Tuesday, January 08, 2008

நரோந்திர மோடிக்கு எதிர்ப்பு - AFF உதயம்

தமிழகம் வரும் நரேந்திரமோடிக்கு எதிராக முற்றுகைப் போராட்டம், உருவானது பாசிஷ எதிர்ப்பு முன்னணி



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நரேந்திரமோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ஒத்தக் கருத்துடைய அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் பிரஸிடென்ட் ஹோட்டலில் 07.01.2008 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில்

1. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
2. விடுதலைச் சிறுத்தைகள்
3. சிறுபான்மையினர் கூட்டமைப்பு
4. தலித், இஸ்லாமியர், கிறித்தவக் கூட்டமைப்பு
5. பெரியார் திராவிடர் கழகம்
6. மக்கள் கலை இலக்கியக் கழகம்
7. தமிழர் தேசிய இயக்கம்
8. மறுமலர்ச்சி முஸ்லீம் லீக்
9. இஸ்லாமியர் விழிப்புணர்வு கழகம்
10. கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம்
11. குழந்தைகள் உரிமை இயக்கம்
12. மனிதஉரிமைகளுக்கான குடிமக்கள் இயக்கம்
13. புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணி

உள்ளிட்ட அமைப்புகள் பங்கெடுத்தன.

அதில் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜனநாயக வழியிலான போராட்டக் குழு அமைக்கப்பட்டு அதற்கு ஃபாஸிஸ எதிர்ப்பு முன்னணி (A.F.F) என ஒரு மனதாக பெயரிடப்பட்டது.

அதை வழிநடத்தும் பொருட்டாக வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டு கீழ்கண்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது.

1. சிறுபான்மையினர் கூட்டமைப்பு
2. தலித், இஸ்லாமிய, கிருத்துவ கூட்டமைப்பு
3. விடுதலை சிறுத்தைகள்
4. பெரியார் திராவிட கழகம்
5. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
6. தமிழர் தேசிய இயக்கம்
7. பேரா. மார்க்ஸ் (மனிதஉரிமைகளுக்கான குடிமக்கள் இயக்கம்)
8. மக்கள் கலை இலக்கியக் கழகம்

இதன் அமைப்பாளராக பேரா. ஜவாஹிருல்லாஹ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டத்தின் முடிவாக, எதிர்வரும் 14.01.2008 அன்று நரேந்திரமோடி பங்கேற்கும் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறவிருப்பதால் நமது எதிர்ப்பை ஜனநாயக வழியில் தெரிவிப்பதற்காக 'காமாராஜர் அரங்கை' முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே புரட்சிபாரதம், இந்திய குடியரசு கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் தவிர்க்க முடியாத அவசர காரணங்களால் வரவில்லை. ஆனால் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளன.

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

No comments: