Wednesday, April 11, 2007

அனைத்து மத ஒன்று கூடல் நிகழ்வு

பொறியாளர் ஜக்கரியா அவர்கள் உரையாற்றுகையில்

05-04-2007 அன்று இஷh தொழுகைக்கு பிறகு அல்-ஜுபைல் மாநகரிலுள்ள துறைமுக முகாமின் பள்ளி வளாகத்தில் தமிழ் பேசும் அனைத்து மத சகோதரர்களுடன் ஒன்று கூடல் நிகழ்ச்சியை அல்-ஜுபைல் அறக்கட்டளை (அழைப்ப மற்றும் வழிகாட்டி மையம்) தமிழ் பிரிவு ஏற்பாடு செய்து இருந்தது. இந்நிகழ்சியில் சுமார் 300 சகோதர்கள் கலந்து கொண்டனர் 200 மேற்பட்ட மாற்றுமத நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்கள் இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய நாடுகள் பற்றி பல்வேறு சந்தேகங்களை கேள்வி கணைகளாக கேட்டனர் அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் அறிவு பூர்வமாகவும் குர்ஆன் சுன்னா ஒளியில் மிக தெளிவாக விளக்கினார் தம்மாமிலிருந்து வருகை தந்திருந்த பொறியாளர் ஜக்கரியா அவர்ககள்.

கூடியிருந்த கூட்டத்தின் ஒரு பகுதி

இந்நிகழ்ச்சியை சகோ. ஜமால் முஹம்மத் மதனி அவர்கள் தொடங்கி வைக்க சகோ. முஹம்மத் ஜலீல் மதனி அவர்கள் தலைமையுரையாற்றினார்கள் இருவும் அல்-ஜுபைல் தஃவா நிலையத்தின் அழைப்பாளர்களாக பணியாற்றிவருகின்றர்.

இந்நிகழ்சியில் கலந்து கொண்டு கேள்வி கேட்ட அனைவருக்கும் பரிசுகளை வழங்கப்பட்டன அதே போல் பொறியாளர் ஜக்கரியா அவர்களை கௌரவிக்கும் பொருட்டு அவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது சுமார் 10.45 மணியளவில் நிகழ்ச்சி முடிவுற்றது அதன் பின் இரவு உணவு பரிமாறப்பட்டது.

கூடியிருந்த கூட்டத்தின் மற்றொரு பகுதி

இந்நிகழ்சி குறுகிய காலகட்டதில் அறிவிப்பு செய்யப்பட்டு அல்லாஹ்வின் மிகபெரும் உதவியுடன் தமிழ் பரிவு அழைப்பு பணி உதவியாளார்களின் மிக கடின உழைப்பின் மூலம் அனைத்து கேம்ப்களுக்கும் செய்தி எடுத்துசெல்லப்பட்டது என்பது குறிபிடத்தக்கது (அல்லாஹ் அந்த நல்ல உங்களுக்கு அருள்செய்வானாக ஆமீன்)

செய்திகள் : அல்-ஜுபைலிருந்து நமது செய்தியாளர்

காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

No comments: