Monday, June 11, 2007

பதிலை எதிர்பார்த்த பி.ஜேக்கு ஐக்கிய தவ்ஹித் ஜமாத்தின் (KADALOOR ITJ) பதில்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


தேதி : 10.06.2007
அனுப்புதல்:

முன்னால் கடலூர் மாவட்ட டிஎன்டிஜே நிர்வாகிகள்

சார்பாக அ.கலிமுல்லாஹ்,

93.பெரிய கடை தெரு,

பரங்கிப்பேட்டை - 608502.



பெறுதல்:

பி.ஜைனுல் ஆபிதீன்

மாநில டிஎன்டிஜே தலைவர்,

30. அரன்மனைக்காரன் தெரு,

மண்ணடி, சென்னை-1.




அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்..

எங்களுடனான முபாஹலா சம்மந்தமாக தங்களின் 06.06.2007 தேதிய தபால் கிடைக்கப் பெற்றோம். எங்களுடைய முபாஹலா பிரசுரத்தை ஏற்றுக்கொண்டு, கடந்த 03.06.2007. கடலூர் கூட்டத்தில் 16.06.2007 அன்று முபாஹலாவுக்கு தயார் என்று அறிவித்ததாக கடிதத்தில் ஆரம்பமாக கூறும் தாங்கள்; அடுத்தடுத்த வரிகளில் தாங்கள் கூறிய பல விசயங்களை கணடுக்கொள்ளாத வகையில் எங்கள் கடிதம் அமைந்துள்ளதாக தாங்கள் கூறுவது சரியல்ல. காரணம் நாங்கள் முபாஹலா பிரசுரத்தில் நான்கு வகையான குற்றச்சாட்டுகளை உங்கள் மீது கூறி அதற்கு முபாஹலாவுக்கு தயாரா? ஏன்று கேட்டிருந்தோம். அதற்கு தாங்கள் அந்த பிரசுரத்தை குறிப்பிட்டு கூறியே அதற்கு தயார்! என்று கூறினீர்கள்.

(கடலூர் கடிதத்திற்கு பி.ஜே யின் பதில் கடிதம் - ததஜ அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள கடிதம் படிப்பதற்கு இங்கு சொடுக்கவும்)

உண்மையாளர்களாகவும, உண்மையில் அல்லாவுக்கு அஞ்சக்கூடியவர்களாய் இருப்பவர்கள், தங்கள் மீது குற்றச்சாட்டு என்று வரும்போது அந்த விசயத்தில் தாம் தூய்மையானவர்தான் என்று நிரூபிக்க வேறு எதனையும் முன்வைக்காமல் நிபந்தனையேதுமின்றி முன்வருவார்கள்.

முபாஹலா சம்மந்தமான குர்ஆன் வசனம் 3:61 கூட ஒரு குறிப்பிட்ட முக்கிய பிரச்சினையின் வெளிப்பாடாகத்தான் கூறப்பட்டுள்ளதே தவிற, ஒரு சமுதாய முக்கிய பிரச்சினையில் குற்றச்சாட்டை நிரூபிக்க வருபவர் மீது வேறொரு குற்றச்சாட்டை கூறி சமப்படுத்திக்கொள்ளவோ, நியாயப்படுத்திக்கொள்ளவோ அல்ல, என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ளவேண்டும். முபாஹலாவுக்கு தங்களின்; இஷ்டத்திற்கு கற்பனையாக விளக்கமளித்து முபாஹலாவிலிருந்து நழுவிக்கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகின்றோம்.

ஆகவே, முபாஹலா சம்மந்தமாக நாங்கள் கூறிய நான்கு விசயங்கள் மற்றும் அதை ஒட்டி தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட இரண்டு விசயங்கள் ஆக ஆறு விசயங்களுக்கு மட்டுமே நாங்களும் நீங்களும் முபாஹலா செய்வதற்கான விசயங்களாகும்;. இந்த முபாஹலா அறிவிக்கப்பட்டதே மேற்படி விசயங்களுக்கு மட்டுமே.
அதை விடுத்து, நாங்களும் நீங்களும் வேறு எந்தெந்த விசயங்களில் பரஸ்பரம் அநீதி இழைக்கப்பட்டோமோ அவைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு, குழாயடி சன்டை நடத்துவதற்கு அல்ல. அவைகள் இந்த முபாஹலாவிற்கு தேவையற்றது.

முபாஹலா செய்வதற்கு தெளிவான விசயங்களை இனங்காட்டி அழைத்து அதை ஏற்றுக்கொண்டப்பின் வேறு விசயங்களை காட்டி தாங்கள் நழுவ பார்ப்பது உங்களிடம் உண்மையில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாகும்.

முபாஹலாவோ விவாதமோ எதுவானாலும் ஒரு பக்கச் சார்பாக அவை இருக்கக் கூடாது என்று எழுதும் நீங்கள்,; விவாதத்தில் எதைப்பற்றி விவாதம் செய்ய போகிறோம் என்று தெரியாமல் அங்குப்போய் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி விவாதம் செய்வீர்களா? அல்லது விவாதம் எது பற்றியானது என்பதை முன்பே அறிந்து அதற்குள்ள தயாரிப்போடு செல்வீர்களா? உங்களிடம் ஏன் இந்த முரன்பாடு?.

முபாஹலா செய்ய வருபவர்கள் எதற்காக முபாஹலா செய்ய வருகிறோம் என்பதை விளங்கி வரவேண்டும். மனைவி மக்களை அழைத்து வரும்பொழுது அவர்களுக்கும் எதற்காக முபாஹலா என்ற விபரம் தெரிய வேண்டும், தெரிந்து வருபவர்கள் தான் இறையச்சமுடையவர்கள். எதற்காக முபாஹலா என்ற விபரம் ஏதும் தெரியாமல் அந்த சமயம் வரை ஞாபகத்தில் வருவதையெல்லாம் சொல்லுங்கள் என்று கூறுவது மோசடித்தனமும் முனாபிக்தனமும் ஆகும் அதை தாங்கள் புரிந்துக்கொள்ளுங்கள். இதற்கு மேலும் தாங்கள் இது விசயத்தில் பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள பின் வாங்குகிறீர்கள் என்பதே பொருள்.

குறிப்பிட்டுள்ள சமுதாய இயக்கத்தின் தலையாய பிரச்சினையில்; எழுப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டில் குற்றம் சாட்டுபவர், குற்றச்சாட்டுகளை தெளிவாக கூறி அதுப்பற்றி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டும். இதை மறுத்து எதிர் தரப்பினரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இதை தவிற, குற்றம் சாட்டப்படுபவர் குற்றம் சாட்டுபவர் மீது வேறு எந்த குற்றசாட்டையும் எழுப்ப அனுமதிக்க முடியாது. மேலும், இதிலும் தாங்கள்; பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள் பின் வாங்குகிறீர்கள் என்பதே பொருள்.

தாங்கள் கற்பனையாக உங்கள் விருப்பத்திற்கு எழுதியதெல்லாம், மேடையில் அறிவிப்பதெல்லாம் முபாஹலாவின் சட்டம் அல்ல. முபாஹலாவிற்கு நாங்களும், எங்கள் மனைவிகளும், எங்கள் பொறுப்பில் இருக்கும் எங்கள் புதல்வ புதல்விகளுடனும் தான் வருவோம். யாரும் யாருக்காகவும் அடையாள அணி வகுப்பு நடத்தமுடியாது. இதிலும் தாங்கள் பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள பின் வாங்குகிறீர்கள் என்பதே பொருள்.

மேலும், முக்கியமாக 16.06.2007 அன்று நெல்லிக்குப்பம் தேவநாதன் திருமண மன்டபத்தில் மாலை 7 மணிக்கு முபாஹலா என்று தாங்கள் அறிவித்தீர்கள், அதற்கு நாங்களும் எங்களின் 05.06.2007 தபாலில் ஒப்புதல் அளித்தோம். ஆனால், தாங்கள் 06.06.2007 தபாலில் 16.06.2007 அன்று காலை முதல் மேற்படி அந்த மண்டபத்தில் தங்கள் அமைப்பின் செயல் வீரர்கள் கூட்டம் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளீர்கள். தங்களின் செயல் வீரர்கள் கூட்டமும் முபாஹலாவும் ஒரே மண்டபத்தில் நடக்க இருப்பதால் அதில் கலந்துக்கொள்ளும் எங்கள் பெண் மக்களுக்கு பாதுகாப்பு இன்மையும், தங்கள் செயல் வீரர்களால் சன்டை சச்சரவு வரவும் வாய்ப்புள்ளது.

ஆகவே, ஒன்று தாங்கள் செயல் வீரர்கள் கூட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள், அல்லது முபாஹலாவை அதே நாளில் வேறு இடத்தில் மாற்றி வைய்யுங்கள், உங்களால் அது முடியாவிட்டால் அதே நாளில் முபாஹலாவிற்கு வேறு இடத்தை ஏற்பாடு செய்யும் பொருப்பை எங்களிடம் விட்டு விடுங்கள். இன் ஷாஅல்லாஹ் நாங்கள் ஏற்பாடு செய்கின்றோம். இதிலும் தாங்கள்; பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள் பின் வாங்குகிறீர்கள் என்;பதே பொருள்.

மேலும், நாங்கள் 05.06.2007ல் தங்களுக்கு எழுதிய தபாலில், முபாஹலா பிரச்சினையின்றி நடைபெற இரு தரப்பிலும் இரு கட்டுப்பாட்டாளரை நியமிப்பது சம்மந்தமாக குறிப்பிட்டிருந்தோம் அதை தங்கள் வசதிக்கு கண்டுக்கொள்ளாமல் விட்டுள்ளீர்கள் அந்த விசயத்திற்கும் தாங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

முபாஹலா நடைபெறும் இடத்திற்கு உங்கள் தரப்பில் உங்கள் குடும்பத்தை தவிற 25 நபர்களும், எங்கள் எட்டு பேர் தரப்பில் எங்கள் குடும்பங்களை தவிர, எட்டு பேர் சார்பிலும் 25 நபர்களும் மட்டுமே கலந்துக்கொள்ள நாங்கள் சம்மதிக்கின்றோம். இதை, முன்பு எங்கள் தபாலிலேயே தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றோம்.

மேற்படி நாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து விசயங்களும் நடைமுறைக்கும், உண்மையில் கண்டிப்பாக முபாஹலா நடைப்பெற வேணடும் சத்தியம் வெளிப்படவேண்டும் அதற்கு எதுவும் தடையாக இருந்து விடக்கூடாது என்பதற்குத்தான். இதை தாங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றோம். இத் தபால் தங்களுக்கு இன் ஷாஅல்லாஹ் 12.06.2007 ல் கிடைக்கும், இதற்கு தங்களின் உடனடியான ஒப்புதல் தபாலை எங்களுக்கு 14.06.2007 க்குள் அனுப்பவும்.


இன்ஷா அல்லாஹ், தங்கள் ஒப்புதல் தபால் கிடைத்தவுடன் குடும்பத்துடன் முபாஹலாவில் சந்திப்போம். நன்றி, வஸ்ஸலாம்.

எங்கள் எட்டு பேர் தரப்பில் முபாஹலாவில் கலந்துக்கொள்ளும் எங்கள் குடும்பத்தினர் விபரம் வறுமாறு:

1. அ.கலிமுல்லாஹ், கவுஸ்ஹமீதா(மனைவி), காமிலா பர்வீன்(மகள்), முஹம்மது முஜாஹித்(மகன்), அப்துல் காதிர்(மகன்), அப்துல் அலீம்(மகன்)

2. எஸ். ஷேர்அலி, நூரா(மனைவி), ஹய்தர்அலி(மகன்), யாஸ்மின்(மகள்).

3. இசட். ஷாஹீல் ஹமீது, ஹாஜிரா பேகம்(மனைவி), உமர் முக்தார்(மகன்)

4. எம். செய்யது ஹமீது, ஆபிதாபி(மனைவி), சையத்யாசீன்(மகன்).

5. டி.எம்.பக்கீர் முஹம்மது, ஆமினா(மனைவி), N ஷக்முஹம்மது(மகன்), மூமினா(மகள்), பஹீமா(மகள்), முனவ்வரா(மகள்).

6. எ.எஸ்.எம்.ரசூல் பா ஷா, ஷர்மிலி(மனைவி), மெஹ்தாப்(மகள்), மரியம்(மகள்), அப்துர்ரஹ்மான் சையது(மகன்).

7. எஸ். அப்துர்ரஹ்மான், தவ்லத்நி ஷா(மனைவி), இப்ராஹிம்(மகன்);, ரஹீமுன்னிசா(மகள்), அப்துல்லாஹ்(மகன்).

8. ஐ. ஷேக் உமர், பாரூன்பேகம்(மனைவி), முஹம்மதுஇத்ரீஸ்(மகன்), ஷமீமா நஸ்ரின்(மகள்).


அன்புடன்.

முன்னாள் கடலூர் மாவட்ட டிஎன்டிஜே நிர்வாகிகள். (கையொப்பமுடன்).

1.எ.கலிமுல்லாஹ் :

2.எஸ்.ஷேர் அலி :

3.இசட். ஷாஹீல் ஹமீது :

4.எம். செய்யது ஹமீது :

5.டி.எம். பக்கீர் முஹம்மது :

6.எ.எஸ்.எம். ரசூல் பாஷா :

7.எஸ்.அப்துர்ரஹ்மான் :

8.ஐ.ஷேக் உமர் :

1 comment:

Unknown said...

Intha kadithathirkum saadhagamaana pathil vaithiruppaar PJ. Mubaahalaa nadakkuma? illai "Sunnath Jamaath" Aalimgalai viwaathathirkku thayaara? enru waaiy sawaadal vittu "Sunnath Jamaath" Aalimgal viwaathathai mathithu wanthaal odividuwathum PJ kku onrum puthithu alla. piragu media moolam naangal wanthuvittom avargal odivittargal enru pathivu seithu TNTJ & ONLINEPJ ponra thalangalil poduvaar. athai avar seedargal nambuwaargal. Athupolathaan intha MUBAAHALAA" vilaiyaattum

Shahadullah
Dubai