Monday, August 20, 2007

FAKE ENCOUNTER KILLINGS கண்டன கருத்தரங்கம்

புதுவை சுகுமாரன் அவர்கள் உரையாற்றுகையில்

கோவையில் நேற்று "போலி மோதல் கொலை எதிர்ப்பு கூட்டு இயக்கம்" கண்டன கருத்தரங்கம் கோவை சேரன் டவர் பின்புறம் உள்ள திவ்யோதயா அரங்கத்தில் நடைபெற்றது. சரியாக மாலை 4.00 மனிக்கு துவங்கிய இந்த கருத்தரங்கிற்கு தமிழக மக்கள் உரிமை கழக ஒருங்கினைப்பாளர் திரு பாவேந்தன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தை சேர்ந்த வழக்குரைஞர். கா. கேசவன் அவர்கள் வரவேற்புரை நல்கினார்கள். அத்துடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த கீழக்கண்ட அறிஞர்கள் கண்டன உரையாற்றினார்கள்..

தோழர் கு.ராமகிருட்டினன் - பெதுச் செயலாளர்ஈ பெரியார் திராவிட கழகம்

தோழர் பேரா. அ. மார்க்கஸ் - PUHR மாநில ஒருங்கினைப்பாளர்

தோழர் திருமலைராஜன் - தமிழ்நாடு மற்றும் புதுவை வழக்குரைஞர் சங்க கூட்டமைப்பு தலைவர்

தோழர் முஜீபுர்ரஹ்மான் - செயலாளர் - DIFT தமிழ்நாடு

தோழர் நீலவேந்தன் - ஆதி தமிழர் பேரவை

தோழர் ஆ.நாகராசன் - புரட்சி புலிகள்

தோழர் சுகுமாறன் - மக்கள் உரிமை கூட்டமைப்பு - புதுவை

தோழர். உதயம் சுப மனோகரன் - ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்

தோழர். வழக்குரைஞர் ரஜினிகாந்த் - உயர் நீதி மன்ற வழக்குரைஞர் சங்க கூட்டமைப்பு

தோழர். வழக்குரைஞர் ப.பா. மோகன் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தோழர். மா. செந்தில் - புதியன பண்பாட்டு இயக்கம்

தோழர் ந. மோகன் குமார் - PUHR கோவை

தோழர் அ.ஜீவானந்தம் - தமிழக மக்கள் விடுதலை இயக்கம்

தோழர். வழக்குரைஞர் பெ.தமயந்தி - பொதுச்செயலாளர் குடியுரிமை பாதுகாப்பு நடுவம்

தோழர் ருத்ரன் - எழுத்தாளர்

தோழர் வள்ளுவராசன் - புரட்சிகர இளைஞர் முன்னணி

தோழர் மு.சக்திவேல் - நிறுவனர் மனித நேய பாசறை

தோழர் வி.ராமச்சந்திரன் - ஒருங்கினைப்பாளர் மக்கள் விடுதலை இயக்கம்

தோழர் முத்து லட்சுமி வீரப்பன் - மலைவாழ் மக்கள் உரிமை இயக்கம்

தோழர் கமலா வெள்ளை ரவி - வெள்ளை ரவி துனைவியர்

தோழர் பூபதி மணியன் - மணல்மேடு சங்கரின் தாயார்

தோழர் DIFT முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்கள் ஆக்ரோஷமாக

* ஆகியோர் போலி மோதல் காவல்துறை படுகொலைகளை கண்டித்து கண்டன உரையாற்றினார்கள் , அவாக்ளது உரையில் குறப்பாக கீழக்காணும் விஷயங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன்.

* டெல்லி ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் ஷாப்பிங் சென்ற இரு முஸ்லிம்களை சுட்டு கொன்று விட்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளா என காவல் துறை ஆராய்ச்சி செய்கின்றதாம்.

* சுற்றுலா சென்ற நான்கு கல்லூரி மாணவாக்ளை செராத்தில் வைத்து சுட்டு கொன்று விட்டு முதல்வரை கொல்ல வந்ததாக கட்டுக்கதை கட்டியது.

* மும்பை கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சிவசேனா குண்டர்களுடன் இணைந்து காவல்துறை நடத்திய கூட்டு படுகொலைகள்.




* கோத்ரா ரயில் எரிப்பை காரணம் காட்டி சிறுபான்மை இன முஸ்லிம் மக்கள் மீது குஜராத்தை ஆளும் இனவாத மோடி அரசும் R.S.S குண்டர்களும் நடத்திய இனப்படுகொலைகள்.

* கோவையில் பூலிஸ்காரர் படுகொலையை காட்டி R.S.S இந்துமுன்னணி குண்டர்களும் காவல்துறையும் நடத்திய வெறியாட்டம், தீவைப்பு, கொள்ளை மற்றும் துப்பாக்கிசூடு கோரப்படுகொலைகள்.

* வீரப்பனை தேடுவதாக கூறி காவல்துறை அப்பாவி பொதுமக்கள் 66 பேரை கொலை செய்து 14 பென்களை கற்பழித்த கொடூரம்.

* காஷ்மீர் தற்காப்பு படை என்ற பெயரில் காஷமீரில் நடத்தி வரும் பயங்கரவாதம்.

* நக்சல் எதிர்ப்பு என்ற பெயரில் தமிழகத்திலும், ஆந்திரத்திலும் காவல்துறை நடத்தி வரும் கோரப்படுகொலைகள்.

* மற்றும் இந்தியாவெங்கும் சிறுபான்மை இன மக்கள் மீதும் தாழத்தபட்டவாக்ள் மீதும் நடத்தப்படும் ஈவிரக்கமற்ற துப்பாக்கி சூடுகள்.

* இந்தியாவெங்கும் ரவுடிகளை ஒழிப்பதாக கூறி என்கவுன்டர் என்ற பெயரில் காவல்துறை நடத்தி வரும் போலி மோதல் படுகொலைகள்.




இவ்வாறாக இந்திய ஜனநாயக நாட்டில் நடந்து வரும் ஜனநாயக அத்துமீறல்களை சுட்டிக்காட்டி கண்டித்து பேசினார்கள். அத்துடன் கடந்த அதிமுக ஆட்சியுடன் ஒப்பிடுகையில் நடந்து வரும் கலைஞரின் ஆடசியில் அதிகரித்து வரும் போலி மோதல் காவல்துறை படுகொலைகளையும் அகில இந்திய அளவில் பல அமைப்புகள் அரசுக்கு சுட்டிக்காட்டிய பின்பும் சமீபத்தில் வெள்ளை ரவி என்பவரை காவல்துறை போலி மோதல் நாடகத்தில் சுட்டு கொன்றிருப்பதையும் சுட'டிக்காட்டினர்.

தமிழக அரசும் காவல்துறையும் பூலி மோதல்களை உடணடியாக நிறுத்த வேண்டும் என்றும்,

போலி மோதல்களில் ஈடுபட்ட அதிகாரிகளை உடனடியாக பதவி நீக்கம் செய்யக் கோரியும்,

சித்திரவதைக் கூடங்களான அதிரடிப்படை முகாம்களை உடணடியாக கலைக்க கோரியும்,

தமிழகமெங்கும் நக்சல் வேட்டை என்ற பெயரில் பொதுமக்களை அச்சுருத்துவதை உடனே நிறுத்தக் கோரியும் அமைப்பின் சார்பாக கோரிக்க வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலியுருத்தி பேச்சாளர்கள் பேசினார்கள்.

நிகழச்சியின் இறுதியில் தோழர் வழக்குரைஞர் இளங்கோவன் அவர்கள் நன்றியுரை நல்கள் கருத்தரங்கம் முடிவுற்றது.இக்கருத்தரங்கில் அதிக அளவில் மனித உரிமை ஆர்வளர்களும், பாதிக்கப்பட்டவாக்ளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

செய்திகள் & புகைப்படம் : கோவை தங்கப்பா



1 comment:

நேசம் said...

இது போன்ற கருத்தரங்குகள் மாவட்டம் தோறும் நடத்தப்படவேண்டும்

abusalih