Tuesday, July 22, 2008

பி.ஜே குர்ஆன், ஹதீஸை மட்டும்தான் சொல்கின்றாரா? - Taif சயீத் சவால்

S.M. பாக்கருக்கு, பகிரங்க சவால்!

S.M. பாக்கர் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்!

நீங்கள் பேசி வருவதாவது "எங்களிடம் தனிமனித வழிபாடு ஏதும் கிடையாது. குர்ஆன் ஹதீஸை மட்டும்தான் சகோதரர் பி.ஜே அவர்கள் சொல்கின்ற காரணத்தினால் அவர் சொல்வதை கேட்கின்றோம்" என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றீர்கள். உங்களிடம் மீடியா இருப்பதால், இது பல இலட்சம் மக்களை இலகுவாக சென்றடைந்து கொண்டிருக்கிறது. அதை நம்பக்கூடியவர்களும் அதிக அளவில் இருக்கின்றனர்.

"சகோதரர் பி.ஜே குர்ஆன், ஹதீஸையும் சொல்லி வருகின்றார்" என்று சொல்வீர்கள் என்றால் அது உண்மையாக இருக்கும். ஏன் என்றால் சமீப காலங்களாக சகோதரர் பி.ஜே அவர்கள் குர்அன், ஹதீஸீக்கு மாற்றமாக பிரச்சாரங்கள் செய்து வருகிறார். நீங்கள் உண்மைக்கு மாற்றமாக சொல்லி மக்களுக்கு தவறான வழியைக்காட்டுகின்றீர்கள்! இதை பார்த்து கொண்டிருக்க முடியாது.

ஆகவே நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளராக இருந்தால், அதை நிரூபிக்க தயாரா? நீங்கள் கூறுவது தவறு என்று நான் நிரூபிக்க தயாராக இருக்கின்றேன். இன்ஷா அல்லாஹ்.

தாங்கள் தவறாக (பி.ஜே குர்ஆன், ஹதீஸை மட்டும் தான் சொல்கின்றார் என்று) பிரச்சாரம் செய்து மக்களை நம்ப வைப்பதை வாபஸ் வாங்குங்கள், இல்லையேல் இந்த பகிரஙடக சவாலை எதிர் கொள்ளுங்கள்.

இதற்கு எந்த ஒரு பதிலையும் தராமல் நீங்கள் அலட்சியம் செய்வதாக சொல்லி, திசைதிருப்ப முயற்ச்சித்தால், நீங்கள் பிரச்சாரம் செய்வது தவறானது என்பதற்கு அதுவே ஆதாரம்.

ஆகவே கீழ்கண்ட தலைப்பில் நீங்கள் விவாதிக்கத் தயாரா? என்று பகிரங்க அறைகூவல் விடுக்கின்றென்.

தலைப்பு :

"பி.ஜே அவர்கள், குர்ஆன், ஹதீஸை மட்டும்தான் சொல்கின்றாரா?"



முதலில் விவாதிக்க உங்கள் ஒப்புதல் வேண்டும். அதன் பின்பு எப்பொழுது? எங்கு என்பதை முடிவு செய்வோம். இன்ஷா அல்லாஹ்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

N. SAEED
Saudi Oger Ltd. P.O Box - 1250 - Al taif 41888, Saudi Arabia.
Mobile : +966502347599, E.Mail saeed_taif@yahoo.com


இவரின் பழைய கட்டுரைகள் :

ஜகாத் ஓர் ஆய்வு - பி.ஜே யின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன் (PART-01)

.

ஜகாத் ஓர் ஆய்வு - பி.ஜே யின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன் (PART-02)

.

ஜகாத் ஓர் ஆய்வு - பி.ஜே யின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன் (PART-03)






1 comment:

Unknown said...

என்.சயீது அவர்களுக்கு,

உங்களின் சவால் படித்தேன். உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.

களியக்காவிளையில் நடந்த விவாதத்தில் தோல்வியடைந்த பி.ஜெ. குரூப் சவால் விடுவதை நிறுத்திவிட்டது. அவர்களின் தொண்டர்களுக்கு இது தெரியாமல் நாங்கள் சவால் விடுகிறோம் ஏற்பதற்கு யாருமில்லை என்று கூச்சலிட்டுகொண்டிருக்கின்றனர். என்றாவது ஒருநாள் யாரை கேட்டு "விவாதம்" என்று சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள் என்று சீற்றம் கொண்டு ததஜ தொண்டர்களை எதையாவது கையில் எடுத்து அடிக்காத குறையாக பி.ஜெ. விரட்டியடிப்பார்.

களியக்காவிளையில் நடந்த விவாதத்தில் தோல்வியடைந்து "விவாதம்" என்கிற வார்த்தையை சொல்வதற்கே வெட்கப்படும் பி.ஜெ., வாழ்க்கையில் இனி ஒரு போதும் விவாதத்தில் கலந்து கொள்ளமாட்டார்.

களியக்காவிளையில் நடந்த விவாதத்திற்கு பிறகு தானே மதுரையில் ஜகாத் விவாதம் நடந்தது என்று சொல்வார்கள். எப்படி அந்த விவாதம் முடிந்தது என்பது தான் எல்லாருக்கும் தெரியுமே. நான் வேறு விளக்கவேண்டுமா? அப்படி இருக்கும் போது பாக்கர் மட்டும் எப்படி கலந்து கொள்வார்?

நீங்கள் விடுத்திருக்கும் சவாலுக்கு இதுவரை பதில் வந்திருக்காது என்றே நினைக்கிறேன. அப்படியே பதில் வந்தாலும் உங்களை குழப்பி விவாதத்தை ரத்து செய்வது போல தான் பதில் வந்திருக்கும். எத்தனையோ விவாதங்களை அவர்கள் இப்படித்தான் கையாண்டு ரத்து செய்து ததஜ தொண்டர்களை முட்டாளாக்கி கொண்டிருக்கிறார்.

களியக்காவிளையில் சிக்கினார். தோல்வியை தழுவினார்.

எனவெ உங்கள் சவாலை ஏற்று பாக்கரோ அல்லது பி.ஜெ என்பவரோ விவாதத்திற்கு வரமாட்டார்கள்.

உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.