Sunday, November 30, 2008

மோடியிடம் ஆட்சியை ஒப்படைக்க சொல்லி ஓலமிடும் தெருநாய்!!

மும்பாயைச் சொல்லி யுத்தம் கவியுமா?

மும்பாயில் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து,பார்ப்பனியப் பண்டாரங்கள் பதைபதைத்துப் பாரதத்தின் படைகளிடம்-இராணுவத்திடம் ஆட்சியை ஒப்படைக்கக்கோருவதும் அல்லது முஸ்லீம்களை குஜராத்தில் நரவேட்டையாடிய மோடியிடம் ஆட்சியை ஒப்படைக்கச் சொல்வதிலிருந்து நாம் பார்ப்பனியத்தின் பக்கச் சார்பைக் கணிக்கமுடியும்.

இந்தியத் தேசவிரோதப் பார்ப்பனியம் இந்தியத் தேசத்தை அந்நியச் சக்திகளிடம் கையளித்து, ஆரிய நாமத்தை இந்தியமக்களுக்குப் போடுவதற்குப் பெயர்"இந்திய-பாராத தேச நலம்"என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.இந்தத் தேச விரோதப் பார்ப்பனிய மற்றும் பனியா நலன்களின்பின்னே கைகோர்த்திருக்கும் அந்நியத் தேசங்களினது அரசியல் இலக்கு என்ன?அது குறித்து எவர்-எப்படிப் புரிந்து கொள்கிறார் என்பதிலிருந்தே இந்தியப் பிராந்தியத்தில் சமாதானத்துக்கான முன்னெடுப்பு அமையும்.இது குறித்துப் புரிய முனைவோம்.


"பயங்கரவாதத்தின்" இன்னொரு முகத்தை நாம் மிக மெலினப்படுத்தப்பட்ட மொழிவுகளால் உய்துணர முடியாது! இதைப் புரிக முதலில்-புரிக!

இந்தத் தருணத்தில் இந்தியாவின்மீது கவிந்திருக்கும் பார்ப்பனிய-பனியா ஆளும் வர்க்கத்தின் அரசியல் மோசடிகள் மிகவும் கெடுதியானவொரு சூழலை முழுமொத்த இந்திய உழைக்கும் வர்க்கத்துக்கு வழங்கப் போகிறது.கடந்தபல நூற்றாண்டுகளாக இந்தியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பார்ப்பனிய-பனியா ஆளும் வர்க்கங்கள் காலனித்துவக்காலத்தில்கூட அந்நியர்களைத் தமது ஏஜமானர்களாக்கி, முழுமொத்த இந்தியாவையும் சுரண்டிக் கொழுத்தார்கள்.அவர்களில் மிக முக்கியமான டாட்டா போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் அன்று, நிபந்தனையற்ற உதவிகளை காந்திக்கு வழங்கிப் போலிச் சுதந்திரத்துக்குப் பின்பான இந்தியாவைத் தமது காலடிக்குள் வைத்துச் சுரண்டிக் கொழுத்தார்கள்.இது,இந்தியப் போலித் தேசியத்துள் மறைக்கப்பட்ட வரலாறு.இதைக் காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்.காரன் கோட்சேயின் மொழியில் நாம் இனம் காணமுடியும்.இந்தியாவின் மிக முக்கியமான கல்வியாளரும் சமூகவியலாளருமான திரு.அஸீஸ் நந்தியைக் கற்றவர்களுக்கு இதுள் சந்தேகம் வரமுடியாது.

இன்றும், இதே கதையோடு தலைமுறை கடந்த "டாடட்டா"நிறுவன அதிபர் திருவாளர் இராற்றான் டாடா தனது தாஜ்மால் கோட்டலின் சிதைவுகளுக்கு மத்தியில் ஆத்திரத்தோடு இந்தியப் பாதுகாப்புக்குறித்துத் தமது எஜமானர்களின் தொலைக்காட்சிச் சேவையான சி.என்.என்.க்குப் பதிலளிக்கையில், இந்தியப் பாதுகாப்புக்குறித்து கேள்வி எழுப்புகிறார்.தமது கோட்டலுக்குப் பாதுகாப்பு வழங்குவதிலுள்ள குறைபாடுகளைக்குறித்து மூச்சுவிடும் இந்தக் களவாணிப்பயல் மோடியின் தலைமையில் அழித்தொழிக்கப்பட்ட அப்பாவி முஸ்லீங்கள் மூவாயிரம் பேர்கள் குறித்தோ, அவர்களது வாழ்வாதாரங்களின் சிதைப்புக் குறித்தோ மூச்சு விடவில்லை அன்று!

இப்போது இத்தகைய துரோகிகளின் மூச்சுத் திணறல் தமது எஜமானர்களின்(அமெரிக்க-மேற்குலக) நாடுகளினது பொருளாதார இருப்போடு சம்பந்தப்படுகிறது.

மும்பையில் நடந்தேறிய தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தியாவினதும் பாகிஸ்த்தானினதும் அரசியல் நடாத்தையில் பல மாற்றங்களை வேண்டி, உலகம் எதிர்பார்க்கிறது.அதற்கேற்ற சதிவேலைகளை உருவாக்கியவர்கள் மும்பாயில் நடந்தேற்றிய ஒரு நாடகம் பல நூறு மக்களைப் பலியெடுத்துள்ளது.இதன் உண்மை மிக விரைவாக அம்பலத்துக்கு வரும்-வரவேண்டும்!

பாகிஸ்த்தானும்,இந்தியாவும் போருக்குச் செல்வதை உலகம் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிடக்கிறது.இதற்கு மும்பாயில் நடத்திமுடிக்கப்பட்ட தாக்குதல் வழிவகுக்குமென அவர்கள் ஏலவே திட்டமிட்டார்கள்.அது அவர்களது பொருளாதார நலனுக்குமட்டுமல்ல,இந்தியாவின் வளர்ந்துவரும் பொருளாதாரத்தைத் திட்டமிட்டுச் சிதைப்பதற்கும் இதுவே அவர்களது இறுதி முடிவாகவும் இருக்கிறது.

மேற்குலகம் திட்டமிட்டபடி இத்தாக்குதலுக்குப் பாகிஸ்தானும் அதனால் வளர்த்தெடுக்கப்படும் காஸ்மீரிய விடுதலை கோரும் அமைப்பான Jaish-i-Mohammed மற்றும் Lashkar-i-Toiba அடிப்படைவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருப்பதாகச் சொல்லும் கருத்துகளுக்குள் தமது பொருளாதாரத்துக்கு வலுச் சேர்க்கும் ஆயுதத் தளபாடவுற்பத்திச் சாலைகளுக்கான புதிய ஓப்பந்தங்கள் குறித்த நோக்கு இருக்கிறது என்பதை நாம் இனம் காணவேண்டும்!

அமெரிக்க-ஐரோப்பியப் பங்குச் சந்தைகளில் தமது பெரும் மூலதனத்தை இழந்த இத்தேசங்களின் ஆளும் வர்க்கங்களுக்கு மிக அவசியமாக ஒரு பாரிய யுத்தம் தேவையாக இருக்கிறது.யுத்தங்களில் அழிக்கப்படும் இராணுவத் தளபாடங்களால் ஆயுத உற்பத்தி தொடர்ந்து மேல் நிலைக்கு வரும்போது, அத்தகைய தொழிலில் முதலீடு செய்த இந்த ஆளும் வர்க்கம் ஓரளவாவது அழிந்த மூலதனத்தை; மிக விரைவாகத் திரட்ட முடியும்.இது,பொருளாதாரத்தின் அரிச்சுவடியாகத் திருவாளர்.கெய்னிஸ் குறித்துரைப்பதிலிருந்து நாம் விளங்க முடியும்.நவ லிபரல்களின் பொருளாதார இலக்குள் யுத்தம் மிக அவசியமானது.இதனால் அவர்கள் செய்த பற்பல யுத்தங்களை நாம் வரலாற்றில் கண்டோம்.

இன்று,மேற்குலகப் பொருளாதாரச் சரிவைக்குறித்து யுத்தமொன்றை நேரடியாகச் செய்வதற்கு மேற்குலக நாடுகளின் மக்கள் தடையாக இருக்கிறார்கள்.அதேபோன்று, அமெரிக்கா இருக்கும் பொருளாதாரச் சூழலில் அது இன்னொரு யுத்தத்தில் ஈடுபட்டுத் தமது எஜமானர்களைக் காக்கும் நிலையில் இல்லை!இதன் தாக்கம் மிகவிரைவாக மூன்றாந்தரப்பால் யுத்தம் நடாத்தப்பட்டுத் தமது ஆயுத உற்பத்தியால் வளங்களைப் பெருக்குவதற்கு ஏதாவதொரு இழிச்சிவாய்த் தேசங்கள் அவசியமாக இனம் காணப்பட்டது.அங்கே,மிகப் பலமான முரண்பாடுகளைக் கொண்ட யுத்தமுனைப்புத் தேசங்களாக இருப்பவை தென்கிழக்காசியாவில் இந்தியாவும்,பாகிஸ்த்தானுமாகவே இனம் காணப்படுகிறது.இதற்குப் பல தசாப்தங்களாக இந்துமதப் பரிவாரங்கள் முகாந்திரம் அமைத்துள்ளார்கள் கூட்டாக!

இவ்விரண்டு தேசங்களினதும் முரண்பாடுகள் வெறுமனவே பொருளாதார இலக்குகளாக நீர்த்துப்போவதைத் தடுத்து, அவற்றுக்கு "இந்து-முஸ்லீம்"எனும் மிகப் பெரிய மத முரண்பாடு உருவகப்படுத்தி அடுத்த பல தசாப்தத்துக்கு அதையே யுத்தமாக நடந்தேற்றுவதற்கு அவசியமான தத்துவார்த்த அடித்தளதைக் கோரிக் கொள்கிறது மேற்குலகமும் அமெரிக்காவும்.இது மிக அவசியமான அரசியற் சூழ்ச்சியோடு அடுத்த தசாப்த வியூகமாக அமெரிக்க-மேற்குலக அரசியல்-பொருளாதாரச் சூழலில் விரிகிறதென்பதை மூன்றாம் உலகத்தவர்களின் அரசியல் புரிந்துகொள்வது மிக அவசியமானது.

அண்மைக் கிழக்குத் தேசங்களின் மூலதன இருப்பினது வளப் பிரிப்புப் போட்டியானது மேற்குலகத்தோடு மிகக்கெடுதியான பகை முரண்பாட்டைக் கொண்ட இஸ்லாமிய அடிப்படை வாதமாக முன்னே தள்ளுகிறது.இதனால்,மூலதனத்தைத் தொடர்ந்து கையகப்படுத்தும் அரசியல் வியூகமானது மேற்குலகத்தின் முற்றத்துக்கு இஸ்லாமியக் குண்டுதாரிகளைக் கையோடு கூட்டிவருகிறது.இது தமது தேசத்தின் உள்நாட்டு அரசியலில் பாரிய பின்னடைவுகளை இத்தேசங்களுக்குள் ஏற்படுத்திவருகிறது. இப்போது,இந்த இஸ்லாமியக் குண்டுகளை இந்தியாவை நோக்கித் திசை திருப்பிவிடும்போது,மிகவும் சாதகமான பொருளாதார வளர்ச்சியை மேற்குலக மற்றும் அமெரிக்கா மூலதனம் எட்டிவிடும்.

ஈராக் யுத்தத்துக்குப் பின்னான அரசியல்-பொருளாதார மற்றும் உள் நாட்டுப் பாதுகாப்புச் சூழல் மிகவும் கெடுதியாக மேற்குலகைப் பாதிக்கிறது.என்றுமில்லாதவாறு பெரும் பாதுகாப்புச் செலவீனங்களும் பொருளாதார நெருக்கடிகளையும் இத்தேசங்கள் சந்திக்கும்போது,இந்தியா மற்றும் சீனா போன்ற தேசங்கள் மிக இலகுவாக உலகத்தில் தமது சந்தைகளை வரிவுப்படுத்திப் பொருளாதார ஸ்த்திரத்தைக்கொண்டியங்குவது சகிக்கமுடியாத அச்சத்தை இந்தத் தேசங்களுக்கு ஏற்படுத்தியதைக் கடந்தகால மேற்குலகத் தகவல் மற்றும் ஊடகங்களில் பயிற்சியுடையவர்கள் அறிந்திருக்க முடியும்.

இன்று,"கிறிஸ்த்துவ-இஸ்லாம்" பகை முரண்பாட்டைத் திசை திருப்பி "இந்து-இஸ்லாம்" பகை முரண்பாடாக்கிய பெருமைக்கு மேற்குலகத்தோடு சேர்ந்து-கள்ளக்கூட்டுவைத்து இயங்கும் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்திய மக்களின் எதிரிகளுக்கே சேரும்.

இந்தப் பார்ப்பனிய-பனியாச் சகதிகள் பாரத தேசத்தின் பாதுகாப்பு என்று கூலிக்குக் குரல் கொடுத்துப் பாகிஸ்த்தானுக்கும், இந்தியாவுக்குமானவொரு யுத்தத்தை மேற்குலகோடிணைந்து உருவாக்க முனையுந்தருணங்கள் தென்படுகின்றன.இங்ஙனம் யுத்தம் மேல் நிலைக்கெழுந்தால் இந்தியாவும் பாகிஸ்தானும் அப்பாவி மக்களின் வரிப்பணத்தை யுத்தத்துக்குள் கொட்டித் தமது மக்களில் பலரைப் பலியாக்கும்.இதனால் தேசம் தனது பொருளாதார ஸ்த்திரத்தை இழந்து,அனைத்து வளங்களையும் மேற்குலக ஆயுத உற்பத்தியாளர்களிடம் தாரவார்த்துவிடும்.இதுவே இன்றைய மேற்குலக-அமெரிக்க அரசியல்-பொருளியல் வியூகமாக எதிர்காலத்து அரசியல் இலாபங்களையும் அதனூடாகச் சந்தை விரிவாக்கத்தையும் தக்கவைக்க முனைகிறது.

இதையெல்லாம் ஒருங்கே நிறைவேற்றத் தகுந்த மாதிரிகளை உருவாக்கத் தமிழ்நாட்டுப் பார்ப்பனியக்கூட்டமும் தம்மாலான முயற்சியல் கூக்குரலிடுகிறது.அதில் ஒன்றுதாம் யூதர்களிடம் ஆலோசனை மற்றும் இந்திய இராணுவத்திடம்-மோடியிடம் ஆட்சியை ஒப்படை என்று ஓலமிடுகிறது.இத்தகையத் தெரு நாய்கள் இந்தியத் தேசத்தையும்,இந்திய உழைப்பாளர்களையும் அந்நியத் தேசங்களுக்குக் காட்டிக் கொடுத்து, கொலை செய்து வருகிறது.இதன் ஆரம்பம் மும்பையில் தொடரவில்லை.அது, ஏலவே மோடி தலைமையில் அயோத்திக்கான கொலைகளாக நடந்தேறியது.

அந்நிய ஆர்வங்களுக்கும் அமெரிக்க-மேற்குலக உளவுப்படைகளுக்கும் ஏஜென்டுக்களாக மாறியுள்ள இந்தப் பார்ப்பனியத்தை(சுப்பிரமணியசுவாமி மற்றும் சோ,சிதம்பரம் போன்றவர்களை மனதில் நிறுத்தவும்) வேரோடு சாய்பதற்கு மேற்குலகமே முட்டுக்கட்டையாக இருக்கும்.ஏனெனில், அடுத்தகட்ட யுத்த முனைப்பும்,பகை முரண்பாடும் மையங்கொள்வது இந்தியப் பிராந்தியத்தில் என்பது முடிந்த முடிவாகும்.அது,"இந்து-இஸ்லாம்"மதவாத யுத்தமாக உலகம் தகவமைக்கிறது!

இது குறித்து,இந்திய வம்சாவழியாகிய ஒவ்வொரு மனிதரும் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.பாப்பனிய மற்றும் மேற்குலக உறவுகளை அம்பலப்படுத்தி,இவர்களைத் தோற்கடிக்காமால் தென்கிழக்காசியப் பிராந்தியத்தை சமாதான பூமியாக்கமுடியாது.

ப.வி.ஸ்ரீரங்கன்
30.11.2008

நன்றி : அகதி

No comments: