Sunday, June 10, 2007

பிஜேபியின் பாணியில் பிஜே

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இல்லாததை இருப்பதாக மிகைப்படுத்துவதும், இருப்பதை இல்லாததாக இருட்டடிப்பு செய்வதும் பிஜேபியின் பிரதான வேலை.இல்லாத ராமர் பாலத்தை இருப்பதாக படம் காட்டியும், உண்மையில் இருந்த பாப்ரி மஸ்ஜிதை இல்லாமலாக்கியதும் அவர்களின் முக்கியமான திருப்பணிகள்.

பிரித்தாளும் பார்ப்பனிய ஜெயலலிதாவின் பணப்பெட்டிக்கு தனது இறைவிசுவாசத்தை அடகு வைத்த பிஜே தற்சமயம் அதே பார்ப்பனிய பிஜேபி வழியில் தனது பயணத்தை தொடருகிறார்.

வரலாற்று திரிபு என்பது அவாள்களுக்கு மட்டுமே சொந்தமானதா என்ன? இதோ அவாள்களின் பாதையில் அண்ணனும் துவங்கி விட்டார் பாருங்கள்.

களவாடிச் சென்ற பத்திரிக்கையில் கடந்த வாரம், முதல்வரின் சமீபத்திய இஸ்லாமிய இலக்கிய கலை மன்றத்தில் ஆற்றிய உரை பற்றிய செய்தி கட்டுரையை இடம் பெறச் செய்துள்ளார்.

அதில், இஸ்லாமியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதற்கான காரணம் அவருடைய கட்சி நடத்திய கும்பமேளா என கூசாமல் புளுகியுள்ளார்.

தமுமுக தனது முதல் மாநாட்டை நடத்தியபோதே அறியப்பட்ட முஸ்லிம்களுக்கு தனிஇட ஒதுக்கீடு எனும் தாரக மந்திரம் பட்டி தொட்டி எங்கும் பரவி, 1999இல் சென்னை சீரணி அரங்கிலே தமுமுக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் சமுதாய சொந்தங்களை சங்கமிக்கச் செய்தது.

அன்று கூடிய அந்த சங்கமம், ஆட்சியாளர்களை அசைத்துப் பார்த்தது. ஏகடியம் பேசியவர்கள், எள்ளி நகையாடியவர்கள் அத்தனை பேரையும் அசர வைத்தது. தமிழகத்திலே ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டது.

அதேபோல், 2004 மார்ச்சில், தமுமுக நடத்திய இடஒதுக்கீட்டு பேரணி தஞ்சையை மட்டுமல்ல, தலைநகர் டில்லியையே குலுக்கியது. ஆம். மத்தியில் ஒரு ஆட்சி மாற்றத்திற்கு அடிகோலியது. இன்னும் சொல்லப்போனால், சமீபத்தில் 2007 மார்ச் இல் டில்லியில் தமுமுக நடத்திய பேரணியும் சமூக நீதி மாநாடும் அகில இந்தியாவே ஆச்சரியப்படும் வகையில் சரியான திட்டமிடுதலுடன் கட்டுக் கோப்பாக நடைபெற்றதை கண்டு வியந்தது. அதன் பயனாக பிரதமரும் வழிகாட்டும் இடத்தில் அமர்ந்துள்ள காங்கிரஸ் தலைவியும் தமுமுக தலைவரை அழைத்து இட ஒதுக்கீட்டிற்கான உறுதிமொழி தந்துள்ளனர்.

இவ்வாறாக, தமுமுகவின் கட்டுக்கோப்பான செயல்பாடு, சமுதாயத்தின் நாளைய தேவைக்கு அவசியமான இடஒதுக்கீட்டை பெறுவதற்கான நெடும் பயணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வரும் வேளையில், இத்தகைய வரலாற்று பதிவுகளை புறம்தள்ளி, தான் கூலிக்கு கூட்டி வந்து கூத்தடித்த கும்பமேளாவால் தான் இத்தனையும் சாத்தியமாயிற்று என கூச்ச நாச்சமில்லாமல் புளுகுவதன் காரணம் என்ன?

உண்மையில் இவர் கும்பகோணத்தில் அடித்த கூத்துக்கு கிடைத்த ஆதரவு ஆளும் கட்சி எதிர்கட்சியான வளர்ச்சி தான் (?).

கடலூரில் ஏற்பட்டது போல், ஆங்காங்கே கட்சி கலகலத்து வருவதால், வரலாறு அறியாத விசிலடிச்சான் குஞ்சுகளான தனது அடிவருடிகளை திருப்திப்படுத்த தன்னால் முடிந்தவரை புளுகிப்பார்க்கிறார்.

அந்தோ பரிதாபம். இந்திய வரலாற்றில் பிஜேபி ஓரம் கட்டப்பட்டது போல், தமிழக முஸ்லிம்களுக்கு ஊறு விளைவிக்கும் இந்த உலவியும் ஓரம் கட்டப்படும் நாள் தொலைவில் இல்லை.

வஸ்ஸலாம்

ராவுத்தர் 07.06.2007

No comments: