Wednesday, July 23, 2008

சுதந்திரம்" என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை

"சுதந்திரம்" என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை"

அன்புள்ள சகோதரர் திருச்சி அமானுல்லாஹ் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ

நேற்று (22-07-2008) நீங்கள் அனுப்பிய ஈ மெயிலை பார்த்ததும் .....தவறாக புரிந்து கொள்ளக்கூடிய மனிதரிடமிருந்து வந்திருக்கிறதோ என்கின்ற எண்ணம்தான் உண்டானது. எழுத்தில் கோபம் தெரிகிறது, ஆனால் ஏன்? எதற்கு என்பதுதான் புரியவில்லை.



" உங்கள் கோபத்துல அல்லாஹ் தண்ணிய ஊற்றுவானான, வயிற்றெரிச்சலில் பாலை பாலை ஊற்றுவானாக" என்ற ஆரம்ப வார்த்தைகளே நீங்கள் எதையோ படித்துவிட்டு தவறாகப்புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அறிய முடிந்தது. "


ஐடிஎம்கே" அண்ணே! என்றுவேறு எனக்கு அறிமுகமில்லாத ஒரு கட்சியின் உரிப்பினராகவே என்னை ஆக்கி விட்டீர்கள். இதுவரை எந்த அரசியல் கட்சியலும் இருந்ததில்லை, ஆனால் அரசியலை சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக எடுத்து படித்தவன்தான். அதுமட்டுமல்ல உலக அரசியலையும் ஓரளவு படித்ததிருக்கிறேன். காரணம் ஐரோப்பாவில் பல ஆண்டுகள் இருந்தவன், உலகிலுள்ள ஏராளமான பத்திரிகைகளை படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றவன். இன்னும் சொல்லப்போனால் இன்று இருக்கும் பல கட்சியின் தலைவர்களுக்கு அரசியல் பாடத்தையே கற்றுக் கொடுக்கக்கூடிய அளவுக்கு அல்லாஹ்வால் கல்வி ஞானத்தை கொடுக்கப் பெற்றவன்தான்.

தமுமுக வின் மீது எமக்கு நல்ல அபிப்ராயம் உண்டு. அதுபோன்று தௌஹீத் ஜமாஅத்தார்கள் மீதும் நல்ல அபிப்ராயம் உண்டு. பொதுவாக உலகிலுள்ள எந்த மனிதரையும் வெறுக்கச் கொல்லி இஸ்லாம் சொல்லவில்லை. இன்று உலகில் வாழும் அத்தனை பேருமே பெருமானார் ஸல்லல்லாஹ

{ அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்துகள் தான் (அவர்கள் எந்த மதத்தை எந்த இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரியே!) என்பதை மனிதில் ஆழமாக பதிய வைத்துக் கொண்டீர்களானால் மற்றவர்கள் மீது எந்தவிதமான வெறுப்பும் வராது. அவர்கள் காஃபிராக இருந்தாலும் சரியே! ஏன் அவர்களும் அல்லாஹ்வின் படைப்புதானே!

ஆனால் இன்று என்ன நடக்கிறது. முஸ்லிம்களுக்குள்ளேயே போட்டி, பொறாமை, வெறுப்பு! இதைவிட கொடுமை வேரென்ன இருக்க முடியும்? என்ன காரணமாக இருக்க முடியும் என்று கொஞ்ச நேரம் அமைதியாக யோசித்துப் பாருங்கள். இஸ்லாத்தைப்பற்றி சரியாக புரிந்து கொள்ளாத சமூகத்தினராக இன்றைய முஸ்லிம்கள் வாழ்வது முக்கிய காரணம்.



தமுமுக வில் சேருமாறு அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். நன்றி. ஆனால் பலவிதமான மனிதர்களை படைத்துள்ள அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் பொருப்புகளை அளித்துள்ளான். தகுதிகளை வழங்கியுள்ளான். அவரவர்களின் வழியில் எது சிறந்தது என்பதை தேர்வு செய்து வாழும்போதுதான் அது அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். அதைவிடுத்து தமுமுக வில் நான் சேரும் பட்சத்தில் எனது கல்வி ஞானம் முதற்கொண்டு மற்ற செயல்பாடுகளும் அதன் தலைமைக்கு கட்டுப்பட வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும்.


"சுதந்திரம்" என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை. அதை எதற்காக ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு நான் இழக்க வேண்டும்? இன்றைய கட்சிகளையும், இயக்கங்களையும் மேலோட்டமாக பார்த்தாலே ஒரு விஷயம் தௌ்ளத் தெளிவாக புரியும்.


* ஜமாஅத்தே இஸ்லாமியா? மௌதூதி அவர்களின் கொள்கைதான் அவர்களுக்கு அஸ்திவாரம்.


* தௌஹீத் ஜமாஅத்தா? பி.ஜே. என்ன சொல்கிறாரோ அது மட்டும்தான் அவர்களுக்கு இஸ்லாம்.


* சுன்னத்துவல் ஜமாஅத்தா? நாங்கள் செல்வது மட்டும்தான் இஸ்லாம். நீங்களாக சிந்திக்க அனுமதி கிடையாது! (சிந்திக்க தூண்டுகின்ற மார்க்கத்தில் சிந்தனைக்கு 144 போடுகின்றவர்கள்.)


* தரீக்கா குரூப்பா? முஸ்லிம்களை முஷ்ரிகீன்களாக ஆக்கியே தீர்வது என்ற முடிவோடு இருப்பவர்கள்.


* தப்லீக் ஜமாஅத்தா? தொழுகை ஒன்றே போதும். வீட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் சரி 40 நாள் ஜமாஅத்துக்கு வா எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பவர்கள். அதுமட்டுமின்றி ஒருசில விஷயங்களை மட்டும் உள்வாங்கிக்கொண்டு பெரிய ஆலிம்களுக்கு இணையாக தங்களை நினைத்துக் கொள்பவர்கள்.


மேலே சொன்ன இவர்கள் எவரிடமும் நடுநிலைப்போக்கு இல்லை. அதன் காரணமாக எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களுக்கிடையே வெறுப்பு, போட்டி, பொறாமை அத்தனையும் கண்கூடாக இன்று சமுதாயத்தில் காணமுடிகிறது. இவ்வளவையும் மீறி ஒருசில இயக்கங்களால் நன்மை விளையத்தான் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.


நீங்கள் தமுமுக வில் இருக்கிறீர்கள். அதில் இருப்பதன் வாயிலாக சமுதாயத்துக்கு நல்லது செய்யு முடியும் என்று நம்புகிறீர்கள். உங்கள் நிய்யத்தை அல்லாஹ் கபூல் செய்வானாக, ஆமீன். ஆனால் நடுநிலை போக்குடன் இருந்தால்தான் இம்மையிலும், முக்கியமாக மறுமையிலும் வெற்றயடைய முடியும் என்பது எனது கருத்தாக இருக்கிறது. (இந்த சமுதாயத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் நடுநிலை சமுதாயம் என்று குறிப்பிடுவதை நினைவில் கொள்ளுங்கள்) அதுமட்டுமின்றி எந்த இயக்கத்தில் சேர்ந்தாலும் தலைமைக்கு கட்டுப்படவேண்டிய கட்டாயத்தில் எனது சுதந்திரம்



பாதிக்கப்படலாம். தேவையா எனக்கு இது! அவரவர்கள் விரும்பிய இடத்தில் முழு மனத்தூய்மையோடு பணியாற்றினாலே எல்லா வெற்றியையம் அல்லாஹ் கொடுப்பான். வஆகிருதஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.



எம்.ஏ.முஹம்மது அலீ

11 comments:

Anonymous said...

அன்பு சகோதரர் முஹம்மது அலி அவர்கட்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்
இயக்கம் சம்பந்தமான தங்கள் உள்ளக்குமுறல் புரிந்து கொள்ள கூடியதே. நாம் நடுநிலை சமுதயம். இஸ்லாத்தை விட இயக்கத்தை மேலாக கருதுவது ஒரு தீவிரம் என்றால் இயக்கமே தவறு என்று நினைப்பது இன்னொரு தீவிரம். தனி தனி தீவுகளாக நாம் ஒன்றும் செய்ய முடியாது. நாம் ஜமாத்தாக தான் வாழ வேண்டும். எனவே இன்றைய இயக்கங்களை ஆய்வு செய்யுங்கம். எது மனித சட்டங்களின் அடிப்படையில் அல்லாமல் இறை சட்டத்தின் அடிபடையில் ஒரு சமூகத்தை கட்டி எழுப்ப அழைகிறதோ அதில் இணையுங்கள். அவ்வாறு எதுவம் இல்லையென்றால் ஓட்ட கருத்துள்ளவர்களை ஒன்றிணையுங்கள்.

Brother in faith
Mohamed Ferozkhan
www.mohamedferozkhan.blogspot.com

Unknown said...

உங்களிடம் அப்படி என்ன நடுநிலைப்போக்கு இருக்கு? ஒவ்வொரு அமைப்புக்கும் ஒவ்வொரு இலக்கணம் கொடுத்த நீங்கள் உங்களுக்கு எந்த இலக்கணமும் இல்லை அப்படித்தானே. அது உங்கள் விருப்பம்.

ஆனால் உங்களின் கருத்தில் நான் சார்ந்திருக்கும் ஜமாஅத்தையும் இழுத்திருப்பதால் நான் உங்களிடம் ஆதாரம் கேட்கிறேன். ஆதாரத்தை பதிவு செய்யுங்கள்.

நீங்கள்
"சுன்னத்துவல் ஜமாஅத்தா? நாங்கள் செல்வது மட்டும்தான் இஸ்லாம்." "நீங்களாக சிந்திக்க அனுமதி கிடையாது! (சிந்திக்க தூண்டுகின்ற மார்க்கத்தில் சிந்தனைக்கு 144 போடுகின்றவர்கள்.)" இவ்வாறு தாக்கி உங்கள் கருத்தை பதிவு செய்துள்ளீர்கள்

எந்த ஆலிம் இப்படி சொன்னார்? என்று எம்.ஏ.முஹம்மது அலீ என்பவரோ அல்லது க.அ. முகம்மது பஸ்லுல் இலாஹி என்பவரோ ஆதாரத்துடன் வெளியிடுவார்களா? இல்லை முஸ்லிம்கள் நடந்துகொள்கிற நடைமுறையைப்பார்த்து இவ்வாறு சொல்கிறார்களா?

முதலில் உங்களின்

"நீங்களாக சிந்திக்க அனுமதி கிடையாது!" "(சிந்திக்க தூண்டுகின்ற மார்க்கத்தில் சிந்தனைக்கு 144 போடுகின்றவர்கள்.)"

என்ற இந்த குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிருபியுங்கள். எந்த சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் இந்த தடை உத்தரவு போட்டார்கள்? யாராவது ஒரு ஆலிமை ஆதாரத்தோடு நிருபியுங்கள் நிருபிக்க முடியாத பட்சத்தில் நீங்கள் முஃமீனாக இருப்பீர்களானால் மன்னிப்பு கேளுங்கள்

(உங்களின் ஆதாரப்பூர்வமான நிருபித்தலும் அல்லது நீங்கள் முஃமீனாக இருப்பீர்களானால் மன்னிப்பு கோருதலும் இதே தமிழ் முஸ்லிம் அரசியல் மேடையிலேயே பதிவாகட்டும்)

தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,
நீங்கள் மூன்று பேர் இருந்தால் அதில் ஒருவர் அமீராக இருக்கட்டும் என்பது நபி மொழி. இதை அறியாத மூஃமின் உண்டா. இதில் தலைமைக்கு கட்டுப்பட மாட்டேன் அதில் என் சுதந்திரம் பறிபோகிறது என்றால் இஸ்லாமிய வழிமுறைகளின் படி தாய் தந்தையருக்கு கட்டுப்பட்டு தான் வாழவேண்டும் அப்போதெல்லாம் உங்கள் சுதந்திரம் என்னவாகும். அப்படியென்றால் தனக்காக மட்டும் வாழும் ஒரு சுயநலவாதியா நீங்கள். உங்கள் கட்டுரையில் ஆழ்ந்த முடிவு இதைதான் சொல்கின்றது. இஸ்லாம் எங்குமே தனித்திருக்க சொல்லவில்லை. மக்களோடு மக்களாக, ஜமாஅத்தோடு ஜமாஅத்தாக கலந்து இருப்பதைத்தான் வலியுறுத்துகின்றது. நம் தலைமுறைக்கு பாத்திரமாய் தமுமுக இருக்கின்றது. பத்திரமாய் பாதுகாப்பது நமது உரிமையில் இருக்கின்றது. சிந்தித்து சீர் பெறுங்கள். வஸ்ஸலாம்.

Anonymous said...

15% முஸ்லிம்கள் இருந்து கொண்டு,50 வருடங்களாக 2- 3 எம்.எல்.ஏ, 1 எம்.பி என்று மட்டுமே இருந்து வந்துள்ளோம். சினிமாவில் எதோ லஞ்சத்தை ஒழிப்பது போல் பேசி இன்று 5% ஓட்டுக்களை வைத்து இருக்கும் நடிகர் விஜயகாந்த் நிலையைக் கூட பிடிக்க இயலுமா என்று இன்று வரை எந்த முஸ்லிம் தலைவராலும் கூற முடிய வில்லை. ஏன்? நமக்குத் தான் அல்லாஹ் சுதந்திரத்தை கொடுத்து விட்டானே!! இருக்கும் கூட்டமைப்புகளில் த.மு.மு.க இந்த இடத்தை நிரப்ப பல போராட்டங்களுக்குப் பின் முயற்சி செய்து வருகின்றது. கேரளாவிலும் இப்படி பல அமைப்புகள் இருந்தாலும் எலெக் ஷன் நேரத்தில் ஓட்டுப் போட மட்டுமாவது ஒன்றாகி விடுகிறார்கள். MMK என்று புதிய கட்சியாக அரம்பித்திருக்கிறார்கள். ஓட்டுப் போடும் சமயத்தில் மட்டுமாவது ஒரு கட்சி என்ற பெயரில் 8 - 10% முஸ்லிம்களை ஒன்றிணைத்தாலே நாம் இன்ஷா அல்லாஹ் பல நன்மைகளை அடையலாம்.

Anonymous said...

சகேதரர் SHAN அவர்களே,

நாம் ஏன் MMK வை ஆதரிக்க வேண்டும்? இவர்களால் வெற்றி பெற இயலுமா? MMK நிற்கும் அனைத்து தொகுதிகளிலும் அவர்களின் எதிர் அணி ததஜ எதிர்த்தே வேலை செய்டவார்கள்.ஆக அனைத்து தொகுதிகளிலும் MMK தொற்பது உறுதி.

இந்நிலையில் நீங்கள் ஏன் ஒரு மாற்றாக IDMK வை ஆதரிக்க முன்வர கூடாது?

தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் said...

அன்பு நண்பர் புதுகை தென்றல் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்..,
கடந்த தேர்தலில் கூட தமுமுக ஆதரிக்கும் திமுகவை எதிர்த்து அதிமுகவிற்கு ததஜ மிக நன்றாக வேலை செய்தது. அதே போல் இனிவரும் காலங்களிலும் தமுமுக ஆதரிக்கும் முமுகவை எதிர்த்து தான் ததஜ வேலை செய்யுமே தமுமுகவை எதிர்த்து அல்ல. மேலும் IDMKவை போல் மமுக வெறும் இஸ்லாமியர்களை மட்டும் வைத்து இயங்க கூடிய கட்சியல்ல. கிருஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் போன்ற அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய பொதுக் கட்சியாகத்தான் தமுமுக மமுகவை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. அதனால் தோல்வி என்பதை இறைவன் புறத்திலேயன்றி வேறு எவரும் கொடுத்துவிட முடியாது. மேலும், தமுமுகவிற்கு IDMKவை விட 15ஆண்டு கால தியாக வரலாறு மக்கள் மத்தியில் பதிவாகி இருக்கின்றது. தமுமுக அரசியல் பாதையில் செல்ல 2004ல் திட்டமிட்டு அதற்கான சீரிய வழிமுறைகளை கையாண்டு வருகிறது. ஆனால் தமுமுகவிற்கு போட்டியாக கட்சி ஆரம்பித்து விட்டால் மட்டும் போதுமா. சிறை, சித்திரவதை, போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, மாநாடு,கைது, காவல் என பல்வேறு படிநிலைகளை தாண்டி மக்கள் மனதில் ஒரு அகண்ட, ஆழமான இடத்தை பெற்றிருக்கின்றது என்பது எவரும் சொல்லித்தெரிவதில்லை. இணைய தொடர்பும், உலகளாவிய அறிவும் பெற்றிருக்கம் நீங்களா இப்படி கேள்விகள் கேட்பது. சீரிய சிந்தனை மேலோங்க துஆ செய்கின்றேன். வஸ்ஸலாம்.

Anonymous said...

ஐயா மானங்கெட்ட தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் அவர்களே,

உங்களுக்கு இதே மாதிரி எங்கயாவது போய் வாயைக் கொடுத்து கேவலப்பட வேண்டியதே வேலையாப்போச்சு!! என்ன செய்வது உங்களுக்கு அறிவு அவ்வளவு தான்!!

உங்களுக்கு யாராய்யா சொன்னது IDMK முஸ்லிம்களுக்கு மட்டுமேயானது என்று? இந்திய தேசிய மக்கள் கட்சி என்ற அதன் பெயரிலேயே அதற்கு விடை உள்ளதய்யா!! அதே போல் உங்கள் கட்சியின் பெயரிலேயே நீங்கள் கூறும் கூற்று பொய் என்பதற்கு விடை உள்ளது.

இந்திய தேசிய மக்கள் கட்சி ஆரம்பித்தபோதே அது பல்நோக்கு பார்ரவயுடையதாக ஆரம்பி்ககப்பட்டுள்ளது. அதன் நிர்வாகிகளில் ஓன்றிய அளவில் இருந்து மாநில அளவு வரை அனைத்து மதம் / ஜாதியினர் உள்ளனர். ஐடிஎம்கே யின் நோட்டிஸ்களை பார்த்தாவது உங்களுக்கு தெறியவில்லையா?

முஸ்லிம்ளையே அரவனைத்து போக முடியாத உங்கள் அமைப்பு எப்படி ஐயா பொதுக் கட்சியாக செயல்படும்?

15 வருட அனுபவத்தில் நீங்கள் சாதித்தது என்ன? உங்கள் நிர்வாகிகள் தங்களை வளப்படுத்தி கொண்டார்கள். சமுதாயத்தை ஐந்தாக கூறு போட்டீர்கள் பலரை காவு கொடுத்தீர்கள்? வேறு என்ன சாதித்தீர்கள்?வழக்கு முடிந்து தண்டனை காலத்தை விட கூடுதலாக சிறையில் இருந்து விட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சிறைவாசிகளை நீங்கள் விடுவித்து விட்டதாக தம்பட்டம் அடித்து வாங்கி கட்டிக் கொண்டீர்கள்.

உங்களால் வழக்கு நடத்தப்படட கே.கே நகர் சிறைவாசிகிளில் பெரும்பான்மையினர் வெளியே வந்தவுடன் ததஜ வுடன் சோந்து விட்டனர்.

இதுதான் உங்கள் 15 வருட சாதனைகள். 15 வருடமும் தமுமுக வுடன் பணியாற்றி அனுபவம் கொடுத்து அனுபவம் பெற்றவர்களால்தான் இந்திய தேசிய மக்கள் கட்சி ஆரம்பிக்கப்பட:டள்ளது. உங்களையும் இதில் இணைத்து கொள்ளுங்கள்.

Anonymous said...

த.த.ஜ வை இனிமேல் ஒரு அரசியல் அமைப்பாக பார்க்கும் தமிழ் முஸ்லிம்கள் ஏமாறப் போவது உறுதி. IDMK என்று ஒரு புதிய அமைப்பைத் தோற்றுவித்து இன்னொரு பிரிவையே ஏற்படுத்துகிறீர்கள். எப்படி கடவுள் இல்லை என்பவர்கள் புதிதாக ஒரு கோட்பாட்டை உருவக்குகிறார்களோ அதுபோல் தான் உங்கள் அமைப்பும் மேலும் ஒரு பிரிவையே சேர்க்கின்றது. எத்தருணத்திலும் முஸ்லிம் அல்லாதவர் முஸ்லிம் கட்சியில் இணைய வாய்ப்பே இல்லை. பி.ஜே.பி யில் முஸ்லிம் பெயர் உள்ளவர்கள் இருப்பதைப் போல் தான். எந்த அமைப்பும் தலைவர்கள் வளர்ச்சி அடையாமல் வளர இயலாது. நாமெல்லாம் ஒன்றாக இருக்கும் போது நம்மிடையே உள்ள பாஸிட்டிவ் விஷயங்களில் கைக்கோர்த்துக் கொள்ள வேண்டும். கேரள அமைப்புகள் ரியாத்தில் 30க்கும் மேலே உள்ளன. நாம் மார்ச் 7 2007 டில்லி பேரணிக்காக அவர்கள் எல்லோரையும் அணுகிணோம். 25 அமைப்புக்களைச் சேர்ந்த செயலாளர், தலைவர்கள் கலந்து கொண்டு ஆதரவு கொடுத்தார்கள். இது போல் நம்க்குப் பொதுவான விஷயங்களில் கைக் கோர்த்துக் கொள்ளாலாமே. இதற்கு இன்னொரு புதிய அமைப்பு எதற்கு? தமிழ் நாட்டைப் பொருத்தவரை இரண்டு கட்சிகளைத் தவிர மற்ற எந்த கட்சியும் தனியாக ஆட்சியில் உட்கார இயலாது.

Anonymous said...

வாங்க ஷான் குவைத்,

//இது போல் நம்க்குப் பொதுவான விஷயங்களில் கைக் கோர்த்துக் கொள்ளாலாமே. இதற்கு இன்னொரு புதிய அமைப்பு எதற்கு? //

அப்படி என்றால் தமுமுக எதற்கு கட்சி ஆரம்பிக்கனும் நீங்க சொல்வது போல் புதிய அமைப்பு தேவையில்லையே தமுமுக முஸ்லிம் லீக்கோடு கை கோர்த்திருக்கலாமே?

முஸ்லிம்களின் தமிழக அரசியலுக்கு சரியான தீர்வாக இந்திய தேசிய மக்கள் கட்சியே அமையும். நீங்களும் ஐடிஎம்கே வோடு கை கோக்கலாம் வாங்க ஷான்.

தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் said...

// ஐயா மானங்கெட்ட தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் அவர்களே //

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,
தோழர் புதுகை தென்றல் அவர்களே முஸ்லீம் அரசியல் மேடையில் உனக்கு என்ன வேலை. நீங்கள் உபயோகித்த வார்த்தையை விட தரமான வார்த்தைகளை கற்று வைத்திருக்கின்றேன். ஆனால், அதற்கு இந்த மேடை அனுமதித்தால் அடுத்த பதிவில் பதிகின்றேன்.

Anonymous said...

இன்று நான்கு நபர்கள் சேர்ந்து ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து விட்டால், அதில் உள்ள சிலருக்கு தலைவராக ஆசை வந்துவிடுகிறது. இதை நாம் ஒரு வளர்ச்சியாக எடுத்துக் கொண்டு, பொது விஷயங்களில் கைக் கோர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்பதுதான் நம் வேண்டுகோள். நான் குவைத் த.மு.மு.க வைச் சார்ந்தவன். இதற்கு சில மாதங்களுக்கு முன்னர் ரியாத் மாநகரத்தில் த.மு.மு.கவைச் சார்ந்து இருந்தேன். இன்றைய சூழலில் இது ஒரு உயர்ந்த குறிக்கோல் கொண்ட அமைப்பாக செயல் பட்டு வருகிறது. இதுவே எனது நிலைப்பாடாகும். குவைத்தில் முதன்முறையாக "உணர்வாய் உன்னை" மற்றும் "அல்ஹம்துலில்லாஹ்" நிகழ்ச்சி கடந்த வாரம் அல்லாஹ்வின் கிருபையால் இனிதே நடந்தது. சகோதரர் ஜலால் அவர்கள் ஒற்றுமையைப் பற்றி பேரும் போதும், அல்லாஹ்வின் மகிமையைப் பற்றி பேசும் போதும் அரங்கமே அழுதது. நிறைய ஜலால்கள் உருவாக முயற்சி செய்வோம். இன்ஷா அல்லாஹ். நம் ஊரிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பின் டிரைவர், வீட்டு வேலை விசாவில் ஒருவர் கூட வரக் கூடாது. நம் பிள்ளைகளில் ஒருவரை ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் அதிகாரியாக வர முயற்சி செய்யாலாமே. அதற்கு என ஒரு அமைப்பை உருவாக்கலாமே. அல்லது நம் விட்டிலேயே இந்தப் பணிக்கு வித்திடலாமே.