டியலாக்கி விடுகிறார்கள். நாளை மறுமையில் இவர்கள் செய்த இந்த தவறுகளுக்கு நாமும் ஒரு பொறுப்பாளர்களாக ஆகிவிடுகிறோம் மற்றும் ஜகாத், ஃபித்ரா கொடுத்தும் கொடுக்காதவர்களாக பதியப்படுவோம்.

ஆகவே, சகோதரர்கள் அனைவரும், உங்களுக்கு கடமை ஆக்கப் பட்ட ஃபித்ரா மற்றும் ஜகாஅத்தை உங்கள் சொந்த ஊர்களில் இதைப்பெற தகுதியானவர்களை ம்ற்றும் உங்கள் உறவுகளில் உள்ள ஏழை சொந்தங்களை கண்டறிந்தும்; எத்தனையோ வசதியற்ற மத்ரஸாக்கள்; எத்தீம்ஹாணாக்கள் போன்ற அமைப்புகளுக்கு கொடுத்தால்; அல்லாஹ் விடம் இருந்து நீங்கள் பெரும் நன்மைகளை பெருவீர்கள்; மற்றும் சகோதர அமைப்புகளை அனாச்சாரம் செய்வதை விட்டும் தடுத்தற்காண நற் கூலியையும் அல்லாஹ்விடம் பெறலாம்.

ஆகவே, இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் உங்கள் மீது கடமை ஆக்கப்பட்ட பித்ரா மற்றும் ஷகாஅத்தை உங்கள் கைகளால் உறியவர்களுக்கு கொடுத்து அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி இருலோக நல்வாழ்வுகளைப் பெற முயற்சி செய்வோமாக.


வஸ்ஸலாம்
அ. சஜருதீன்
ரியாத் - சௌதி அரேபியா
+966 557316929

2 comments:

அருளடியான் said...

நான் படித்தவரை, இவ்வாறு ஜகாத் கொடுத்தவர்களின் கடமை நிறைவேறிவிடும். அதனைப் பங்கிடுபவர்களின் குறைபாடுகளுக்கு ஜகாத் அளித்தவர் பொறுப்பாளி அல்ல. ஜகாத்தை வசூலித்து பங்கிடுபவரே, அவரது குறைபாடுகளுக்கு பொறுப்பாவார். உரிய ஹதீஸை தேடி எடுத்து எழுத எனக்குப் போதிய நேரமில்லை. ஆனால் அந்த சட்டத்தின் சாரம் இது தான். நடுநிலைப் போக்குள்ள ஒரு மார்க்க அறிஞரிடம் நான் எழுதியது உண்மை தானா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். ஒரு வேளை நான் எழுதியதில் தவறு இருந்தால் திருத்திக் கொள்கிறேன்.

அ. சஜருதீன் said...

சகோதரர் நம் கட்டுரையின் நல்ல நோக்கத்தை சரியாக புறிந்து கொள்ளவில்லை.



ஷகாத் மற்றும் பித்ராக்களை தத்தம் ஏழை சொந்தங்களுக்கு கொடுத்தால் இருவகையான நண்மைகளை பெறலாம் என்ற ஹதீஸின் அடிப்படையில் தான்; நம் முஸ்லீம் சகோதரர்களுக்கு தகுதியானவர்களை கண்டறிந்து தங்கள் கைகளால் கொடுக்கும் மனப் பாண்மையை ஏற்படுத்துவதற்க்கு எடுத்தது தான் இந்த முயற்ச்சி.



இராமநாதபுரத்தில் ஒரு முஹல்லாவில் வசிக்கும் ஒரு சகோதரர் ஒருவர்; தன்மீது கடமையாக்கப்பட்ட ஷகாத் / பித்ராவை; வறுமையில் தவழும் தன் ஏழை சொந்த பந்தங்கள் இருக்கிறார்கள் என அறிந்தும்; வருமையில் வாடும் தன் பக்கது வீட்டார்களைப் பற்றி தெறிந்தும்; கஷ்ட நிலையில் மத்ரஷாக்களும், எத்தீம் ஹானாக்காள் இருப்பது தெறிந்தும்; முன்பின் தெறியாத ஒரு சில ஆசாமி, சில புகைப்ப்டங்களையும்; சில CD க்களையும் காட்டியவுடன், தன் சொந்த இன பந்துக்களையும், பக்கத்து வீட்டு ஏழை; மற்றும் அணைதையும் மறந்து; அந்த ஆசாமிக்கு கொடுப்பது எந்த விததில் நியாயம்?



கிழ்கண்ட விளக்கம் நம் சகோதரர்களின் கண்களை திறக்கும். மற்றும் இந்த வருடம் தங்கள் மீது கடமையாக்கப்பட்ட ஷகாத் மற்றும் பித்ராக்களை; உறியவர்களுக்கு கொடுத்து, அவர்கள் படும் சந்தோஷத்தை; உத்தம சஹாபா உமர் (ரழி)அவர்கள்; பசியால் வாடிய ஒரு எழை தாய்க்கும், அவளின் பச்சிளம் குழந்தைக்கும்; தன் முதுகால் சுமந்து வரப்பட்ட தாணிய மாவால்; தன் முபாரக்காண கைகளால் செய்த உணவை, தன் கைகளால் பறிமாறி; அவர்கள் சாப்பிட்டதும் அந்த குழந்தை சந்தோஷத்தோடு விளையடுவதை பார்த்துவிட்டு உமர் (ர்ழி) அடைந்த சந்தோஷத்தை நாமும் அடைந்து இறைவனின் திருபொறுத்ததை அடைய முயற்ச்சி செய்வோமாக. ஆமீன்.



Giving Zakat to relatives

Hadith 2.540 Narrated by Ishaq bin Abdullah bin Al Talha (Radhiallah hu Taala anhu)

I heard Anas bin Malik (Radhiallah hu Taala anhu) saying, "Abu Talha (Radhiallah hu Taala anhu) had more property of date-palm trees gardens than any other amongst the Ansar in Medina and the most beloved of them to him was Bairuha garden, and it was in front of the Mosque of the Prophet (sallallaahu alayhi wa sallam). Allah's Apostle (sallallaahu alayhi wa sallam) used to go there and used to drink its nice water." Anas (Radhiallah hu Taala anhu) added, "When these verses were revealed: 'By no means shall you Attain righteousness unless You spend (in charity) of that Which you love,' (Quran: 3.92) Abu Talha (Radhiallah hu Taala anhu) said to Allah's Apostle (sallallaahu alayhi wa sallam), 'O Allah's Apostle! (sallallaahu alayhi wa sallam) Allah, the Blessed, the Superior says: By no means shall you attain righteousness, unless you spend (in charity) of that which you love. And no doubt, Bairuha' garden is the most beloved of all my property to me. So I want to give it in charity in Allah's cause. I expect its reward from Allah. O Allah's Apostle! (sallallaahu alayhi wa sallam) Spend it where Allah makes you think it feasible.' On that Allah's Apostle (sallallaahu alayhi wa sallam) said, 'Bravo! It is useful property. I have heard what you have said (O Abu Talha), and I think it would be proper if you gave it to your kith and kin.' Abu Talha said, I will do so, O Allah's Apostle (sallallaahu alayhi wa sallam).' Then Abu Talha distributed that garden amongst his relatives and his cousins."



வஸ்ஸலாம்

அ. சஜருதீன்

ரியாத் - சௌதி அரேபியா