Tuesday, October 07, 2008

அமைப்புகளைக் காறி துப்பி குப்பையில் வீசி எறிந்து விட்டு....

சகோதரர் மஸூத் அவர்களுக்கு, இறைவன் மீதான பயபக்தியும் மார்க்கம் மீதான பிடிப்பும் நம் மீது மேன்மேலும் அதிகரிக்கட்டுமாக.

"கத்தரில் தினமலர் இணையத்தை மட்டுமின்றி, பத்திரிக்கை இறக்குமதியையும் தடை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்ற உங்களின் மடலைக் காண நேர்ந்ததால் அது தொடர்பாக விவரங்கள் சேகரிக்கும் முகமாக உங்களுக்கு முந்தைய மடல் அனுப்பியிருந்தேன்.

அதற்கான உங்களின் பதில் எனக்கு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளித்ததால் சற்று விரிவான இம்மடல்.

கத்தரில் உள்ள தௌஹீத் அமைப்பின் பொறுப்பாளராக இருக்கும் உங்களிடமிருந்து இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை.

"இணையதளத்தை முடக்க வளைகுடாவில் வாழும் நூற்றுகணக்கான சகோதரர்கள், பல்வேறு துறைகளுக்கு மின்மடல் அனுப்பியது போன்று நீங்களும் அனுப்பினீர்கள்". ஓக்கே.

ஆனால், "பத்திரிக்கை இறக்குமதியையும் முடக்க மின்மடல் அனுப்பியுள்ளோம்" என்று அதுவும் தமிழகத்தில் உள்ள களப்பணிகளுக்குப் பெயர்பெற்ற ஒரு அமைப்பின் சார்பாக கூறினீர்கள் பாருங்கள். இதனைக் கேட்டு சிரிக்கவா? அழவா? என்று தெரியவில்லை.

அதுவும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய எம்பெருமானார்(ஸல்) அவர்களின் விஷயத்தில், திறந்துப் படிக்கப்படுமா? இல்லையா? என்பதற்கே உத்தரவாதம் இல்லாத மின்மடலை அனுப்பி விட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறுவது அறியாமையா? அல்லது வெட்டி விளம்பரமா? இறைவன் அறிவான்.

விளங்கிக் கொள்ள ஒரு உதாரணம் கூறுகிறேன் கேளுங்கள்:

உங்கள் அமைப்பு சார்ப்பாக ஒரு தாயி கத்தர் வர திட்டமிட்டு, அதற்கான அனுமதி பெற வேன்டி கத்தர் அவ்காஃபை அணுகுகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம்.

"எங்கள் அமைப்பைச் சேர்ந்த இன்ன தாயி கத்தரில் வந்து நிகழ்ச்சிகளில் பங்கு பெற அனுமதி கோருகின்றோம்.

அவர் தாயி என்பதற்கான ஆதாரங்கள்.. இணைப்பில்"

என்பது போன்று ஒரு கடிதம் தயார் செய்து அவ்காஃபிற்கும் சம்பந்தப்பட்ட மற்ற துறைகளுக்கும் ஒரு மின்மடலை அனுப்பி விட்டு, நாட்டிலிருந்துக் கேட்கும் பொழுது, ஆம், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து விவரங்கலும் வைத்து அவ்காஃபிற்கு மின்மடல் அனுப்பியுள்ளோம்" என்று நீங்கள் பதில் அளித்தால் எப்படி இருக்கும்?

இது சாதாரண ஒரு உலக காரியம்.

ஆனால், தினமல மேட்டர் அப்படியா?

நேற்று வரை சமுதாயத்தைச் சமூகத்தின் முன்னிலையில் எவ்வளவு தரம்தாழ்த்த முடியுமோ, அவ்வளவிற்கு செய்து விட்டு, ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனுசனைக் கடிக்கவந்தது போன்று இன்று நம் உயிரினும் மேலான எம்பெருமானாரையே இழிவு படுத்த முனைந்து விட்டத் தினமலத்தை ஒழிப்பது வரை நாம் ஓயலாமா? அதனை விட முக்கியமான வேலை இனி நமக்கு என்ன உள்ளது?.

அத்தகைய முக்கியமான பணியினைத் தௌஹீதைச் சொந்தம் கொண்டாடும் தவ்ஹீத் ஜமாஅத் அல்லவா? முன் நின்று நடத்தியிருக்க வேண்டும்.

ஆனால், வளைகுடாவில் நடந்ததோ நேர் மாறாக.

துபையில் தினமல இணையதளத்தினை முடக்க குறைந்தபட்சம் 10 முறையாவது அமைப்பு சாரா சகோதரர்கள் நேரடியாக அதிகாரிகளை அணுகி சம்ப்வங்களை விவரித்து வெற்றி கண்டனர்.

குவைத்தில் கே-டிக் என்ற அமைப்பு சாரா குழு ஒன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரடியாக அணுகி பத்திரிக்கையையே முடக்கினர்.

இதே நிலை தான் ஓமன் மற்றும் பஹ்ரைனிலும் தொடர்ந்தது.

