பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic ) ஏற்பாடு செய்யும்
'' இரண்டாம் ஆண்டு நிறைவு விழா '' மற்றும்
'' ஹிஜ்ரி - இஸ்லாமிய புத்தாண்டு சிறப்புச் சொற்பொழிவு ''
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 10-01-2008 வியாழக்கிழமை மாலை 5:30 மணி முதல் மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இரவு 9:00 மணி வரை குவைத் , சுர்ரா பகுதியில் உள்ள சங்கத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் அல்ஹாஜ் எம். முனீர் அஹ்மத் அவர்களின் இல்லத்தில் (கத்ஆ : 3 , ஷாரா : 6, வீட்டு எண் : 23, தொலைபேசி : 6633054) குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic ) ஏற்பாடு செய்யும் ' சங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா ' மற்றும் 'ஹிஜ்ரி - இஸ்லாமிய புத்தாண்டு சிறப்புச் சொற்பொழிவு ' நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
சங்கத்தின் தலைவர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினரும் , குவைத் ஹுஸைனிய்யா அரபி மொழி பயிற்சி நிலையத்தின் இயக்குநருமாகிய மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைக் எம். மஹ்பூப் பாஷா ரஷாதி ஹழ்ரத் அவர்களும் , குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச்செயலாளர் சமுதாயக் கவிஞர் எழுச்சிப் பாவலர் விழுப்புரம் ஷாஜி M.A., B.Ed., அவர்களும் சிறப்புரையாற்றுகின்றனர்.
சங்கம் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கம் , அதன் செயற்பாடுகள் , கடந்து வந்த பாதை , எதிர்கால திட்டங்கள் போன்றவற்றை சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., அவர்கள் எடுத்துரைக்கின்றார். அத்துடன் குவைத்தில் நிகழ்த்தப்படும் தமிழ் குத்பாக்(ஜும்ஆ உரை)கள் குறித்த ஆய்வுரையும் இவ்விழாவில் இடம்பெறுகின்றது.
இச்சிறப்பு மிகு இவ்விழாவில் குவைத் வாழ் இந்திய , இலங்கையைச் சார்ந்த தமிழ் இஸ்லாமியர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று பயனடையுமாறும் , பெண்களுக்கு தனியிட வசதியும் , விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள் , உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com லும் நிகழ்ச்சி குறித்த செய்தியையும் , நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் வரைபடத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மேலதிக விபரங்களுக்கு q8tic@yahoo.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ மற்றும் 9430786, 7872482 , 7302747, 9509743 , 7738420 போன்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளும்படியும் சங்க செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.
செய்தி :
தகவல் தொடர்பு பிரிவு ,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic)
இணையதளம் : www.k-tic.com
மின்னஞ்சல் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹூ குழுமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group
உலக மக்கள் அனைவருக்கும் K-Tic ன் ஹிஜ்ரி இஸ்லாமியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
குறிப்பு :
இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment