பலதாரமணம் புரிந்தவர் இறைதூதராக இருக்க முடியுமா?
பைபிளின் படி பரிசுத்தவானாக தகுதியற்றவர்கள் யார்?
கிறிஸ்தவர்களுக்கு பதில்
.
உலகம் முழுவதும் இன்று பெருகிவரும் இஸ்லாமிய வளர்ச்சியைப் பொருத்துக்கொள்ள முடியாத இஸ்லாமிய எதிரிகள் குறிப்பாக கிறிஸ்தவ மிஷினரிகள் அதன் வளர்ச்சியை எப்படியேனும் தடுத்திட வேண்டும் என்று உள்நோக்கத்துடன் ஏற்படுத்திவரும் விஷமப்பிரச்சாரங்களில் மிக முக்கியமான ஒன்று நம் உயிரினும் மேலான நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் மீது சுமத்தப்படும் 'காமவெறியர்' என்ற குற்றச்சாட்டு. குறிப்பாக கிறிஸ்தவர்களில் பலர் இயேசு காம இச்சையை அடக்கி திருமணம் முடிக்காமல் வாழ்ந்தார் என்றும் ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களோ ஒன்றுக்கு மேற்பட்டதிருமணங்களை, குறிப்பாக 11 பெண்களைத் திருமணம் செய்து தனது காம இச்சையை தீர்த்துக்கொண்டார் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பலதாரமணத்தை இஸ்லாம் அனுமதித்ததன் மூலம் இஸ்லாம் ஏதோ விபச்சாரத்தை அனுமதித்தது போன்று எழுதும் சில கிறிஸ்தவ அறிவிளிகளும் உண்டு.நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தார்கள் என்பதையும், அவர்கள் ஒரு நேரத்தில் ஒன்றுக்கு அதிகமான பெண்களை திருமணம் முடித்திருந்தார்கள் என்பதையும், ஆயிஷா (ரலி) அவர்களை - அவர்களின் சிறுவயதிலேயே திருமணம் செய்தார்கள் என்பதையும் என்றைக்குமே இஸ்லாமிய உலகம் மறைத்ததும் கிடையாது - மறுத்ததும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் இவற்றை ஒப்புக்கொண்டு அதற்கான நியாயமான காரணங்களை இன்றைக்கும் - என்றைக்கும் மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்லியே வருகின்றது.
பெருமானார் (ஸல்) அவர்கள் தமது பதிமூண்டு ஆண்டுகள் நபித்துவ வாழ்கை வாழ்ந்த அந்நாட்களில் தன்னை இறைத்தூதர் என்று ஏற்றுக்கொண்ட, எற்காமல் நிராகரித்த, பல சமுகத்து மக்கள் மத்தியில் தான் வாழ்கின்றார்கள். இவர்களில் ஆதரவாளர்களும் உண்டு, எதிரிகளும் உண்டு, துரோகிகளும் உண்டு. இந்த அத்தனை பேருக்கும் மத்தியில் தான் பெருமானாரின் இந்த அனைத்துத் திருமணங்களும் நடைபெருகின்றது.
இவை அத்தனைக்கும் மத்தியிலும் அன்றைக்கு இஸ்லாம் வளர்ந்துக்கொண்டே இருந்ததே யொழிய வீழ்ச்சியடைந்துவிடவுமில்லை பலவீடபடவுமில்லை. மாறாக இத்தனைத் திருமணங்களுக்குப் பிறகும் அந்த பெருமானாருக்காக தனது உயிரையும் தியாகம் செய்யும் தோழர்கள் உருவாகி இருந்தார்கள் - மேலும் மேலும் உறுவாகிக்கொண்டே இருந்தார்கள் என்றால் என்னக் காரணம்? இந்த அத்தனைக்கும் மத்தியிலும் அவர்களின் மீது அளவுக்கதிகமான அண்பு காட்டக்கூடிய மக்களாக அன்றைய மக்கள் இருந்தார்கள் என்றால் என்ன அர்த்தம்? இன்றைய கிறிஸ்தவர்கள் பிரச்சாரம் செய்வது போல் இத்தனைத் திருமணங்களுக்கும் 'காமவெறிதான்' காரணமாக இருந்திருந்தால் பெருமானாருக்கு இப்படிப்பட்ட கூட்டம் கிடைத்திருக்குமா?
அது மட்டுமல்ல, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சத்தியப்பிரச்சாரத்தை துணிவுடன் துவங்கியபோது உலகில் எந்த சீர்த்திருத்தவாதியும் சந்தித்திராத பல எதிர்ப்புகளை அவர்கள் சந்தித்தார்கள். அவர்களது பிரச்சாரத்தால் பாதித்தவர்கள் ஏராளம். மூட நம்பிக்கைளில் ஆழ்ந்து கிடந்தவர்கள், குலப்பெருமை அடித்துக்கொண்டிருந்தவர்கள், மதத்தை வைத்துப் பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தவர்கள், ஏமாற்றுவதையும் மோசடியையுமே தொழிலாகக் கொண்டவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டார்கள். எப்படியாவது முஹம்மது(ஸல்) அவர்களின் தூதுத்துவப் பிரச்சாரத்தை முடக்கிவிட வேண்டும் என்று பல்வேறு திட்டங்கள் அவர்களால் தீட்டப்பட்டன. கிறுக்கன் என்றார்கள், திறமை மிக்க கவிஞன் என்றார்கள், கை தேர்ந்த மந்திரவாதி என்று கூட சொன்னார்கள். ஏசிப்பார்த்தார்கள்! அடித்தும் பார்த்தார்கள்! ஊரைவிட்டே விரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டார்கள். உலகை விட்டே அவர்களை அப்புறப்படுத்தவும் சதி செய்தார்கள்.
இந்தப் பிரச்சாரத்தை எப்படியாவது முடிக்கி விட வேண்டும் என்பதில் அவர்களுக்கிருந்த வெறித்தனத்துக்கு இவை தக்க ஆதாரங்கள். இப்படியெல்லாம் திட்டம் தீட்டிய அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய வாழ்வு பற்றி எந்த விமர்சனமும் செய்யவில்லை. மற்ற எல்லா ஆயுதங்களைவிடவும் பலமான இந்த 'காமவெறியன்' என்ற ஆயுதத்தை அவர்கள் பயன்படுத்தி இருந்தால் அதில் அவர்கள் வெற்றி கண்டிருக்கக்கூடும். ஆனால் அவர்களாலும் வைக்கப்படாத - வைக்கமுடியாது ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால் பெருமானாரை இன்றைய இஸ்லாமிய எதிரிகள் - குறிப்பாக கிறிஸ்தவர்கள் கூறுவது போன்று 'காமவெறியர்' என்ற குற்றச்சாட்டு. பெருமானாருடன் சமகாலத்தில் வாழ்ந்த இஸ்லாமிய எதிரிகள் எத்தனையோ குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது கூறியவர்கள் இத்தனைத் பெண்களைத் திருமணம் செய்தபிறகு அவர்களை 'காமவெறியர்' என்று கூறாதது ஏன்? இஸ்லாத்தை பலவீனப்படுத்த, பெருமானாரின் புனிதத்தைக் கொச்சைப்படுத்த இதை வீட ஒரு சரியான சந்தர்ப்பம் கிடைக்காது என்றிருந்தும் அந்தக் குற்றச்சாட்டைப் பயன்படுத்தாதது ஏன்?
காரணம் அன்றைய காலத்தில் அந்த குற்றச்சாட்டு அந்த மக்களிடத்தில் எடுபடாது என்ற நிலை. ஏனெனில் பெருமானார் அவர்கள் அன்றைய காலத்தில் வாழ்ந்த அனைத்து தரப்பு மக்களிடத்திலும் எல்லா வகையிலும் சிறந்த நற்பெயரையே பெற்றிருந்தார்கள் - அவர்களுடைய நற்குணத்தைப் பற்றி அந்த மக்கள் நன்கு அறிந்துவைத்திருந்தார்கள். இதையும் மீறி சிலர் அன்று அவர்களை எதிர்தற்கு ஒரே காரணம் அவர்கள் போதித்த சத்திய மார்க்கமான இஸ்லாம் தானே யொழிய வேறல்ல.
அன்றைய கால இஸ்லாமிய எதிரிகளால் கூட வைக்கப்படாத - வைக்கப்பட முடியாத ஒரு குற்றச்சாட்டான 'காமவெறியர்' என்றுக் குற்றச்சாட்டைக் இன்றைய கிறிஸ்தவர்கள் கையிலெடுத்துப் பிரச்சாரம் செய்வதற்கு காரணம் எப்படியேனும் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுத்தி நிறுத்தியாக வேண்டும் என்று குறுகிய நோக்கமே!
No comments:
Post a Comment