Saturday, October 18, 2008

PFI அரசியல் மாநாட்டு அலுவலகம் திறப்பு

PFI அரசியல் மாநாட்டு அலுவலகம் திறப்பு

திறப்பு விழாவில் உரையாற்றும் PFI தலைவர் அபுபக்கர் சாஹிப் அருகில் தலைவர்கள்

வரும் 2009 பிப்ரவரி 13,14,15 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் காலிகட்டில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா நடத்த திட்டமிட்டுள்ள தேசிய அரசியல் மாநாட்டின் ஒருங்கினைப்பு கமிட்டி அலுவலக திறப்பு விழா இன்று பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் திரு. அபுபக்கர் சாஹிப் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

நடக்கவிருக்கும் இம்மாநாடு பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மை இனத்தவர், ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் ரீதியாக பெரும் மாற்றத்திற்குள்ளாக்கி அவர்களை அரசியல் ரீதியாக வலிமை மிக்கவர்களாக மாற்றும். இன்னும் ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டிய ஆளும் வர்க்கம் இன்று முதலாலித்துவத்தையும், வகுப்புவாத்தையும் பாதுகாக் கூடியதாக மாறிவிட்டது என்றும் நாட்டை ஆளும் மத்திய அரசு சர்வதேச விலை இறக்கத்திற்கு ஏற்ப பெட்ரோலிய பொருட்களின் விலைவாசியை குறைக்கவில்லை என்றும், முஸ்லிம்களின் பெயரில் தீவிரவாதத்தை விதைத்துவரும் சங்பரிவார சக்திகளின் அக்கிரமங்களை கண்டு கொள்ள வில்லை என்றும் தெறிவித்தார்.

நிகழ்ச்சியில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் E.M அப்துல் ரஹ்மான், KFD மாநிலத் தலைவர் டாக்டர் மஹ்பூப் சரீப், தமிழக எம்என்பி தலைவர் முகம்மது அலி ஜின்னா , என்டிஎஃப் மாநிலத் தலைவர் அப்துல் ரஹ்மான் பாக்கவி ஆகியோர் உரையாற்றினர். மாநாட்டு ஒருங்கினைப்பு கமிட்டியின் தலைவர் கே.எம். சரீப் அவர்கள வரவேற்புரை நிகழ்த்தினார், திரு.OMA சலாம் நன்றியுரை வழங்கினார்.

3 comments:

Anonymous said...

மாநாடு வெற்றி அடைய வாழ்த்துகின்றேன்.

Unknown said...

i dua 4 ur national political conference.insha allah we will win.

Unknown said...

i dua 4 ur national political conference.insha allah we will win.