Wednesday, July 30, 2008

சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை

சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை


ஜூலை 24,2008,00:00 IST

மதுரை: அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள், கலை, அறிவியல் கல்லூரிகள், ஐ.டி.ஐ., ஐ.டி.சி.,களில் பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.2007-08 ல் உதவித் தொகை பெற்று தொடர்ந்து படித்தால் பள்ளி மேற்படிப்பு ( புதுப்பித்தல்) கல்விஉதவித் தொகை பெறலாம். இறுதி தேர்வில் 50 சதவீத மதிப்பெண், ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் இருக்க வேண்டும். வகுப்புகளுக்கு ஏற்ப ரூ. 3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை உதவித்தொகை கிடைக்கும். விடுதி மாணவர்களுக்கு மாதம் ரூ. 235 முதல் ரூ.510 வரை, மற்றவர்களுக்கு ரூ.140 முதல் ரூ.330 வரை 10 மாதங்களுக்கு வழங்கப்படும். கல்வி நிறுவனங்களுக்கு புதுப்பித்தல் ஆக.,10 மற்றும் புதிதாக ஆக.,31 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் பட்டியலை புதுப்பித்தல் ஆக.,20, புதியது செப்.,10 க்குள் கலெக்டர் அலுவலக பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு www.minorityaffairs.gov.in இன்டர்-நெட் முகவரியில் வெளியிடப்பட்டுள்ளதாக கலெக்டர் எஸ்.ஜவஹர் தெரிவித்துள்ளார்.

குறிப்பு : சமுதாய நலன் கருதி குவைத்திலிருந்து மெளலவி பரங்கிபேட்டை கலீல் பாக்கவி அவர்களின் சுட்டிக்காட்டல் மற்றும் வேண்டுகோளுக்கினங்க இந்த செய்தி இங்கு வெளியிடப்படுகின்றது.
நன்றி : தினமலர்

No comments: