கைது செய்யப்பட்ட RSS தீவிரவாதிகள்
தென்காசியைக் குறிவைத்து சங்பரிவார் சக்திகள் தொடர்ந்து செயல்பட்டு அமைதிக்கு கேடு விளைவித்து வருவதை நாட்டு மக்கள் வேதனையோடு கவனித்து வருகின்றனர்.
ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாய் வாழ்வதைக் கண்டு பொறுக்காத தேச விரோத சக்திகள் தொடர்ந்து பதட்டத்தை ஏற்படுத்தி வந்தன. இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக தென்காசி மக்களின் நிம்மதியைக் குலைத்த கும்பலின் சதிச்யெல் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
கடந்த 24ல-01-2008 அன்று தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பைப் வெடிகுண்டு வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்கு சேதம் விளைவிக்க வேண்டும் என கருதியிருந்தால் தாக்குதல் நிகழ்த்த திட்டமிட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் இயங்கும் நேரத்தில் அதை செய்திருக்கலாம். அலுவலகம் பூட்டப்பட்ட பிறகு பொதுவாக அங்கு யாரும் இருக்க மாட்டார்கள் என் அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும் நிலையில் இச்சம்பவம் குறிப்பிட்ட சமூகத்தின் மீது பழி போடுவதற்காக செய்யப்பட்ட செயலாகவே இதை நாட்டிலுள்ள நல்லோர் கருதினர்.
ஊடகங்கள் பதட்டத்தை ஏற்படுத்தின. ஜெயா டி.வி, விண் டி.வி போன்ற சேனல்கள் தங்கள் செய்திகளின் மூலமாக பதட்டத்தை குறைய விடாமல் பார்த்துக் கொண்டன.
திமுக ஆட்சிக்கு வந்தாலே தீவிரவாதிகளின் அராஜகம் அதிகமாக இருக்கும் என திட்டமிட்டு பிரச்சாரங்களை நடத்தினர். இந்து முண்ணனித் தலைவர் ராமகோபாலன் சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்பும் சம்பவம் நடந்த பின்னரும் தென்காசிக்கு வந்து முஸ்லிம்கள் குறித்து அவதூறுகளை அள்ளி வீசினார்.
மீண்டும் மீண்டும் அப்பாவிகள் துன்பறுத்தப்பட்டனர். விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்நிலையில் தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வெடிப்பு விவகாரம் சிபிசிஐடியினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தமுமுக கோரியது.
இந்நிலையில் தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்தாக முன்னாள் இந்து முண்ணனித் தலைவர் குமார பாண்டியனின் சகோதரர் ரவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வைத்து அப்பாவி முஸ்லிம்களின் மீது பழிசுமத்தி தமிழகத்தை கலவரக்காடாக்க முயற்சித்த கொடிய சதி அம்பலத்துக்கு வந்துள்ளது.
நாட்டில் பதட்டத்தை ஏற்படுத்தவே ஆர்.எஸ்.எஸ் அலுவலத்தில் குண்டு வைத்தோம் என அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நமது இதழ் அச்சேறும் முன்பாக முதலில் வந்த தகவலின்படி 1) குமார பாண்டியனின் தம்பி ரவி, 2) கே.டி.சி. குமார், 3) செங்கோட்டை லட்சுமி நாராயண சர்மா என்ற மூன்று பேரின் பெயர் தெரிய வந்துள்ளது.
அமைதிப் பூங்காவாம் தமிழகத்தை அமளிக் காடாக்கும் சங்பரிவார சதிச் செயல் அம்பலமாகியுள்ளது.
திமுக ஆட்சி வந்தாலே தீவிரவாதிகள் அராஜக ஆட்டம் தொடங்கி விடும் என ஜெயலலிதா, ராமகோபாலன், சோ, இல.கணேசன் போன்றவர்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையில் அவர்கள் இத்தகைய தீவிரவாதி களைத்தான் கூறியுள்ளனர் என்பது தெளிவாகிறது.
சங்பரிவாரின் தொடர் சதிகள்
அரசும், காவல்துறையும், உளவுத் துறையும் இந்த கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு சங்பரிவார் தீவிரவாதிகளை அடையாளம் காண வேண்டும்.
முன்கூட்டியே சதிகளை திட்டமிட்டு நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தும் சங்பரிவார் சக்திகளைக் குறித்து நடுநிலையாளர்கள் பல்லாண்டுகாலமாக கூறிவருவதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
24 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அலுவலத்தில் குண்டு வெடித்ததாக தகவல் வருகிறது. ஆனால் அதற்கு முன்பாக 22.01.2008 அன்று நாட்டு வெடிகுண்டுகளுடன் செல்லச்சாமி என்பவர் பிடிப்பட்டு அவரை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கும் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. பிரகாஷ் உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தை எந்த ஊடகமும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக தென்காசி ஆர்.எஸ்.எஸ் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சதிசெய்தவர்களின் பிண்ணனியில் இருந்தவர்கள் அனைவரும் அம்பலப்படுத்தப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்கள் அனைவரின் கோரிக்கையாகும்.
தேசத் தந்தை காந்தியாரின் படுகொலை
பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு
கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸில் சங்பரிவாரத்தினரே தீவைத்து விட்டு குஜராத்தில் பெரும் இனப்படுகொலையை நடத்தியது.
மகாஷ்ட்ரா மாநிலம் நான்டெட் பகுதியில் பஜ்ரங்தள் அலுவலகத்தில் வெடிகுண்டு தொழிற்சாலையில் குண்டுவெடித்ததும் முஸ்லிம்கள் பயன்படுத்தும் தொப்பிகள் மட்டுமின்றி ஒட்டுத்தாடிகள் கண்டுபிடிக்கப்பட்டது. போன்ற சதிகளில் சங்பரிவரத்தினரின் சதிகள் தோலுரிக்கப்பட்டன.
தற்போது தென்காசியிலும் சங்பரிவாரத்தினரின் முகமூடி தோலுரிக்கப்பட்டது.
உண்மைகளை அம்பலப்படுத்திய காவல்துறையினருக்கு பாராட்டுக்கள்.
உளவுத்துறை முகத்தில் கரிபூச முயன்ற கயவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் சக்திகள் வேரறுக்கப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்கள் அனைவரின் வேண்டுகோளாகும்.
தமுமுக ஏற்படுத்திய நெருக்கடிகள்
தென்காசியில் அமைதி திரும்ப வேண்டும் என்பதிலும் அமைதியை குலைக்கும் தீவிரவாத சக்திகள் கண்டுபிடிக்கப்படவேண்டும் என்பதிலும் உண்மையாக தமுமுக தொடர்ந்து தீவிரக் கவனம் செலுத்தியது.
தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஜனவரி 27 அன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலும், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி ஜனவரி 29 அன்று குமரி மாவட்டம் இரவிபுதூர் கடையிலும், இறுதியாக மாநிலச் செயலாளர் தமிமுன் அன்சாரி பிப்ரவரி 3 அன்று நெல்லை மாவட்டம் தென்காசிக்கு வருகை தந்து புளியங்குடியிலும் பத்திரிக்கையாளர் சந்திப்புகளை நடத்தினர்.
தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டு வெடிப்பு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை தேவை என்ற வேண்டுகோள் பத்திரிக்கைகளில் முக்கிய செய்திகளாக வந்து காவல்துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி அவர்கள் உனவுத்துறை ஐ.ஜி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளையும் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தினார்.
அதன் விளைவாக நெல்லை காவல்துறை துரிதமாக செயல்பட்டு உண்மை குற்றவாளிகளை கைது செய்திருக்கின்றது. டி.ஐ.ஜி கண்ணப்பன், மாவட்ட எஸ்.பி. ஸ்ரீதர், தென் மண்டல ஐ.ஜி. சஞ்சீவ் குமார் உள்ளிட்ட அதிகாரிகளும் ஒத்துழைத்த காவலர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
நன்றி : தமுமுக இணையத்தளம்
தொடர்புடையவை : தினமலர் பத்திரிகை செய்தி
No comments:
Post a Comment