Friday, October 31, 2008

MNP - PFI தேசிய அரசியல் மாநாடு

தேசிய அரசியல் மாநாடு
சென்னையில் பிரச்சணிர துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம்
பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச் செயலாளர் இ.எம். அப்துர் ரஹ்மான் பேட்டி


எதிர்வரும் 13, 14, 15 பிப்ரவரி 2009ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அரசியல் மாநாட்டை கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் நடத்தவுள்ளது. இதன் நோக்கம் ""ஆக்கப்பூர்வமான நேரடி அரசியலின் மூலம் முழுமையாக எல்லாத் துறையிலும் சமுதாயத்தை பலப்படுத்த வேண்டும்'' என்பதுதான்.
பலமான அரசியலமைப்பு மற்றும் சட்ட அடித்தளத்தைக் கொண்ட மிகச்சிறந்த ஜனநாயகத்தைக் கொண்டிருக்கும் இந்தியர்களாகிய நாம் அதிர்ஷ்டசாலிகள்.
ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மற்றவர்கள் மீது ஆட்சி செய்யும் என்று பொருள் கொள்ள முடியாது. அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவத்துடன் எல்லாக் குடிமக்களுக்கும் சமநீதி வழங்கக் கூடியதுதான் நமது அரசியல் அமைப்பு.

கடந்த அறுபது ஆண்டுகளாக பெரும் தொழில் நிறுவனக் குழுமங்கள் மற்றும் பாரம்பரிய உயர்சாதியினணிரக் கொண்டு ஆளும் அதிகணிர வர்க்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆளும் வர்க்கம் ஜனநாயகத்திலுள்ள பல்வேறு துறைகளை தவறாக பயன்படுத்தி தங்களுக்கு கீழுள்ள (அடிமைகள் போல கிடக்கும்) மக்களின் நியாயமான கோரிக்கைகளை காலில் போட்டு மிதித்து தங்களுடைய ஆளும் மேல்ஜாதி வர்க்கத்திற்காக மட்டும் சேவகம் புரிந்து வருகின்றது.

இவர்களின் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு பலியாகக் கூடியவர்கள் ஏழைகள், கிரணிமவாசிகள், விவசாயிகள், பழங்குடியினர், தலித்துகள்,சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள். சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்தில் சோஷலிசம் நமது அரசியல் கட்சிகளின் கோஷமாக இருந்தது. இன்று அது காணாமல் போனது.

மேற்கத்திய உலகில் சிறிது சிறிதாக நொறுங்கிக் கொண்டிருக்கும் முதலாளித்துவம், வளர்ச்சி என்ற போர்வையில் நம்மிடம் திரும்பி வந்து கொண்டிருக்கிறது. விவசாய உற்பத்தி, வறுமை ஒழிப்பு, சம பங்கீடு போன்ற அடிப்படை பிரச்சினைகள் புறந்தள்ளப்படுகிறது.

ஜனநாயக வழிமுறையின் மூலமே இந்துத்துவ ஃபாசிஸம் நாட்டின் நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ளது. சட்டம் ஒழுங்கு நிர்வாகம் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஒடுக்குகிறோம் என்ற பெயரில் பல முஸ்லிம்களை சட்டவிரோத கஸ்டடியில் விசாரணை இல்லாமலும், பிணையில் விடுதலை செய்யாமலும் போலி என்கவுண்டர் மூலமாகவும் குறி வைத்து வருகிறது.

மண்டல் கமிஷன் அறிக்கைக்குப் பின் ஒரு சில பிற்பட்ட வகுப்பினணிரச் சேர்ந்த சாதியினர் நாட்டின் ஒரு சில பகுதிகளில் தேர்தல் அரசியலில் முன்னேற்றமடைந்துள்ளனர். எனினும் மதவாதிகள், ஆதிக்க வாதிகள் சட்டமியற்றும் சபைகளில் தொடர்ந்து கோலோச்சி வருகின்றனர். மற்ற சமூக மதப் பிரிவிக்ணிர ஒப்பிடும் போது முஸ்லிம்கள் என்ற இந்த வகுப்பினர் மட்டும் அரசியலில் மிகவும் பின்தங்கியுள்ளனர்.

இந்த பின்னடைவிற்கான காரணம் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்படுவது, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தொகுதியை ரிசர்வ் தொகுதியாக அறிவித்தல் மற்றும் ஹிந்துக்களுடைய ஓட்டுக்கள் கிடைக்காமல் எதிர்ப்புக்குள்ளாகலாம் என்று கருதி அரசியல் கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தத் தயங்குகின்றன. இந்தச் சூழலில், காலங்காலமாக ஓரங்கட்டப்பட்ட சமுதாயம் தங்களுடைய உடனடி (உள்ளூர்) எதிரிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு முறையும் தங்களது ஆதரவு மாற்றும் போக்கைக் கைவிட வேண்டும். இந்த அணுகுமுறை, நாட்டின் கொள்கை முடிவுகளில் முடிவெடுக்கும்போது தங்களது உரிமைகளை தக்க வைக்கவும் (தங்களிடமுள்ள எல்லா வகையான) வளங்களையும் முறையாகப் பங்கீடு செய்து பயன்படுத்துவதிலும் பயனளிக்கிறது.

இந்த பிற்படுத்தப்பட்ட சக்திகளை அரசியல் ரீதியாக ஒன்றுபடுத்தி தங்களுக்குரிய அரசியல் உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மற்றும் இதர சமுதாயத்தினர் இதுவணிர கொடுத்து வந்த நிர்ப்பந்த அரசியல் (Pressure Group Politics) அவர்களின் அரசியல் வெறுமைக்கு தீர்வாகாது. ஓரங்கட்டப்பட்ட வகுப்பினர் அரசியல் சக்தியும், போதிய பிரதிநிதித்துவமும் பெற தேவையான வழிமுறைகளைப் பற்றி விவாதித்து தேவையான தீர்வுகளை செயல்படுத்த இருக்கும் நிகழ்ச்சிதான் தேசிய அரசியல் மாநாடு.

முதல் இரண்டு நாட்கள், நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சிறப்பு விருந்தினர்கள், அறிஞர்கள் மேற்கூரிய கருப் பொருளில் பல்வேறு கோணத்தில் விவாதிப்பர். ""அரசியலில் சக்தி பெறுதல்: மாற்று வழிக்கான தேடல்'' ""தீவிரவாத எதிர்ப்பு மாநாடு'' என்ற தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடைபெறும்.

இதே கருத்தை நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய அரசியல் மாநாட்டின் பிரச்சணிர துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் சென்னையில் நவம்பர் 2ம் தேதி நடைபெறுகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் சேர்மன் இ. அபூ பக்கர் அவர்கள் பொதுக்கூட்டம் வாயிலாக பிரச்சாரத்தைத் துவக்கி வைக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் மனித நீதிப் பாசறையின் தலைவர் முஹம்மது அலி ஜின்னா, துணைத் தலைவர் ஷேக்
முஹம்மது தெஹ்லான் பாகவி, கே.எஃப்.டி.யின் தலைவர் டாக்டர் மஹபூப் ஷரீஃப், மூத்த வழக்றிஞர் பவானி. பா. மோகன், வழக்கறிஞர் எம்.ஜி.கே. நிஜாமுத்தீன் Ex. M.L.A, மௌலானா மன்சூர் காஷிஃபி, முஸ்லிம் தொண்டு இயக்க செயலாளர் முஹம்மது ஹனீஃபா ஆகியோர் பொதுக் கூட்டத்தில் உணிரயாற்றுகின்றனர் என்று பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச் செயலாளர்
இ.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். பேட்டியின் போது எம்.என்.பி.யின் தலைவர் முஹம்மது அலி ஜின்னா, செயலாளர் ஃபக்ருத்தீன், செயற்குழு உறுப்பினர்கள் செய்யது இப்றாஹீம் மற்றும் யூஸுஃப் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்திகள் : இ.எம். அப்துர் ரஹ்மான்
பொதுச் செயளாலர் - PFI

No comments: