ரியாத்தில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
மனிதநீதிப்பாசறையின் சார்பாக, பதியா இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையத்தின் உதவியுடன் மாற்று மத சகோதரர்களுக்கு (ஈத்மிலன்) பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 21-2-2008 அன்று இரவு 8:15 மணியளவில் பத்ஹா லாவண்யா ரெஸ்டாரண்ட் அரங்கில் நடைபெற்றது.
சகோதரர் கவுஸ் அவர்கள் இறைவசனம் ஓத சகோதரர் ரமுஜூதீன் அவர்களின் வரவேற்புரையோடு துவங்கிய நிகழ்ச்சிக்கு மனிதநீதிப் பாசறையின் ரியாத் மாநகரப்பொருப்பாளர் சகோதரர் ஜூனைத் அவர்கள் தலைமை தாங்கினார். பதியா இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையத்தைச்சார்ந்த டாக்டர் அஷ்ஷேக் அப்துல் அஜீஸ் அல் ஹஸன் அவர்கள் தலைமையுரையாற்றினார்கள்.
ரியாத் இந்தியா ஃபிரெடர்னிடி ஃபாரத்தின் தலைவர் மௌலவி ஷிஹாபுதீன் மண்னானி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். நம்மைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்கின்றான். அவன்தான் நமக்கு எல்லாவிதமான வாழ்வாதாரங்களையும் வழங்கினான். அவனின் வழிகாட்டுதலின்படியே நாம் வாழவேண்டும். இறுதியில் அந்த இறைவனின் நாட்டப்படியே நாம் இறக்க வேண்டும் என்கிற உண்மைகளை உள்ளடக்கி நடப்பு நிகழ்வுகளை உதாரணமாக்கி 'இஸ்லாம் ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில் அறிவகம் அழைப்புக்குழுவின் பொருப்பாளர் மௌலவி அப்துல்காதர் ஹஸனி அவர்கள் உரையாற்றினார். மாற்று மத சகோதரர்களின் கேள்விகளுக்கு மௌலவி அப்துல்காதர் ஹஸனி மற்றும் சகோதரர் ரஃபீக் அவர்களும் அழகிய முறையில் பதிலளித்தார்கள்.
சிறப்பு விருந்தினர்களுக்கு அறிவகத்தின் சார்பாக நினைவுப்பரிசுகளை மனிதநீதிப்பாசறையின் பொருப்பாளர் வழங்கினார். நிகழ்ச்சியில் ரியாத்தின் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் 150 க்கும் மேற்பட்ட மாற்றுமத சகோதரர்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு அறிவு ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் உண்மைப்படுத்தப்பட்ட மார்க்கம் இஸ்லாம் என்பதை ஏற்றுக்கொண்ட மனநிலையில் பிரிந்து சென்றனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாற்றுமத சகோதரர்களுக்கும் பரிசுகள், இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் நூல்களும், சி.டி. க்களும் வழங்கப்பட்டன. சகோதரர் சையத் ஷாகுல்ஹமீத் அவர்களின் நன்றியுரையோடும், இரவு விருந்து உபசரிப்போடும் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது
2 comments:
இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்கள் மத்தியில் எந்த ஒரு சுய விளம்பரமும் இன்றி அமைதியாகவும் ஆழமாகவும் செய்து வரும் இவர்களின் எல்லா பணிகளும் சிறக்க அந்த வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக.
அன்புடன்
இறை அடிமை
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தங்களின் வருகைக்கு நன்றி தோழர் இறை அடிமை.
Post a Comment