Thursday, September 13, 2007

துபாய் இந்திய பள்ளி நிறுவனருக்கு விருது

துபாய் இந்திய பள்ளி நிறுவனருக்கு விருது

துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நியூ இந்தியன் மாதிரிப் பள்ளிகளை நிறுவிய டாக்டர் எம்.கே. கமாலுதீனுக்கு புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச நட்புறவுக் கழகம் ''ஷிக்ச ரத்தன் புரஸ்கார்'' எனும் விருதை அவரது கல்வி மற்றும் சமூக சேவைக்காக வழங்குகிறது.

இவ்விருது எதிர்வரும் அக்டோபர் 6 ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து நவீன இந்தியாவில் கல்வியின் பங்கு எனும் தலைப்பில் கருத்தரங்கும் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் நாடெங்கிலும் இருந்து கல்வியாளர்கள் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.


இவ்விருது கல்வியின் மதிப்பீட்டுக்கு கிடைத்த பரிசு என்றால் மிகையல்ல என டாக்டர் கமாலுதீன் தெரிவித்தார். கல்வி சமூகத்தை உயர்நிலைக்கு கொண்டு செல்லும் ஒரு கருவியாகும்.

இவர் 1980 ஆம் ஆண்டு துபாயில் நியூ இந்தியன் மாதிரிப் பள்ளியை ஏற்படுத்தினார். அமீரகத்திலும், இந்தியாவிலும் 13 கல்வி நிறுவனங்களை இவர் நடத்தி வருகிறார்.

இதற்கு முன் இவ்விருதை தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி கன்னியப்பன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பி மருதமுத்து, பெங்களூர் பல்கலைக்கழக பேராசிரியர் ரெங்கநாத் உள்ளிட்ட பலர் இவ்விருதை இதற்கு முன் பெற்றுள்ளனர்.

No comments: