Saturday, October 18, 2008

இந்து வேதங்களில் இஸ்லாம்

இந்து வேதங்களில் இஸ்லாம் பற்றியும்,ஏக அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என அவைகள் கூறும் கூற்றுக்கள் பற்றியும்,நபிகள் கோமான் ஸல் பற்றியும் உள்ள இந்து வேத சமஸ்கிருத மந்திரங்கள் குறித்து...........!
பவிஷ்ய புராணத்தில் பின்வரும் சுலோகம் பூரணமாக:
”ஏதஸ் மின்னந்தரே மிலேச்சர் ஆச்சார்யண ஸமன் வித மஹாமத் இதிக்கியாதசிஷ்ய சாகா ஸமன்விதநிருபஸ்சேவ மஹாதேவமருஸ்தல நிவாஸினம்” (பவிஷ்ய புராணம் 3,3,5-8)இதன் பொருள்:“அந்நிய நாட்டிலே ஒரு ஆசாரியார் (ஆன்மிக குரு) தம் சீடர்களுடன் வருவார். அவருடைய பெயர் மஹாமத் (முஹம்மத்). அவர் பாலைவனப் பகுதியைச் சேர்ந்தவராக இருப்பார்.”மேலும் அதே புராணத்தில் அந்த ஆசாரியாரின் இனம், தோற்றம்,பழக்க வழக்கங்கள் ஆகியன பற்றியும் கூறப்பட்டுள்ளது. ”அவர்கள் ‘கத்னா (லிங்கசேதி) செய்வார்கள், குடுமி வைக்கமாட்டார்கள், தாடி வைத்திருப்பார்கள், மாமிசம் உண்பார்கள், சப்தம் போட்டு (அதான்) அழைப்பார்கள், முஸைல (முஸல்மான்) என அழைக்கப்படுவார்கள்” என்று அது கூறுகிறது (பவிஷ்ய புராணம், 3:25:3) மேலும் காண்க, அதர்ணவேதம் 20வது காணம், ரிக்வேதம், மந்திரம்:5, சூக்தம்:28இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) அவர்களின் பிரார்த்தனைகள், திருக்குர்ஆனில்:2:127. இப்ராஹீமும் இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது ”எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினர்).2:128. ”எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும் அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”2:129. ”எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்து அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும் பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.” (என்றும் பிரார்த்தித்தார்கள்)இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகை, மார்க்கம், சமுதாயம் ஆகியவை பற்றி முந்தைய வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்படடிருந்தது.இறைத்தூதர் மோசே (மூஸா (அலை) அவர்களின் முன்னறிவிப்பு பழைய ஏற்பாட்டில்:”உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணுவார், அவருக்கு செவிகொடுப்பீர்களாக! (உபாகமம்,18:15)”உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன், நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்” (உபாகமம், 18:18)புதிய ஏற்பாட்டில்:மோசே (மூஸா (அலை) பிதாக்களை நோக்கி, உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார், அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்காளக. (அப்போஸ்தலர்,3:22)நபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய புதல்வர் இஸ்ஹாக் (அலை) அவர்களின் பரம்பரையில் தோன்றியவர்களே இஸ்ரவேலர்கள். அவர்களுடைய சகோதரர் இஸ்மாயீல் (அலை) அவர்களது பரம்பரையில் வந்தவரே இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. (இப்னு கஸீர் அடிக் குறிப்பு)இந்து நண்பர்களே,நீங்கள் பின்பற்றப்பட வேண்டிய மார்க்கம் இஸ்லாம்தான்,நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒரே தலைவர் நபிகள் நாயகம் மட்டுமே.சிந்தியுங்கள்.அல்லாஹ் நேர்வழி தர போதுமானவன்.இதே போல் பழைய,புதிய ஏற்பாட்டிலும் நபிகள் நாயகம் குறித்து முன் அறிவிப்பு உள்ளதை கிறிஸ்தவ நண்பர்கள் http://egathuvam.blogspot.com என்ற தளத்தில் காணலாம்.

No comments: