Saturday, May 02, 2009

முகவையில் த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா பிரசாரம்

த.மு.மு.க ., தலைவர் ஜவாஹிருல்லா பிரசாரம்



கீழக்கரை: ராமநாதபுரம் தொகுதி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லா கானை ஆதரித்து த.மு.மு.க., மாநில தலைவர் ஜவாஹிருல்லா கீழக் கரை முஸ்லிம் பஜாரில் நடந்த கூட்டத்தில் பேசுகையில்," குஜராத் கலவரத்துக்கு எதிர்ப்பு கூட தெரிவிக்காதவர் கருணாநிதி. தி.மு.க., தருவதாக இருந்த ஒரு சீட்டுக்கு ஆசை பட்டிருந்தால் தி.மு.க., வுக்கு நாங்கள் அடிமையாகிருப்போம்.



சென்னையில் தி.மு.க., வேட்பாளர்கள் ஜெயிப் பதே முஸ்லிம்கள் ஓட்டுகளால் தான்.அ.தி.மு.க., மக்களை ஏமாற்றும் கட்சி'என்றார். மேலும் அவர் ராமநாதபுரம் தொகுதியில் திருச்சுழி, காரியாபட்டி, பூலாங்கல், பெருநாழி, சாயல்குடி, ஒப்பிலான், மாரியூர், வாலிநோக்கம், சிக்கல், ஏர்வாடி பகுதியில் பிரசாரம் செய்தார். மாவட்ட பொறுப்பாளர் சல்மான், ஒன்றிய செயலாளர் வாவா ராவுத்தர், சம்சுதீன் சேட், மாவட்ட துணை தலைவர் ஹிமாயுன் கபீர், மாவட்ட தலைவர் சாதிக், தேர்தல் பொறுப் பாளர் சிராஜ் பங்கேற்றனர்.

4 comments:

அருளடியான் said...

மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சலீமுல்லாஹ் கான், பா.ஜ.க வேட்பாளர் திருநாவுக்கரசரை விடவும், தே.மு.தி.க வேட்பாளரை விடவும் அதிக வாக்குகள் பெறுவார். இன்ஷா அல்லாஹ்!

Anonymous said...

சென்னையில் தி.மு.க., வேட்பாளர்கள் ஜெயிப் பதே முஸ்லிம்கள் ஓட்டுகளால் தான்.அ.தி.மு.க., மக்களை ஏமாற்றும் கட்சி'என்றார். Then why u cried for two seats in DMK and ADMK. Prof. sir, ippa iduvellam arasiyalil sakajamppa thaan.

Anonymous said...

குஜராத் கலவரத்துக்கு எதிர்ப்பு கூட தெரிவிக்காதவர் கருணாநிதி. - Prof. Jawhirullah.

Appa neenga kootanila irukkum pothu pona masam varai, ippadi pesavillaye. Ippa thaan MK pathi theriyutho.

Anonymous said...

ஆழகிய முனாபிக் யார் என்றால் இவர்கள் தான் என்று தங்களை மிக அழகாக படம் பிடித்துகாட்டிவிட்டார்கள்?

குஜராத் கலவரத்திற்க்கு ஆதரவு தந்தவர் கலைஞர் என்றால், அந்த நரேந்திர மோடி என்ற கொலைகாரனை அழைத்து விருந்தளித்தவர் ஜெயலலிதா என்று தெரிந்தும் ஏண் இந்த கலைஞருக்கு பாராட்டு விழா எடுத்தார்களாம்? இந்த இரண்டு போரும் முஸ்லீம்களுக்கு எதிராக நடந்தவர்கள் என்று தெரிந்தும் ஏண் 2 சீட்டுகளுக்கு இவர்களிடம் அலைந்தார்களாம்? இவர்களுக்கு இந்த 2 சீட் கிடைத்து இருந்தால், இதுநாள் வரை
வாய் முடி இருந்தது போல முடிக்கொண்டு இருப்பார்கள்? கோளுங்கள் பட்டம் படித்த வாத்தியாரை? அவர் தான் தமிழ் பி.பி.சிக்கு பேட்டி அளிக்கும் போது மிக அழகாக செல்கிறார்களே, இவர்களுக்கு இப்போ தேவைபடுவது எம்.பி பதவி தான் அதற்க்கு பிறகு தான் கௌ;கை கத்ரிக்காய் எல்லாம் என்றும்.... சரித்திரத்தில் (வரலாற்றில்) பதவி ஆசை பிடித்தவர்கள் என்று கௌ;கையை பிடித்துள்ளார்கள்....

இங்கு தான் தவ்ஹீத் ஜமாத் தன்னுடைய தனித் தண்மையை நிருபித்துள்ளது. கடந்த முறை அதிமுக-வை ஆதரித்த போதும் அவர்களின் தவறை கண்டித்து தான் ஆதரித்தோம். இம்முறை திமுகவை அதரித்த போதும் திமுகவின் குறைகளை எடுத்துக் காட்ட மறப்பதில்லை? இவர்களுக்கு எடுத்துக்காட்டாக தவ்ஹீத் ஜமாத் இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்....

சமுதாய காவலன்