தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் தலையை எடுக்க கட்டளை பிறப்பித்த பி.ஜே.பி சங்பரிவார கூட்டத்தை கூண்டோடு தடை செய்!!
தமிழ் ஆய்ந்த தலைமகன் ஆள வேண்டும் அதில் தமிழகம் வாழ வேண்டும் என்று கனவு கண்டான் முத்தமிழ் கவிஞன். அன்று தமிழர் வாழ்வை வடக்கினில் வதக்கி தெற்கினில் இடக்கினை செய்யும் தருக்கரை அடக்கடா என்று முரசு அறைந்தான் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன். அன்று அடக்க வேண்டியவர்கள் மானம் போயின் உயிர் வாழ்தல் ஈனம் என்ற தமிழ் மரபிற்கு எதிரானவர்கள் அற்ப பதவி சுகத்திற்கு பி.ஜே.பி என்ற பாம்பை பச்சைக் கொடி என்று அரவணைத்ததால் இன்று தமிழின தலைவர் டாக்டர் கலைஞரின் தலைக்கு பி.ஜே.பி. எம்பி காவி வேதாந்தி விலை பேசி இருக்கிறது.
வீரம் என்னவென்று அறியாத சங்பரிவார பி.ஜே.பி. கூட்டம் மறைந்திருந்து தாக்கும் அம்புக்கு சொந்தக்காரர்கள். நரி நெறியை கடைபிடிக்கும் இந்த காவி கூட்டம் முத்தமிழ் அறிஞர் தமிழ் சிங்கத்தை (டாக்டர் கலைஞரை) இடறியிருக்கிறது. வேத காலம் தொட்டு தமிழனின் தலையில் ஏரி அமர்ந்து கொள்வது அவர்களது வாழ்க்கையும், வேடிக்கையும், துரோகமும், சூழ்ச்சியும் ஆகும். ஓட்டுக்கு பல் இளிக்கும் இந்த பி.ஜே.பி. கொள்கையில்லாத கோழைகள். அன்று ராமனுக்காக இருக்கின்ற இறைவனுக்குரிய பாபர் பள்ளியை இடித்தார்கள். இன்று ராமனுக்கு கடலில் பாலம் இருக்கிறது என்று சொல்லி இலட்சோப லட்ச தமிழ் மக்களின் (மண்ணின் மைந்தர்கள்) வேலை வாய்ப்பு பெற இருக்கின்ற (டாக்டர் கலைஞரின்) சேது சமுத்திர திட்டத்தின் மேல் தீக்குச்சி கொளுத்தி போட்டு அற்ப அரசியல் இலாபம் பெற திராவிட பூமியில் துடிக்கின்றனர். தமிழ் மக்களே! பி.ஜே.பி. என்ற ஓணாய் அஹிம்சையாகி விடாது. ஏமாந்து விடாதீர்கள்.
தமிழ் மக்களின் ஒட்டு மொத்த எதிரிகள் பி.ஜே.பி. சங்பரிவார நரபலி கூட்டம் நாடாள துடிக்கிறது. தாய்மொழி தமிழை தீட்டு என்றனர். பச்சைத் தமிழன் காமராஜரை கொலை செய்ய முயற்சி செய்தனர். தேச தந்தை மகாத்மாவை கொலை செய்தார்கள். ரதயாத்திரை என்ற பெயரில் இரத்த யாத்திரை நடத்தினார்கள். குஜராத், கான்பூர், மண்டைக்காடு, கோவை, மும்பை என இவர்கள் நடத்திய கலவர பூமியில் மாண்ட மனித உயிர்களை எழுத ஏடு தாங்காது.
இன்று திண் தோல் படைத்த திராவிட பூமியில் டாக்டர் கலைஞரின் சேது சமுத்திர திட்டத்தை தீய்த்து விட பி.ஜே.பி. சங்பரிவாரக் கூட்டம் கனவு காண்கிறது. அது ஒருபோதும் முடியாது. ஏமாந்த தமிழனின் தலையில் ஏறி மிதிக்க அனுமதிக்க மாட்டோம். இது தமிழர் பூமி. தமிழன் அறிவையே பெயராகக் கொண்டவன். அறிவுடை நம்பி என பெயர் சூட்டி மகிழ்ந்தவன். பி.ஜே.பி. சங்பரிவாரக் கூட்டத்தின் ராமர் புரட்டுப் பாலம் கோஷத்தில் வீழ்ந்து விட மாட்டான். சிந்திக்க தொடங்கி விட்டான். சிங்கமாய் சிலிர்த்து எழப் புறப்பட்டு விட்டான்.
எதையும் தாங்கும் இதயம் பெற்ற டாக்டர் கலைஞர் அவர்களே தொடரட்டும் உம் பணி. சேது சமுத்திர திட்டத்தின் தமிழ் துரோகிகள் துடிக்கட்டும், தமிழ் பகை பதறி ஓடட்டும். தமிழக முதல்வர் அவர்களே! உங்கள் தொலைதூர திட்டத்திற்கு உண்மைத் தமிழர்கள் தோள் கொடுப்பார்கள். அல்லவை அகற்றி நல்லவை நடக்க என்றும் நாங்கள் குரல் கொடுப்போம்.
இவண்,
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) தமிழ்நாடு
No comments:
Post a Comment