
கட்டை கட்டையாய்ஒட்டுத்துணியுடன்ஓயாது உலாவருகின்றஇளைஞர் சமுதாயமே! - ஒரு கணம்மண்ணறை எனும் படு குழியை நினைத்துப்பார்!
பாசமெனும் பள்ளியறைக்குள்நேசம் எனும் நெருக்கத்தினால்மானமென்றும் மரியாதை என்றும் மறக்கின்றமாந்தர்களின் மண்ணறையை நினைத்துப்பார்!
நித்திரையின்றி நித்தம் நித்தம்நெருங்க முடியா சத்தம் சத்தம்வீடு எனும் தேட்டருக்குள் காட்டுகின்ற கட்டம் -அதுமண்ணறையை மறந்த பெண்களின் மச்சம்.
நாகரீகம் எனும் நாசத்தினால்நாள் தோறும் வரும் வேசத்தினால்காதல் என்று கைகோர்த்து - இதுமண்ணறையை மறந்தவர்களின் காத்திருப்பு.
மார்க்கத்தில் மந்தைகளாகஉலகத்தில் உத்தமராகஉலா வருகின்ற இளைஞர்களே!மண்ணறை எனும் படுகுழியை நினைத்துப்பார்!
மதுவுக்குள் மாட்டிதினந்தோறும் அதில் மூழ்கிமுதுமை எனும் முதுகு உணர்த்தினால் மார்க்கத்தை மறந்தமடையர்களின் மண்ணறையை நினைத்துப்பார்!
ஆடையில் ஆரறை குறைப்புஅதில் ஓரிரை மறைவுபாரினில் பாழடைந்தவர்களின் நடிப்பு - இதுமண்ணறை எனும் படுகுழியை மறந்தவர்களின் நினைப்பு!
இளைஞர் கூட்டமே!இரும்புக்கோட்டையினுல் இருந்தாலும்இருப்பைக் காவுகொள்ளும் கொடூரம் நிறைந்தமரணத்தை மறந்து வாழ்வின் அர்த்தத்தை இழந்துவிடாதே!
மரணத்தை நினைத்துப்பார்!
அன்புடன்
எம்.எச்.பஸ்மிய்யா
அல்குர்ஆன் விரிவுரைக்கான கற்கை வகுப்பு மாணவி
நன்றி தாருல் அதர் அத்தஅவிய்யா
No comments:
Post a Comment