Monday, March 24, 2008

அமீரக செய்திகள்

அபுதாபியில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி தொகுப்பு நிகழ்ச்சி

அபுதாபி கேரள சோஷியல் செண்டரில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி நிகழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ் எனும் தலைப்பில் 04.04.2008 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 12 வணி வரை நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சியினை ஜலாலுதீன் ஒருங்கிணைத்து நடத்துகிறார்.

முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலதிக விபரம் பெற 050 6142633 / 050 4567487 / 050 315 6141 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம் என் ஏ )


முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மைய ஆண்டுவிழா மற்றும் பரிசளிப்பு விழா


ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஆதரவுடன் முதுகுளத்தூரில் நடத்தப்பட்டு வரும் இஸ்லாமிய பயிற்சி மையத்தின் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா 22.03.2008 சனிக்கிழமை மாலை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் தலைமை தாங்கினார். அமீரகப் பிரதிநிதி எம். பக்ருதீன் பாதுஷா முன்னிலை வகித்தார். திடல் பள்ளிவாசல் இமாம் எஸ். முஹம்மது ரபியுத்தீன் ஃபைஜி பாஜில் மன்பஈ இறைவசனங்களை ஓதினார்.

இஸ்லாமிய பயிற்சி மைய முதல்வர் ஹெச்.ஏ. சுல்தான் அலாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாணாக்கர்கள் பி. பாவா பக்ருதீன், என். நஜிமா கனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மார்க்க போதனைத் தேர்வில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி தேசிய நல்லாசிரியர் எஸ்.அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார்.

குர் ஆன் ஓதும் போட்டியில் முதலாம்,இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர் வாழ்த்துரை வழங்கினார்.

பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்க்கு பரிசுகளை அரசு மருத்துவர் டாக்டர் எம். ஷேக் முஹம்மது மைதீன் பரிசுகளை வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார்.

ஒன்பதாம் வகுப்புத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகளை பெரிய பள்ளிவாசல் உதவித் தலைவர் எம்.எம்.கே.எம். காதர் முகையதீன், பெரிய பள்ளிவாசல் உதவி இமாம் மௌலவி எஸ்.டி.ஷேக் முகைஅதீன் மன்பஈ, திடல் பள்ளிவாசல் உதவித் தலைவர் எம்.ஜஹ்பர் சாதிக் அலி, ஆசிரியர் ஏ. ஹபிப் முஹம்மது உள்ளிட்டோர் வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.

உதவித் தலைமையாசிரியர் என். காஜா நிஜாமுதீன் குறைசி நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல் : முதுவை ஹிதாயத்

No comments: