Thursday, April 24, 2008

மருத்துவர் ஐயா இராமதாஸ் அவர்கள் உரை (VIDEO)

தமிழ் முஸ்லிம் திரட்டி - TAMIL MUSLIM READER

.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ஐயா இராமதாஸ் அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ.

.

"மருத்துவர் இராமதாசு அவர்களின் உரை"


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



மருத்துவர் இராமதாசு அவர்கள்

3 comments:

பிறைநதிபுரத்தான் said...

முகவைத்தமிழன்!
இயக்கம் சாராத அரசியல் விவாத மேடை. தமிழ் முஸ்லிம்கள் மற்றும் தமிழ் முஸ்லிம் இயக்கங்களின் அரசியல் நிலைப்பாடு இங்கு விவாதிக்கப்படுகின்றது - என்று தங்களின் வலைப்பூ முகப்பில் குறிப்பிட்டுள்ளதை உண்மையென நிணைத்துத்தான் IDMK தொடக்கவிழா பற்றிய விமர்சன பின்னூட்டத்தை வெளியிட்டேன். ஆனால் அதை நீங்கள் பிரசுரிக்கவில்லை. காரணம் என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளேன். நான் எழுதிய கருத்து
க்களில் உண்மையில்லையா அல்லது தங்களின் வலைப்பூவில் முகப்பில் எழுதியிருக்கும் வசனங்களில் உண்மையில்லையா?

வெளிவராத என் பின்னூட்டம்:

முதல் விடியோ ஒளி தெளிவாக இல்லை, ஒலி மட்டும்தான் கேட்க முடிந்தது. இரண்டாவது வீடியோவில் ஒலி-ஒளியை போல திருமாவின் பேச்சு அருமை.

ஏற்கனவே விஜய் டி ராஜேந்தர் தலைமையில் இலட்சிய திரவிட முன்னேற்ற கழகம் - IDMK என்று
வழங்கப்படுவதால் - குத்புதீன் & கோ வின் IDMK என்ற பெயரே குழப்பத்தை உருவாக்கும்.

திருமா சொன்னது போல் சில கட்சி கொடிகளிலிருந்து நிறத்தையும் - சில கட்சிகளிலிருந்து சொற்றொடரையும் எடுத்து போட்டு அவசர கதியாக
ஆரம்பித்தது போல் ஒரு உணர்வை தூண்டுகிறது. அடுத்து, தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கென்று ஏற்கனவே இயங்கும் அமைப்புக்கள்/இயக்கங்கள்
இருக்கும்போது புதிதாக IDMK துவங்க உருப்படியான காரணங்கள் என்ன என்று அமைப்பாளர்கள் யாருமே விளக்கவில்லை என்பது வருந்ததக்கது.

கட்சி நிர்வாகிகள் அனைவரும் மருத்துவர் அய்யாவை - அளவுக்கு மீறி போற்றி-புகழ்ந்து பேசியதைக்கேட்க சங்கடமாக இருந்தது. சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவரன திரைப்பட இயக்குநர் 'சீமான்' - தன்னுரை முடிவில்‘ உங்களை அல்லா காப்பாற்றுகிறாரோ இல்லையோ அய்யாவும்-திருமாவும் நிச்சயமாக காப்பாற்றுவார்கள்' என்று சொன்னதும் அதை
அமைப்பாளரில் ஒருவர் ‘சமாளிக்கும் விதமாக' பேசியது நல்ல நகைச்சுவை. இதை வைத்தே - IDMK வுக்கு இஸ்லாமியர் வாக்குகள் விழாமல் த.மு.மு.க வோ அல்லது த.த.ஜ வோ செய்ய முடியும்.
இலட்சியம்- தேசியம் என்ற பெயரைக்கொண்ட கட்சியின் துவக்க விழாவில் 'விசில் சத்தம்' - காதை பிளந்தது. அமைப்பாளரின் வேண்டுகோள் ஒரளவிற்கு கட்டுப்படுத்தியது.

பிறைநதிபுரத்தான்

முகவைத்தமிழன் said...

திரு. பிறைநதிபுரத்தான் அவர்களுக்கு,
தங்களின் முந்தைய கமென்ட் எமக்கு கிடைக்கபெறவில்லை.

இன்னும் தாங்கள் தான் ஏதோ உணர்ச்சியில் எழுதுவதாக தோன்றுகின்றது. உங்கள் கமென்டுகள் அனைத்தும் நியாயமான முறைப்படி அனுமதிக்கப்படவே செய்கின்றன.

முகவைத்தமிழன் said...

திரு. பிறைநதிபுரத்தான் அவர்களுக்கு,
தங்களின் முந்தைய கமென்ட் எமக்கு கிடைக்கபெறவில்லை.

இன்னும் தாங்கள் தான் ஏதோ உணர்ச்சியில் எழுதுவதாக தோன்றுகின்றது. உங்கள் கமென்டுகள் அனைத்தும் நியாயமான முறைப்படி அனுமதிக்கப்படவே செய்கின்றன.