கத்தரில் கூட, அவ்காஃபின் தமிழ் துறை பொறுப்பாளரிடம் அமைப்பு சாரா சில சகோதரர்கள் நேரடியாக சந்தித்து, கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சம்பவத்தை விரிவாக உரிய ஆதாரங்களுடன் விளக்கிக் கூறி உரிய ஆவணங்கள் அனைத்தையும் ஃபைல் செய்து ஆவணமாக கையளித்து நடவடிக்கை கோரினர். இப்பொழுதும் தொடர்ந்து முயன்றுக் கொண்டிருக்கின்றனர்.

எவ்வித மனித, பொருளாதார பின்புலம் இல்லாத அமைப்பு சாரா சகோதரர்களே இவ்விஷயத்திற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்து களத்தில் நிற்கும் வேளையில் தான், "மின்மடலை ஃபார்வர்ட் செய்து விட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று சக்தி வாய்ந்த அமைப்பின் சார்பாக கூறி திரிகிறீர்கள்.

மனதில் பொங்கும் ஆவேசத்தைச் சொந்தம் சகோதரர்களுக்கு எதிராக உதிர்த்து விடக் கூடாது என்ற எண்ணத்தில், மனதை அடக்கிக் கொண்டு கூறுகிறேன்:

எம்பெருமானாரைப் பழிக்கத் துணிந்தவனின் விஷயத்தை இவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொண்டு நாம் தூங்கிக் கொண்டிருக்கின்றோமே, நாமெல்லாம் நாக்கைப் புடுங்கி நாண்டுக் கொண்டு சாகலாம்(அஸ்தஃபிருல்லாஹ்).

இன்னும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை.

வளைகுடாவில் எப்பேர்பட்ட குவைத்திலேயே இணையதளத்தையும் பத்திரிக்கையையும் எந்த ஒரு அமைப்பின் உதவியின்றி சாதாரண சகோதரர்களாலேயே முடக்க முடிந்துள்ளது எனில், இரு பலமான அமைப்புகள் செயல்படும் கத்தரில் அது முடியாதா? முடியும்.

அதற்கு முதலில் நம்மிடையே இருக்கும் ஈகோவை, இயக்கவெறியைக் கழட்டி வைத்து விட்டு, இதுபோன்ற மார்க்க விஷயங்களில் மட்டுமாவது ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும்.

குறைந்தபட்சம், கத்தரில் செயல்படும் இரு அமைப்புகளும் உண்மையிலேயே எம்பெருமானார் மீது அளப்பரிய அன்பு கொண்டுள்ளது எனில், தம்மிடையே உள்ள கசப்புகளை மாற்றி வைத்து விட்டு, ஒரு நாள் குறிப்பிட்டு கத்தர் முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு தினமல எதிர்ப்பு நிகழ்ச்சி நடத்தி, அன்றே அனைவரும் இணைந்து நேரடியாக அவ்காஃபில் உரிய ஆவணங்களுடன் தங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.

கத்தர் தவ்ஹீத் ஜமாஅத் இதற்கு தயாரா?

இதற்கு இந்த அமைப்புகளின் தமிழக தலைமைகள் ஒத்துக் கொள்ளவில்லை எனில், அமைப்புகளைக் காறி துப்பி குப்பையில் வீசி எறிந்து விட்டு, முஸ்லிம் சகோதரர்களாக ஓரணியில் இணைந்து நின்று இப்போராட்டத்தை நாம் முன்னெடுக்கலாம்.

சிந்தித்து பதில் தாருங்கள்.

எதிர்பார்ப்புடன்
இறை நேசன்.

குறிப்பு:

//Always we are open to show our identiy and do take responsibiltiy for our actions...//

இதனை நீங்கள் என்ன அர்த்தத்தில் எழுதினீர்கள் என்பது புரியவில்லை.
எழுத்துலகில் இருப்பவர்கள் தங்களுக்கு ஒரு புனைபெயர் வைத்துக் கொள்வது நடைமுறையில் உள்ளது தான். இறை நேசன் என்ற எனது புனைப் பெயரின் மூலம் எவ்வித மார்க்க முரணான காரியங்களையும் நான் செய்ததில்லை. ஒருவேளை செய்திருந்தால் அதனை நான் தான் செய்தேன் என பொறுப்பெடுக்க எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை.

அப்புறம், புனைபெயரெல்லாம் வந்தேறி இரத்தவெறி கொண்ட பார்ப்பன அயோக்கிய சங்பரிவாரங்களை எதிர்கொள்ள எழுத்துலகிற்கு மட்டுமே. சொந்தம் சகோதரர்களுக்கல்ல.

கத்தரில் மார்க்க விஷயங்களுக்கு ஒன்றிணைந்து களம் காண நான் வைத்தக் கோரிக்கையைப் பரிசீலித்து பதிலளியுங்கள். நேர்மறையான பதில் எனில், அது தொடர்பாக பேசவும் முதல்படியாக தினமலத்துக்கு எதிரான போராட்டத்திற்குக் களம் அமைப்பது குறித்து ஆலோசித்து செயல்படவும் நேரில் சந்தித்து உரையாட எந்நேரமும் தயாராக உள்ளேன், இன்ஷா அல்லாஹ்!.

எனது மனதில் எழுந்த ஆதங்கங்களைச் சொந்தம் சகோதரர்கள் என்ற எண்ணத்தில் உரிமையுடன் வெளிப்படுத்தியுள்ளேன். இதில் ஏதாவது உங்களின் மனதை நோகடித்திருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னியுங்கள்.


அன்புடன் சகோதரன்

No comments: