Tuesday, May 15, 2007

உ.பி. அரசியல் முடிவுகளைப் பாரீர்!!!

பாரீர்!! பாரீர்!!

உ.பி. அரசியல் முடிவுகளைப் பாரீர்!!!


அன்பார்ந்த சமுதாய இளைஞர்களே!

அறிவைப் புகட்டும் ஆலிம் பெருமக்களே!

சமுதாய ஏற்றத்திற்கு உழைக்கும் தொலை நோக்கு அறிவு ஜீவிகளே:-

இந்திய அரசியலில் உ.பி தேர்தல் முடிவுகள் புறக்கணிக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட சமுதாயம் புறக்கணிக்க முடியாத சக்தியாக மாறி இருக்கிறது இன்று.

ஆட்சிக் கடிவாளத்தையே ஒரு தலித் சமுதாயத்தைச் சோந்த பெண் கைப்பற்றி இருக்கிறார். சொந்த சின்னத்தில் தலித் சமூகத்தை ஒன்று கூட்டி இரண்டு பெரிய தேசியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி அருதிப் பெரும்பாண்மை பெற்று முதல்வராக அமர்ந்து இருக்கிறார். பாராட்டுக்கள்.

தமிழகத்தில் பல தொகுதிகளில் முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக இருந்தும், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய மாபெறும் சக்தியாக இருந்தும், சுயமரியாதை, தன்மானம் இழந்து 2 சீட்டுக்கு இரவல் அரசியல் நடத்திக் கொண்டு இருக்கின்றீர்கள்;. திட்டம், தொலை நோக்கு, வியூகம் இன்றி விழலுக்கு இறைத்த நீராய் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள்;. தன்னம்பிக்கையை இழந்து, தற்குரியாய் தலை கவிழ்ந்து நிற்கின்றீர்கள்;.

போதும் தோழர்களே போதும். உ.பி. அரசியல் முடிவுகள் மீண்டும் உங்களை சுய மதிப்பீடு செய்ய ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கிறது. முடியாதது ஒன்றும் இல்லை. நாம் தனித்துவத்தோடும், சுய மரியாதையோடும், அரசியல் ஆளுமை பெற்று உயர்ந்திட இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுக்க சிந்தித்து செயல் முடிக்க வாரீர், வாரீர் என இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) உங்களை அன்புடன் அழைக்கிறது.


இவண்,

இந்திய மக்கள் பேரவை, வளைகுடா நாடுகள்


No comments: