Tuesday, June 12, 2007

ஈராக்கின் ஓலம் (The Picture of Blood) தமிழ் ஆவணப்படம்

ஈராக்கின் ஓலம்
VISIT TAMIL MUSLIM MEDIA TO WATCH / DOWNLOAD THE FILM

கருத்து தோழி கனிமொழி மற்றும் சகோ. ஹைதர் அலி ஆகியோர் கலந்து கொண்டு வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை (ஒரு பகுதி) காணவோ அல்லது டவுன்லோட செய்யவோ இங்கு சொடுக்கவும். (Click Here to Watch / Download the film) or Please Visit WWW.TAMILMUSLIMMEDIA.COM

இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை அழகான முறையில் தொகுப்பாக காண இங்கு சொடுக்கவும். (Click Here to View the Programe's Photo Gallery).

சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் மே 20, 2007 அன்று மாலை 6 மணிக்கு "ஈராக்கின் ஓலம்" என்ற ஆவணப்படம் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது அந்த குறும்படத்தை பற்றிய சுருக்கமான விமர்சனம்.

21ம் நூற்றாண்டு முதல் 10 ஆண்டுகளுக்குள் இரன்டு போர்களையும் இஸ்ரேலை ஏவி ஒரு போரையும் நடத்தியுள்ளது அமெரிக்கா. அந்த அக்ரமமான, அநீதியான போர் அடங்காத ஆட்சியாளர்களின் மீது ஏவப்பட்டபோதெல்லாம் வெடித்துச் சிதறியதெல்லாம் உழைக்கும் மக்களின் பொதுச்சொத்துக்கள். குடியிருப்புக்கள் எல்லாம் குண்டு வீசி அழிக்கப்பட்டன. பென்களும் குழந்தைகளும் குறி வைத்து கொல்லப்பட்டனர்.

வீதியெங்கும் இரத்தச் சிதறல்கள். நாடெங்கும் சடலங்களின் குவியல்கள். பிணங்களை அடக்குவதற்கு கூட நிலங்கள் மிஞ்சுமா எண்ணும் அளவுக்கு உயிர்ப்பலிகள். ஆனால் ஆக்கிரமிப்பாளர்களை பாதுகாவலர்கள் என்றும் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடுபவர்கள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்றும் உலக ஊடகங்கள் வர்னித்து வருகின்றன. பாதிக்கப்படடவர்களின் அவலங்களையும் துயர்களையும் கண்ணீர்களையும் வெளிப்படுத்த உலகம் தயாரில்லை.

அமெரிக்கா, ஆயுதம், அமைதி என்றே கற்றுக் கொடுக்கிறார்கள். இந்நிலையில் நீதியை நிலை நாட்டுவதும் ஒடக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக இருப்பதும் ஒவ்வோர் இறைநம்பிக்கையாளரின் கடமையாக இருக்கின்றது.

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் ஒரு சகோதரன், சகோதரி சிந்தும் கண்ணீர் இந்திய தேசத்தின் தென்முனையில் இருக்கும் சகோதரர்களின் விழிகளையும் நனைய வைத்தது.

ஊடகங்களின் நவீன் தொழில் நுட்பம் இன்று எத்தகைய வித்தையும் செய்யத் தயாராக இருக்கின்றது. அதனை இதுகாறும் கண்டு கொள்ளாத முஸ்லிம் சமூகம், தனது பிரச்சினைகளை பொதுவில் வைத்து பேச தவறியது. இன்றைய சூழலில் சில இளைஞர்கள் அந்தத்திக்கில் கால் பதித்து கவணமாக நடக்கத் துவங்கியுள்ளனர்.

Aroor Puthiyavan, Buhari, Hyder Ali, Fathima Musafar


ஈராக்கின் போர்க்கள காட்சியின் 3000 த்திற்கும் கூடுதலான படங்கள் தொகுக்கப்பட்டு ஈராக்கின் ஓலம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தை ஹபீப் தயாரிப்பில் புகாரி எழுதி இயக்கி, சிபிசி என்ற நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது.

எம்.ஐ.யாக்கூப் காட்சிகளை ஒன்றிணைத்தல், தொகுத்தல் ஆகிய பணிகளை திறம்பட செய்திருக்கிறார். காட்சிப்படங்கள் நிலைப்படங்களாகவும் அசையும் படங்களாகவும் மாறி மாறி தொகுக்கப்பட்டுள்ளன.

Brother Mugavai M.I.Yacoob and Guests

பிரபல பின்னி பாடகர் திப்பு, சாகர் போன்றோர் பாடிய பாடலுக்கு கார்த்திக் இசை அமைத்திருக்கின்றார். நவீன இசையின் ஏற்புகளை மிக கவணமாக கையான்டிருக்கிறார்கள். உருக்கமாகவும் எழுச்சி மிக்கதாகவும் அமைதியை பறைசாற்றுவதாகவும் ஐந்து பாடல்கள், காட்சிகளின் பின்னனியில் கருத்துச் செறிவூட்டுகின்றன. பேராசிரியர் ஹாஜாகனி ஐந்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

"சூழ்ச்சி செய்பவன் ஆட்சி செய்கின்றான்...." பாடலின் ஏகாதிபத்தியத்தின் எலும்பு முறிக்கும் சப்தம் கேட்கிறது.

"கந்தகங்கள் மலர்மேல் சிந்துவது முறையா..."

"ஈராக்கின் ஓலம் காதில் கேட்கின்றதா?..."

"ஏதும் புறியலையே...எல்லாம் எரிகின்றதே..."


என்ற பாடல்கள் இதுவரை அமெரிக்காவை கொள்கை அளவில் ஆதரித்து வந்தவர்களையும் அதிர்ச்சி அடையச் செய்யும். அவற்றின் பின்னணியில் தொகுக்கப்பட்டிருக்கும் படங்களோ காண்பவர்களின் மன அமைதியை அதிரவைக்கும் இந்த பாடல் காட்சிகளின் தொகுப்பு மிகக் கவணமாக கையாளப்பட்டிருக்கின்றது. முழுக்க முழுக்க அநீதியை வெளிச்சப்படுத்தும் எண்ணம் மட்டுமே இந்த படைப்பில் தெறிகின்றது. கோவை நந்தன் அவர்களின் பின்னணி குரல், காட்சிகளையும் வரிகளையும் உயிரோட்டமாக வைத்து இருக்கின்றது.

இத்தகைய புது முயற்சிகளை வரவேற்பதன் மூலமே ஊக்கம் பெறும் படைப்பாளிகள், மேலும் மேலும் சமூக தளத்தில் கருத்திளல் போராளியாக நிற்க முடியும். கடும் உழைப்புக்கு பின்னால் இந்த சாதனை படைக்கப்பட்டிருக்கின்றது. ஊடக தொழில்நுட்பத்தின் நேர்த்தியை கையாண்டு படங்களின் கோர்வையில் இருந்து கவணச்சிதறலின்றி காண்போரை மெய்சிலிர்க்க வைக்க முடியும் என்பதை "ஈராக்கின் ஓலம்" படத்தொகுப்பில் காண முடிகிறது. எடிட்டர் யாகூப் அவர்களின் தொழில்நுட்பத் திறன் இதில் மிக நேர்த்தியாக வெளிப்படுகிறது.

Gulf Asia M.N Hasan, Thozhi Kanimozhi, Singer Tippu, Naveen,Devi Sri Prasad


குறிப்பாக குடியிருப்புகள் மீது வீசப்பட்ட குண்டுகளுக்கு பலியான குழந்தைகளின் படங்கள் தொகுப்பிலும் "அபு குரைப் சிறை" சித்திரவதைகள் பற்றிய படங்களின் தொகுப்பிலும் வண்முறையின் வக்கிரத்தை காட்சிப்படுத்தும் போதும் படங்களை வரிசைப்படுத்தியதில் கவணமாக கையாண்டிருக்கிறார்.

இந்த வெளியீட்டு விழாவில் தொடக்க நிகழ்ச்சியாக சரியாக 42 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம் அரங்கில் திரையிடப்பட்டது.

குறும்படத்தை பற்றிய விமர்சனத்திற்காகவும் தொகுப்புரைக்காகவும் "கருத்து" அமைப்பின் தலைவர் கவிஞர் கனிமொழி, வக்ஃப் வாரியத்தலைவர் சகோ. செ. ஹைதர் அலி, தமிழர் திராவிட இயக்கத் தலைவர் சகோ. சுப. வீரபாண்டியன், இ.கம்யூ செயலாளர் சகோ. ச.மகேந்திரன் மற்றும் அரசியல் விமர்சகர் சகோ. திரு. வீரபான்டியன் சிறப்பு அழைபடபாளர்களாக கலந்து கொண்டனர்.

கவிஞர்களுக்கும், இடிமுழக்கப் பேச்சாளர்களுக்கும் "ஈராக்கின் ஓலம்" வார்த்தை பஞ்சத்தையும் ஆழ்ந்த மெளனத்தையும் ஏற்படுத்திவிட்டதை எண்ணி ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை. ஆம் அவ்வளவு விரைவாக நிகழ்ச்சி முடிந்துவிடும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் காரணம் சிறப்பு பேச்சாளர்கள் அனைவரும் மடை திறந்த வெள்ம்போல பேச்சாற்றல் மிகக்வர்கள் என்பதை தமிழ் மக்கள் நன்கறிவர்.

முதலில் பேசிய இ.கம்யூனிஸ்ட் செயலாளர் சகோ. சி. மகேந்திரன் "....மனித குலம் ஒன்றுபடுமானால் நாம் மனிதர்களாக ஒன்றுபடுவோமேயானால் மெரிக்க ஏகாதிபத்தியம் என்ன, ஆயிரம் ஏகாதிபத்தியங்கள் வந்தாலும் அரை நொடியில் வென்றிருக்க முடியும். முழு உலகையும் மூன்று முறை அழித்தொழிக்க்கூடிய பயங்கர ஆயுதங்கள் அமெரிக்கா மட்டும் ஏன் பெற்றிருக்கின்றது?" என்று வினா எழுப்பினார் சி.மகேந்திரன்.


மனித குலம் எவ்வளவுதான் நாகரீகம் பெற்றிருந்தாலும் கூட அந்த நாகரீகம் என்ற பெயரில் மனிதன் செய்யக்கூடிய அக்கிரமங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதனை இந்தக் குறும்படம் தெளிவாக்குகின்றது என்றார்.

அரசியல் விமர்சகர் வீரபாண்டியன் வழக்கம் போல் உணர்ச்சியையும் அநீதிக்கெதிரான கடுங்கோபத்தையும் குமுறலாக வெளிப்படுத்தி விட்டு அமர்ந்தார்.

சகோ. சுப. வீரபாண்டியன் தனது குறு உரையில், குறும்படத்தில் நாம் பார்த்த அத்தனை அக்கிரமங்களுக்கும் புஷ்தான் காணைம் என்று சொல்லிவிட முடியாது. அதைக் கண்டு மெளனிகளாயிருந்த நம் அத்தனை பேரையும் அடுத்த தலைமுறை குற்றவாளிகள் என்று காரி உமிழும் என்றார்.

மேலும் அவர் "எப்போதுமே குற்றவாளிகளால் நிகழ்கின்ற தீமைகளை விட அந்தக் குற்றத்தை கண்டிக்காமல் மெளனமாக இருக்கிற நல்லவர்களால் விளைகிற தீமைகள் தான் அதிகம்" என்றார்.

அமெரிக்கா மட்டுமல்ல அமெரிக்காவை கண்டிக்காதவாடகள், அமெரிக்காவை ஆதரிப்பவர்கள் அனைவரும் ஒரு நாகரீக உலகுக்கு சொந்தக்காரர்கள் என்று வரலாற்றில் எழுதப்பட மாட்டார்கள் என்று கண்மூடித்தனமாக அமெரிக்காவை பின்பற்றும் இளம் தலைமுறைக்கு எச்சரிக்கை விடுத்தார்.

கவிஞர் கனிமொழி குறும்படத்தில் இடம்பெற்ற போர்கோரக் காட்சிகளை பார்த்தது முதல் ஒரு வித நடுக்கத்துடனே இரந்தார். "இந்த கனத்தில் - இந்த ஒரு நிமிடம் நாம், உயிரோடு இருக்கும் அனைவரும் வெட்கப்பட வேணடடிய வேளை" என்று கண்கலங்கினார்.

"இந்தப் படத்திற்கு கண்ணீாத்துளிகளையும் இதயத்தில் கசியும் இரத்தத்தையும் கோபத்தையும் விமர்சனமாக தருகின்றேன்" என்று கூறி அமாந்தார். இறுதியாக பேசிய சகோதரர் செ.ஹைதர் அலி, இந்திய ஊடகங்கள் அமெரிக்க அடிச்சுவட்டை பினபற்றுவதால் அவர்கள் செய்யும் அக்கிரமங்களை கூட பதிவு செய்யத் தயாராக இல்லை என்று கவலை தெரிவித்தார்.

நிகழ்ச்சியை பேரா. ஹாஜா கனி தொகுத்தளித்தார். இந்தியா டுடே சப் எடிட்டர் சகோ. பீர் முகம்மது வரவேற்றார். கல்ஃப் ஏசியா விஷன் நெட்வொர்க்கின் இயக்குனர் திரு. ஹஸன் அவர்களது நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவானது.

கட்டுரை : கே.எம். ரஹ்மத்துல்லாஹ் ஜமாலி
நன்றி : முஸ்லிம் இதயக்குரல் ஜீன்-2007


கருத்து தோழி கனிமொழி மற்றும் சகோ. ஹைதர் அலி ஆகியோர் கலந்து கொண்டு வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை (ஒரு பகுதி) காணவோ அல்லது டவுன்லோட செய்யவோ இங்கு சொடுக்கவும். (Click Here to Watch / Download the film) or Please Visit WWW.TAMILMUSLIMMEDIA.COM


இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை அழகான முறையில் தொகுப்பாக காண இங்கு சொடுக்கவும். (Click Here to View the Programe's Photo Gallery).

நமக்கு அணைத்து விதங்களிலும் உதவி செய்து "ஈராக்கின் ஓலம்" ஆவணப் படத்தை நமது தமிழ் முஸ்லிம் மீடியாவில் முழுமையாக வெளியிடுவதற்கும் (பிற்பாடு) ஏற்பாடு செய்த சகோதரர் எமது மாவட்டத்தை சேர்ந்த இந்த படத்தின் தொகுப்பாளர் சகோ. எம்.ஐ.யாக்கூப் அவர்களுக்கு எமது நன்றிகள்.

No comments: